Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Manam
Kanavu Manam
Kanavu Manam
Ebook147 pages54 minutes

Kanavu Manam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரும்பாலும் நான் எழுதும்போது கதை மட்டும் தான் கற்பனையாக இருக்குமே தவிர, கதாபாத்திரங்களும் களங்களும் நான் எங்கோ எப்போதோ பார்த்து மனதில் இருத்திக் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படித்தான் இந்தக் கதையின் வித்யா, குளித்தலையில் நான் பதினைந்து வருடங்களுக்கு முன் சந்தித்த ஒரு பெண், அவளுடைய மாமியார் பாத்திரம், நான் சின்ன வயதில் பார்த்த என் தூரத்து உறவினர், இப்படி என்னால் மறக்க முடியாமல் எனக்குள்ளே ஒட்டிக் கொண்டவர்கள் என் கதைக்குள் வந்து உலவும் போது எழுதும் எனக்கு அவர்களைப் பார்த்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும். என் முயற்சிகளுக்கெல்லாம் ஆதரவளிக்கும் என் அன்பு வாசகர்களுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்குகிறேன்.
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580134005551
Kanavu Manam

Read more from Girija Raghavan

Related to Kanavu Manam

Related ebooks

Reviews for Kanavu Manam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Manam - Girija Raghavan

    http://www.pustaka.co.in

    கனவு மனம்

    Kanavu Manam

    Author:

    கிரிஜா ராகவன்

    Girija Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/girija-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    முன்னுரை

    பெரும்பாலும் நான் எழுதும்போது கதை மட்டும்தான் கற்பனையாக இருக்குமேதவிர, கதாபாத்திரங்களும் களங்களும் நான் எங்கோ, எப்போதோ பார்த்து மனதில் இருத்திக் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

    அப்படித்தான் இந்தக் கதையின் வித்யா, குளித்தலையில் நான் பதினைந்து வருடங்களுக்கு முன் சந்தித்த ஒரு பெண், அவளுடைய மாமியார் பாத்திரம், நான் சின்ன வயதில் பார்த்த என் தூரத்து உறவினர், இப்படி என்னால் மறக்க முடியாமல் எனக்குள்ளே ஒட்டிக் கொண்டவர்கள் என் கதைக்குள் வந்து உலவும்போது எழுதும் எனக்கு அவர்களைப் பார்த்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

    ‘ரஞ்சனி’ கதையும் வெளிவந்த தொடர்கதைதான். அது சமீபத்தியது. துன்பம் வரும் வேளையில் ஒரு பெண் எப்படித் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்கிற என்னுடைய ஆவலை வெளிப்படுத்திய கதை. ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக என்னிடம் கதை கேட்டபோது சொல்லப்பட்ட கரு. அது நடக்காமல் போனதும், பத்திரிக்கையில் தொடர்கதையாக மலர்ந்தது.

    என் முயற்சிகளுக்கெல்லாம் ஆதரவளிக்கும் என் அன்பு வாசகர்களுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்குகிறேன்.

    1

    சமையல் மேடையைத் துடைத்துக் கொண்டிருந்தாள் வித்யா. மிக்ஸியைத் துடைத்து, குட்டி மிக்ஸி ஜாரையும் துடைத்தாள். அடுத்து மேடைக்கு மேலிருந்த ஷெல்பைத் திறந்து அதற்குள் வைத்து மூடினாள். ஒழித்துப் போட்டிருந்த பாத்திரங்களையும் தேய்த்து பக்கத்தில் கவிழ்த்திருந்ததையும் ஒவ்வொன்றாகத் துடைத்து அதனதன் இடத்தில் வைத்தாள். கேஸையும் கடைசியில் நறுவிசாகத் துடைத்தவள் துணியை அலசி, பக்கத்து ஜன்னலில் இருந்த கொடியில் போட்டாள்.

    ஆச்சு, கீழே ஒருதரம் பெருக்கி துணியால் துடைத்துவிட்டால் சமையலறை பளிச்சென்றாகி விடும்.

    வெளியே சமையலறையை ஒட்டி இருந்த அறையில் சங்கருக்கும் ஆனந்திக்கும் அம்மா சாதம் போட்டுக் கொண்டிருந்தாள். அது பழக்கம். இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து தான் பக்கத்தில் உட்கார்ந்து தான் சாப்பாடு போடுவாள்.

    அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் வித்யா உள் வேலையை முடித்தால், அப்புறம் மாமனார் சாப்பிட வருவார். அவருக்கு வித்யாதான் பரிமாறுவாள். அந்த நேரம் மாமியார் ஸ்லோகம் சொல்வதும், புடவையை உலர்த்துவதும் என்று ஏதோ காரியமாய் உள்ளே போய்விடுவாள்.

    போகும் வழியில் ஸ்கூட்டரில் தங்கையை காலேஜில் விட்டுவிட்டு பாரீஸில் இருக்கும் அலுவலகத்திற்குப் போவான் சங்கர்.

    மாமனாரும் பத்துமணிவாக்கில் கிளம்பி வெளியில் போய்விட்டு 4 மணிக்குத்தான் வருவார்.

    வித்யாவும், வேதமும் மெதுவாக சாப்பிட்டு எல்லாக் கதையும் பேசி முடித்து, முன் அறைக்கு வர 11 மணி ஆகிவிடும். அப்புறம் வேதம் கொஞ்ச நேரம் டி.வி. பார்ப்பாள். தூங்குவாள். வித்யாவுக்கு ஒதுக்கி வைப்பது, கிளீன் செய்வது என்று சரியாக இருக்கும். மற்ற நேரத்தில் பத்திரிக்கையை படிப்பாள். இவளுக்காக அத்தனை பத்திரிகைகளையும் விசுவநாதன் வரவழைக்கிறார்.

    இந்த நாலு மாதத்தில் இந்த வீட்டு ரொட்டீன் அத்தனையும் வித்யாவிற்கு அத்துப்படி ஆகிவிட்டது. அவளும் அந்தக் குடும்பத்துடன் சட்டென்று ஒட்டிக் கொண்டு விட்டாள்.

    சங்கருக்கே ஆச்சரியம் கதையிலெல்லாம் மாமியார் மருமகள் சண்டை என்றெல்லாம் பார்த்து பயந்திட்டே இருப்பேன் வித்யா. நமக்கு வர்ற பொண்டாட்டி எப்படி இருப்பாளோ, என்ன ஆகுமோ, அப்படின்னு. நீ எப்படி சண்டையே போடாம இருக்கே? என்று கேட்கும்போது வித்யாவுக்கு சிரிப்புத்தான் வரும்.

    இங்கு எல்லாருமே அன்பா இருக்காங்க. குத்தங்கண்டு பிடிக்கிறதில்ல. உள்ள ஒண்ணு. வெளியே ஒண்ணுன்னு பேசறதில்ல. இது சரியில்லன்னா சரி இல்லன்னு சொல்லிடறாங்க. அப்புறம் எதுக்கு சண்டை போடணும் என்பாள் வித்யா.

    வித்யாவுக்கு எப்போதுமே இந்த நேர்மை நியாயம் போன்ற குணங்களெல்லாம் ஜாஸ்தி. அதே சமயம் ரோஷக்காரியும்கூட. சட்டென்று அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்க மாட்டாள்.

    அன்று மாமனார், அவளும் உன் நாத்தனார்தாம்மா என்று சொன்னதில் ஓரளவு விஷயம் புரிந்ததே தவிர என்ன ஏது என்று இவளாய் வாய் திறந்து கேட்கவேயில்லை. சங்கர் கூட, இவளைக் கடுமையாய் பேசி அன்று இரவு, சாரி வித்யா. கோபமா பேசிட்டேன் இல்ல. எங்க குடும்பத்து அசிங்கம் வித்யா அது. அதைப் பத்தி யார் பேசினாலுமே எனக்கு உடம்பெல்லாம் சூடாயிடுது. எங்கப்பாவுக்கு இன்னொரு குடும்பம் உண்டு. எங்களுக்கெல்லாம் தாங்க முடியாத அவமானம் அது என்றான்.

    வித்யாவும் அதற்குமேல் அதைப்பற்றிக் கிளறவில்லை, தெரியும்போது தெரியட்டும் என்று விட்டுவிட்டாள்.

    ஆனால் வீட்டில் விசுவநாதனை மட்டும் அனைவரும் சேர்ந்து ஒதுக்கி வைத்திருப்பதைக் கவனித்தாள். ஆனந்தி மட்டும் ஏதோ கொஞ்சம் பேசுவாள் போலிருக்கிறது. அம்மாவும் பிள்ளையும்தான் அப்பாவிடம் முகம் கொடுத்து ஒரு வார்த்தை பேசுவதில்லை.

    அதுவும் வேதம் அவர் நின்ற பக்கம் வரமாட்டாள். ஆனால் அவருக்குண்டான அத்தனை காரியங்களும் மரியாதையோடு நடத்தப்படும். வெளியாளுக்கோ, மற்ற வேலைக்காரர்களுக்கோ இப்படி ஒரு கோபதாபம் இருப்பது தெரியவே தெரியாது.

    சில சமயங்களில் அவரைப் பார்க்கவே பாவமாக இருக்கும் வித்யாவுக்கு. அப்பா இல்லாததால் அவர்மேல் இனந் தெரியாத பாசம் இருந்தது அவளுக்கு.

    கையில துடைப்பத்தோட அப்படி என்ன யோசனை வித்யா? என்றபடி உள்ளே வந்தாள் மாமியார்.

    அட வேலையெல்லாம் முடிச்சிட்டியா, உங்கைக்கு தங்கக் காப்புதான் செஞ்சு போடணும். எத்தனை சுத்தம், எவ்வளவு அழகா வேலை செய்யறே மாமியாரின் புகழில் வெட்கப்பட்டாள் வித்யா.

    மன்னி கிளம்பறோம்… ஹாலில் வயலட் நிற பூப்போட்ட சுடிதாரில் ஆனந்தி இருந்தாள். கையில் பெட்டியுடன் மாடியிறங்கி வேகமாக வந்தான் சங்கர். இரண்டு பேர் கையிலும் டிபன் பாக்ஸை தர, சங்கர் அவளுக்கு மட்டும் புரியும்படி கண்ணடித்து நல்லா தூங்கு வித்யா என்று சொல்லிவிட்டு ‘வரட்டுமா’ என்று தலையாட்டியபடியே விடை பெற்றான்.

    புதுப் பொண்டாட்டியாய் லட்சணமாய் மரியாதையாய் பகலெல்லாம் தூங்கிடணும். ராத்திரி வந்து தூக்கம் வரதுங்கன்னு சிணுங்கக்கூடாது என்று ராத்திரி சங்கர் சொன்னது ஞாபகம் வர சிரிப்பை வாய்க்குள் அடக்கினாள் வித்யா.

    உள்ளே போய் மாமனாருக்கு சாதம் போட்டாள். மாமியாரும் இவளும் சாப்பிட்டு எழுந்தார்கள்.

    கே.கே. நகர் வரைக்கும் போகலாம் வரயா வித்யா? என்ற மாமியாரிடம், இல்லம்மா கொஞ்சம் தலைவலியா இருக்கு. நீங்க போயிட்டு வாங்களேன் என்றாள்.

    தனியா இருப்பியா வித்யா. அப்பாவும் இல்லையே என்று வேதம் கேட்டாலும் கடைசியில் அவள் கிளம்பிப் போன பின்னும் விசுவநாதன் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டுதான் இருந்தார்.

    சரி வாசல் கதவை சாத்திக் கொண்டு போகலாம் என்று வந்தவள் அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து,

    நீங்க வெளியில் போறதுன்னா என்னைக் கூப்பிடுங்கப்பா, நான் வந்து கதவைச் சாத்திக்கறேன் என்றாள் வித்யா.

    இல்லம்மா இன்னிக்கு நான் போகல. இங்கதான் இருப்பேன் என்றார். உள்ளே போகத் திரும்பிய வித்யாவை அவர் குரல் நிறுத்தியது.

    ஏதாவது வேலை இருக்கா வித்யா. இப்படி ஒரு நிமிஷம் உட்காரேன் என்றார்.

    சொல்லுங்கப்பா என்று அவரை ஏறிட்டாள்.

    58 வயது விசுவநாதன் ரொம்ப ஆசாரமானவர். காலையில் நெற்றியில் இட்ட 3 பட்டை விபூதி சாயங்காலம் வரை கலையாமல் வெளேர் என்று இருக்கும். நடுவில் சின்ன குங்குமப் பொட்டு. ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1