Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தொட்டு விடும் தூரம்!
தொட்டு விடும் தூரம்!
தொட்டு விடும் தூரம்!
Ebook96 pages33 minutes

தொட்டு விடும் தூரம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராகுல் காலையில் தாமதமாக எழுந்தான். குளித்து விட்டு உடை மாற்ற, டெலிபோன் ஒலித்தது.
எடுத்தான்.
“ராகுல்! இப்ப மணி என்ன?”
“குட்மார்னிங் மேம்! எட்டரை!”
“ஒன்பது மணிக்கு போர்ட் மீட்டிங்! இன்னும் நீங்க வீட்டை விட்டே புறப்படலை!”
குரலில் அதட்டல் இருந்தது.
“வந்துட்டே இருக்கேன் மேம்!”
அதை மறந்துவிட்ட ராகுல், பதட்டமாக புறப்பட்டான். சரியாக உடைகூட உடுத்திக் கொள்ள வில்லை!
ஆபீசுக்கு வந்து விட்டான்.
காஞ்சனா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்!
“என்ன ராகுல் இப்படி அலங்கோலமா இருக்கீங்க? வாட் ஹேப்பன்ட்? சரி! போர்ட் மீட்டிங்குக்கு எல்லாம் ரெடியா?”
“இதோ பண்ணிர்றேன் மேடம்!”
அவன் குரல் பிசிறடிக்க, கால்கள் நடுங்க, கம்பீரமான ராகுல் தொலைந்து போயிருந்தான்.
ராகுலை அழைத்தாள் காஞ்சனா.
“இன்னிக்கு மீட்டிங் கேன்சல்! சொல்லிருங்க!”
“மேம்! வேண்டாம். நான் இப்பவே...”“என் ரூமுக்கு வாங்க!” காஞ்சனா உள்ளே போய் விட்டாள். ராகுல் பின்தொடர்ந்தான்.
“ஒக்காருங்க ராகுல்!”
“இருக்கட்டும்!”
“என்னாச்சு? ஸிட்டவுன் ஐஸே!”
சரக்கென உட்கார்ந்தான்.
“இப்ப நான் உங்க பாஸ் இல்லை. தோழி காஞ்சனா! சொல்லுங்க! நீங்க இப்படி டிஸ்டர்ப்டா இருந்து நான் பார்த்ததே இல்லை ராகுல்!”
நிமிர்ந்து பார்த்தான்.
“நான் தெரிஞ்சுக்கக் கூடாத சொந்தப் பிரச்னையா இருந்தா, நீங்க சொல்ல வேண்டாம்!”
“அப்படி எதுவும் இல்லை மேம்! என் சிஸ்டர் ரூபா ஒரு இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ண மும்பை போயிருக்கா! தனியா இதுவரைக்கும் அனுப்பினதில்லை. அந்தக் கவலை, பயத்துல ராத்திரி முழுக்கத் தூங்கலை!”
சிரித்தாள் காஞ்சனா!
“வேடிக்கையா இருக்கு!”
“இல்லை மேடம். அவ மேல வச்ச அளவு கடந்த பாசம்!”
“தப்பு! பாசம், பந்தங்களை முடமாக்கக் கூடாது ராகுல். அவ பெண். தன்னம்பிக்கையோட தலை நிமிர வேண்டாமா? தனிச்சு போராட வேண்டிய கட்டாயம் இங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் என்னிக்காவது ஒரு நாள் வந்தே தீரும். நீங்க கோழையாக்கி வச்சா, அவ என்ன ஆவா? கம்மான் ராகுல்!”
அவன் பேசவில்லை.
“என்ன கம்பெனி அது? தகவல் இருக்கா?”
“பேர் ஞாபகம் இல்லை.சரி விடுங்க! செல்போன் வச்சிருக்காளா?”
“இருக்கு மேம்! நான் முயற்சி பண்ணேன். ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா!”
“எங்கே தங்கப் போறா உங்க தங்கை? விலாசம் இருக்கா?”
“தந்துட்டுப் போயிருக்கா!”
“இன்னமும் ரயில் போய் சேர்ந்திருக்காது. ஒரு மணி நேரம் கழிச்சு அவளே பேசுவா! இல்லைனா, நீங்க பேசுங்க! அப்படியும் நீங்க சமாதானமாகலைனா, ஃப்ளைட்ல புக் பண்ணித் தர்றேன். ராத்திரிக்குள்ள மும்பை போய்ச் சேருங்க! போதுமா?”
“கோவமா மேம்?”
எழுந்தாள் காஞ்சனா. மெல்ல நடந்தாள்.
“எங்கப்பா மல்ட்டி மிலியனர். இப்பவும் வருஷத்துல 300 நாட்களும் வெளிநாட்டுப் பயணம் பண்ணிட்டு இருக்கார். இங்கே நிர்வாகம் மொத்தமும் நான்தான்! விரலை அசைச்சா காலடில வந்து சேவகம் செய்ய ஒரு மினி அரசாங்கமே தயாரா இருக்கு! எதுக்கு? எல்லாருக்கும் பயம் இருக்கு. பின்னால ஆசையும், சுயநலமும் ஒளிஞ்சுகிட்டிருக்கு! பாசம் காட்ட ஒரு ஜீவன் கூட இல்லையே ராகுல்?”
முடிக்கும் போது குரல் கரகரத்தது.
ஒரு நொடி திடுக்கிட்டான் ராகுல்!
சட்டென சிரித்தாள்.
“லிவிட்! அதுக்காக நான் வருத்தப்படலை. ஜஸ்ட்லைக்தட் சொன்னேன்! உருகிட்டு ஒக்காந்தா பிஸினஸ் வருமா? ஓக்கே! எல்லாத்தையும் விலைக்கு வாங்க வேண்டியதுதான். அஃப்கோர்ஸ்! பாசத்தையும்தான். அது தரமா ஐ எஸ் ஐ முத்திரையோட எங்கே கிடைக்கும் ராகுல்?”
வெகு இயல்பாகப் பேசினாலும், வார்த்தைகளில் வலி தெரிந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
தொட்டு விடும் தூரம்!

Read more from தேவிபாலா

Related to தொட்டு விடும் தூரம்!

Related ebooks

Reviews for தொட்டு விடும் தூரம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தொட்டு விடும் தூரம்! - தேவிபாலா

    1

    பெட்டியில் துணிமணிகளை எடுத்து அடுக்கத் தொடங்கினாள் ரூபா! அழைப்பு மணி ஒலிக்க, எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். அண்ணன் ராகுல் வெளியே நின்றான்.

    இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டியே அண்ணே?

    மேடம் ஒரு கல்யாணத்துக்குப் போறாங்க! பெரிய சாரும் ஊர்ல இல்லை. அதான் வந்துட்டேன்!

    முகம் கழுவிட்டு வா! காபி தர்றேன்!

    ராகுல் உள்ளே வந்தான். படுக்கை மேல் பெட்டி, துணிமணிகள் என சகலமும்!

    ரூபா! இங்கே வா!

    வந்துட்டேன்!

    சூடான தேநீருடன் ரூபா வந்தாள்.

    என்ன இது?

    பெட்டி... துணிமணிகள்...

    அது தெரியுது! நான் தடுத்தும் கேக்காம நீ போறியா?

    அண்ணே! அந்தக் கம்பெனி இன்ட்டர்வியூ வர்றதே கஷ்டம். வந்திருக்கு! கெடச்சா பெரிய சம்பளம். வசதிகள். விட மனசு வரல்லை!

    ஆனா... வேலை மும்பைல!

    இருக்கட்டுமே! ஒரு வருஷ காலம் இருந்துட்டு, மாற்றல் வாங்கிட்டு வந்துடலாமே!

    எதுக்கும்மா? அப்படி என்ன அவசியம்? நான் சம்பாதிக்கறது போதாதா? நீயும் இங்கே சும்மா இருக்கலை. சம்பாதிச்சிட்டுத்தான் இருக்கே! அப்புறமா என்ன?

    அதில்லை அண்ணே!

    வேண்டாம்! உன்னைப் பிரிய எனக்கு மனசு வரலை. உறவுனு சொல்லிக்க எனக்குனு நீ ஒருத்திதான் இருக்கே! நீயும் என்னைப் பிரிஞ்சு வாழணுமாமா?

    அண்ணே! கல்யாணமாகி நான் போனா இந்தப் பிரிவை நீ தாங்கித்தானே ஆகணும்?

    அதுக்குத்தான் உனக்கு உள்ளூர்ல மாப்பிள்ளை பாக்கறேன்!

    என்ன சொன்னாலும் மடக்கி, மடக்கிப் பேசுவியா? முதல்ல உன் கல்யாணம் நடக்கணும். அண்ணி வந்தாத்தான் எனக்கு விடுதலை!

    அதுக்கு இப்ப வாய்ப்பே இல்லை!

    சரி! வேலை கிடைச்ச பிறகு யோசிக்கலாம். இப்ப நான் போயிட்டு வந்துர்றேனே! என் ஸ்நேகிதி தாராவுக்கு தகவல் அனுப்பிட்டேன். அவ தாதர்ல காத்திருப்பா!

    சரி! உனக்குப் பிடிவாதம் அதிகம். ஜாக்ரதையா போயிட்டு வா! நான் தடுக்கலை. செலவுக்கு தாராளமா பணம் எடுத்துட்டுப்போ!

    சரி அண்ணே! என் ஆசைகளை எப்ப நீ தடுத்திருக்கே?

    இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை!

    இருவரும் சிரித்தார்கள்!

    காலையில் ராகுல் ரயில் நிலையத்துக்கு அவளை வழியனுப்ப வந்தான்!

    இதுவரைக்கும் நீ தனியாப் போனதில்லை. ஊர் மோசமான ஊரும்மா! ஜாக்ரதை!

    சரிண்ணே! நான் விவரம் தெரிஞ்சவதானே? நீ கவலையே படாதே!

    ரயில்ல அசந்து தூங்கிடாதே! எப்பவும் விழிப்பா இரு!

    சரிண்ணே!

    ரயில் நகர, கூடவே ஓடி வந்தான் ராகுல்! உருவம் சிறுத்து புள்ளியாகித் தேய்ந்தான்.

    ரூபாவின் கண்கள் கலங்கியிருந்தன.

    அவளும் அண்ணனை விட்டு ஒரு நிமிடம் கூடப் பிரிந்ததில்லை. அவள் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது பெற்றவர்கள் இருவரும் ஒரு விபத்தில் காலமாக, சகலமும் ராகுல்தான் என்றாகி விட்டது. அதுமுதல் அவளிடம் அவன் பொழியும் அன்பே அலாதியாக இருந்தது!

    என்னம்மா? அண்ணனைப் பிரிஞ்ச துக்கமா? குரல் கேட்டுத் திரும்ப, வயதான ஒரு பெண்மணி அருகில்!

    ஆமாம்மா!

    புருஷன் வீடு மும்பைலேயா?

    இல்லம்மா! ஒரு வேலை விஷயமா மும்பை போறேன்!

    பாசமுள்ள புள்ளைங்களைப் பாக்கறதே இப்பல்லாம் அரிதா இருக்கு!

    ரூபா சிரித்தாள்.

    அந்தம்மா தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தாள்.

    விதவைப் பெண்மணி! ரெட்டை நாடி உடம்புடன், நல்ல நிறத்தில் கண்ணியமாக இருந்தாள்!

    புருஷன் இல்லை. மொத்தம் மூணு பசங்க! வருஷத்துல மூணுபாகமா பிரிச்சு தாயைப் பங்கு போட்டுக்கறாங்க! சென்னை, மும்பை, டில்லினு நாலுமாசத்துக்கொரு பயணம். உன்னை மாதிரி ஒரு மகள் இருந்திருந்தா, எனக்கிந்த வேதனை இருந்திருக்காது! வயசாயிட்டா இருக்கக் கூடாது!

    அழுதாள்.

    ரூபாவுக்கு வேதனையாகி விட்டது.

    ஏற்கனவே அதிகமான இரக்க சுபாவம் கொண்டவள் ரூபா! வயதானவர்களின் மேல் மதிப்பும், மரியாதையும் அதிகம்!

    அழாதீங்க! எல்லாம் சரியாகும். உங்க அன்பை உணர்ந்து ஒருநாள் பாசம் காட்டுவாங்க!

    இப்படி ஒரு ஆறுதல் வார்த்தையை யாரும் இதுவரைக்கும் எனக்கு சொல்லலைமா!

    ரூபா சிரித்தாள்.

    நட்பாகி விட்டார்கள். அடுத்த நாலைந்து மணி நேரத்தில் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள்.

    சேர்ந்து சாப்பிட்டார்கள்!

    அந்தம்மா கழிவறைக்குப் போவதற்கு ரூபா கையைப் பிடித்துக் கொண்டு உதவி செய்தாள்.

    உன்னை விடவே எனக்கு மனசில்லம்மா!

    எல்லாரும் விளக்கை அணைத்து விட்டு படுக்கத் தொடங்கி விட்டார்கள்.

    பால் சாப்பிடு ரூபா!

    வேண்டாம்மா!

    நீ சாப்பிட்டாத்தான் நானும் சாப்பிடுவேன்!

    இருங்க! பாத்ரூம் போயிட்டு வந்திர்றேன்! ரூபா எழுந்து போக, கிழவி சுற்றிலும் பார்த்தாள்.

    கைப்பையில் இருக்கும் ஒரு பொட்டலம் எடுத்துப் பிரித்து அவசரமாக பாலில் கலந்தாள். ஒரு முறை குலுக்கினாள்.

    ரூபா வந்து விட்டாள்!

    சாப்பிடும்மா!

    ரூபா அதைப் பருகினாள். சற்று நேரத்தில் கொட்டாவி வந்தது. அதற்குள் கிழவி உறங்கிய மாதிரி நடிக்க, ரூபாவும் போர்வையை எடுத்துக் கழுத்து வரை போர்த்திக் கொண்டாள்.

    தூக்கம் கண்களைக் கட்டி இழுக்க,

    Enjoying the preview?
    Page 1 of 1