Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தாய் பிறந்தாள்!
தாய் பிறந்தாள்!
தாய் பிறந்தாள்!
Ebook137 pages1 hour

தாய் பிறந்தாள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அலாரம் அடித்தது. 

சீனிவாசன் படுக்கையை விட்டு அவசரமாக எழுந்தார். பக்கத்தில் விக்ரம் நல்ல உறக்கத்தில் இருந்தான். சீனிவாசன் பல்தேய்த்து விட்டு, சமையல் கட்டுக்குள் நுழைந்தார். அரிசி, நறுக்கி வைத்த காய்கறிகளை குக்கரில் வைத்து விட்டு பாலை பாத்திரத்தில் கொட்டி காய்ச்சத் தொடங்கினார். 

தும்மல் ஆரம்பித்தது. 

காலை நேரத்தில் இளம்பனி அவரை இம்சித்தது. 

லேசாக ஆஸ்த்மா உபத்ரவமும் உண்டு. அவருக்கு. தும்மல் அதிகமானால், அது இழுப்பில் கொண்டு போய் விட்டு விடும். 

மாத்திரையைப் போட்டுக் கொண்டார். காபி தயாராகி விட்டது.

ஐந்தரை மணிக்கு கட்டிலுக்கு வந்தார். விக்ரம் ஆடை குலைந்து  அலங்கோலமாகக் கிடந்தான். 

"விக்ரம் எழுந்திரு ராஜா, யோகா பண்ண வேண்டாமா?"

"விடுப்பா" 

"ஷ் ரொட்டீன் வேலைகளை நிறுத்தலாமா? எழுந்திரு ராஜா வா... வா..." 

விக்ரம் விழித்தான். 

"குட்மார்னிங் டாடி" 

"குட்மார்னிங், பல்லைத் தேச்சிட்டு யோகாவை முடி" 

சீனிவாசன் சமையல் கட்டுக்குள் நுழைந்து வேலைகளை பரபரவென ஆரம்பித்தார். 

விக்ரம் ஜட்டியோடு யோகா தொடங்கினான். 

முடித்தான். 

"டாடி! காபி கொண்டா" 

"இரு வியர்வை ஆறட்டும். என்ன டிபன் வேணும் உனக்கு?"

"மசால் தோசை" 

"சரி, இந்தா காபியைக் குடிச்சிட்டு குளிக்கப் போ" 

ஏழரை மணிக்குள் முழுச் சமையலை முடித்து மகனுக்கும் தனக்கும் அதை ஹாட்பேக்கில் நிரப்பிவிட்டு தோசை சுட ஆரம்பித்தார். 

விக்ரம் குளித்துத் தயாராகி வந்து விட்டான். 

சூடான மசால் தோசைகளை ஓட்டல் ரேஞ்சில் அவன் பிளேட்டில் வைத்தார். 

"டாடி எனக்கு ஆச்சர்யமா இருக்கு" 

"என்ன ஆச்சர்யம்?" 

"ஒரு ஆம்பிளையால இத்தனை அழகா வீட்ல வேலைகளைப் பார்க்க முடியுமா?" 

"சாப்டுட்டு புறப்படற வழியைப் பாரு. எனக்கும் ஆபீசுக்கு டயமாச்சு" 

கை கழுவி, ட்ரஸ் மாற்றிக்கொண்டு ஸ்கூட்டர் சாவியை எடுத்தான், விக்ரம். 

"டாடி! நான் போயிட்டு வர்றேன்" 

பதிலே இல்லை.

"நீ எங்கப்பா இருக்கே" 

அதற்கும் பதில் இல்லை.

உள்ளே எட்டிப் பார்த்தான் விக்ரம். 

சீனிவாசன் கட்டிலில் கிடந்தார். 

"என்னாச்சுப்பா உனக்கு?" 

"தலை சுத்தது. கொஞ்சம் படுத்தா சரியாப் போகும்" 

"நான் லீவு போட்டுர்றேன்" 

"வேண்டாம். நானே லீவு போடப் போறதில்லை. நீ புறப்படு" 

"இது எப்பவும் வர்றதுதானே?"

"நீ எத்தனை நாள்பா கஷ்டப்படுவே? ஒரு ஆம்பளை செய்யற வேலைகளையா நீ செய்யற?"

"வருஷக்கணக்கா, இது பழக்கம்தானே விக்ரம், உனக்கொரு பொண்டாட்டி வந்து இந்தக் குடும்பப் பொறுப்புகளை ஏத்துகிட்டா, எனக்கு ரெஸ்ட் தானே" 

"வேண்டாம்பா, உன்னையும், என்னையும் அவ பிரிச்சிரப்போறா"

"அசடு ஏண்டா அப்படி நினைக்கிற? உனக்கு வயது இருபத்தி ஏழு. நாலஞ்சு வருஷமா உனக்கு ஜாதக பலன் சரியில்லை. அதான் நான் பேசாம இருக்கேன். இந்த கார்த்திகை மாசத்தோட தோஷமெல்லாம் நீங்குது. நீ புறப்படு விக்ரம். நேரமாச்சு" 

விக்ரம் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான். 

Languageதமிழ்
Release dateFeb 27, 2024
ISBN9798224717897
தாய் பிறந்தாள்!

Read more from Devibala

Related to தாய் பிறந்தாள்!

Related ebooks

Reviews for தாய் பிறந்தாள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தாய் பிறந்தாள்! - Devibala

    1

    "அத்தே! எனக்கு டயமாச்சு! டிபன் எடுத்து வை!"

    அருணா பரபரப்புடன் உடைகளை மாற்றிக் கொண்டு உணவு மேஜைக்கு வந்தாள்.

    வந்துட்டேன் அருணா

    அத்தை சூடு பறக்கும் இட்லிகளை எடுத்துக் கொண்டு வந்தாள்.

    ரெண்டு வை அத்தே!

    சூடா இருக்கு. உனக்குப் புடிச்ச தக்காளிச் சட்னி அரைச்சிருக்கேன். இன்னும் ரெண்டு சாப்பிடு!

    இல்லை அத்தே! நீ பாட்டுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டுர்ற சதை போடத் தொடங்கியாச்சு எனக்கு. கொஞ்சம் காலைல ஜாகிங் போகணும்.

    பொம்மனாட்டி கொஞ்சம் பூசினமாதிரி இருந்தாத்தான் அழகு! எலும்பும், தோலுமா இருந்தா என்ன வசிகரம்?

    அருணா மொபெட் சாவியை எடுத்துக் கொண்டாள்.

    ஆபிஸ்ல நிறைய வேலை! சாயங்காலம் ஏ.ஜி.யெம் கூட மீட்டிங். வர ராத்திரி ஒன்பதாகும். எனக்கு சாப்பாடு வேண்டாம். நீ சாப்பிட்டு படுத்துக்கோ அத்தே!

    அருணா அவசரமாக வாசலில் இறங்கி வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

    ஒரு நொடியில் தெருக்கோடியில் இருந்தாள்.

    அத்தை உள்ளே வந்து கதவைத் தாளிட்டாள்.

    புயலடித்து ஓய்ந்ததைப் போலிருந்தது.

    வீடு போட்டது போட்டபடி இருந்தது. அதையெல்லாம் ஒரு மாதிரி சரி செய்து விட்டு துணி தோய்க்கப் போனாள் அத்தை.

    கதவு தட்டப்பட்டது.

    யாரது? கேட்டபடி வந்து கதவைத் திறந்தாள்.

    பக்கத்து வீட்டம்மா.

    வாங்க!

    காஸ் தீர்ந்து போச்சு. உங்ககிட்ட டபுள் சிலிண்டர் தானே?

    ஆமாம். ஆனா தீரக் கூடிய நிலமைல இருக்கு. உங்களுக்குத் தந்தா, நான் மாட்டிப்பேன்!

    சரி வேண்டாம். புக் பண்ணி பதினஞ்சு நாளாச்சு. அருணா போயாச்சா?

    ம்!

    அருணாவுக்கு என்ன வயசு?

    வர்ற ஆவணிக்கு இருபத்தி அஞ்சு!

    கல்யாணத்துக்குப் பாக்க கூடாதா?

    அவ காதுல போட்டுக்கிட்டாத்தானே! ஆபீஸ், வேலைனு அலையறா. கல்யாணப் பேச்சை எடுத்தாலே அவ தலையாட்டறதில்லை!

    அதுக்காக? எத்தனை நாள் வீட்ல வச்சிருக்கப் போறீங்க?

    தெரியலை!

    எங்க அண்ணன் பையன் துபாய்ல இருக்கான். அடுத்த வாரம் லீவுல வர்றான். அருணாவைப் பார்க்கலாமா?

    முதல்ல அவகிட்ட நான் பேசிப் பார்க்கறேன். அப்புறமா உங்ககிட்டப் பேசறேன்!

    சரிங்க

    அந்தம்மா போய் விட்டாள்.

    அத்தை தன் வேலைகளை முடித்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்த போது மணி பன்னிரண்டு.

    கதவு தட்டப்பட்டது.

    திரும்பவும் யாரது?

    திறந்தாள்.

    அருணா நின்று கொண்டு இருந்தாள்.

    என்னம்மா?

    எங்க ஆபீஸ் நிறுவனர் ஒருத்தர் செத்துப் போயிட்டார், அத்தே! லீவு. விட்டுட்டாங்க!

    நல்லதாப் போச்சு!

    எது? நிறுவனர் செத்ததா?

    அதில்லடி! உனக்கு இப்படி கிடைச்சாத்தான் ரெஸ்ட்!

    அருணா சிரித்தாள்.

    கைப்பையை தூக்கி எறிந்தாள்.

    அத்தே சூடா, ஸ்ட்ராங்கா ஒரு காபி போடு!

    இரு! போட்டு எடுத்துட்டு வர்றேன்!

    அத்தை உள்ளே போனாள். சில நிமிடங்களில் மணக்கும், ஆவி பறக்கும் காபி.

    நீ இதைக்குடி! அதுக்குள்ள நான் சாப்டுட்டு வந்துர்றேன்!

    அருணா காபியைக் குடித்து விட்டு நைட்டிக்கு மாறினாள். அத்தை சாப்பிட்டு முடித்து வந்தாள்.

    இன்னிக்கு அதிசயமா வீட்ல இருக்கே! மத்யானம் சூடா சமோசா போடட்டுமா?

    சரி அத்தே!

    கிழங்கு வேகப் போடணும்!

    இரு அத்தே! லேட்டாப் போட்டுக்கலாம். பம்பரமா சுத்திக்கிட்டே இருப்பியா? உனக்கென்ன வயசு?

    அம்பது!

    உன்னைப் பார்த்தா அப்படித் தெரியலை!

    அத்தையை நெருங்கி கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

    அருணா

    சொல்லு அத்தே

    உங்கப்பா, அம்மா அந்த ரயில் விபத்துல சாகும்போது உனக்கு அஞ்சு வயது

    சரியா ஞாபகம் இல்ல அத்தே

    அன்னிக்கு என் பொறுப்புல வந்தவள் நீ

    என்னிக்கும் உன்னோட இருக்கணும்னு என் தலைல எழுதியிருக்கு. யாரால மாத்த முடியும்?

    கிண்டலடித்தாள்.

    அருணா உனக்கு இருபத்தஞ்சு வயசு!

    கொண்டாடலாமா அத்தே?

    ம்! கழுத்துல ஒரு தாலியைக் கட்டிட்டு உன் புருஷனோடக் கொண்டாடு.

    அருணாவின் முகம் மாறியது.

    ஜாலியா இருந்தா மூடைக் கெடுத்துடுவே நீ

    அருணா! நான் சீரியஸா பேசறேன். இனிமே தள்ளிப் போட எனக்குப் புடிக்கலை, உனக்கொரு கல்யாணத்தை நான் செஞ்சு வச்சாகணும்.

    வேண்டாம் அத்தே

    ஏன் வேணாம்? பொண்ணாப் பொறந்தா ஒரு கல்யாணம் தேவைதான். அப்படி செஞ்சுகிட்டாத்தான் வாழ்க்கைல ஒரு முழுமை

    அப்படியா அத்தே? நீ கல்யாணம் செஞ்சுகிட்டு எத்தனை வருஷம் வாழ்ந்தே?

    அருணா

    அடுத்த வருஷமே உன் புருஷன் செத்துப் போய் எங்கப்பா பராமரிப்புல வந்ததா நீ தானே சொல்லியிருக்கே

    அது என் தலைவிதி

    அப்பா அம்மா ஏன் வாழலை? விபத்துல எதுக்காக சாகணும்?

    அதுவும் விதிதான்மா

    இல்ல அத்தே! நம்ம குடும்பத்துக்கு கல்யாண வாழ்க்கை சரிப்படாது

    உளறாதே! எங்களுக்கு நேர்ந்ததெல்லாம் உனக்கும் நேரணுமா?

    வேண்டாம் விடு

    இல்லைம்மா! மடியில் நெருப்பைக் கட்டிட்டு இருக்கேன் நான்

    அய் அதுதான் உன் உடம்பு எப்பவும் சூடா இருக்கா?

    விளையாடாதே அருணா

    இல்லை அத்தே நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்ல இன்னொரு காரணமும் இருக்கு

    என்ன?

    என்னை விட்டுட்டு நீ எப்படி தனியா இருப்பே?

    அசடு உன் கழுத்துல தாலி ஏறிட்டா, நான் காசிக்குப் போயிடுவேன். கடைசி நாட்களை கங்கைக் கரைல கழிச்சிடுவேன்

    ஏன்?

    செஞ்ச பாவங்களைத் தொலைக்கறதுக்கு

    நீ என்ன பாவம் செஞ்சே?

    தெரியலை! இதப்பாரு நீ கல்யாணத்துக்கு இனி மறுத்தா, அந்த ஏக்கத்துல நான் இல்லாம ஆயிடுவேன். ஹும். என்னதான் ஆனாலும் நான் அத்தைதானே? அம்மா ஆக முடியுமா?

    அத்தே நீ என்ன பேசறே எனக்கு விபரம் தெரிஞ்ச நாள் முதல் உன்னைத்தானே நான் பார்க்கறேன். எனக்கு நீ தானே அம்மா! ஏன் பிரிச்சுப் பேசற

    அருணாவின் குரல் கலங்கியது.

    அப்ப சம்மதம் சொல்லு

    அத்தே ப்ளீஸ்

    இதப்பாருடா கண்ணு எல்லாம் நல்லதே நடக்கும். நீ சரின்னு சொல்லு

    அருணா மவுனமாக உட்கார்ந்திருந்தாள்.

    சரி அத்தே

    அப்பாடி என் வயித்துல பாலை வார்த்தே! நாளைக்கே ஜோசியனைப் போய்ப் பாக்கறேன் நான்

    இரு. நான் சம்மதிச்சிட்டேன்னு குதிக்காதே. சில நிபந்தனைகள் இருக்கு.

    சொல்லு

    நான் வேலையை விடமாட்டேன்

    சரி!

    உள்ளூர் மாப்பிள்ளைதான் எனக்கு வேணும்

    பாத்துரலாம்

    நீயெப்பவும் என்னோட இருக்க, அவங்க வீட்ல சம்மதிக்கனும்

    இந்த மூணாவது நிபந்தனை காரணமா, இந்த ஜென்மத்துல உனக்குக் கல்யாணம் நடக்காது

    ஏன்? நீ எங்கே போவே? காசி... ஓசின்னு காரணம் சொல்லாதே. பிராக்டிகலா அதெல்லாம் நடக்காது. உன்னைத் தனியா விட்டுட்டு எப்படி அத்தே நான் போவேன்?

    கொஞ்சம் நடக்கறதைப் பேசு அருணா. நானும் உன் கூட எப்படி வர முடியும்? யார் சம்மதிப்பாங்க

    ஏன் ஆம்பிள ஒருத்தனுக்கு பெத்தவங்க கூடவே இருக்கலாம்னு சொன்னா, பொண்ணுக்கு அந்த உரிமை இல்லையா?

    கேக்கவே சகிக்கலை. பிடிவாதத்தை விடு. நான் பெரியவள். பார்த்துப்பேன்

    Enjoying the preview?
    Page 1 of 1