Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இப்போது இல்லை!
இப்போது இல்லை!
இப்போது இல்லை!
Ebook136 pages1 hour

இப்போது இல்லை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"உன்னைக் கேட்டுட்டு பதில் சொல்லலாம்னு இருக்கேன்!"
 "எதைப் பத்தி?"
 "ஜபல்பூர்லேருந்து எங்க ஆபீசுக்கு புதுசா மாற்றல் ஆகி ஒருத்தர் வந்திருக்கார். பேரு சௌத்ரி!"
 "சரி!"
 "அவருக்கு குடும்பம் எதுவும் இல்லை தற்சமயம் ஓட்டல்ல தங்கியிருக்கார். எப்படி கட்டுப்படியாகும்? வீடு தேடத் தொடங்கியிருக்கார். வீடு கிடைக்கற வரைக்கும் நம்ம வீட்ல ஒரு போர்ஷன்ல தங்க வச்சுக்கலாமா?"
 "ஆள் எப்படி?"
 "எப்படீன்னா?"
 "வயசானவரா? வாலிபரா?"
 "ரெண்டுங்கெட்டான். முப்பத்தி நாலு வயசு! கல்யாணமே செஞ்சுகலை! குடும்பம்னு சொல்லும்படியா இல்லை! நார்த்ல இருந்து அலுத்துப் போச்சுனு மாற்றல் வாங்கிட்டு வந்துட்டார்! ஆபீஸ்ல நல்லா இந்தி தெரிஞ்சவன் நான் ஒருத்தன்தானே! அதான் எங்கிட்ட ஒட்டிக்கிட்டார்!"
 "சரி எத்தனை நாள் தங்குவார்?"
 "தெரியலைமா! வீடு கிடைக்கற வரைக்கும். வீடும் நான்தான் தேடித்தரணும். தமிழ் சுத்தமாத் தெரியாது. அதான் பிரச்சனையே! உதவி செய்யலாமா? நீ என்ன சொல்ற?"
 "எனக்கெந்தப் பிரச்சனையும் இல்லை! அடுத்த மாசம் குளிர் தொடங்கிரும். அது தொடங்கிட்டா, அத்தையால் உங்க தம்பிகூட கோயம்புத்தூர்ல இருக்க முடியாது. இங்கே வந்துடுவாங்க!"
 "வரட்டுமே! அம்மாவுக்கும் செளத்ரி வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?இருக்கு! அத்தைக்கு அந்நிய மனுஷன் நம்ம வீட்ல வந்து தங்கினா பிடிக்காது!"
 "சௌத்ரி நிரந்தரமாக தங்கப் போறதில்லையே! ஒருவேளை அம்மா வர்றதுக்குள்ள வீடு கிடைச்சாக்கூட ஆச்சர்யமில்லை. தனி போர்ஷன். பூட்டித்தான் கிடக்கு. என்ன கஷ்டம்?"
 "எனக்கு இல்லை!"
 "அப்படீன்னா கூட்டிட்டு வரட்டுமா நாளைக்கே?"
 "நம்ம சொப்னாவுக்கு இந்தி ட்யூஷனுக்கு வெளில போக வேண்டாம். அந்த சௌத்ரிகிட்டக் கத்துக்கலாம்!"
 "போச்சுடா! ஒருத்தர் வந்து நம்மகிட்ட மாட்டக் கூடாதே!"
 மாதவி சிரித்தாள்.
 மறுநாள் மாலை ஆபீஸ் முடிந்து திரும்பும் போது ரமணாவுடன் அந்த சௌத்ரி வந்தான்.
 வாட்ட சாட்டமாக ஆறடி உயரத்துக்கு இருந்தான். ரமணா அவனுக்கு தோள் அளவுக்குத்தான் வந்தான். நல்ல பால்கோவா நிறம். கறுப்பு பேன்ட், டக் செய்த வெள்ளை ஷர்ட், ஷூக்கள், படிய வாரிய தலை என பளிச்சென்று இருந்தான் சௌத்ரி.
 "நமஸ்தே!" கை கூப்பினான்.
 மாதவியும் வணங்கினாள். ரமணா இந்தியில் சௌத்ரியிடம் ஏதோ சொல்ல, அவனும் பதிலுக்குக் கேட்டான்.
 "உனக்கு ஆங்கிலம் சரளமா பேசவருமானு கேக்கறான்!" மாதவி ஆங்கிலத் தில் அதற்கு பதில் சொல்ல,
 சௌத்ரி முகத்தில் சந்தோஷம்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223798163
இப்போது இல்லை!

Read more from Devibala

Related to இப்போது இல்லை!

Related ebooks

Reviews for இப்போது இல்லை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இப்போது இல்லை! - Devibala

    1

    "உன்னைக் கேட்டுட்டு பதில் சொல்லலாம்னு இருக்கேன்!"

    எதைப் பத்தி?

    ஜபல்பூர்லேருந்து எங்க ஆபீசுக்கு புதுசா மாற்றல் ஆகி ஒருத்தர் வந்திருக்கார். பேரு சௌத்ரி!

    சரி!

    அவருக்கு குடும்பம் எதுவும் இல்லை தற்சமயம் ஓட்டல்ல தங்கியிருக்கார். எப்படி கட்டுப்படியாகும்? வீடு தேடத் தொடங்கியிருக்கார். வீடு கிடைக்கற வரைக்கும் நம்ம வீட்ல ஒரு போர்ஷன்ல தங்க வச்சுக்கலாமா?

    ஆள் எப்படி?

    எப்படீன்னா?

    வயசானவரா? வாலிபரா?

    ரெண்டுங்கெட்டான். முப்பத்தி நாலு வயசு! கல்யாணமே செஞ்சுகலை! குடும்பம்னு சொல்லும்படியா இல்லை! நார்த்ல இருந்து அலுத்துப் போச்சுனு மாற்றல் வாங்கிட்டு வந்துட்டார்! ஆபீஸ்ல நல்லா இந்தி தெரிஞ்சவன் நான் ஒருத்தன்தானே! அதான் எங்கிட்ட ஒட்டிக்கிட்டார்!

    சரி எத்தனை நாள் தங்குவார்?

    தெரியலைமா! வீடு கிடைக்கற வரைக்கும். வீடும் நான்தான் தேடித்தரணும். தமிழ் சுத்தமாத் தெரியாது. அதான் பிரச்சனையே! உதவி செய்யலாமா? நீ என்ன சொல்ற?

    எனக்கெந்தப் பிரச்சனையும் இல்லை! அடுத்த மாசம் குளிர் தொடங்கிரும். அது தொடங்கிட்டா, அத்தையால் உங்க தம்பிகூட கோயம்புத்தூர்ல இருக்க முடியாது. இங்கே வந்துடுவாங்க!

    வரட்டுமே! அம்மாவுக்கும் செளத்ரி வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?

    இருக்கு! அத்தைக்கு அந்நிய மனுஷன் நம்ம வீட்ல வந்து தங்கினா பிடிக்காது!

    சௌத்ரி நிரந்தரமாக தங்கப் போறதில்லையே! ஒருவேளை அம்மா வர்றதுக்குள்ள வீடு கிடைச்சாக்கூட ஆச்சர்யமில்லை. தனி போர்ஷன். பூட்டித்தான் கிடக்கு. என்ன கஷ்டம்?

    எனக்கு இல்லை!

    அப்படீன்னா கூட்டிட்டு வரட்டுமா நாளைக்கே?

    நம்ம சொப்னாவுக்கு இந்தி ட்யூஷனுக்கு வெளில போக வேண்டாம். அந்த சௌத்ரிகிட்டக் கத்துக்கலாம்!

    போச்சுடா! ஒருத்தர் வந்து நம்மகிட்ட மாட்டக் கூடாதே!

    மாதவி சிரித்தாள்.

    மறுநாள் மாலை ஆபீஸ் முடிந்து திரும்பும் போது ரமணாவுடன் அந்த சௌத்ரி வந்தான்.

    வாட்ட சாட்டமாக ஆறடி உயரத்துக்கு இருந்தான். ரமணா அவனுக்கு தோள் அளவுக்குத்தான் வந்தான். நல்ல பால்கோவா நிறம். கறுப்பு பேன்ட், டக் செய்த வெள்ளை ஷர்ட், ஷூக்கள், படிய வாரிய தலை என பளிச்சென்று இருந்தான் சௌத்ரி.

    நமஸ்தே! கை கூப்பினான்.

    மாதவியும் வணங்கினாள். ரமணா இந்தியில் சௌத்ரியிடம் ஏதோ சொல்ல, அவனும் பதிலுக்குக் கேட்டான்.

    உனக்கு ஆங்கிலம் சரளமா பேசவருமானு கேக்கறான்! மாதவி ஆங்கிலத் தில் அதற்கு பதில் சொல்ல,

    சௌத்ரி முகத்தில் சந்தோஷம்.

    நல்ல காலம். எனக்குத் தமிழ் தெரியாது. உங்களுக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் இருக்கறதால கவலை இல்லை!

    பக்கத்து போர்ஷனுக்கு சௌத்ரியை அழைத்துச் சென்றான் ரமணா! அது சின்ன போர்ஷன்.

    ஒரே ஒரு ரூம். பாத்ரூம் இணைந்த ரூம். ஆனால் சற்றே பெரிய அளவு! சௌத்ரி கையில் ஒரு பெரிய சூட்கேஸ்... தோளில் இருபக்கமும் லெதர் பைகள். அவ்வளவுதான்.

    சொப்னா ஒடி வந்தது.

    சௌத்ரி தன் கைப்பை திறந்து பெரிய பெட்டி சுவீட் ஒன்றை எடுத்துத் தந்தான் சொப்னாவிடம். அதன் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினான்.

    மாதவி காபி கொண்டு வந்து தந்தாள்.

    சௌத்ரி பருகினான்.

    தென்னிந்திய காபிக்காக சமஸ்தானத்தையே எழுதி வைக்கலாம்! சொல்லிவிட்டு ரசித்துக் குடித்தான்.

    நீங்க ரிலாக்ஸ் பண்ணுங்க சௌத்ரி! வா மாதவி! ரமணா வெளியே வந்து விட்டான்.

    உங்க ஆபீசுக்கு மாற்றலாகி வந்து எவ்ளோ நளாச்சு!

    கிட்டத்தட்ட மூணு வாரம் ஆகப்போகுது! என் ஒருத்தன்கிட்டத்தான் பழகிட்டு இருக்கார்.

    பார்க்க லட்சணமா இருக்காரே! ஏன் கல்யாணம் செஞ்சுகலை?

    தெரியலை! அந்த அளவுக்கு பர்சனலா நான் போகலை!

    சரி விடுங்க! நமக்கெதுக்கு! ஆனா பேச்சிலர்ங்கற காரணமா முதல்ல இ ருக்கு வீடு கிடைக்காது. அடுத்தபடியா சுத்தமாத் தமிழ் தெரியாது. இது ஒரு ட்ராபேக்!

    பாக்கலாம்! வீட்டு புரோக்கர் மூலம் பிடிக்கப் பாக்கணும்! இன்னிக்கு ராத்திரி டிபன் ஏதாவது தரலாமா?

    தாராளமா. நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்தா, அதைக்கூடவா செய்யாம இருக்க முடியும்?

    சௌத்ரி குளித்து வேறு உடைக்கு மாறி, பளிச்சென வெளியே வந்தான்.

    ரமணா! நான் போய் ஓட்டல்ல சாப்டுட்டு வந்துர்றன்!

    எதுக்கு? நம்ம வீட்ல சாப்டுக்கலாம் ராத்திரி!

    நோ ரமணா! உங்களுக்குத் தொந்தரவு!

    அப்படி நானோ என் மனைவியோ நினைக்கலை! ராத்திரி சப்பாத்தி, சப்ஜி பண்ணுவோம்!

    அய்யோ இங்கேயும் அதுதானா?

    பிடிக்கலையா?

    நான் மெட்ராஸுக்கு மாற்றலா வந்ததே உங்க ஊர் தோசை சாப்பிடத்தான். மூணு வாரமா, மூணு வேளையும் இட்லி, தோசைதான் சாப்பிடறேன் ஓட்டல்ல! சலிக்கலை!

    மாதவி சிரித்தாள்.

    பிரிட்ஜ்ல மாவு இருக்கு! தோசைக்கா கஷ்டம்? தாராளமா செய்யலாமே! சௌத்ரி சிரித்தான்.

    கொஞ்ச நேரம் உட்கார்ந்து அவனும் ரமணாவுமாக ஆபீஸ் விவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    நேரம் இரவு எட்டு!

    என்னங்க! டிபன் ரெடி!

    வாங்க சௌத்ரி!

    உணவு மேஜைக்கு வந்தார்கள்.

    வெங்காய ஊத்தப்பம் - கொத்துமல்லி சட்னி - சாம்பார் தயாராக இருந்தது. சௌத்ரி ஒருபிடி பிடித்து விட்டான்.

    வாவ்! இது மாதிரி ஓட்டல்ல டேஸ்டா இல்லையே?

    இது ஹோம்லி ஃபுட்! மாதவி அதுல எக்ஸ்பர்ட்!

    யு ஆர் லக்கி ரமணா!

    மாதவி கூச்சத்தடன் சிரித்தாள்.

    கொஞ்ச நேரம் டீ.வி பார்த்துவிட்டு, குட்நைட் சொல்லிவிட்டு ரமணா, தன் போர்ஷனுக்குள் நுழைய,

    என்னங்க! படுக்கை போர்வை இதுக்கெல்லாம் என்ன செய்வார் அவர்? இத்தனை நாள் ஓட்டல்ல இருந்துட்டார்!

    ஆமாம்! அது ஒண்ணு இருக்கில்லே?

    ரமணா எழுந்து போய்ப் பார்க்க காற்று ஊதி தலைகாணியை பெரிதாக்கிக் கொண்டிருந்தான் சௌத்ரி. ஒரே ஒரு பெட்ஷீட் இருந்தது.

    ரமணா திரும்பி வந்து, ஒரு பெட்ஷீட், போர்வை, ரெண்டு தலைகாணி எல்லாம் எடுத்து வந்தான்.

    இந்தாங்க சௌத்ரி!

    எ...எதுக்கு ரமணா?

    குளிர் தொடங்கியாச்சு இங்கே! வசதியாப் படுங்க! - குட்நைட்! சௌத்ரி நன்றியுடன் ரமணாவைப் பார்த்தான்.

    காலையில் சௌத்ரி கண்களை விழித்த போது எட்டுமணி! வாரிச் சுருட்டி எழுந்து அவசரமாகப் பல் தேய்க்கத் தொடங்க, குட் மார்னிங் சௌத்ரி!

    ரமணா ஒரு பக்கெட்டில் சுடுதண்ணீருடன் உள்ளே நுழைய, என்ன இது?

    கோல்ட் வாட்டர்ல குளிச்சா, சளிப்புடிச்சுக்கும். அதான்!

    மைகுட்னஸ்! என்னால உங்களுக்குக் கஷ்டம் ரமணா!

    நாங்க அப்படி நினைக்கறதே இல்லை! குளிச்சிட்டு, டிபன் சாப்பிட வாங்க!

    சௌத்ரி தயாராகி வர, இட்லி ஆவி பறக்கக் காத்திருந்தது.

    இப்படியெல்லாம் உபசரிச்சா, இந்த வீட்டை விட்டு நான் போகவே மாட்டேன்!

    வேண்டாம்! இருந்துருங்க!

    ரமணா சொல்ல, மாதவி சிரித்தாள்.

    உங்களுக்கு இந்த ஒரு குழந்தைதானா?

    பத்து வயசாச்சு சொப்னாவுக்கு! வேணும்னா இன்னொண்ணு கூடப் பெத்துக்கலாம்!

    போதுமே! அந்நியர் முன்னால என்னா வழிசல்?

    என்ன சொல்றாங்க மேடம்?

    மாதவி மழுப்பலாகச் சிரித்தாள். ரமணா கண்ணடித்தான்.

    சாப்பாடு மட்டுமில்லை! தாம்பத்யம் கூட இங்கே ருசிகரம்தான். இணக்கமான அன்பான கோபங்கள் - லக்கி!

    நீங்க ஏன் சௌத்ரி கல்யாணம் செஞ்சுகலை?

    அந்த அதிர்ஷ்டம் எனக்கில்லை!

    புரியலை!

    "ஸாரி! அதையெல்லாம் பேசி நல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1