Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இன்று பாதி! நாளை மீதி!
இன்று பாதி! நாளை மீதி!
இன்று பாதி! நாளை மீதி!
Ebook158 pages52 minutes

இன்று பாதி! நாளை மீதி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெள்ளிக்கிழமை விடிந்து விட்டது.
எட்டு மணிக்கெல்லாம் தயாராகி விட்டாள் கீர்த்தனா. ரெக்ஸோனா பச்சையில் சூடிதார் அணிந்து, கூந்தலை ஷாம்புவில் கழுவி, முதுகில் பரப்பியிருந்தாள்.
நல்ல உயரம்...!
வாளிப்பான உடம்பு...!
பார்த்தவர்களை அதிரடிக்கும் பர்ஸனாலிட்டி!
“போலாமா கீர்த்தனா?”
“நான் ரெடி அங்கிள்.”
“உன் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர், ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கியா?”
கைப்பையைக் காட்டினாள் கீர்த்தனா.
“நானும், அப்பாவும் இண்ட்டர்வியூ வந்தப்ப ரெண்டு நாள் ஓட்டல்ல தங்கினம், ஆறுமாசம் முன்னால். அப்பவே நீங்க இருக்கறது தெரிஞ்சிருந்தா, ஆன்ட்டியை பார்த்திருக்கலாம்.!”
“ஜாக்ரதைடீ! போற இடத்துல சளசளன்னு பேசாதே! பத்தரைக்கு ராகுகாலம் தொடக்கம். அதுக்குள்ள கையெழுத்து போட்டுடு!”
“சரிம்மா!”
பைக்கில் பரவி உதைத்தான் பானு. நாசூக்காக அவன் பின்னால் அமர்ந்தாள் கீர்த்தனா. அது தேய்ந்ததும், சாவித்ரி உள்ளே வந்தாள். வந்த இரண்டு நாட்களில் யாரையும் பழகிக் கொள்ளவில்லை. அந்த இடத்தில் எட்டு ஃபிளாட்கள் இருந்தன. யாரும் ஸ்நேக பாவம் காட்டவில்லைஆனாலும் நாம் அப்படி இருக்கக்கூடாது. நாமாகச் சென்று பழகிக் கொள்ள வேண்டும்.’
ஆறுமணிக்கு கீர்த்தனாவை அழைத்து வர பானு போய்விட்டான். ஏழு மணிக்குள் குதிரை போல கீர்த்தனா வந்து இறங்கினாள்.
“அம்மா! பசிக்குது எனக்கு!”
“ஓட்டலுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு வழில சொன்னேன் இல்லை உனக்கு?”
“வேண்டாம் அங்கிள். எனக்கு ஓட்டல் உணவே சேர்றதில்லை!”
“எப்பவும் அம்மா இருந்தா, தெம்பா பேசலாம்! என்னை மாதிரி ஆட்கள் பேச முடியுமா?”
“இனிமே நீங்களும் பேசலாம்!”
“எப்படி இருந்தது ஆபீஸ்?”
“வொண்டர்புல். நான் பேசற இங்கிலீஷ் பார்த்து ஜோனல் மானேஜர் பொளந்த வாயை இன்னும் மூடலை!”
“உயிரோடதான் இருக்காரா? புண்ணியவதி, நீ போய் மோட்சம் தந்துட்டியா அவருக்கு!”
“முன்னேற கம்பெனியில் நிறைய வழி இருக்கு. பரீட்சைகள் பாஸ் பண்ணனும். அதிகாரியாயிட்டா அடிக்கடி அமெரிக்கா போயிட்டு வரலாம்.!”
“இங்கே மெட்ராஸ் வரதுக்கே உங்கப்பா உசிரை விடறார். அமெரிக்காவாம் அமெரிக்கா...!”
“எங்கம்மா அறுக்கத் தொடங்கிட்டா தாங்காது அங்கிள். அப்பா தேவலை!”
“நாளைலேர்ந்து பஸ்ல போ கீர்த்தி!”
“ஏன்கா? நான் கொண்டு போய் விடறேனே!”
“அது கஷ்டம் பானு. ஒரு நாளைப் போல முடியுமா? அவ ஆபீசும், உன் ஆபீசும் பக்கத்துலேயா?”
“இல்லை!”
“பின்ன? பெட்ரோல் சும்மா கிடைக்குதா உனக்குஅப்படியெல்லாம் பார்த்தா ஆகுமாக்கா?”
“ஆமாம் அங்கிள். பஸ்ல கூட்டத்துல பிதுங்கிட்டு என்னால போக முடியாது!”
மறுநாள் அலுவலகத்தில் அந்தக்கடிதம் வந்தது அவனுக்கு. ஐஸ்வர்யாதான் எழுதியிருந்தாள்.
“உங்கள் கடிதம் கிடைத்தது. நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். பிரசவம் ஒரு வாரம் முன்பாகவே ஆகலாம் என்று டாக்டர் சொன்னார். நம் வீட்டில் யாரையும் தங்க வைக்க வேண்டாம். காலம் கெட்டுக் கிடக்கிறது. நண்பர் குடும்பமாக இருந்தாலும், நாலு நாள் தங்கிவிட்டு, அனுப்பி விடுங்கள். மற்றவை அடுத்த கடிதத்தில் - ஐஸ்வர்யா.
பானுசந்தருக்கு நெற்றி நரம்புகள் கலைந்து ஆவேசம் புறப்பட்டது ‘...ச்சே என்ன மனுஷி இவள்? உனக்கு மனிதர்களே இல்லாத தீவில் வாழப்பிடிக்கும். அதற்காக நானுமா? கீர்த்தனாவும், அக்காவும் இதை அறிந்தால் நொந்து போக மாட்டார்கள்?’
‘கடிதம் வந்ததா என்று கேட்டால், என்ன பதில் சொல்லுவேன் நான்?’
‘நிச்சயமாக இதைக் காண்பிக்க முடியாது!’
‘ஐஸ்வர்யா வீட்டு விலாசத்துக்கு எழுதுவதில்லை.’
‘அவன் கையெழுத்து இவர்களுக்குத் தெரியுமா என்ன? இதை வேறு விதமாகத் தான் சமாளிக்கவேண்டும்!’
ட்ரா திறந்து ஒரு இன்லண்ட் எடுத்தான்.
பேனாவை விரல் இடுக்குகளின் ஓரத்தில் பிடித்து தன் கையெழுத்தை மாற்றி, கிறுக்கலாக எழுதத் தொடங்கினான்.
‘அன்பான உங்களுக்கு! கடிதம் கிடைத்தது. உங்கள் நண்பர் குடும்பம். நம் வீட்டுக்கு வந்ததில் அளவில்லாத மகிழ்ச்சி எனக்கு. நம் வீடும் கலகலவென்று இருக்கும். சுத்தமாக இருக்கும். இனி சாப்பாட்டுக்கு கவலையில்லை உங்களுக்கு. அவர்கள் இருவரைப் பற்றியும் விளக்கமாக நீங்கள் எழுதவில்லை. எழுதுங்கள். அக்காவுக்கு அடுத்த முறை நானே கடிதம் எழுதுகிறேன் - ஐஸ்வர்யா

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
இன்று பாதி! நாளை மீதி!

Read more from தேவிபாலா

Related authors

Related to இன்று பாதி! நாளை மீதி!

Related ebooks

Reviews for இன்று பாதி! நாளை மீதி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இன்று பாதி! நாளை மீதி! - தேவிபாலா

    1

    ரங்கராஜன் அன்று மாலை வீடு திரும்பி, வேட்டிக்கு மாறி ஈஸிசேரிலே வந்து சாய்ந்தபோது,

    சாவித்ரி எதிரே வந்தாள் டிகிரி காப்பியுடன். காலடியில் உட்கார்ந்து கொண்டாள்.

    கீர்த்தனா எங்கே?

    லைப்ரரி போயிருக்கா. சின்னது ட்யூசன் போயிருக்கு!

    ம்! காபியை ஆற்றத் தொடங்கினார்.

    என்னங்க!

    சொல்லு!

    எனக்கொரு யோசனை. நீங்க கோவப்படலைனா சொல்றேன்.!

    என்னா?

    கொஞ்ச நாளைக்கு நீங்களும் சின்னவளும் சமாளிக்க முடியுமானா கீர்த்தனா கூட நான் மெட்ராஸ் போகட்டுமா?

    என்ன சொல்றே நீ?

    என்னை பேசவிட்டு உங்க அபிப்ராயம் சொல்லுங்க. காலம் இருக்கற இருப்புல பொண்ணுகளுக்கு வேலை இல்லைன்னா, கல்யாண மார்கெட்ல மவுசு இல்லை. அதுவும் நல்ல வேலை அவசியமாக இருக்கு. இவளுக்கு தானா கிடைச்சிருக்கு. நீங்க 28 வருஷம் சர்வீஸ் போட்டு வாங்கற சம்பளத்தை, சேர்ந்த உடனே அவ வாங்கப் போறா. விடலாமா?

    சரிம்மா... எப்படி அவளை தனியா...?

    எதுக்குத் தனியா? உங்களுக்கு சமையல் தெரியும். இந்த வீட்ல கைக்குழந்தையா இருக்கு சமாளிக்க? கொஞ்ச நாள் ஒப்பேத்துங்க. நான் கீர்த்தனா கூடப்போறேன்!

    அவளோட ஆபிஸ், மெட்ராஸ் மாதிரி மெட்ரோ சிட்டிகள்லதான். நீ எந்தக்காலத்துல வீடு திரும்பறது?

    அதை அப்புறம் யோசிக்கலாமே! ஒரு ஆறுமாசம் பொறுமையா இருங்க. வழி பிறக்கும். சம்மதிக்கக் கூடாதா?

    நர்த்தனா ட்யூசன் முடிந்து வீடு திரும்பினாள்.

    ஆமாம்பா. நீயும், நானுமா சமாளிச்சுக்கலாம். அக்காவுக்கு அம்மா துணையா போகட்டும்.

    சரி! ஆனா ரெண்டு பேரும் தங்கறது எங்கே? உன் தம்பி வீட்லேயா? வாயைப் பார்த்துட்டு இருக்கணும்.

    வேற வழியிருக்கா?

    வேற என்ன வழி?

    இப்படி செஞ்சா?

    சொல்லு!

    உங்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. நெருங்கின ஒருத்தர் சிபாரிசால, தனி வீடு எடுத்துட்டு தங்கிர்றம் நானும், கீர்த்தனாவும். அவளுக்கு நல்ல சம்பளம். சமாளிக்க முடியாதா? அது வந்துதான் இங்க ஆகணும்னு இருக்கா?

    ஆண் துணையில்லாமல் இரண்டு பெண்கள் இருக்கலாமா?

    அக்கம் பக்கம் பழகிட்டாப் போச்சு. நல்லவங்க இருக்க மாட்டாங்களா?

    அப்பா அன்று இரவு முழுக்க மூளையைக் கசக்கிக் கொண்டார்.

    காலையில் அவர் புறப்படும் நேரம் வாசலில் ஆட்டோ வந்து நின்றது. கையில் பெட்டியோடு இறங்கினான் அவன்.

    ரங்கநாதன் சார்! என்ன முழிக்கிறீங்க? என்னைத் தெரியலை?

    பானு சந்தரா?

    போச்சுடா! ஆளையே மறந்தாச்சா?

    வா பானு! என்ன இது திடீர்னு வந்து நிக்கற? உன்னை நான் பார்த்து நாலைஞ்சு வருஷம் இருக்குமா?

    மேலேயே இருக்கும்! நான் சேலத்துல இருந்தப்ப நீங்க பார்த்திருப்பீங்க

    உட்காரு பானு! சாவித்திரி இங்க வா!

    சாவித்திரி வெளியே வந்தாள்.

    நம்ம சரவணமூர்த்தியோட தம்பிமா!

    வணக்கம்!

    உட்காருங்க. காபி கொண்டு வர்றேன்!

    அதோட விட்ருவேனா? சாப்பிட்டுத்தான் போகணும் நீ!

    உங்க மேல எனக்குக் கோபம் சார்!

    எதுக்கு?

    என் கல்யாணத்துக்கு நீங்க வரவே இல்லை!

    எப்ப நடந்தது உன் கல்யாணம்?

    அது ஆச்சு நாலு வருஷம்!

    ஸாரிடா... அந்த நேரம் ஏதோ ஒரு சிக்கல்ல இருத்தேன் நான். எத்தனை குழந்தைகள்?

    ரெண்டு வயசுல ஒரு பையன். திரும்பவும் இப்ப டெலிவரிக்குப் போயிருக்கா!

    இதோட நிறுத்திக்கோ!

    கீர்த்தனா காபியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

    நான் பார்த்தப்ப பாவாடை சட்டையோட இருந்த உங்க மூத்த மகளா இவ? அழகான ஒரு பேர் உண்டே இவளுக்கு?

    கீர்த்தனா!

    ஆமாம். சச் எ பொயட்டிக் நேம். என்னம்மா பண்ணுறே?

    டிகிரியும் கம்யூட்டரும் பண்ணிமுடிச்சுட்டேன்!

    வேலை கூட கிடைச்சாச்சு. அதுலதான் நாலு நாளா வீடு யுத்தகளமா இருக்கு!- ரங்கராஜன்

    எங்கே வேலை?

    மெட்ராஸ்ல ஒமேகால கம்யூட்டர் ஜூனியர் ஆபீசர்!

    யம்மாடீ! எப்படி புடிச்சே அந்த வேலையை? கிடைக்கறது ரொம்ப கஷ்டமாச்சே!

    மெரிட்ல அங்கிள்!

    அசாத்தியமான பொண்ணா இருக்கியே!

    அது நல்ல வேலைதானே அங்கிள்?

    நல்ல வேலையா? அங்கே ஒரு ப்யூன் வேலை கிடைச்சாக் கூட போக நானே தயாரா இருக்கேன்!

    அப்பாகிட்ட சொல்லுங்க. நான் போகக் கூடாதாம்.!

    ஏன் சார்?

    ஹாஸ்டல்ல குழந்தையை விட இஷ்டமில்லை!

    எதுக்கு ஹாஸ்டல்? நம்ம வீடு இருக்கே! வந்து தங்கிக்க வேண்டியது தானே? ரெண்டு பேரும் வாங்க. நாளைக்கு நான் ஊர்திரும்புவேன். என்னோட வந்துருங்க. என்னைக்கு நீ ஜாயின் பண்ணணும்?

    இன்னும் ஒரு வாரத்துல!

    அதுல பிரச்சனையே இல்லை. சார், நான் பார்த்து அவளுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யறேன்!

    அதுல பானு...!

    சொல்லுங்க சார்!

    உன் வீட்ல எத்தனை நாள் ரெண்டுபேரும் இருக்க முடியும்?

    ஏன்? எத்தனை நாள் வேணும்னாலும் இருக்கலாம்!

    அதெல்லாம் சரிப்படாது. தற்காலிகமா அதிகபட்சம் ஒரு மாசம் தங்கலாம். அதுக்குள்ள ஒரு வீட்டை ஏற்பாடு பண்ணிக்குடுத்துடு. நீ பக்கத்துல இருந்து பார்த்துக்கோ!

    என்னைப் பிரிக்கறீங்க சார். நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு, உங்களுக்கு செருப்பா உழைக்கணும் நான்!

    ஷ்! ஏன் பெரிய வார்த்தைகள்? நீயா இருக்கிறதாலதான் ரெண்டு பேரையும் நம்பிக்கையோட அனுப்பறேன். சாப்பாடு ரெடிபண்ணு சாவித்திரி. கீர்த்தனா நீ போய் இலை வாங்கிட்டு வா!

    பானுசந்தர் குளித்தான்.

    அவருடைய வேட்டியைக் கட்டிக் கொண்டான்.

    எப்ப உங்க மனைவிக்கு ட்யூ டேட்?

    கேட்ட சாவித்ரியை நிமிர்ந்து பார்த்தான்.

    அடுத்த மாசக் கடைசில. பிரசவம் முடிஞ்சு ரெண்டு மூணு மாசம் பிறந்த வீட்ல இருப்பா!

    இங்கே சாப்பாட்டுக்கு?

    ஓட்டல்தான். எனக்கு சார் மாதிரி சமைக்க வராது!

    குடும்பத்துக்காக உழைச்சவன் பானு. உனக்கு லேட் மாரேஜ்தான் இல்லையா?

    ஆமாம் சார், முப்பத்தி ஒண்ணுல! இப்ப முப்பதஞ்சு!

    சாப்பிட வாங்க!

    நான் உங்களைவிட சின்னவன். சாரோட சிஷ்யன். எதுக்கு வாங்க... போங்க? உங்க தம்பி மாதிரி நினைச்சுக்குங்க. நான் உங்களை அக்கானே அழைக்கறேன். என்ன சார்?

    அன்று மாலை பானுசந்தர் அலுவலக வேலையாகப் புறப்பட்டான். இரவு வந்து விட்டான். யாரையோ பிடித்து இவர்கள் இருவருக்கும் ரயிலில் டிக்கெட் வாங்கி விட்டான்.

    மறுநாள் மாலை பெட்டிகளெல்லாம் கூடத்துக்கு வந்து விட்டன. பானு ஆட்டோ பிடிக்க வெளியே போக, அம்மாவுக்கு, அப்பா - நர்த்தனாவை விட்டுப் போக என்னவோ போலிருந்தது.

    ரெண்டு பேரும் ஜாக்கிரதை! குரல் இடறியது.

    அப்பா நான் வர்றேன்! அவள் நமஸ்கரித்தாள்.

    ஜாக்கிரதைடா. நீ பிறந்தது முதல், உன்னைப் பிரிஞ்சதேயில்லை நான். வேலைக்குப் போற இடத்துல எச்சரிக்கையா இரு!

    ஆட்டோ வந்து விட்டது.

    போலாமாக்கா?

    ம்!

    பெட்டிகளை ஆட்டோவில் நுழைத்துவிட்டு, அவர்களை ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக் கொண்டான் பானு.

    நீங்க கவலைப்படாதீங்க சார். ரெண்டு பேரையும் நல்ல படியா நான் கவனிச்சுக்கிறேன். போய்ச் சேர்ந்ததும் உங்க ஆபீசுக்கு போன் பண்றேன்!

    சரிப்பா!

    ஆட்டோ நகர்ந்தது. ஜங்ஷனில் வந்து, ரயில் பிடித்து அது புறப்படும் மட்டும் அம்மாதான் இறுக்கமான உணர்வுகளிலிருந்து விடுபடாமல் இருந்தாள்.

    கீர்த்தனா கலகலவென இயல்பாகி விட்டாள்.

    ரயில் ஓடிக் கொண்டிருந்தது.

    ராயப்பேட்டையில் லக்ஷ்மிபுரத்தில் இருந்தது பானுசந்தரின் ஃப்ளாட். காலை எட்டரைக்கு உள்ளே நுழைந்தார்கள்.

    அழகா இருக்கு அங்கிள் உங்க ஃப்ளாட். நீட்டா வச்சிருக்கீங்களே!

    நீங்க ரெண்டு பேரும் குளிங்க. நான் போய் டிபன் வாங்கிட்டு வர்றேன்!

    இன்னையோட உங்க ஓட்டல் சாப்பாட்டுக்கு முடிவு வந்தாச்சு.

    ஏன்?

    ஏனா? அம்மா வந்தாச்சே! இனிமே சமையல் வீட்லதான்!

    ஆமாம் பானு! நான் ஒரு மளிகை லிஸ்ட் தர்றேன். அதை எனக்கு வாங்கிக் குடுத்துடு. மத்தியானமே சமையல் தொடங்கிடலாம்.

    கறிகாய் வேண்டாமாக்கா?

    "மத்தியானத்துக்கு வத்தக் குழம்பும், பருப்புத் துவையலுமா சமாளிச்சுக்கலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1