Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கனல் மணக்கும் கண்ணீர்..!
கனல் மணக்கும் கண்ணீர்..!
கனல் மணக்கும் கண்ணீர்..!
Ebook138 pages1 hour

கனல் மணக்கும் கண்ணீர்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"என்னங்க!"
 "சொல்லு நித்தியா!"
 "வாடகை இருநூறு ரூபா ஏறிப் போச்சு. மளிகை, பால் எல்லாம் ஏறியாச்சு. மாச பட்ஜெட்ல கிட்டத்தட்ட. ஆறு நூறு ரூபாய் அதிகமாயிடுது. உங்கப்பா மாசம் ஐநூறு ரூபாய் தர்றார் உங்ககிட்டே. ரெண்டாயிரம் ரூபாய் பென்ஷன் வருதே அவருக்கு. அதுல பாதியை தரக்கூடாதா? ரெண்டு பேரும் சாப்ட்டு, துணி உடுத்திக் காலம் கழிய ஐநூறு ரூபாய் போதுமா? மெடிகல் செலவு வேற. என் சம்பளத்துக்கு நானும் தனியா இருந்திருந்தா என் சேமிப்பு பல ஆயிரங்களைக் கடந்திருக்கும். இப்ப நம்ம பேங்க் பேலன்ஸ் என்னா? 40 ரூபா 17 பைசா. பேங்க்ல அசிங்கமா பார்க்கறான் நம்மை."
 "சரி! நீ என்னதான் சொல்ற?"
 "இல்லாத பெத்தவங்களா இருந்தா, கணக்கு பார்க்க முடியாது. இருக்கறவங்க தரட்டுமே!"
 "சரி! நாளைக்கு நான் பேசறேன்! நீயும் கூட இரு!"
 "தபாருங்க. தரலைனா, உங்க தம்பிகிட்டே போயிரட்டும் ரெண்டு பேரும்! நம்மால முடியாது. புரியுதா?"
 குரு குழம்பிப் போனான்.
 அடுத்த நாள் காலை –
 அப்பா ஆங்கில நாளிதழில் தொலைந்து போயிருக்க,
 "அப்பா!"
 தலையை நிமிர்த்தினார்.
 "என்ன குரு?அதை அவன் சொன்னதுமே, அம்மா ஆஜர் ஆகிவிட்டாள்.
 நித்யா நிலைப்படியருகில் நின்றாள்.
 "பேசு குரு!"
 "வாடகை, விலைவாசி எல்லாம் கூடிப்போச்சு. எங்க ரெண்டு பேர் சம்பளம் வந்தும் குடித்தனம் நடத்த முடியலை. ஒரு காசு சேமிப்புனு இல்லை. ரெண்டு குழந்தைகள் வேற ஆயாச்சு. கூடுதலா பணம் தந்தா, குடும்பத்துக்கு உபகாரமா இருக்கும்!"
 அதைச் சொல்வதற்குள் குருவுக்கு வியர்வை பொங்கிவிட்டது.
 "கூடுதலா தந்து உதவக்கூடாதானு ஏன் கூலிக்காரன் மாதிரி கெஞ்சறீங்க? தனியா வீடெடுத்து ரெண்டு வேளை சிக்கனமா சாப்பிட்டு செலவு நடத்தினாலே ரெண்டு பேர் ரெண்டாயிரம் ரூபாய்ல இந்தக் காலத்துல வாழ முடியாது. தெரியுமா?"
 "ஓ.... உன் வேலையா இது?"
 "பின்ன? கஷ்டம்னா பேசித்தானே ஆகணும்!"
 "நாங்க பெத்தவங்க. எங்களுக்குச் செய்யற கடமை எங்க பிள்ளைக்கு உண்டு. வந்தவங்க யாருக்கும் ஏன்னு கேட்க வாயில்லை. இந்த ஐநூறைத் தராட்டிக்கூட உட்கார வெச்சு செய்யற கடமை அவனுக்கு உண்டு. புரிஞ்சுக்கோ!"
 "பெத்துட்டா வளர்க்கத்தான் வேணும். எனக்காகவா அவரை வளர்த்தீங்க?"
 "நீதானே இன்னிக்கு அனுபவிக்கறே!"
 "நான் இந்த வீட்டுக்கு வந்த நிமிஷம் முதல், என் பணத்துல நான் சாப்டுட்டு இருக்கேன். யாரும் ஒரு கவளம் சோறு எனக்கு இலவசமாப் போடலை. ஒரு நகை, துணிமணினு என் புருஷன் வாங்கித் தரலை. என்சம்பளத்துல சீட்டு கட்டி வாங்கிக்கறேன். ஆணும், பெண்ணும் வேலைக்குப் போறது குடும்ப சந்தோஷத்துக்கு. யாரும் தனியாக கட்டிட்டுப் போகலை."
 "நாங்க மட்டும் என்னத்தைக் கட்டிட்டுப் போறம்?"
 "நாங்க ரெண்டு பேர் சம்பாதிச்சு ஒரு சொத்து பத்து வாங்கினா, எங்க குழந்தைகளுக்கு, அவங்க நல்லா இருக்கணும்னுதான். இப்ப உழைக்கறம். அந்த குழந்தைகளுக்கு எந்த உதவியும் செய்யாம கழுத்தை அறுக்கறவங்க பெத்தவங்க இல்லை; செத்தவங்க!"
 "நித்யா!"
 அருகில் நெருங்கி பளீரென அறைந்து விட்டான் குரு.
 அவள் தன் கன்னத்தை அப்படி பிடித்துக்கொண்டு நின்றாள்.
 சற்று தாமதித்தாள்.
 "அடிங்க! கணவர்களோட அதிகபட்ச ஈகோ இது மாதிரி மிருகத்தனத்துலதான் முடியும். தெரியும். எனக்கு. மனைவியை மட்டும்தான் கோபப்படத் தெரியும், முடியும் உங்களால!"
 "பெத்தவங்களையும் அடிக்கச் சொல்றியா என்னை?"
 "வேண்டாம். தன் பிள்ளைகிட்ட கணக்கு பேசி, கழுத்தை அறுக்கற பெத்தவங்களை தலைல தூக்கி வச்சிட்டுக் கொண்டாடுங்க. நான் நாளைக்கே போறேன்!"
 "எங்கே? பிறந்த வீட்டுக்கா?"
 மாமியார் எகத்தாளமாகக் கேட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224361656
கனல் மணக்கும் கண்ணீர்..!

Read more from Devibala

Related to கனல் மணக்கும் கண்ணீர்..!

Related ebooks

Related categories

Reviews for கனல் மணக்கும் கண்ணீர்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கனல் மணக்கும் கண்ணீர்..! - Devibala

    1

    அப்பா வந்தாச்சு! மூன்று வயது சுதா குரல் கொடுத்தபடியே ஓடி வந்தது.. படியேறி வந்தான், ராம்கி.

    அவன் மேல் தொற்றிக்கொண்டது.

    அதைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

    அப்பாவை விட்றி! இப்பத்தானே வந்திருக்காங்க. முகம் அலம்பிட்டு காபி குடிக்கட்டும்!

    குழந்தையை ஒண்ணும் சொல்லாதே பிரமீ

    அவன் உட்கார்ந்து கொண்டான்.

    எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கே?

    சும்மா சும்மா என்ன வாங்கிட்டு வருவாங்க?

    பிரமிளா காபியைக் கலந்துகொண்டே கேட்டாள்.

    இன்னிக்கு அப்பாவுக்கு சம்பள நாள்! தெரியாதா எனக்கு? அவன் சிரித்தபடி ஸ்வீட்ஸ் எடுத்துத் தந்தான்.

    அழகான ஒரு கவுனை வெளியே எடுத்தான்.

    அய்.... புதுஃபிராக்கு அப்பா இதுக்கு மேட்சா செருப்பும்; வளையலும் பொட்டும் வேணும்!

    மூணு வயசுகூட முடியலை. ஆசையைப் பாரு! போய் விளையாடுடா கண்ணா!

    அது ஓடிவிட்டது.

    மல்லிகைப் பூ பொட்டலத்தை எடுத்துத் தந்தான், பிரமிளாவிடம்.

    என்னா இன்னிக்கு அமர்க்களம்? அரியர்ஸ் ஏதாவது வந்ததா?

    அவன் ஒன்றும் பேசாமல் சம்பளக் கவரை எடுத்துத் தந்தான்.

    அதை எடுத்துக்கொண்டு சாமி படிக்குப் போனாள், பிரமிளா.

    வைத்துவிட்டு, மல்லிகைப் பூவைப் பிரித்து அவனிடம் தந்தாள்.

    வச்சு விடுங்க!

    வைத்துவிட்டான்.

    பூ, இனிப்பு, புதுத்துணி இதெல்லாம் தாங்குமா? இந்த மாசம் பண்டிகைகூட இல்லையே!

    காபியைக் கொண்டா!

    அவள் தர குடித்தான்.

    டிபன் பண்ணட்டுமா?

    வேண்டாம்.

    லோன் அப்ளை பண்ணியிருந்தீங்களே! கிடைச்சதா?

    அவன் பேசவில்லை.

    என்ன கேட்டாலும் இன்னிக்கு நீங்க பதிலே சொல்றதில்லை! என்னாச்சு உங்களுக்கு?

    சம்பளக் கவரை எடுத்து எண்ணிப் பாரு!

    ராத்திரி பார்த்துக்கலாம்!

    இல்லை! இப்ப எண்ணு!

    அவள் காரணம் புரியாமல் அதை எடுத்து வந்து எண்ணத் தொடங்கினாள்.

    ரெண்டாயிரம் ரூபா அதிகம் இருக்கு! லோன் கிடைச்சதானு நான் கேட்டப்ப இல்லைனீங்க!

    இது லோன் இல்லை!

    பின்ன போனஸா?

    அதுவும் இல்லை!

    சரி நீங்களே சொல்லுங்க!

    கணக்கு தீர்த்துட்டான்!

    புரியலை!

    வேலையை விட்டு எடுத்தாச்சு!

    எ.... என்னது? வே.... வேலை போயிடுச்சா உங்களுக்கு?

    தமிழ் யூனிட்டை மூடப் போறான். என்ன பொல்லாத யூனிட்? எட்டு பேர் உள்ள ஒரு கன்சல்டன்ஸி. எட்டு வருஷமா நடத்திட்டு வர்றான். தனி மனுஷன். திடீர்னு மூடப்போறான். அவனை எதிர்த்து லேபர் கோர்ட்டுக்கா போக முடியும்?

    அய்யோ....!

    நல்லவன். ஆளுக்கு ரெண்டாயிரம் ரூபாய் அதிகம் தந்து வீட்டுக்கு அனுப்பினானே! அந்த மட்டுல மனிதாபிமானம் இருக்குன்னு சந்தோஷப்படணும்!

    என்னங்க செய்வோம் இனி?

    தெரியலை. இன்னும் பத்து நிமிஷத்துல முடிவெடுக்கப் போறோமா? ஏன் பதட்டப்படறே? மனுஷ வாழ்க்கைனா எல்லாம்தான்!

    அப்பா!

    என்னடா ராஜா?

    வாசல்ல பலூன் வந்திருக்கு

    இல்லை போடி. எங்க வாழ்க்கையே பலூனைவிட மோசமா இருக்கு!

    ப்ச்! குழந்தைக்கு என்ன தெரியும்? இந்தாடா கண்ணு! நீ போய் வாங்கிக்க!

    சில்லறை எடுத்துத் தந்தான்.

    இரவு சாப்பாடு வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

    குழந்தையும் உறங்கிய பிறகு, விளக்கை அணைத்துவிட்டுக் கூடத்துக்கு வந்தார்கள்.

    என் மாசச் சம்பளம் ரெண்டாயிரம்தான், பிடித்தம்போக. அதை இந்த மாசச் செலவுக்கு வை. அந்த உபரி ரெண்டாயிரத்தை அடுத்த மாசத்துக்கு ஒதுக்கு. அப்புறம் யோசிக்கலாம்!

    அதுக்குள்ளே வேலை கிடைக்குமா உங்களுக்கு?

    எப்படி எனக்குத் தெரியும் பிரமீ! முயற்சி செய்யாமலா இருப்பேன் நான். நமக்கு நேரம் சரியா இருக்கணும்!

    நான் வேலை தேடட்டுமா?

    உனக்கு எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படிப்பு. டைப்பிங் இல்லை. ஷார்ட் ஹேண்ட் தெரியாது. என்ன வேலை கிடைக்கும்? எனக்கே எதுவும் தெரியாம இந்த முதலாளி தயவுல இத்தனை நாள் இருந்துட்டேன். எட்டு வருஷம். என்னோட இருபத்திரண்டாவது வயதுல கிடைச்ச வேலை. இப்ப முப்பது. யாரும்மா எனக்கு வேலை தருவாங்க? என் நிலைமையே இப்படி இருந்தா, உனக்கு எப்படி?

    ஏதாவது செஞ்சுதானே ஆகணும்?

    யோசிப்போம்!

    என்னங்க!

    சொல்லு

    உங்கப்பா, அம்மா, அண்ணன் வீட்டுலதானே இருக்காங்க!

    ஆமாம்!

    உங்கப்பாவுக்கு மாசம் ரெண்டாயிரம் ரூபாய் பென்ஷன் உண்டு இல்லையா?

    ம்....

    அதை இங்கே போட்டுட்டு கொஞ்ச நாளைக்கு நம்மோட இருந்தா நமக்கும் நிம்மதியா இருக்கும். அதுக்குள்ளே ஏதாவதொரு வழி பிறக்காதா நமக்கு?

    ராம்கி பேசவில்லை.

    ஏன் பேசலை?

    நாளைக்கு அப்பாவைப் போய்ப் பார்க்கறேன்!

    அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் சம்பாதிக்கறாங்க. பெரியவங்க உதவி அவங்களுக்கு அவசியமில்லையே

    இல்லைதான்!

    நீங்களும் ஒரு பிள்ளைதானே? சொல்லிப்பாருங்க

    சரி! நீ தூங்கு

    நான் சொன்னது உங்களுக்கு சரியா படலையா?

    சரிம்மா! மத்தவங்களைப் பற்றி - அது பெத்தவங்களாவே இருந்தாலும் - நாம முடிவெடுக்க முடியுமா?

    சற்று நேரத்தில் பிரமிளா உறங்கிவிட்டாள்.

    ஆனால் ராம்கிக்கு உறக்கம் வரவில்லை.

    ‘சொல்லலாமா அப்பாவிடம்?’

    ‘பெற்றோரிடம் சொல்ல என்ன கூச்சம்?’

    ‘அப்பாவுக்கு தன் பணத்தில் பத்து காசு தர மனம் வராது. அப்படியே அவர் தர முன்வந்தாலும் அம்மா தடுத்து விடுவாள்.’

    எஸ்.எஸ்.எல்.சி. முடித்து ஆறு வருஷம் வீட்டில் இருந்தபோது பல விஷயங்களை அவன் கூர்ந்து கவனிக்கத்தான் செய்தான்.

    அண்ணணைவிட நாலு வயது இளையவன் ராம்கி.

    அண்ணன் குரு ஒரு வங்கியில் அதிகாரி. அதனால் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பெண்ணைத்தான் மனைவியாகத் தேர்ந்தெடுத்தான்.

    முதல் ஒரு வருடம் அம்மா மருமகளை நன்றாகவே ஆட்டம் காட்டினாள். புரிந்து கொண்டுவிட்ட நித்யா, கணவனை சுலபமாகத் தன் பக்கம் திருப்பிவிட்டாள். ஆறே மாதத்தில் வேலைக்குப் போகும் மனைவி. அவள் சம்பளமும் தேவையாக இருந்ததால் குருவால் பேச முடியவில்லை.

    இவனுக்கு வேலை கிடைத்து மூன்று வருடங்கள் சம்பளத்தை அப்பா கையில் தந்துவிட்டு டீ, காபிக்குக்கூட அவரிடம்தான் கேட்டு வாங்கினான்...

    இவனுக்கு வரும் ஆயிரத்து நானூறு ரூபாய் சம்பளத்தை பெரியவனிடம் செலவுக்குத் தந்துவிட்டு, பென்ஷன் பணத்தை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார், அப்பா.

    ராம்கியின் 26வது வயதில் கல்யாணப் பேச்சு.

    வெகு சுமாரான குடும்பத்திலிருந்துதான் பிரமிளா வந்தாள்.

    தாய் இல்லாப் பெண். வயதான நோயாளி அப்பா. இவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் போதும் என்ற அண்ணன், அண்ணி!

    அம்மா பிரமிளாவிடமும் ஒரு வருட காலம் தன் மாமியார்தனத்தை அதிகபட்சம் காட்டினாள்.

    சுதாவை பிரமிளா சுமக்கும் போது அம்மா அளவுக்குக் கேவலமாக நடந்து கொண்ட மாமியார்களை உலகத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது.

    ராம்கி, பிரமிளா இருவரும் மௌனமாகத்தான் இருந்தார்கள்.

    பிரசவம் பார்க்க

    Enjoying the preview?
    Page 1 of 1