Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சீதைக்கு ராமன் சித்தப்பா
சீதைக்கு ராமன் சித்தப்பா
சீதைக்கு ராமன் சித்தப்பா
Ebook120 pages54 minutes

சீதைக்கு ராமன் சித்தப்பா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"இன்னிக்கு சாயங்காலம் என்னோட பர்த்டே பார்ட்டி! எல்லாரும் அவசியம் வந்துடுங்க!" தன்னுடன் கல்லூரியில் படிக்கும் முக்கியத் தோழிகளுக்கு அழைப்பிதழ் தந்து கொண்டிருந்தாள் சாந்தா.
 அழைப்பதற்காகத்தான் காலேஜுக்கு வந்திருந்தாள். வகுப்புகளுக்கு வராமல் தன் டாடா சுமோவில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டாள்.
 வேலைக்காரர்கள் அந்த வீட்டை (பங்களா) காலை முதலே அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.
 சாந்தா உற்சாகத்தின் உச்சியில் இருந்தாள்.
 இந்த நேரம் சாந்தா பற்றி சின்னதாக ஒரு பாரா:-
 பிரபல தொழிலதிபர் விஷ்ணு குப்தாவின் ஒரே செல்ல மகள் சாந்தா. பல கோடிக்கு அதிபதி விஷ்ணு! இந்தியாவின் மில்லியனர்கள் வரிசையில் முதல் ஐந்து இடத்தில் ஒரு நபர்.
 சாந்தாவுக்கு ஆறு வயதாக இருக்கும்போது மனைவியை இழந்தார். அதன் பிறகு திருமணத்தை நாடாதவர். மகளுக்காக உலகத்தையே விலை பேசவும் தயாரான வித்யாசமானவர். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் சாந்தாவுக்கு வயது பத்தொன்பது...
 இப்போதைக்கு இது போதும்.
 மாலை நாலரைமணி சுமாருக்குத் தலைமை அலுவலகத்துக்கு போன் செய்தாள்
 ஜியெம்மை அழைத்தாள்.
 "இப்ப டாடி எங்கே?"
 "சிங்கப்பூர்லேருந்து ஃபிளைட்ல வந்துகிட்டே இருக்கார் மேடம்!
 சாந்தா சிரித்தபடி ரிசீவரை வைத்தாள்.

குப்தா எங்கே இருந்தாலும், மகளின் பிறந்த நாளன்று வந்துவிடுவார்.
 அவள் பருவம் அடையும் வரை, அவரது வர்த்தக எல்லைகள் இந்தியாவுக்குள்தான் இருந்தது.
 அதன் பிறகு அயல்நாட்டுக்கும் பறப்பதை ஒரு பகுதியாகத் தொடங்கி விட்டார் ஆறு மணிக்கு குப்தாவின் படகுக்கார் வாசலை நிரப்பிக் கொள்ள இறங்கினார். சாந்தா ஓடி வந்தாள்.
 "டாடி!"
 "நானும் நிறைய பேரை வரச் சொல்லியிருக்கேன் சாந்தா. ரெண்டு புது யூனிட் தொடங்கப் போறேன். அதோட ஆரம்ப விழாவா உன் பிறந்த நாள் இருக்கட்டும்னு நினைச்சேன்!"
 "போதும் டாடீ! இருக்கற பணம் போதாதா?"
 "பணம் சேர்க்கணும்னு வெறி இல்லைமா எனக்கு. இண்டஸ்ட்ரில சாதிச்சுக் காட்டணும். சரி சரி! நீ ரெடி பண்ணிக்க!"
 கூட்டம் வரத் தொடங்கி விட்டது.
 சீருடை தரித்த பேரர்கள் வந்து விட்டார்கள்.
 சாந்தாவுக்கு அலங்கரிக்க நகரின் மிக உயர்ந்த ப்யூட்டி டெக்னிஷியன்கள் வந்து நிற்க,
 ராட்சஸ சைஸ் கேக் பெரிய டெம்போவில் வந்து இறங்க, நாலு பேராகப் பிடித்துத் தூக்கி வந்தார்கள்.
 சரியாக ஆறே முக்கால்.
 கல்யாண வீடு போல காட்சி தர, நகரின் முக்கிய மனிதர்கள் அத்தனை பேரும் அங்கே இருந்தார்கள்.
 சாந்தா ஒரு தேவதை போல படியிறங்கி வந்தாள்.
 கூடவே குப்தா.
 கை தட்டல் வீட்டை கலகலக்க வைத்தது.
 குப்தா மகளை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தினார். கேக் வெட்டினாள் சாந்தாகை தட்டல் பிளந்தது.
 குப்தா புது யூனிட் அறிமுகம் பற்றி இரண்டொரு வார்த்தைகள் சொன்னார். விழா தொடங்கி விட்டது.
 ஸ்காட்ச், ஷாம்பெயினர்கள் ஆறாகப் பெருகி ஓடத் தொடங்க, நடனம், இசை இத்யாதிகள் என அந்த இடம் ஒரு பொழுது போக்குக் கேந்திரமாக மாறிக் கொண்டிருந்தது.
 சாந்தாவை சைட் அடிப்பதற்கென்றே பணக்காரக் கூட்டம் ஒன்று அலைமோதியது.
 க்யுவில் நின்று சாமி தரிசனம் போல பரிசுப் பொருட்களை சாந்தாவுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள் பெரிய மனிதர்கள்.
 வெளியே கார்டனில் டின்னர் ஏற்பாடாகியிருந்தது. ஸ்காட்சில் மிதந்தபடி குப்தா யாரோ சிலரிடம் அடுத்த வர்த்தகத்துக்கு விதை போட்டுக் கொண்டிருந்தார்.
 சாந்தாவின் தோழிகள் அவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி சாப்பிடப் போனார்கள்.
 "குப்தா! எப்பக் கல்யாணம் சாந்தாவுக்கு?"
 "ஏன்?"
 "என்ன சார்? கிராஜுவேஷன் முடிக்கப்போறா உங்க பொண்ணு! கல்யாண வயசாகலையா?"
 "அவ குழந்தை சார்!"
 "அது உங்களுக்கு! நாங்கள்ளாம் பசங்களை வச்சிக்கிட்டு வரிசையா நிக்கறம். எப்ப உங்க மகளுக்கு சுயம்வரம்?"
 குப்தா சிரித்தார்.
 "அவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கற உரிமை அவளுக்குத்தான். 'டாடி, நான் கல்யாணம் செஞ்சுக்குறே'ன்னு சொன்னா, நான் சரிம்பேன். ஆனா மாப்ளைதான் வீட்டோட வருவார்."
 "ஹும்! உங்களுக்கு மாப்ளையா, வரப் போறவன்தான் இந்த உலகத்துல அதிகபட்ச புண்ணியம் பண்ணினவன்!"
 குப்தா உரத்துச் சிரித்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 14, 2023
ISBN9798223572732
சீதைக்கு ராமன் சித்தப்பா

Read more from Devibala

Related to சீதைக்கு ராமன் சித்தப்பா

Related ebooks

Reviews for சீதைக்கு ராமன் சித்தப்பா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சீதைக்கு ராமன் சித்தப்பா - Devibala

    1

    "இன்னிக்கு சாயங்காலம் என்னோட பர்த்டே பார்ட்டி! எல்லாரும் அவசியம் வந்துடுங்க!" தன்னுடன் கல்லூரியில் படிக்கும் முக்கியத் தோழிகளுக்கு அழைப்பிதழ் தந்து கொண்டிருந்தாள் சாந்தா.

    அழைப்பதற்காகத்தான் காலேஜுக்கு வந்திருந்தாள். வகுப்புகளுக்கு வராமல் தன் டாடா சுமோவில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டாள்.

    வேலைக்காரர்கள் அந்த வீட்டை (பங்களா) காலை முதலே அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

    சாந்தா உற்சாகத்தின் உச்சியில் இருந்தாள்.

    இந்த நேரம் சாந்தா பற்றி சின்னதாக ஒரு பாரா:-

    பிரபல தொழிலதிபர் விஷ்ணு குப்தாவின் ஒரே செல்ல மகள் சாந்தா. பல கோடிக்கு அதிபதி விஷ்ணு! இந்தியாவின் மில்லியனர்கள் வரிசையில் முதல் ஐந்து இடத்தில் ஒரு நபர்.

    சாந்தாவுக்கு ஆறு வயதாக இருக்கும்போது மனைவியை இழந்தார். அதன் பிறகு திருமணத்தை நாடாதவர். மகளுக்காக உலகத்தையே விலை பேசவும் தயாரான வித்யாசமானவர். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் சாந்தாவுக்கு வயது பத்தொன்பது...

    இப்போதைக்கு இது போதும்.

    மாலை நாலரைமணி சுமாருக்குத் தலைமை அலுவலகத்துக்கு போன் செய்தாள்

    ஜியெம்மை அழைத்தாள்.

    இப்ப டாடி எங்கே?

    "சிங்கப்பூர்லேருந்து ஃபிளைட்ல வந்துகிட்டே இருக்கார் மேடம்!

    சாந்தா சிரித்தபடி ரிசீவரை வைத்தாள்.

    குப்தா எங்கே இருந்தாலும், மகளின் பிறந்த நாளன்று வந்துவிடுவார்.

    அவள் பருவம் அடையும் வரை, அவரது வர்த்தக எல்லைகள் இந்தியாவுக்குள்தான் இருந்தது.

    அதன் பிறகு அயல்நாட்டுக்கும் பறப்பதை ஒரு பகுதியாகத் தொடங்கி விட்டார் ஆறு மணிக்கு குப்தாவின் படகுக்கார் வாசலை நிரப்பிக் கொள்ள இறங்கினார். சாந்தா ஓடி வந்தாள்.

    டாடி!

    நானும் நிறைய பேரை வரச் சொல்லியிருக்கேன் சாந்தா. ரெண்டு புது யூனிட் தொடங்கப் போறேன். அதோட ஆரம்ப விழாவா உன் பிறந்த நாள் இருக்கட்டும்னு நினைச்சேன்!

    போதும் டாடீ! இருக்கற பணம் போதாதா?

    பணம் சேர்க்கணும்னு வெறி இல்லைமா எனக்கு. இண்டஸ்ட்ரில சாதிச்சுக் காட்டணும். சரி சரி! நீ ரெடி பண்ணிக்க!

    கூட்டம் வரத் தொடங்கி விட்டது.

    சீருடை தரித்த பேரர்கள் வந்து விட்டார்கள்.

    சாந்தாவுக்கு அலங்கரிக்க நகரின் மிக உயர்ந்த ப்யூட்டி டெக்னிஷியன்கள் வந்து நிற்க,

    ராட்சஸ சைஸ் கேக் பெரிய டெம்போவில் வந்து இறங்க, நாலு பேராகப் பிடித்துத் தூக்கி வந்தார்கள்.

    சரியாக ஆறே முக்கால்.

    கல்யாண வீடு போல காட்சி தர, நகரின் முக்கிய மனிதர்கள் அத்தனை பேரும் அங்கே இருந்தார்கள்.

    சாந்தா ஒரு தேவதை போல படியிறங்கி வந்தாள்.

    கூடவே குப்தா.

    கை தட்டல் வீட்டை கலகலக்க வைத்தது.

    குப்தா மகளை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தினார். கேக் வெட்டினாள் சாந்தா.

    கை தட்டல் பிளந்தது.

    குப்தா புது யூனிட் அறிமுகம் பற்றி இரண்டொரு வார்த்தைகள் சொன்னார். விழா தொடங்கி விட்டது.

    ஸ்காட்ச், ஷாம்பெயினர்கள் ஆறாகப் பெருகி ஓடத் தொடங்க, நடனம், இசை இத்யாதிகள் என அந்த இடம் ஒரு பொழுது போக்குக் கேந்திரமாக மாறிக் கொண்டிருந்தது.

    சாந்தாவை சைட் அடிப்பதற்கென்றே பணக்காரக் கூட்டம் ஒன்று அலைமோதியது.

    க்யுவில் நின்று சாமி தரிசனம் போல பரிசுப் பொருட்களை சாந்தாவுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள் பெரிய மனிதர்கள்.

    வெளியே கார்டனில் டின்னர் ஏற்பாடாகியிருந்தது. ஸ்காட்சில் மிதந்தபடி குப்தா யாரோ சிலரிடம் அடுத்த வர்த்தகத்துக்கு விதை போட்டுக் கொண்டிருந்தார்.

    சாந்தாவின் தோழிகள் அவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி சாப்பிடப் போனார்கள்.

    குப்தா! எப்பக் கல்யாணம் சாந்தாவுக்கு?

    ஏன்?

    என்ன சார்? கிராஜுவேஷன் முடிக்கப்போறா உங்க பொண்ணு! கல்யாண வயசாகலையா?

    அவ குழந்தை சார்!

    அது உங்களுக்கு! நாங்கள்ளாம் பசங்களை வச்சிக்கிட்டு வரிசையா நிக்கறம். எப்ப உங்க மகளுக்கு சுயம்வரம்?

    குப்தா சிரித்தார்.

    அவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கற உரிமை அவளுக்குத்தான். ‘டாடி, நான் கல்யாணம் செஞ்சுக்குறே’ன்னு சொன்னா, நான் சரிம்பேன். ஆனா மாப்ளைதான் வீட்டோட வருவார்.

    ஹும்! உங்களுக்கு மாப்ளையா, வரப் போறவன்தான் இந்த உலகத்துல அதிகபட்ச புண்ணியம் பண்ணினவன்!

    குப்தா உரத்துச் சிரித்தார்.

    நேரம் பத்தரை!

    கூட்டம் வேகமாகக் கலையத் தொடங்கியது.

    ஏறத்தாழ எல்லாரும் போய் அப்பா, அவள், அந்த வீட்டு வேலைக்காரர்கள் என மிஞ்சும் போது நேரம் இரவு பதினொன்று.

    சாந்தாவிடம் வந்தார் குப்தா.

    சாப்ட்டியாம்மா?

    ஆச்சி டாடி! டயர்டா இருக்கு. நான் போய் படுக்கறேன்!

    நானும் படுக்கணும். நாளைக்கு லண்டன் ட்ரிப்!

    மறுபடியும் எப்ப வருவீங்க?

    பத்து நாளாகும்மா! ஏன்?

    சும்மா கேட்டேன் டாடி! குட் நைட்!

    சாந்தா மாடிப்படி ஏற, குப்தாவின் செக்ரட்டரி அருகில் வந்தான்.

    சார்! ஒரு லேடி சின்ன மேடத்தைப்பார்த்து பரிசு தர வந்திருக்காங்க!

    இத்தனை நேரம் கழிச்சா? வரச் சொல்லு!

    சாந்தா அப்படியே நின்றாள்.

    செக்ரட்டரி அந்தப் பெண்ணைக் கொண்டுவந்து விட்டபின் அங்கிருந்து விலக, அவள் சாந்தாவை நெருங்கினாள்.

    கையில் அழகான வெல்வெட் ரோஜா ஒன்று இருந்தது.

    இந்தா சாந்தா! என்னால இதைத்தான் தர முடிந்தது உனக்கு!

    சாந்தா, அதை வாங்கிக் கொண்டாள்.

    தேங்க்யூ! ரொம்ப அழகா இருக்கு. இன்னிக்கு வந்த பரிசுகள்ள, எனக்குப் பிடிச்ச பரிசு. ஆமாம், நீங்க யாரு? இத்தனை லேட்டா வந்தீங்க?

    அதை நாளைக்குக் காலைல நான் சொல்றேனே! நீ போய்ப் படும்மா!

    ஓக்கே...குட் நைட்!

    சாந்தா ஓட்டமாகப் படிகளை ஏறி, போய் விட்டாள். குப்தாவிடம் வந்தாள் அந்தப் பெண்.

    யாரம்மா நீ?

    அவள் பேசாமல் அவரைப் பார்த்தாள்.

    "இப்ப மணி பதினொண்ணு! இந்த ராத்திரி வேலைல நீ தனியாவா வந்த? பிறந்த நாளைக்கு சாந்தாவை வாழ்த்திப் பரிசு தரணும்னா, கொஞ்சம் முன்னால வரக்கூடாதா?

    அந்தக் தகுதி எனக்கில்லை!

    பணத்தை நானும், என் மகளும் பெரிசா மதிக்க மாட்டோம். தெரியாதா உனக்கு?

    நாளைக்கு எப்ப நீங்க புறப்படணும்?

    "காலைல ஒன்பது மணிக்கு!’

    "உங்ககிட்ட நான் கொஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1