Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paramapatha Paampugal!
Paramapatha Paampugal!
Paramapatha Paampugal!
Ebook125 pages1 hour

Paramapatha Paampugal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பரம பத விளையாட்டில் பாம்பு, ஏணி கதை தான் இங்கே வாழ்க்கை! படிப்பு, உத்யோகம் , வருமானம் எல்லாமே இங்கே ஏணிகள்! ஆனால் நோய் தாக்கி, பெற்றவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ பாதிப்பு வரும் போது, பாம்புகள் தலையெடுக்கும்! இக்கதையில் ஜனனி நோய்வாய்பட்ட தன் தந்தையின் உயிரை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் என்ன என்பதையும், சத்யா-அனு இருவரும் திருமண வாழ்வை அமைத்துக்கொள்ள சந்திக்கும் போராட்டங்களையும் வாருங்கள் காணலாம்!

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580100610540
Paramapatha Paampugal!

Read more from Devibala

Related to Paramapatha Paampugal!

Related ebooks

Reviews for Paramapatha Paampugal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paramapatha Paampugal! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பரமபத பாம்புகள்!

    Paramapatha Paampugal!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 01

    ஜனனியும், ரங்காவும் ஒரு கல்யாண வரவேற்புக்கு தயாராகி கொண்டிருந்தார்கள்! ஜனனி, பட்டுச்சேலைக்கு பொருத்தமான நகைகளை எடுத்து அணிந்து கொண்டு இன்னொரு கோட் பவுடரை அடித்துக்கொண்டு தயாராக,

    ஜனனி! வர்றியா? இப்பவே மணி ஏழரை! இந்த ட்ராஃபிக்ல நாம போய் சேரவே ஒன்பது மணி ஆயிடும்!

    என்ன அவசரம்! ஊருக்கு முன்னால போய் நின்னு குப்பை காகிதமா இருக்கணுமா? கடைசி நேரத்துல லேட்டா போறது தான் மரியாதை! வாங்க! போற வழில பூ வாங்கி வச்சிட்டு போகலாம்!

    இது வேறயா?

    புறப்பட்டார்கள்! ரங்கா காரை எடுக்க ஜனனி ஸ்டைலாக முன் பக்கம் ஏறி அமர்ந்தாள்.

    நீ கார்ல ஏறின அழகை பார்க்க இங்கே யாரும் இல்லை! ஆள் இல்லாத கடைல டீ ஆத்தற மாதிரி இருக்கு!

    கார் பிரதான சாலைக்கு வர, ஜனனியின் ஃபோன் அழைக்க,

    சொல்லும்மா!

    அப்பாவுக்கு வயித்து வலி தாங்காம துடிச்சு பக்கத்து வீட்டுக்காரரை கூட்டிட்டு நான் ஆஸ்பத்திரிக்கு போறேண்டி! நங்கநல்லூர் ஆஸ்பத்திரி தான்! நீ உடனே வாம்மா!

    அம்மா குரலில் கலவரம்!

    ரங்கா! காரை திருப்புங்க! விவரத்தை ஜனனி சொல்ல, ரங்கா காரை திருப்பினான்! இருபது நிமிஷங்களில் அடைய, அம்மா அழுத படி ஓடி வர,

    அப்பா எங்கே?

    உள்ளே டெஸ்ட் பண்றாங்க!

    பத்தே நிமிஷங்களில் டாக்டர் வெளியே வந்தார்!

    உடனே ஸ்கேன் பண்ணணும்மா! மற்றபடி ரத்தம் யூரின் எல்லாம் எடுக்கணும்! வலி தாங்காம அவர் மயக்கமாயிட்டார்! ஏதோ ஃபுட் பாய்சன் ஆகியிருக்குனு நினைக்கறோம்!

    அவருக்கு ஊசி போட்டார்கள்! ஆக்சிஜன் குறைபாடு, நாடித்துடிப்பு ஏற்ற இறக்கம் எல்லாம் இருக்க, அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு போனார்கள்! அம்மாவின் அழுகை அதிகமானது! மேலும் இரண்டு மணி நேரம் கழித்து மருத்துவ அறிக்கைகள் வர,

    அவரோட கல்லீரல், கணையம் எல்லாமே கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு! உடனடியா அவசர சிகிச்சை தொடங்கணும்! நிலைமை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!

    அம்மா கதறத்தொடங்கி விட்டாள்! ஜனனிக்கு உச்சந்தலைக்கு ரத்தம் ஏறியது!

    இந்த மனுஷன் என் தலைல கல்லை தூக்கி போடப்போறாரா?

    நீ கூச்சல் போடறதை நிறுத்து! அப்பாவுக்கு வயசு அறுபது கடந்தும் குடிப்பழக்கத்தை இன்னும் நிறுத்தலை! நாக்கை அடக்க முடியலை! காரசாரமான அசைவ உணவு...அதுவும் ரோட்டுக்கடைல! ஏற்கனவே நிறைய மருந்துகள் சாப்பிட்டாச்சு! இப்ப நீ அழுது என்ன லாபம்?

    ரங்கா அருகில் வந்தான்!

    ஜனனி! இப்படி வா! உங்கம்மாவே நொந்து போயிருக்காங்க! குத்தி காட்ட இதுவா நேரம்? இவங்க சொன்னா உங்கப்பா கேப்பாரா?

    கேக்கணும் ரங்கா! இப்ப மாட்டிட்டு முழிக்கறது யாரு?

    சரி! குடும்பம்னா நல்லது, கெட்டது ரெண்டும் கலந்தது தான்!

    மாப்ளை எங்களை புரிஞ்சு வச்ச அளவுக்கு நீ புரிஞ்சுகலையே? எங்களுக்கு மகன் இல்லை! மூத்த மகள் நீதான்! மாப்ளை தானே எங்களுக்கு பிள்ளை! உன் தங்கச்சி மும்பைல இருக்கா! அவளுக்கு வாச்ச புருஷன் சரியில்லை!

    போதும்! நம்ம குடும்பக்கதையோட ட்ரைலரை இப்ப ஓட்டாதே! என்னங்க! மணி பன்னண்டு! நம்ம லாவண்யா தனியா இருப்பா வீட்ல!

    நான் இங்கே வந்ததும் ஃபோன் பண்ணி சொல்லியாச்சு! அவ ஜாக்ரதையா இருப்பா!

    ஒரு நர்ஸ் வந்தாள்!

    சார்! முன் பணமா அம்பதாயிரம் கட்டிடுங்க! இன்ஷ்யூரன்ஸ் இருக்கா?

    அந்த அறிவெல்லாம் அப்பாவுக்கு இல்லையே! நான் தான் கொட்டி அழணும்!

    ஜனனி தன் டெபிட் கார்டை எடுத்துக்கொண்டு நடந்தாள்! அம்மா முகத்தில் வலி தெரிந்தது! ரங்கா அருகில் வந்தான்!

    அத்தே! அவ சுபாவம் தான் உங்களுக்கு தெரியுமே! படபடன்னு பேசுவா!

    மாப்ளை! சின்னவ அருணா தன் கால்ல நிக்கற கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கா! அந்த மாப்ளை உத்யோகமும் இல்லாம ஊர் சுத்தறார்! உங்க ரெண்டு பேரை விட்டா எங்களுக்கு யாரு?

    பணத்தை கட்டி விட்டு ஜனனி வந்தாள்! அதி காலை நாலு மணி வரை சிகிச்சை தொடர்ந்தது! டாக்டர் வெளியே வந்தார்! மேலும் சில பரிசோதனைகளுக்கு எழுதினார்! நரம்பியல், விசேஷ மருத்துவர், லிவர் ஸ்பெஷலிஸ்ட் பார்க்க வேண்டும் என்றார்கள்! அவர் பகல் ஒரு மணிக்கு வருவார் என்றார்கள்! அதற்குள் ரங்காவின் அப்பா ஃபோன்!

    நீ எங்கேடா இருக்கே? ஃபோனை எடுக்க மாட்டியா? இன்னிக்கு உன் தங்கச்சியை பெண் பார்க்க வர்றாங்களே! அது மறந்து போச்சா?

    ஞாபகம் இருக்குப்பா! மாமனாரை ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்!

    சரிடா! ஜனனியை அங்கே விட்டுட்டு நீ வாடா! இந்த வரன் முடிவாயிடும்! அவளுக்கு நீ அண்ணன்டா!

    வர்றேன்பா! மூணு மணிக்கு வர்றேன்!

    ரங்கா வீட்டுக்கு மூத்த மகன்! அப்பா ரிடையர்ட்! அம்மா குடும்ப தலைவி! இரண்டு தங்கைகள்! மூத்தவள் கல்யாணத்துக்கு அப்பாவின் சேமிப்பு முழுக்க செலவாக, அனுவுக்கு செய்ய வேண்டிய பொறுப்பு ரங்காவுக்கு! இந்த நேரம் மாமனாரின் மருத்துவ செலவு! ரங்கா, ஜனனி இரண்டு பேருமே நல்ல உத்யோகத்தில் இருப்பவர்கள்! சொந்த வீடு, கார் என வாழ்பவர்கள்! லாவண்யா என்ற பத்து வயசு பெண் குழந்தை மட்டும்! ஜனனி குடும்பத்துடன் சேர்ந்து வாழாமல் தொடக்கத்திலேயே தனியாக வந்து விட்டாள்! அதற்காக இரு குடும்பத்துக்கும் செய்ய வேண்டியதை செய்வாள்! ஆனால் சமீப காலமாக பிரச்னை எல்லை மீறுகிறது! அதனால் ஜனனி பொறுமையை இழக்க தொடங்கி விட்டாள்!

    ரங்கா ஜனனியிடம் வந்தான்! தன் அப்பா பேசியதை சொன்னான்!

    இப்ப நீங்க போக முடியாதுங்க!

    நீ இருக்கியே ஜனனி? மாமா எத்தனை முக்கியமோ, அனுவும் அந்த அளவுக்கு முக்கியமில்லையா?

    அப்பாவுக்கு இது உயிர் பிரச்னை! அனுவை பெண் பார்க்க வரும் போது உங்கப்பா, அம்மா இருந்தா போதாதா? நான் இங்கே தனியா தவிக்க முடியாது! நீங்க என் கூட இருக்கணும்! ஆஃபீசுக்கு எத்தனை நாள் லீவு சொல்லணும்னு தெரியலை!

    ஒரு மணி நேரம் நான் போயிட்டு வந்திர்றேனே ஜனனி!

    டாக்டர் வெளியே வந்தார்! அவர் முகத்தில் தெரிந்த இறுக்கம் ஏதோ கடுமையான சேதி சொல்லப்போகிறார் என அறிவித்தது!

    அத்தியாயம் 02

    "அனு தன்னை அலங்கரித்துக்கொள்ள தொடங்கினாள்! அப்பா நீலு உள்ளே வந்தார்!

    நித்யா! நான் போய் பூ, பழங்கள் எல்லாம் வாங்கிட்டு வந்திர்றேன்!

    "ரங்காவும், ஜனனியும் அதையெல்லாம் பார்த்துப்பாங்க! நீங்க சமையல்கட்டுல என் கூட இருங்க! பஜ்ஜிக்கு வாழக்காய் நறுக்கணும்! பாலையும்

    Enjoying the preview?
    Page 1 of 1