Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engum Nee Nirainthaai
Engum Nee Nirainthaai
Engum Nee Nirainthaai
Ebook87 pages36 minutes

Engum Nee Nirainthaai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466930
Engum Nee Nirainthaai

Read more from Devibala

Related to Engum Nee Nirainthaai

Related ebooks

Related categories

Reviews for Engum Nee Nirainthaai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engum Nee Nirainthaai - Devibala

    1

    ஆபீசே அமளி துமளி பட்டுக் கொண்டிருந்தது...

    பழைய ஜியெம் அடுத்த வாரம் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார். அதற்கான பிரிவுபசார விழா கூட முடிந்து விட்டது. அவர் ரிடையர்மென்ட் லீவில் இருக்கிறார். புதிய ஜியெம் யாரென ஒரு கேள்வி இருந்தது.

    அது ஒரு தனியார் நிறுவனம். இந்தியா முழுவதும், வெளிநாட்டிலும் கிளைகள் உள்ள பிரபலமான மல்ட்டி இன்டர்நேஷனல் நிறுவனம்!

    புதிய ஜியெம்மாக ஒரு பெண் பதவி ஏற்கப் போகிறாள் என்ற தகவல் போன வாரம் டில்லியிலிருந்து வந்தது.

    அது வட இந்தியப் பெண்ணா... என்ன வயது என்றெல்லாம் கேள்வி இருந்தது.

    நேற்று ஆச்சர்யமாக விடை கிடைத்து விட்டது.

    வரப் போகும் - பெண் 25 வயது நிரம்பப் பெற்றவள்... இன்னும் கல்யானாம் ஆகாதவள்.

    இத்தனை சின்னவயதில் - அதுவும் ஒரு பெண் உயர் பதவியில் இருப்பது எல்லாரையும் அதிசயப்பட வைத்தது.

    அவள் - மிஸ்.பிரவீணா - இன்று வரப் போகிறாள்.

    ஆபீசே அமளி துமளி பட்டுக் கொண்டிருந்தது.

    ஆபீசில் உள்ள அத்தனை பேரும் ஆண்கள் - ஆசையுடன் காத்திருந்தார்கள்.

    ஆனால் உயர் பதவி என்பதால், அச்சம் இருந்தது

    பழைய ஜியெம் லீவில் இருந்ததால் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர் பாண்டு ரங்கன்தான் சகலத்துக்கும் பொறுப்பு!

    அவர்தான் புது ஜியெம்மை வரவேற்கும் டென்ஷனில் இருந்தார்.

    நேற்றே பிரவீணா சென்னை வந்து விட்டதாகச் சொன்னார்கள். அவளுக்காக நிர்வாகம் இங்கே தனிவீடு, கார், வேலையாட்கள் சகலத்தையும் ஒதுக்கியிருந்தது.

    ஆனால் பிரவீணா கம்பெனி வீட்டுக்கு வரவில்லை!

    அவள் சென்னையில் எங்கே இருக்கிறாள் என்றும் தெரியவில்லை!

    ஆபீஸ் நேரம் ஒன்பது முதல் ஐந்தரை வரை!

    சரியாக எட்டு ஐம்பதுக்கு வாசலில் கார் வந்து நின்றது. சூடிதார் சகிதம் அந்தப் பெண் இறங்கினாள்.

    பாண்டுரங்கன் ஓடிப் போய் வரவேற்றார்.

    ஐ யாம் பிரவீணா! புதுசா ஜியெம் பொறுப்பை ஏத்துக்க வந்திருக்குகேன்!

    வெல்கம் மேடம்! உங்களுக்காக காத்துட்டு இருக்கோம்!

    பாண்டுரங்கன் நடக்க, பிரவீணா பின்னால் நடந்து வந்தாள்.

    நேரா என் கேபினுக்குப் போயிருங்க!

    அவளை, அவளது அறையில் கொண்டு வந்து விட்டார்.

    ஏஸி போடப்பட்டு தயாராக இருந்தது.

    நின்ற நிலையில் கண் மூடி பிரார்த்தனை செய்தாள், உட்கார்ந்தாள்.

    ஐ.யாம் பாண்டுரங்கன்! தற்சமயம் கம்பெனியை கவனிச்சுக்கறேன்!

    பழைய ஜியெம் எப்ப வர்றார்?

    நாளை மறுநாள்!

    வெரிகுட்! ஏன் நிக்கறீங்க? ஒக்காருங்க!

    ஸ்டாஃப்களை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வெக்கட்டுமா?

    ஒரே நேரத்துல அறிமுகப்படுத்தினா மனசுல பதியாது. அப்பப்ப, அவங்க வேலைகள் வரும்போது பேசி அறிமுகம் பண்ணிக்கலாம்!

    ஓக்கே மேடம்!

    சரி! நான் ஒரு லிஸ்ட் தர்றேன். அந்த ஃபைல்ஸ் எல்லாம் பத்து நிமிஷத்துல என் டேபிளுக்கு வரணும்!

    சொல்லுங்க!

    அவள் அடுக்கிக் கொண்டே! போனாள்.

    பாண்டுரங்கன் மிரண்டார்.

    மேற்படி ஃபைல்களை ஒரு கண் பார்த்தால் போதும்... இந்த நிமிடம் வரை உள்ள கம்பெனியின் நிலவரம் தெரிந்துவிடும்!

    இவள் லேசுப்பட்டவள் அல்ல!

    ஓடினார். சம்பந்தப்பட்ட செக்ஷன்களுக்கு. இன்டர்காமில் தகவல் சொல்லி, முடுக்கி விட்டு, இருபது நிமிடங்களில் அத்தனை ஃபைல்களும் அவளது மேஜையில் குவிந்தன.

    ரெகுலர் வேலைகளை இன்னும் ரெண்டு நாள் நீங்களே பாருங்க சார். நான் கொஞ்சம் செட்டில் ஆகணும் இல்லையா?

    சரி மேடம்!

    உணவு இடை வேளைக்குள் அத்தனை ஃபைல்களையும் பார்த்து விட்டாள். பேலன்ஷீட்... ஸ்டாக் நிலவரம்... சமீபத்திய உற்பத்தி அளவு... எதையும் விடவில்லை!

    பிற்பகல் மூன்று மணிக்கு பாண்டுரங்கனை அழைத்தாள்.

    தேதி வாரியாக - நிர்வாகம் சரியாக நடக்காமல் ஒரு தேக்கம் இருந்ததை சுட்டிக் காட்டினாள்.

    அப்ப பழைய ஜியெம் இருந்தார்!

    யாரா இருந்தா என்ன? நம்மோட இந்த மெட்ராஸ் கிளை கடந்த ஆறு மாசத்துல ஏழாவது இடத்துக்கு தள்ளப் பட்டிருக்கு, ஏற்கனவே மூணாவது இடத்துல இருந்த கம்பெனி இது!

    பாண்டு ரங்கனுக்கு வியர்த்தது.

    இதே ரேட்ல தொடர்ந்தா, ஏழுலேருந்து பதினேழாவது இடத்துக்குப் போயிடும்! போகணுமா?

    மேடம்!

    "யாரும் சரியா வேலை செய்யலை! நிர்வாகம் ஸ்தம்பிச்சுக்கெடக்கு. புகார் டெல்லி வரைக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1