Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எப்பவும் உன் நிழலில்!
எப்பவும் உன் நிழலில்!
எப்பவும் உன் நிழலில்!
Ebook84 pages17 minutes

எப்பவும் உன் நிழலில்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புஷ்பா உள்ளே நுழைந்தாள். 


அப்பா ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். அம்மா காலடியில் உட்கார்ந்திருந்தாள். 


“என்னப்பா பிரச்னை?” 


“நீ ட்ரஸ்லை மாத்திட்டு வாம்மா!” 


புஷ்பா போய் உடைகளை மாற்றி, ஒரு நைட்டியை அணிந்து கொண்டு  வந்தாள். 


அப்பா எதிரே உட்கார்ந்தாள். 


“என்னப்பா?” 


“கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருக்கும் போது, இப்படி ஒரு சேதி வந்திருக்கேம்மா!” 


“என்ன சேதி?” 


“மாப்ளையை வேலையை விட்டு சஸ்பண்ட் பண்ணியிருக்காங்களாம்!”


“என்னது சஸ்பென்ஷனா? எதுக்குப்பா?” 


“அவர் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் கையாடியிருக்கார்னு நிர்வாகம் சந்தேகப்படுதாம். அந்தப் பணத்தைக் கட்ட நாளு நாள் அவகாசம் தந்திருக்காம். கட்டினாலும், வேலைக்கு இனி உத்தரவாதம் இல்லையாம்!” 


புஷ்பா மெளனமாக இருந்தாள். 


“எங்க ஆபிஸ்ல வேலை பாக்கற தசரதனோட தம்பி, நம்ம மாப்ளை ஆபிஸ்லதானே வேலை பாக்கறான். அவன் மூலமா வந்த தகவல் இது!” 


“இப்ப என்னங்க செய்ய முடியும்?” 


“அதான் எனக்கும் புரியலை! கல்யாணத்தை நிறுத்த முடியுமா?”


“எதுக்குப்பா நிறுத்தணும்?” 


“என்னம்மா சொல்ற நீ? பணம் கையாடல்ங்கறது எத்தனைக் கேவலமான விஷயம். அதன் காரணமா உத்யோகம் பறிக்கப்படறது அதைவிட அசிங்கம்! அப்படிப்பட்ட ஒருத்தரா உனக்குப் புருஷனா வரணும்?” 


“இருங்கப்பா! உங்க நபர் மூலம் வந்த தகவல் இது. இல்லையா?”


“தகவல் பொய் இல்லைம்மா! அப்பட்டமான நிஜம்!” 


“சரிப்பா! இருக்கட்டும். அவர் அஞ்சு இலக்க சம்பளம் வாங்கறார். வசதியாவும் இருக்காங்க. ரெண்டு பொண்ணுகளுக்கும் கல்யாணம் ஆயாச்சு! வீட்ல எல்லாம் இருக்கு. என்னப்பா குறை? அவரா பணத்துக்கு ஆசைப்பட்டு... நம்ப முடியலைப்பா!” 


“ஆசை இல்லைனு சொல்லாதே புஷ்பா! நம்மகிட்ட புடுங்கித் திங்கறாங்களே!” இது அம்மா! 


“சரிம்மா! நேத்திக்கு சஸ்பெண்ட் பண்ணியாச்சு! நமக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டாமா?” 


“என்னப்பா பேசறீங்க? இது கேவலமான விஷயமில்லையா? இதை நமக்குத் தெரிவிக்க முடியுமா?” 


“புஷ்பா! நாளைக்கு நீதான் அவர் கூட வாழப் போறவள்! உனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்!. நம்மகிட்ட இதை அவங்க மறைச்சிட்டுக் கல்யாணத்தை நடத்தினா, அதைவிட அயோக்கியத்தனம் வேற இல்லை!” 


புஷ்பா யோசிக்கத் தொடங்கினாள். 


'அப்பா சொல்வதும் சரிதான்!' 


'எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை இல்லையா?' 


நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். 


“என்னப்பா செய்யப் போறம்?'' 


“நேரா நான் சஞ்சய் வீட்டுக்குப் போறேன்! இதைப்பற்றிப் பேசறேன். இது நிஜமா இருந்தா, இந்தக் கல்யாணம் நடக்காது!” 


“என்னங்க! இத்தனை ஏற்பாடுகளையும் செஞ்சிட்டு... கல்யாணம் நின்னா, அது நல்லாருக்குமா?” 


“சரிம்மா! இதை இப்பப் பார்த்துட்டு, நாளைக்கு இந்தக் குழந்தையோட வாழ்க்கை பாழானா?” 


“நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் நின்னாலும் பாழாகும்!” 


“நீ இருடி! அவசரப்படக் கூடாது!” 


“அப்பா டயம் இருக்கு! பதட்டம் வேண்டாம். நீங்க அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்திருங்க!” 


“ஆமாம்மா! நான் புறப்படறேன்!” 


அப்பா சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வர, வாசலில் அந்த  சின்ன மாருதி வந்து நின்றது. 


அதிலிருந்து இறங்கியது சஞ்சய்! 


மூன்று பேரும் ஆச்சர்யப் பட்டார்கள். 


அவனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலை! சஞ்சய் தயக்கத்துடன்  காலை வைத்தான் வாசல்படியில். 


“நான் உள்ளே வரலாமா?” 


“வாங்க!” அப்பா வரவேற்றார்.” 


“உக்காருங்க ஸார்!” 


அவன் உட்கார்ந்தான். 


“புஷ்பா! காபி கொண்டு வாம்மா!” 


“வேண்டாம். இப்ப எதுவும் வேண்டாம். நான் அவசரமாப் பேசணும்!” 


அம்மா புஷ்பாவைப் பார்த்தாள். 


“சொல்லுங்க மிஸ்டர் சஞ்சய்!” 


“எனக்கிப்ப தற்காலிகமா வேலை இல்லை! நான் நீக்கப்பட்டிருக்கேன்!”


“எதுக்கு?' 


“ஒரு லட்ச ரூபாய் பணத்தை நான் கையாடல் பண்ணிட்டேன்னு குற்றச்சாட்டு!” 


“அப்படியா?” 


“ஆனா நான் அதைச் செய்யலை! பேங்க்லேருந்து சம்பள நாள்ள பல லட்சங்கள் கொண்டு வந்தது நான்தான். எப்பவும் கொண்டு வர்றதும் நான்தான்! தகுந்த செக்யூரிட்டியோட போயிட்டு, திருப்பி வருவோம்! இந்த முறையும் அப்படித்தான் வந்தேன். ஆனா ஒரு லட்ச ரூபாய் மிஸ்ஸிங்! எப்படீனே தெரிய

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
எப்பவும் உன் நிழலில்!

Read more from தேவிபாலா

Related to எப்பவும் உன் நிழலில்!

Related ebooks

Reviews for எப்பவும் உன் நிழலில்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எப்பவும் உன் நிழலில்! - தேவிபாலா

    1

    கல்யாணப் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வந்து விட்டன!

    அப்போதுதான் அப்பா அதை எடுத்து வந்திருந்தார்.

    காபியைக் குடித்து விட்டு அப்பா வந்து உட்கார்ந்தார்.

    புஷ்பா வந்தாச்சா?

    புஷ்பா உள்ளே நுழைந்து கொண்டே இருந்தாள்.

    அவளுக்குத்தான் கல்யாணம்! இன்னும் மூன்று வாரங்களில் கல்யாணம்! பிரபலமான மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணிபுரியும் புஷ்பாவுக்கு வயது 25. பட்டதாரி. அழகானப்பெண். புத்திசாலி. நர்ஸாகப் பணிபுரிய வேண்டும் என்ற லட்சியத்தில் வெற்றி பெற்ற பெண்.

    அவளுக்குக் கீழே அவளது 22 வயது தங்கை கன்யா, தனியார் நிறுவனமொன்றில் ஸ்டெனோ. நல்ல சம்பளம். அவளும் பட்டதாரிதான்.

    அப்பாவுக்கு இன்னும் ஆறு வருஷம் சர்வீஸ் இருக்கிறது. மத்திய அரசாங்க உத்யோகஸ்தர். முத்தாக இரண்டு மகள்களைப் பெற்று நல்ல நிலைக்குக் கொண்டு வந்தாகி விட்டது. இதோ புஷ்பாவுக்குக் கல்யாணம்.

    இது காதல் கல்யாணமல்ல!

    பெரியவர்களாகப் பார்த்து நிச்சயித்தக் கல்யாணம்.

    பையன் சஞ்சய் – தனியார் நிறுவனமொன்றில் ஃபைனான்ஸ் மானேஜர். உயர்ந்த இலக்கச் சம்பளம். அவனுக்கு ஒரு தங்கை, ஒரு அக்கா!

    எம்.காம் படித்தவன். வயது இருபத்தியெட்டு. ஏழு வருஷ சர்வீஸ். நல்லவன்!

    ஜாதகம் பொருந்தி விட்டது. பெண் பார்க்க வந்தார்கள். பிடித்து விட்டது. மளமளவென மேற்க்கொண்டு பேசத் தொடங்கி, எல்லாம் படிந்து போக, தேதி குறிக்கப்பட்டு விட்டது.

    செலவு நிறையத்தான் ஆகிக் கொண்டிருந்தது.

    பெரிய மண்டபம், நகைகள், ரொக்கம் என சகலத்திலும் டிமாண்ட் இருந்தது.

    புஷ்பாவுக்கு இது பிடிக்கவில்லை!

    அப்பா! இந்த வரன் வேணுமா?

    ஏன்மா இப்படிக் கேக்கற?

    கிட்டத்தட்ட உங்களுக்கு நாலு ரூபாய்க்கு செலவு வருது! இத்தனை செலவு பண்ணி ஒரு கல்யாணத்தை நடத்தித்தான் ஆகணுமா?

    தப்பில்லைம்மா! பையனுக்குத் தகுதி இருக்கு. கேக்கறாங்க! நான் சேர்த்து வச்சிருக்கேனே. நீ பிறந்தப்ப சேமிக்க ஆரம்பிச்சது. இப்பக் கணிசமா வளர்ந்திருக்கு. பற்றாக்குறைக்கு லோன் கேட்டுக்கிட்டா ஆச்சு!

    ஒரு வழியா புஷ்பா சம்மதித்தாள்.

    அப்பா, அம்மா கேட்டதற்கெல்லாம் அவன் தலையாட்டியது லேசாக எரிச்சலை மூட்டியது!

    காலம் மாறிவிட்டது. காசுக்கு ஆசைப்படும் இளைஞர்கள் இப்போது குறைந்து வருகிறார்கள்.

    தனியாக அழைத்துப் பேசலாமா என்று கூட புஷ்பா நினைத்தாள்.

    அது சரியில்லை என்று தோன்ற விட்டு விட்டாள்.

    அவனும் போன் செய்வது, பேசுவது போன்ற எதையும் செய்யவில்லை!

    இதோ அழைப்பிதழ் வந்து விட்டது.

    நகை, துணிமணி, பாத்திரங்கள் எல்லாம் வாங்கியாகி விட்டது. மண்டபம் சமையல்காரன், மேளம், வீடியோ சகலமும் தயாராக இருந்தது!

    அப்பா எல்லாம் தயார் செய்த பின்பும் டென்ஷனில் இருந்தார். முதல் கல்யாணம்! நன்றாக நடத்தி விட வேண்டும் என்ற கவலை!

    அழைப்பிதழ்கள் பிரிக்கப்பட்டு, எடுத்து வைத்த பட்டியல் படி, தபாலில் அனுப்ப வேண்டியவைகள் தனியாக சேகரிக்கப் பட்டன!.

    அப்பா ஆபிஸ், புஷ்பா ஆபிஸ், கன்யா ஆபிஸ், உறவினர்கள் பொது நண்பர்கள் எனப் பட்டியலிட்டார்கள்.

    மூணுவாரம்தான் இருக்கு! மளமளவென்று டிஸ்ட்ரிப்யூஷன் தொடங்கணும்!

    அப்பா ஒரு காரை பிக்ஸ் பண்ணுங்க! நீங்களும் அம்மாவும் ரெண்டுநாள் சுத்தினா லோக்கல் முடிஞ்சிடும்!

    சரிம்மா! நீ எப்ப லீவு போடப் போற?

    ரெண்டு நாள் முன்னால! அது வரைக்கும் வேலை மூச்சைப் பிடிக்கும்! அவர் தலையாட்டினார்.

    அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாட்கள் மளமளவென ஓடி, கல்யாணத்துக்கே ஒரு வாரம்தான் இருந்தது.

    அன்றைக்குக் காலையில் ஒரு ஆப்ரேஷன் இருந்ததால, டாக்டர் ஆறுமணிக்கே வரச் சொல்லியிருந்தார். புஷ்பா குளித்துத் தயாராகி புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    அம்மா காபி கொண்டு வந்தாள்.

    அப்பா நைட் ஷிப்ட் போயிருக்காரா?

    ஆமாம்! அப்பத்தான் கல்யாண வேலைகளை பகல்ல பாக்க முடியும். லீவு வீணாகாது பாரு!

    அம்மா இது வேண்டாம்! ராத்திரிப் பகலா உழைச்சா, அப்பா படுத்துடுவார்.

    வாசலில் மொபட் வந்து நின்றது.

    அப்பா வந்து விட்டார்.

    உங்களைப் பற்றித்தான் உங்க பொண்ணு பேசறா!

    என்னம்மா?

    இப்படி உழைக்காதீங்கப்பா! உடம்பு தாங்காது

    "உன்

    Enjoying the preview?
    Page 1 of 1