Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இலக்கு!
இலக்கு!
இலக்கு!
Ebook128 pages45 minutes

இலக்கு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“என்னங்க! இப்ப வெளியூர்ப் பயணம் தப்போ? யோசனை பண்ணிப் பாருங்க!”
அம்மா கேட்டாள்.
“என்ன தப்பு அதுல? நமக்குனு ஒரு விருப்பம் இருக்கக் கூடாதா? நாம இந்த வீட்ல அடிமைகளா? நாம இல்லாம இருந்தாத் தாண்டி, அதுங்களுக்கு நம்ம அருமை புரியும்!”
“நான் இல்லைனு சொல்லலீங்க! ஆனா...!
“என்ன ஆனா?”
“நமக்குள்ள சலிப்பு நியாயம்தான். வயசான காலத்துல பாரம் சுமக்க முடியலை. எல்லாம் சரிதான். ஆனா நம்மகிட்டேயும் கொஞ்சம் தப்பு இருக்குங்க!”
“என்ன உளர்ற?”
‘உளறலை! எல்லாத்துக்கும் ஆளை ஏற்பாடு பண்றதா ரெண்டு பேரும் சொல்றாங்க! நாம ஒப்புக்காம பிடிவாதம் பிடிக்கிறோம்!”
“அதெல்லாம் சரிப்படாதுடி!”
“ஏன்? நாமும் கஷ்டப்படக்கூடாது! பிரச்னையும் தீரணும்னு அவங்க சொல்றாங்க! அதை மறுத்தா, அவங்களுக்கும் பிரச்னைதானே?”
“அவ வேலையை விடட்டுமே!”
“என்ன பேசறீங்க? அத்தனை பெரிய சம்பளம் வாங்கும்போது வேலையை விட முடியுமா?”
“நீ யார் பக்கம் பேசற?“கோவப்படாதீங்க! பணம் இருக்கும்போது ஆள் - அம்பாரினு அவங்களால நிலைமையை சமாளிச்சிட முடியும். கொஞ்சம் தடுமாறி அப்புறமா எழுந்து நின்னுடுவாங்க!”
“நிக்கட்டும்!”
“அப்புறமா நம்ம மேல வெறுப்பு வரும். இத்தனை நாள் பட்ட பாடு இல்லைனு ஆயிடும்! அவன் நமக்கு ஒரே பிள்ளை! அந்த மாதிரி ஒரு கசப்பை சம்பாதிக்கலாமா? சொல்லுங்க!”
“அப்படீன்னா அவளைத் தொங்கணும்னு சொல்றியா?”
“இதப்பாருங்க! இது குடும்பம். கோவமாவே பிரச்னைகளை அணுகினா, பூதாகரமா அது வெடிக்கும்! கொஞ்சம் சாந்தமா பார்த்தா, நல்லதில்லையா?”
“நாளைக்கு நாம போறோம்!”
“என் தம்பி வீட்டுக்குப் போயிட்டு, அங்கிருந்து பதிவு பண்றோமா?”
“ஆமாண்டி! டிக்கெட் கிடைக்கும்! எனக்குப் போகணும்னு தோணியாச்சு! நீ வரலைனாலும் நான் போவேன்!”
“சரி! உங்க பிடிவாதத்தை யாரால மாற்ற முடியும்? நானும் வர்றேன்!”
மறுநாள் காலை எழுந்து சீக்கிரமே குளித்து அம்மா சமையலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய, சுமி வந்துவிட்டாள்.
“அத்தே! நீங்க பயண ஏற்பாடுகளை கவனிங்க! நான் பாத்துக்கறேன்!”
“நீ வேலைக்கு போக வேண்டாமா?”
“நீங்க ஊருக்குப் போறீங்களே! நான் எப்படி போக முடியும்?”
“ஒரு மாசம் லீவா?” கேட்டபடி அப்பா வர,
“இல்லை மாமா! அதிகபட்சம் ரெண்டு நாள்! ஆட்களை ஏற்பாடு பண்ண அந்த அவகாசம் வேண்டாமா?”
“ஓ... ஆளைப் போடறதா முடிவு பண்ணியாச்சா?”“வேற வழியில்லையே? நான் வேலைக்குப் போயாகணுமே!”
“அப்பவும் நீ வேலையை விடமாட்டே?”
“இல்லை மாமா!” ஒரே பதில் பளிச்சென!
அம்மா பேக் செய்யத் தொடங்கினாள். பாபுவும் லீவு போட்டிருந்தான்.
“அத்தே... உங்களுக்கு என்ன சாப்பாடா? டிபனா?”
“எங்களுக்கு எதுவும் வேண்டாம்மா! வழில சாப்பிட்டுக்கறோம்!”
“சரி மாமா!”
அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் பெட்டிகளோடு தயாராகிவிட்டார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
இலக்கு!

Read more from தேவிபாலா

Related to இலக்கு!

Related ebooks

Reviews for இலக்கு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இலக்கு! - தேவிபாலா

    1

    பாபு உள்ளே நுழையும்போதே குழந்தை வீறிட்டு அழும் சப்தம் கேட்டது! அப்பா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

    பாபு சோபாவில் உட்கார்ந்து ஷூக்களை அவிழ்க்கத் தொடங்கினான்.

    அழும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அம்மா புலம்பியபடி வெளியே வந்தாள்.

    வயசான காலத்துல ஒரு பக்கம் வெந்ததைத் தின்னுட்டு நிம்மதியா விழுந்து கிடக்க முடியுதா? புள்ளையைப் பாத்துக்கற கஷ்டம். இந்த வயசு புள்ளையை வளர்க்கற வயசா? முடியலைடா சாமி! இதை விட ஏதாவதொரு இல்லத்துக்குப் போயிடலாம் போலிருக்கு!

    பாபு எதுவும் பேசாமல் சட்டையைக் கழட்டினான்!

    முடியலை! ஒடம்பு ஒத்துழைக்கலை!

    பாபு பர்முடாஸுக்கு மாறி, பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

    நீ பாட்டுக்கு புலம்பிக்கிட்டே இருக்கே! அவன் பேசாம போறான் பார்த்தியா?

    அவன் என்னங்க செய்வான்? பத்து மாசம் இதை சுமந்து பெத்தவளுக்கே அந்தப் பொறுப்பு இல்லை! இவன் ஆம்பிளை என்ன செய்ய முடியும்?

    பாபு காதில் சகலமும் விழுந்தது!

    எதுவும் பேச முடியாது!

    பாபுவுக்குக் கல்யாணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது! கூட்டுக் குடும்பம்! இது முதல் குழந்தை! பத்து மாதத் குழந்தை!

    பாபுவின் மனைவி சுமித்ரா ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் உத்யோகம். பி.ஈ. படித்தவள். மாதச் சம்பளம் அறுபதாயிரத்துக்கு மேல். பொறுப்பான வேலை! வீடு திரும்ப தினசரி இரவு பத்து மணி ஆகிவிடும். பாபு வங்கியில் அதிகாரி. அதனால் எட்டு மணிக்குள் வந்துவிடுவான்!

    இந்தக் குழந்தை பிறக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை!

    இது பிறந்து, பகல் நேரம் அம்மா பராமரிக்க வேண்டும் என்ற நிலை வந்ததும் - பிரச்னை தொடங்கிவிட்டது!

    அவள் வேலையை விடச் சொல்லு!

    எப்படீம்மா? நான் சம்பாதிக்கறதை விட ரெண்டு மடங்கு சம்பாதிக்கறா! குடும்பத்துத் தேவைகள் நிறைய இருக்கு! விட முடியுமா? சமையலுக்கு, வீட்டு பராமரிப்புக்கு ஆளை ஏற்பாடு பண்ணிடலாம். குழந்தையை மட்டும் நீ பார்த்துக்கோ!

    குழந்தை வளர்ப்புதான் கஷ்டம்!

    சரி! பேபி ஸிட்டர்கள் நிறையப் பேர் இருக்காங்க! குழந்தையை ஒப்படைக்கலாம்!

    அதெல்லாம் கூடாது! நம்ம புள்ளையை மத்தவங்க வளர்த்தா, பாசம் விட்டுப் போயிடும்!

    நீ ரெண்டும் சொன்னா எப்படீம்மா?

    சொல்ல வேண்டியது உன் மனைவி சுமி!

    இரவு அவளிடம் பாபு ஆரம்பித்தான்.

    பெரியவங்களுக்கு பாத்துக்கணும்னு அவசியம் இல்லை! புள்ளை நம்முது! நீ பேசாம இருந்தா எப்படி சுமி?

    இதப்பாருங்க! நல்ல உத்யோகத்தை நான் விட முடியாது. உங்கம்மா கஷ்டப்பட வேண்டாம். எல்லாத்துக்கும் ஆள் போடலாம்னு சொல்றேன். அதுக்கும் ஒப்புக்கலைனா நான் பேசி என்ன லாபம்?

    இப்ப என்ன செய்யறது?

    கோவப்படாதீங்க! உங்கம்மா ஆரோக்யமாத்தான் இருக்காங்க! உங்கப்பா ரிடையராயிட்டு வீட்லதான் இருக்கார். உங்க புள்ளைதானே? பொறுப்பு அவங்களுக்கு இல்லையா? பாத்துக்கட்டும்!

    ஏய்! நீ இப்படி பேசறது அவங்க காதுல விழுந்தா, வீட்ல புயல் வீசும்!

    இதப்பாருங்க! கடமை, பொறுப்புனா அது ஒரு குடும்பத்துல எல்லாருக்கும் உண்டு! புரியுதா?

    பாபு பேசவில்லை!

    பாபு சுமித்ராவை எதிர்த்து எப்போதுமே பேசமாட்டான்.

    முதல் காரணம், காதல் கல்யாணம்; ரெண்டாவது அவனைவிட, சுமி அதிகம் சம்பாதிப்பவள்! மூன்றாவது சுமி குடும்பத்தில் பெரியவர்களை எதிர்த்தும் பேசமாட்டாள். அதேசமயம் தான் பிடித்த பிடியை விடமாட்டாள். அதிலிருந்து மாறவும் மாட்டாள்.

    இரண்டு பேர் உத்யோகம் பார்க்கும் குடும்பங்களில் இந்தக் குழந்தைப் பராமரிப்பு ஒரு பெரிய பிரச்னை!

    இதை அத்தனை சுலபத்தில் தீர்க்க முடியவில்லை!

    சில நாட்கள் அப்பா, அம்மாவின் கோபம் தீவிரமாக இருக்கும். சில சமயம் கட்டுக்குள் இருக்கும்.

    சுமியின் பிறந்த வீடு பெங்களூரில். இங்கே அவளுக்கு யாரும் இல்லை.

    பாபு குழந்தையை வாங்கிக் கொண்டான். கொஞ்ச நேரம் மொட்டை மாடியில் வைத்துக் கொஞ்சினான்.

    அதன் பிறகு அம்மா குழந்தையை வாங்கிக் கொண்டு போய் சாப்பாடு ஊட்டி, உறங்க வைத்துவிட்டாள்.

    பாவம்! வயசான காலத்துல ஓய்வுல இருக்கணும்! பல பெற்றவர்களுக்கு இந்தக் காலத்தில் அது முடிவதில்லை!

    நேரம் இரவு எட்டரை!

    பாபு! உனக்கு சப்பாத்தி போடட்டுமா?

    சரிம்மா! அம்மா! சமையலுக்காவது ஒரு ஆளை போடறேனே!

    உங்கப்பாவுக்கு வெளி நபர் சமையல்கட்டுக்குள்ளே வந்து வேலை செஞ்சா பிடிக்காதுடா!

    இப்படி எல்லாத்துக்கும் நீங்க ரெண்டு பேரும் பிடிவாதம் புடிச்சா எப்படீம்மா?

    அப்பா வந்துவிட்டார்.

    யாருடா பிடிவாதம் புடிக்கறது? உன் பொண்டாட்டி காலைல ஏழரைக்கு புறப்பட்டா, திரும்ப ராத்திரி பத்தாகுது! நாங்களும் அவளை மாதிரி பொறுப்பில்லாம காலை உதறி நடக்க முடியுமா?

    பாபுவுக்கு சுருக்கென வந்துவிட்டது!

    அப்பா! அவளை நான் சப்போர்ட் பண்றதா நினைக்க வேண்டாம். பொறுப்பில்லாமனு சொல்லாதீங்க! அவ பீச்சுக்கோ, சினிமாவுக்கோ போகலை! கடுமையா உழைக்கறா! கஷ்டப்படறா! கை நிறைய சம்பாதிக்கறா!

    யாருக்காக? எங்களுக்கா?

    இல்லைப்பா! எனக்காக!

    அப்படின்னா, நீதான் கஷ்டப்படணும். நாங்க எதுக்கு பாரம் சுமக்கணும்?

    வேண்டாம்னுதானே சொல்றேன். எல்லாத்துக்கும் ஆள் ஏற்பாடு பண்றேன். நீங்க எதையும் செய்ய வேண்டாம்!

    கண்டவங்க வந்து இந்த வீட்டுப் பொறுப்புகளை ஏத்துக்கிட்டா, நாங்க எதுக்கு?

    பாரும்மா! இது நியாயமா? ரெண்டும் பேசினா எப்படி?

    எனக்குப் பேசக் கத்துக் குடுக்கறியா?

    வழக்கமான பேச்சு இன்று கொஞ்சம் அதிகமாகிவிட்டது! பாபு பதிலே பேசமாட்டான். அவனுக்கும் சூடாகிவிட்டது!

    அம்மா பயந்துவிட்டாள்.

    சரிங்க! விடுங்க! பாத்துக்கலாம்!

    மாட்டேன். எத்தனை நாள் கஷ்டப்பட முடியும்? இதுக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்!

    சொல்லுங்கப்பா! கட்டுப்படறேன்!

    லக்ஷ்மி! நாளைக்கே நீ புறப்படு! காசி, ராமேஸ்வரம்னு ஒரு மாசம் கோயில்களை சுத்திட்டு வரலாம்.

    சரிப்பா! நாங்க உங்களைத் தடுக்கலை! போயிட்டு வாங்க!

    ஒரு மாசம் நாறினாத்தான் எங்க அருமை தெரியும்!

    அப்பா! நீங்க இருக்கறது பெரிய உதவிதான். அதேசமயம், நீங்க இல்லைனாலும் நாங்க வாழ்ந்துதானே ஆகணும்?

    பாத்தியாடீ பேச்சுல அகங்காரத்தை?

    இல்லைப்பா! இது தன்னம்பிக்கை!

    பேச்சு உச்சகட்டத்தை அடையும்போது சுமி வந்துவிட்டாள்.

    உடை மாற்றிக் கொண்டே பேச்சை கவனிக்க, அவளுக்குப் புரிந்துவிட்டது!

    சாப்பிட உட்கார்ந்தாள்!

    சுமி! நாளைலேருந்து நீ லீவு போடணும். அப்பா, அம்மா ஊருக்குப் போறாங்களாம்!

    அப்படியா? பாத்துக்கலாம்!

    அப்பக்கூட அவ லீவு போடமாட்டா! நீதான் வீட்ல இருந்து புள்ளைய பாத்துக்கணும். நீயெல்லாம் ஒரு ஆம்பிளை! உன் இடத்துல நான் இருந்திருந்தா, பொண்டாட்டினு ஒருத்தி என்கூட வாழ முடியாது!

    சுமித்ரா பார்த்தாள்.

    "பாத்தியாடி! உன்னால நான் கேவலப்படறேன்! நீ ஆடி அசைஞ்சு தெனமும் பத்து மணிக்கு வர்றே! நான் இங்கே செருப்படி படறேன்! இவங்க ஒரு பக்கம் போகட்டும்! நானும் நாளைக்கு வெளில போனா, வீடு திரும்பமாட்டேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1