Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அழைத்தால் வருவேன்!
அழைத்தால் வருவேன்!
அழைத்தால் வருவேன்!
Ebook95 pages33 minutes

அழைத்தால் வருவேன்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நர்ஸ் வேலையில் இருக்கும் சுமதி, மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்!
 கூடவே வேலை செய்யும் தலைமை நர்ஸ் சந்திரா, எதிரே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்!
 "இந்த மாசம் நகைச்சீட்டு முடியுது சிஸ்டர்!"
 "தெரியும்!"
 "என்ன வாங்கப் போறீங்க?"
 "மாசம் ஆயிரம் கட்டறேன். பதினஞ்சு மாசம்! போனஸை சேர்த்து பதினாறாயிரம் வரும்! ஒரு சவரன்தான் வரும்! பவுன் விலை ஏறிப் போனதுல எதுவும் உருப்படியா தேறாது!"
 "நீங்க, கூட சேர்த்துக் கட்டணும்!"
 "எங்கே முடியுது? இதுக்கே முழி பிதுங்குது! குடும்ப நிலைமையும் சரியில்லை! இவரோட அண்ணனுக்கு சம்பெனி லாக் அவுட்! வேலையில்லை. அவர் சம்சாரம் வீட்ல இருக்குது! ஒரு பொண்ணுவேற! தவிர மாமா, அத்தை! எங்க ரெண்டு பேர் வருமானத்துல எட்டு பேர் சாப்பிடணும். தவிர துணிமணி, தினசரி செலவுகள். முடியுமா?"
 "எட்டு பேரா? என்ன சுமதி இது?"
 "தலையெழுத்து!"
 "நீயும், உன் புருஷனும் குழந்தையும்னா, ரெண்டு சம்பளத்துல அமோகமா இருக்கலாமே! பெரிய டாக்டர்கிட்ட நீ பேசினா, க்வார்ட்டர்ஸ்கூட கிடைக்குமே?"
 "கூட்டுக் குடும்பத்துல இருக்கேனே சிஸ்டர்? அப்படியெல்லாம் வரமுடியுமா?""இதப்பாரு சுமதி! நீ பம்மிக்கிட்டு நின்னா, எதிர்காலம் நல்லா இருக்காது! மொத்தக் குடும்பத்தையும் நீ கட்டிக்காத்தா, உனக்கு அரசாங்க விருதா குடுக்கப் போறாங்க? பொழைக்கற வழியை பாப்பியா...?"
 "அதில்லை..."
 "இப்ப நீங்க இருக்கறது வாடகை வீடுதானே?"
 "ஆமாம்! அஞ்சாயிரம் ரூபா வாடகை. கரண்ட் பில்லு, டெலிஃபோன் கட்டணம், மளிகை, பால், போக்குவரத்து, வண்டிக்கு பெட்ரோல், செல்ஃபோனு... தவிர மருத்துவச் செலவு, புள்ளைங்க பள்ளிக்கூடச் செலவு... மூச்சு முட்டுது சிஸ்டர்!"
 "மூழ்கிப் போயிடப் போறே!"
 "அதுதான் இப்ப நடக்குது!"
 "சீக்கிரம் ஒரு முடிவை எடு! உன் வீட்டுக்காரர்கிட்ட நாசூக்கா பேசு!"
 "அவர் எப்படி எடுத்துப்பாரோ?"
 "ஏய்! நீ பொம்பிள! உன் புருஷனை உன் பக்கம் திருப்ப, உங்கிட்ட எதுவுமே இல்லையா?"
 "சிஸ்டர்?"
 "புத்திசாலியா நடக்கற வழியைப் பாரு! சாயங்காலம் ட்யூட்டி முடிஞ்சு நகைக்கடைக்குப் போகலாமா?"
 "சரி சிஸ்டர்!"
 நோயாளிகளை கவனிக்கும் பரபரப்பு தொடங்கி விட, மூச்சு விட நேரமில்லாமல் வேலை சரியாக இருந்தது! ஆறு மணிக்கு ட்யூட்டி முடிய, அந்த சந்திரா சிஸ்டரும், வர, வெளியே வந்தாள்!
 செல்ஃபோன் அடித்தது. எடுத்தாள்.
 வரதன்தான் பேசினான்.
 "என்னங்க?நீ எங்கே இருக்கே?"
 "ட்யூட்டி முடிஞ்சு வெளில வந்திருக்கேன்!"
 "அங்கேயே இரு! அண்ணன் மயக்கம் போட்டு விழுந்துட்டாராம். அண்ணி சொன்னாங்க. அவங்க ஆட்டோல கூட்டிட்டு வர்றாங்க. நான் ஆபீஸ்லேருந்து நேரா வர்றேன்! நீ டாக்டர்கிட்ட பேசு சுமதி உடனே!"
 "என்ன சுமதி?" சந்திரா சிஸ்டர் கேட்டாள்.
 சொன்னாள்!
 "அந்த ஆளுக்கு வேலைபோன படபடப்பு மயக்கமா வந்து முடிஞ்சிருக்கு! பிரச்னை எப்படி வருது பாத்தியா?"
 "சரி! நீங்க போய் நகை எடுங்க! நான் அப்புறமா பாத்துக்கறேன்!"
 சுமதிக்கே எரிச்சலாக வந்தது!
 'ஒரு நல்ல செயலுக்குப் புறப்படும்போது, விவகாரம் தேடி வருகிறது!'
 உள்ளே வந்தாள்.
 தலைமை டாக்டர் எதிரே வர, அவரை வணங்கி விவரம் சொன்னாள்.
 "வரட்டும். நானே பாக்கறேன். அவங்க வந்ததும் என் ரூமுக்கு வந்து தகவல் சொல்லுங்க!"
 முதலில் வரதன் வந்து விட்டான்.
 பிறகு ஒரு டாக்ஸியில் மற்ற நாலுபேரும் அரக்கப் பரக்க வந்தார்கள்.
 பாண்டியன் இன்னமும் மயக்கத்தில் இருக்க,
 சுமதி ஸ்ட்ரெச்சர் கொண்டு வர,
 படபடவென அவனை உள்ளே கொண்டு போய், அவசர சிகிச்சை பிரிவுக்குள் கொண்டு போனார்கள். அம்மா அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.
 அப்பா தவிக்க, அஞ்சலிதான் பேயறைந்த தினுசில் இருந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223075912
அழைத்தால் வருவேன்!

Read more from Devibala

Related to அழைத்தால் வருவேன்!

Related ebooks

Related categories

Reviews for அழைத்தால் வருவேன்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அழைத்தால் வருவேன்! - Devibala

    1

    கம்பெனியின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது!

    சைரன் ஒலி நின்று விட்டது!

    அத்தனை இயந்திரங்களும் இயக்கத்தை நிறுத்தின!

    லாக் அவுட்!

    முதலாளி வர்க்கத்துக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை முறிந்து, கதவை மூடும் நிலை உருவாகி விட்டது! இவர்களது எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற நிர்வாகம் தயாராக இல்லை!

    இவர்களும் வீம்பை விடுவதாக இல்லை!

    நிர்வாகம் கையை விரித்து விட்டது!

    அவங்களுக்கென்னப்பா...! ஆயிரம் தொழில்கள். எல்லாத்தையும் மூடிட்டு வெளிநாட்ல செட்டில் ஆயிடுவாங்க. நமக்குத்தான் இழப்பு! குடுத்ததை வாங்கிட்டு வேலை செஞ்சிருக்கலாம்!

    ஒரு சாரார் முதலாளி காலில் விழக்கூட தயார். ஆனால் முதலாளி வர்க்கம் மன்னிக்கத் தயாராக இல்லை!

    ஆட்கள் கலைந்து போக,

    பாண்டியன் தளர்ந்து போய், சைக்கிளை வெளியே எடுத்தான்! சவரம் கூட செய்யாத துவண்ட முகம். கண்களின் அடியில் கருவட்டம்!

    தொழிலாளிகளின் முக்கிய பிரதிநிதிகளில் அவனும் ஒருவன். போராடிக் களைத்து துவண்டு... இன்று முடிவுக்கு வந்தாகி விட்டது!

    பாண்டியனுக்கு வீட்டுக்குப் போகவும் பிடிக்கவில்லை. கால்போன போக்கில் நடக்க, அந்த மாநகராட்சி பூங்கா வந்து விட்டது!

    உள்ளே நுழைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான்.

    கண்களை மூடிக் கொண்டான்!

    வீட்டுக்கு மூத்த பிள்ளை பாண்டியன். வயதான அப்பா, அம்மா! அப்பாவும் தொழிலாளியாக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா குடும்பத் தலைவி! பாண்டியனுக்கு அடுத்து ஒரு தம்பி வரதன்! அவனைப் பட்டதாரி ஆக்கியது பாண்டியன்தான். வரதன் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறான். அடுத்தது ஒரு தங்கை. கோகிலா! கல்யாணமாகி நெல்லையில் கணவனுடன் வாழ்கிறாள். சுமார் ஜீவனம். கடைசித் தங்கை சுந்தரி - சமீபத்தில் கல்யாணம் முடிந்தது! ஏகப்பட்ட கடன்! பாண்டியனின் மனைவி அஞ்சலி! கல்யாணத்துக்கு முன்பு டீச்சராக வேலை பார்த்தவள். ‘அவள் வேலைக்குப் போக வேண்டாம். இந்தக் குடும்பத்தில் பெண்களை வேலைக்கு அனுப்பும் பழக்கமில்லை’ என்பது அம்மாவின் பிடிவாதம்!

    தம்பி வரதனுக்கு திருமணம் முடிக்கும் போது அவன் வேலைக்குப் போகும் பெண் வேண்டும் என ரகளை செய்து குடும்பத்தில் களேபரம் உண்டாகி, இறுதியில் வரதன் விருப்பப்படி ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்க்கும் சுமதி அவனுக்கு மனைவியானாள்.

    பாண்டியன் - அஞ்சலிக்கு ஆறுவயதில் பெண் குழந்தை - ஜீவா! வரதனுக்கு மூன்று வயதில் பையன் - விக்னேஷ்! இதுதான் குடும்ப சூழ்நிலை!

    தொழிலாளர் போராட்டத்தில் பாண்டியனுக்கு 2 மாதங்களாக சம்பளமில்லை! சமாளித்தாகி விட்டது!

    இப்போது ‘லாக் அவுட்!’

    ‘இனி என்ன செய்வது?’

    ‘வெளியே ஏராளமான கடன். இனி யாரும் நம்பிக் கடன் தரமாட்டார்கள்!’

    ‘ தந்தாலும் எப்படி அடைப்பது?’

    ‘வெளியே வேலைதேட வேண்டும்! பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத எனக்கு யார் வேலை தருவார்கள்? இத்தனை நாள் எந்திரங்களோடு மல்லுக்கட்டிய அனுபவத்தை வைத்து முயற்சிக்க வேண்டும்! முடியுமா?’

    கேள்விகள் ஏராளமாகப் புறப்பட்டன.

    காலையில் சாப்பிடவில்லை! பசித்தது! கையில் காசும் இல்லை! மெதுவாக வீட்டுக்கு வந்தான்!

    அதற்குள் தகவல் வந்து விட்டது!

    என்னப்பா... மூடிட்டாங்களா? - அம்மா.

    ஆமாம்மா!

    இனி என்னடா பண்ணப் போறோம்? பெரிய குடும்பமாச்சே!

    அப்பா குறுக்கிட்டார்.

    விட்றி! தெருவுலயா நிக்கறோம். வரதனும், சுமதியும் சம்பாதிக்கறாங்க இல்லை? சமாளிப்போம்!

    அவங்களை நம்பி வாழ முடியுமா?

    அவனும் பிள்ளைதானே?

    சரிங்க! வரதனுக்கு உங்களையும் என்னையும் பராமரிக்கற கடமை இருக்கு! அண்ணன் குடும்பத்தை பாதுகாக்கணுமே!

    கதவோரம் அஞ்சலி நின்றாள்.

    என்னடீ பேசற? வரதனைப் படிக்க வச்சதே நம்ம பாண்டிதான்!

    சரிங்க! அதுக்காக சுமதி செய்யணும்னு இல்லையே?

    நீ யாரு பக்கம்?

    நான் யாரு பக்கமும் இல்லை. யதார்த்தம் என்ன சொல்லுதோ, அதை நான் பேசறேன்!

    இரண்டாவது மருமகள் சுமதி, கொஞ்சம் சீர் செனத்திகளோடு வந்ததால், அம்மாவுக்கு அவள் பக்கம் ஈடுபாடு அதிகம்!

    இத்தனைக்கும் வீட்டில் சுமதி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடமாட்டாள்.

    மாடுபோல உழைப்பது அஞ்சலிதான். அஞ்சலியின் பிறந்த வீடு சொல்லும்படியாக இல்லை! அப்பா இல்லை! விதவைத் தாய்! ஒரு அக்காவும் அத்தானும்! அஞ்சலி வருமானத்தை உறிஞ்சிய கூட்டம் அது! ஏறத்தாழ கட்டின சேலையுடன் வந்தவள் அஞ்சலி! அது அம்மாவுக்கு மனக்குறை!

    அஞ்சலி, நம்ம பாண்டியை விட படிச்சவ! டீச்சரா இருந்தா! நீதான் குறுகின மனசோட அவளை வேலையை விடச் சொல்லி வீம்பு புடிச்சே! இப்ப அவ வேலைல இருந்தா, பாண்டியனுக்கு இந்தக் கஷ்டம் உண்டா?

    அஞ்சலி சின்னக் குரலில்,

    மாமா! இப்பக்கூட என்னால ஒரு வேலையைத் தேடிக்க முடியும்! கஷ்டமில்லை!

    "அதெல்லாம் வேண்டாம். என் பிள்ளை வீட்ல ஒக்காந்திருக்க, நீ வேலைக்குப் போனா, ஊர் அவனைக் காறித் துப்பாது? அவனை அசிங்கப் படுத்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1