Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ketta, Enna Thappu?
Ketta, Enna Thappu?
Ketta, Enna Thappu?
Ebook99 pages50 minutes

Ketta, Enna Thappu?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் நாயகி தாரா. சிறுவயதில் இருந்தே எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் பழக்கம் உண்டு. கேள்வி கேட்டால் என்ன தப்பு, கேள்வி கேட்பதில் தவறொன்றும் இல்லையே என்று னினைப்பவள். இப்படிப்பட்ட தாராவுக்கு, அவள் பெற்றோர்கள் வரன் பார்க்கிறார்கள். பொண்ணு பார்க்க வந்த விதூரிடம், தாரா கேட்ட கேள்வி என்ன? அதற்கு விதூரின் பதில் என்னவாக இருக்கும்? இதற்கிடையில் விதூரின் நண்பன் விஸ்வா செய்த சதி என்ன? வாருங்கள் வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580100610543
Ketta, Enna Thappu?

Read more from Devibala

Related to Ketta, Enna Thappu?

Related ebooks

Reviews for Ketta, Enna Thappu?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ketta, Enna Thappu? - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கேட்டா, என்ன தப்பு?

    Ketta, Enna Thappu?

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம்: 01.

    அத்தியாயம்: 02.

    அத்தியாயம்: 03.

    அத்தியாயம்: 04.

    அத்தியாயம்: 05.

    அத்தியாயம்: 06.

    அத்தியாயம்: 07.

    அத்தியாயம்: 08.

    அத்தியாயம்: 09.

    அத்தியாயம்: 10.

    அத்தியாயம்: 11.

    அத்தியாயம்: 12.

    அத்தியாயம்: 13.

    அத்தியாயம்: 14.

    அத்தியாயம்: 15.

    அத்தியாயம்: 16.

    அத்தியாயம்: 17.

    அத்தியாயம்: 18.

    அத்தியாயம்: 01.

    தாரா கேட்ட கேள்வியில் அந்த குடும்பமே அதிர்ந்து நின்றது. அவளை பெண் பார்க்க வந்த குடும்பம் மட்டுமில்லை, தாராவின் அப்பா, அம்மா என அத்தனை பேரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

    அப்படி என்ன கேள்வியை தாரா கேட்டாள்.

    உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் எடுக்கணும் விதுர்.

    விதுரின் அம்மா இந்த கேள்வி புரியாமல் பார்த்தாள்.

    என்னம்மா சொல்ற நீ? அவன் என்ன புது வேலைக்கா வந்திருக்கான்? உத்யோகம்னா மெடிக்கல் டெஸ்ட் எடுக்கணும். இது கல்யாணம் தாரா. இங்கே எதுக்கு மெடிக்கல் டெஸ்ட்? எங்க விதுர் பூரண ஆரோக்யமா இருக்கான்.

    தாரா லேசாக சிரித்தாள். தாராவின் அம்மா அவளை இடித்தாள்.

    தாரா, என்ன உளர்ற?

    நீ கொஞ்சம் சும்மா இரம்மா. ஆன்ட்டி, உத்யோகத்தை விட கல்யாணம் முக்கியம். அதிக சம்பளம்,பெரிய பதவினு உத்யோகத்துல மாறலாம். கல்யாண வாழ்க்கைல மாற முடியுமா?

    அம்மா நிர்மலாவுக்கு கோபம் வந்து விட்டது.

    அது எனக்கும் தெரியும்மா. கல்யாண வாழ்க்கை மாறாதுன்னு தெரியாதா? இதுல யாரும் மருத்துவ பரிசோதனை கேட்டதில்லை. அவனுக்கு வயசு இருபத்தி எட்டு. ரத்த அழுத்தம்,சக்கரை, எண்ணைனு எதுவும் இல்லை. தலைல வழுக்கை விழலை. அழகா அம்சமா இருக்கான். பெரிய படிப்பு, நல்ல சம்பளம், ஜாதக பொருத்தம், குடும்ப தகுதி எல்லாம் இருக்கற காரணமாத்தானே உங்கப்பா எங்களை வரச்சொல்லி, நாங்களும் சம்மதிச்சு உன்னை இன்னிக்கு பெண் பார்க்க வந்திருக்கோம். மனசுக்கு பிடிச்சுதான்னு நீங்க ரெண்டு பேரும் சொல்லணும். தனியா போய் பேசி பாக்கணும். இந்த எதுவும் நடக்காம நீ மெடிக்கல் டெஸ்ட் எடுக்கணும்னா என்ன அர்த்தம்? என்ன டெஸ்ட்?

    "ஆன்ட்டி, நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு நீங்க பதட்டமாறீங்க?

    நிர்மலா, இரு. நான் பேசறேன். அவனுக்கு என்ன டெஸ்ட் எடுக்கணும் தாரா?

    விதுரின் அப்பா ஹரி கேட்க, விதுர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.

    அங்கிள். குட்! நீங்க அமைதியா கேக்கறீங்க. சொல்றேன்!

    அடுத்து அவள் சொன்னது அவரையே பதற வைத்து விட்டது.

    ஒரு நல்ல ஆண் கைனகாலஜிஸ்டை பார்த்து, இவருக்கு தகப்பனாகக்கூடிய தகுதி இருக்கான்னு மெடிக்கல் டெஸ்ட் எடுக்கணும். டாக்டரை நான் சிபாரிசு பண்றேன்.!

    அது வரை மௌனமாக இருந்த விதுரின் அக்கா தீபா விசுக்கென எழுந்தாள்.

    என்ன திமிர்டி உனக்கு?

    மேடம்! என்ன டீ போட்டு திமிர் அது இதுன்னு, எங்க வீட்ல ஒக்காந்து தப்பா பேசறீங்க?

    அம்மா நிர்மலா ஆவேசமாக எழுந்தாள்.

    என்ன சேஷா? உங்க பொண்ணை பாக்க வரச்சொல்லி எங்களை கூப்பிட்டு, வீட்ல வச்சு அவமானப்படுத்தறீங்களா?

    இல்லை நிர்மலா! சத்யமா அந்த எண்ணம் எதுவும் எனக்கில்லை. நாம ரெண்டு பேரும் ஒரே நிறுவனத்துல பதினஞ்சு வருஷங்களா ஒண்ணா வேலை பாக்கறோம். நான் யாரையாவது அவமானப்படுத்தியிருக்கேனா? சொல்லுங்க.

    நிர்மலா, போகலாம். புறப்படு.

    இல்லீங்க. இவ என்ன நினைச்சு என் பிள்ளையை இந்த மாதிரி கேள்வி கேக்கலாம்? பெண் பார்க்க வந்த இடத்துல, அந்த பையனை பார்த்து, உனக்கு தகப்பனாகக்கூடிய தகுதி இருக்கான்னு, மெடிக்கல் டெஸ்ட் எடுக்கணும்னு இது வரைக்கும் யாராவது சொல்லியிருப்பாங்களா?

    தாராவின் அம்மா சந்திரா, வந்து நிர்மலாவின் காலில் விழப்போக,

    நில்லும்மா. நான் இப்ப என்ன தப்பா கேட்டேன்னு நீ இவங்க கால்ல விழப்போறே?

    நீ பேசறதை நிறுத்த மாட்டியா தாரா?

    அம்மா சந்திரா கதற, தாராவின் அண்ணி நந்தினி குறுக்கே புகுந்தாள்.

    வீட்ல காட்டற கொழுப்பை வந்தவங்க கிட்ட காட்டினா, அவங்க சும்மா இருப்பாங்களா? இந்த மாதிரி கேட்டா, புள்ளையை பெத்தவங்களால பொறுத்துக்க முடியுமா?

    என்னங்க, போகலாம். இன்னிக்கு முழிச்ச முகம் சரியில்லை. சேஷா! இப்படியெல்லாம் பேசினா இந்த ஜென்மத்துல உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்காது. நாக்கை வாய்க்குள்ள வச்சுக்க சொல்லுங்க. நாங்க பேசாம போறோம். வேற யாராவதா இருந்தா, இழுத்து வச்சு நறுக்குவாங்க.

    விதுருடன் வந்த அவனது நெருங்கின நண்பன் விஸ்வா, அவன் காதில் ஏதோ சொன்னான். மற்றவர்கள் எழுந்து வாசலுக்கு போக,

    விதுர் தயங்கி நின்றான்.

    வாடா விதுர், இன்னும் ஏன் நிக்கற? அக்கா தீபா இழுக்க,

    கேளுடா விதுர்

    விஸ்வா தூண்ட,

    தாரா! ஒரு நிமிஷம். நீங்க படிச்சவங்க. மெடிக்கல் தொடர்பா படிச்சு அந்த வேலைல இருக்கற காரணமா இப்படி ஒரு கேள்வியா? தகப்பனாகற தகுதி இருக்கான்னு மெடிக்கல் டெஸ்ட் கேக்கறது ரொம்ப கடுமையா இல்லை?

    நீ எதுக்குடா இந்த திமிர் புடிச்சவ கிட்ட விளக்கம் கேட்டு நிக்கற?

    எந்த ஒரு ஆணுக்கும் பெண் பார்க்க வந்த இடத்துல ஒரு பெண் கேட்காத கேள்வி. எனக்கு வந்திருக்கு. கேள்விக்கான காரணம் தெரியாம நான் வர மாட்டேன் இங்கிருந்து. சொல்லுங்க தாரா ஏன் இந்த கேள்வி?

    "குட் விதுர்...சொல்றேன். இப்பல்லாம் கல்யாணம் ஆகற பத்துல ஏழு பேருக்கு குழந்தை பிறக்கறதில்லை. காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். ஒரு வருஷம் பார்த்துட்டு குழந்தை பிறக்கலைன்னா, முதல்ல அத்தனை மருத்துவ பரிசோதனைகளும் அந்த பெண்ணுக்குத்தான். டி.அண்ட்.சி, அப்புறமா லேப்ரஸ்கோப்பி, அப்புறமா

    Enjoying the preview?
    Page 1 of 1