Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Navarasa Nayagi
Navarasa Nayagi
Navarasa Nayagi
Ebook125 pages51 minutes

Navarasa Nayagi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நவரச நாயகியான நேத்ரா ஊடகப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபத்தி கொண்டவள். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், ஜர்னலிஸ்டாகவும் தன்னை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறாள். ஒரு ஜர்னலிஸ்டாக அவள் மேற்கொள்ளும் சவால்களை அவள் எப்படி கையாள்கிறாள்? என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580100610534
Navarasa Nayagi

Read more from Devibala

Related to Navarasa Nayagi

Related ebooks

Reviews for Navarasa Nayagi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Navarasa Nayagi - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நவரச நாயகி

    Navarasa Nayagi

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1.

    அத்தியாயம் 2.

    அத்தியாயம் 3.

    அத்தியாயம் 4.

    அத்தியாயம் 5.

    அத்தியாயம் 6.

    அத்தியாயம 7.

    அத்தியாயம் 8.

    அத்தியாயம் 9.

    அத்தியாயம் 10.

    அத்தியாயம் 11.

    அத்தியாயம் 12.

    அத்தியாயம் 13.

    அத்தியாயம் 14.

    அத்தியாயம் 15.

    அத்தியாயம் 16.

    அத்தியாயம் 17.

    அத்தியாயம் 18.

    அத்தியாயம் 19.

    அத்தியாயம் 20.

    அத்தியாயம் 21.

    அத்தியாயம் 22.

    அத்தியாயம் 1.

    நேத்ராவை நீங்கள் அஷ்டாவதானி எனலாம்! நவரச நாயகி என்றழைக்கலாம்! அவள் ஊடகப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டவள்! தொலை காட்சியில் செய்தி வாசிப்பாளர், பத்திரிகை நிருபர், ஃபோட்டோ ஜர்னலிஸ்ட், செய்தி சேகரிக்கும் நிருபர், கதை விவாதங்களில் கலந்து கொள்ளும் பெண், நல்ல எடிட்டர், ரிப்போர்ட்டர் இன்னும் பல! முதுகலை முடித்து, ஊடகவியலில் டிப்ளமா, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் DFT, இத்தனையும் இருபத்தியேழு வயதுக்குள்! காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டால், அவள் வீடு திரும்ப இரவு பதினொரு மணியாகி விடும்! நள்ளிரவு கூட வருவாள்! சில நாட்கள் வரவே மாட்டாள்! ஒரு ஆக்டிவா ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு சிட்டாக பறப்பாள்! தவிர சங்கீத புலமை, நடனம் என எதையும் விட்டு வைக்கவில்லை! சங்கீத விமர்சகர் சுப்புடு போல பல வித்வான்களை கிழித்து தொங்கப்போட்டு அவர்களின் பகையை தேடிக்கொண்டவள்! கடுமையான விமர்சனத்துக்கு ஆளானவள்!

    பொண்ணா பொறந்தா இப்படி இருக்கணும்! இந்திரா காந்தி, ஜெயலலிதா ரேஞ்சுல இவ வருவா! ஜான்சி ராணி, கிரண்பேடி என்றெல்லாம் உச்சியில் தூக்கி வைத்தவர்கள் ஏராளம்!

    "பொம்பளைக்கு ஒரு அடக்கம், நாணம், பயம் வேண்டாமா? நடுராத்திரி வண்டில ஆம்பளைக்கு சமமா சுத்துது! எவனாவது இழுத்துப்போட்டு…. க்கப்போறான்…. என்று கேவலமாக பேசுபவர்களும் உண்டு! குடும்பம் பதறும்! ஆனால் எது காதில் விழுந்தாலும் நேத்ரா கவலைப்பட மாட்டாள்! விமர்சனங்களை மதிக்கவும் மாட்டாள்! கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை கற்று வைத்திருப்பதால் யாருக்கும் நேத்ரா பயப்படுவதில்லை! சகலமும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வதால், கணிசமாக சம்பாதிக்கறாள்! அம்மா கையில் மாதந்தோறும் நாற்பதாயிரம் ரூபாய் தந்து விடுவாள்! இந்த நேரத்தில் நேத்ரா குடும்பம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் கதையில் சூடு பிடிக்கும்!

    நேத்ராவின் அப்பா குகன் தனியாரில் வேலை! நியாயமான நல்ல சம்பளம்! அம்மா மகிமா, பள்ளிக்கூட டீச்சர், அரசாங்க பள்ளிக்கூடம்! நேத்ரா ஒரே பெண்! இவர்கள் கணிசமாக சம்பாதிப்பதால் சொந்தமாக வீடு வாங்கி விட்டார்கள்! அப்பாவுக்கு கார், அம்மாவுக்கு டூ வீலர்...மகளை எதற்கும் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக வளர்த்து விட்டார்கள்! பணக்கார குடும்பம் அல்ல! ஆனால் அப்பர் மிடில் க்ளாஸ்! மகள் மேல் அதிக நம்பிக்கை வைத்தவர்கள்! அந்த நம்பிக்கைக்கு இன்று வரை பாத்திரமானவள் நேத்ரா! அவள் விரும்பிய படிப்பை படிக்க வைத்தார்கள்! ஊடகத்துறை எனும் போது ஆண்களுக்கு நிகராக நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும்! ஒரு சராசரி பெண்ணாக வாழ்வது கடினம்! நேத்ரா அதை விரும்பி ஏற்றதால் அப்பா அவளை சிறகடித்து பறக்க விட்டு விட்டார்! அம்மா முதலில் பயந்தாள்!

    நேரம் கடந்து வர்றே! தப்பான ஆண்கள் நிறையப்பேர் புழங்கற இடம்! குடி மாதிரி பழக்கங்கள் இருக்கும்!

    அம்மா! இப்ப ஊடகத்துறைனு இல்லை, எல்லாத்துலேயும் எல்லா பழக்கங்களும் உண்டு! பெண்களே தப்பான பழக்கத்துக்கு ஆளாகி அதுக்கு சோஷல் ட்ரிங்கர் னு நாகரீக பூச்சு பூசி மழுப்பறாங்க! நாம கவனமா இருக்கற வரைக்கும் யாராலும் நம்மை எதுவும் செய்ய முடியாதம்மா!

    முதலில் பயந்தாலும் மகளின் தன்னம்பிக்கையும் தைரியமும் சாதனைகளும் தொடர அம்மா வாய் மூடிக்கொண்டாள்! ஆனால் இவர்களது வளர்ச்சியும் வசதியும் பொறுக்காத உறவும் நட்பும் பொறாமையில் பொசுங்க தொடங்கி விட்டார்கள்!

    எல்லாம் சரி மகிமா! உங்க கிட்ட இருக்கற வரைக்கும் எல்லாமே நேர்க்கோட்ல இருக்கும்! உன் பொண்ணுக்கு இருபத்தியேழு வயசாச்சு! இப்படியே உன் வீட்ல வச்சு அழகு பார்ப்பியா? ஒரு கல்யாணம் காட்சினு செய்ய வேண்டாமா?

    நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும்!

    அதெப்படீ? இந்த மாதிரி ஊர் சுற்றி, நடுநிசில வீடு திரும்பற பொண்ணை யார் கட்டிப்பாங்க? பசங்க ஒப்புக்கிட்டாலும் அவங்களை பெத்தவங்களால இதையெல்லாம் பொறுத்துக்க முடியாது! நாங்க யாரும் பொறாமைல பேசலை மகிமா! நீயும் உன் வீட்டுக்காரர் குகனும் இதை யோசிக்கலைன்னா கஷ்டப்படுவீங்க!

    மகிமா அந்த நேரத்தில் ஏதோ ஒரு பதிலை சொல்லி விட்டு வந்தாலும், உள்ளே அந்த கேள்வி குடைந்தது! இரவு உணவை முடித்ததும்,

    என்னங்க! நேத்ராவுக்கு நாம எப்ப கல்யாணம் செஞ்சு வைக்கப்போறோம்?

    நானே சொல்லும் போது வரன் பாருங்கப்பானு அவ சொல்லியிருக்காளே மகி!

    அப்படி விடலாமா? இன்னும் மூணு வருஷம் போனா முப்பது! முத்தி போயிடுவா! அப்புறமா கல்யாணமே கேள்விக்குறி ஆயிடும்! நாம மௌனமா இருக்கறது சரியில்லைனு எனக்கு தோணுதுங்க!

    நம்ம பொண்ணு சராசரி பொண்ணு இல்லை மகி!

    "ஆனா பொண்ணு தானே? அவளுக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா? தப்பாயிடும் குகன்! நாம சுதந்திரமா வளர்த்தியிருக்கோம்! அவளும் அதை தப்பா உபயோகப்படுத்தலை! ஆனாலும் கோயில் காளை மாதிரி ஒரு பெண் திரியலாமா? பெத்தவங்க அதை அனுமதிக்கலாமா? அவளை கட்டாயப்படுத்தி யார் தலையிலும் நாம கட்டப்போறதில்லை! அவளுக்கு புடிச்ச தகுதியுள்ள ஒருத்தனை தேர்ந்தெடுக்கற பொறுப்பு நமக்கில்லையா?

    குகன் யோசிக்க தொடங்கினார்.

    மறு நாள் முதலே பிரச்னைகள் நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்க தொடங்கின!

    அத்தியாயம் 2.

    அன்று இரவு நேத்ரா வீடு திரும்பவேயில்லை! யாரோ ஒரு நடன கலைஞரை பேட்டி எடுக்க நட்சத்திர ஓட்டலுக்கு போவதாக இரவு பதினொரு மணிக்கு தகவல் தந்து விட்டாள் அப்பாவுக்கு!

    கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போனா இதெல்லாம் நடக்குமா?

    நீ என்ன மகிமா என்னிக்கும் பேசாத விதமா இன்னிக்கு பேசற? அவ ப்ரொஃபஷன் அப்படி!

    இப்பத்தான் அம்மாவா பயம் வருது! அதனால பேசறேன்!

    சரி, நேத்ரா வரட்டும், பேசலாம்!

    காலை பத்து மணிக்கு நேத்ரா வந்தாள்!

    குளிச்சு சாப்ட்டு தூங்கு!

    இல்லைம்மா! நான் உடனே போகணும்! சேலம் போறேன்! ஒரு மாநாடு கவரேஜ்! வர நாலு நாளாகும்! ஓ. பி. வேன் வந்துடும்!

    ஏண்டீ, இப்படி தூக்கம், சாப்பாடு எதுவும் சரியா இல்லாம ராப்பகலா உழைச்சா எப்படீ? ஒடம்பு என்னத்துக்கு ஆகும்?

    அதெல்லாம் ஒண்ணும் ஆகாது! பேர் புகழ் வருது! கை நிறைய பணம் வருது! நீ கேட்டியே பவழத்தோடு! வாங்கித்தர்றேன்!

    நானும் அப்பாவும் உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்!

    என் கல்யாண மேட்டரா? அதுக்கு நேரம் வரலை! நான் சொல்லுவேன்!

    இப்பவே உனக்கு நரை இருக்கு தலைல!

    அது ஞானத்தோட அடையாளம்! சூடா பொடி தோசை போட்டு புதினா பூண்டு போட்டு காரமா சட்னி ரெடி பண்ணு! நான் குளிச்சிட்டு வந்திர்றேன்!

    அவள் உள்ளே போக, அப்பா குகன் அருகில் வந்து சிரித்தார்!

    "இது நெடுஞ்சாலைல

    Enjoying the preview?
    Page 1 of 1