Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூ ஒன்று புயலாகிறது!
பூ ஒன்று புயலாகிறது!
பூ ஒன்று புயலாகிறது!
Ebook138 pages50 minutes

பூ ஒன்று புயலாகிறது!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தந்தையின் காலில் விழுந்து வணங்கினாள் ஆதிபராசக்தி. மணம் முடித்து கணவனுடன் புதுவாழ்வைத் தேடி புறப்படும் மகளைத் தொட்டுத் தூக்க மனமின்றி பழுதான இரு கரங்களையும் உயர்த்தி ஆசிர்வதித்தார் ரங்கன். 

"நல்லா இரும்மா! தீர்க்கசுமங்கலியாய் இரு. உன் அம்மா எப்பவும் உனக்கு துணையிருப்பாள்" தந்தையின் ஆசியில் கண்கள் கலங்க எழுந்தாள் ஆதிபராசக்தி. கருவிழிகள் இரண்டும் நீரில் மிதக்க, ரங்கன் பதறினார். 

"ஏம்மா கண் கலங்குற? மொதமொறையா மாப்பிள்ளை கூட வாழப்போற வீட்டுக்குப் போகப்போற கண்கலங்கக் கூடாது. தொடைச்சுக்க!" 

"அப்பா! நான்... நானும் போயிட்டா நீங்க தனியா எப்படிப்பா இருப்பீங்க?" 

"அட என்னம்மா! காலையில தோட்டத்துக்குப் போனால் இருட்டின பிறகுதான் வீட்டுக்கு வருவேன். மூணுவேளையும் தோட்டக்காரங்க வீட்ல இருந்து சாப்பாடு வந்திடும். படுத்துக்க நம்ம குடிசை இருக்கு. இதைவிட வேறென்ன வேணும்?" 

"இ... இல்லப்பா! நீங்க தனியா..."

"நான் என்ன குழந்தையாம்மா? என்னைப் பத்தி கவலைப்பட்டு உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே! மாப்பிள்ளை தங்கமானவரும்மா! இல்லேன்னா ஊரே ஒதுக்கி வெச்ச நம்ம வீட்ல வந்து பெண் கேட்பாரா? அவர் கடவுள்மா. அவர் மனம் கோணாம நடந்துக்க." 

"சரிப்பா!" 

"என்னைப் பத்தி நினைச்சு வருத்தப்படாதே. மாப்பிள்ள மனசுப்படி நடந்துக்க." 

"சரிப்பா!" 

"அப்பாவால கடிதாசி எல்லாம் எழுத முடியாதும்மா. முடிஞ்சா மாப்பிள்ளைக்கு நேரம் கிடைக்கும்போது ஒரு நடை வந்திட்டுப் போங்கம்மா" 

"சரிப்பா!" 

"அம்மாடி! இத்தன நாளா கிராமத்தில வீட்டுக்குள்ளேயே இருந்திட்ட. இப்போ நீ போகப் போறது பட்டணம். அங்கே நாலு மனுஷன் நாலு விதமாய் இருப்பாங்க. பார்த்து கவனமாய் இருந்துக்கம்மா!" 

"சரிப்பா!" 

"மாப்பிள்ளை சொல்ற வார்த்தையைக் கேட்டு நட. அந்நிய ஆட்கள்கிட்ட பேச்சுவார்த்தை அதிகம் வெச்சுக்காதே! நம்ம பேரு கெட்டுப் போயிடக்கூடாது. புரியுதா?" ரங்கன் அக்கறையாய் அறிவுரைகளை அடுக்கிக் கொண்டே போக, அஸ்வத்தாமன் பேசிக் கொண்டிருந்த அலைபேசியை துண்டித்து விட்டு வந்தான்.

"போதும் மாமா! அவ என்ன பள்ளிக்கூடத்துக்குப் போற குழந்தையா?" 

"அவ குழந்தைதான் மாப்பிள்ளை! அறியாத வயசிலயே தாயை இழந்திட்டாள். கூடி வாழ அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி இல்லாத ஒத்தப்புள்ள. பத்து, பனிரெண்டு வயசுல இருந்தே அவதான் என்னைக் கவனிச்சுக்கிட்டா. பெத்த அப்பனா நான் அவளுக்கு எதையுமே செய்யல." 

"அப்பா!" 

"மாப்பிள்ளை! எம் பொண்ணுக்கு என்னால எந்த சந்தோஷமும் கிடைக்கல. இப்போ தெய்வமா நீங்க கிடைச்சிருக்கீங்க. அவளைக் கண் கலங்காம... சந்தோஷமா வெச்சுக்கங்க மாப்பிள்ளை!"

"இதையெல்லாம் நீங்க எனக்கு சொல்லணுமா மாமா? நானும் அம்மா, அப்பா இல்லாதவன்தான். ஒருவகையில நானும், இவளும் ஒன்னுதான். இனிமே இவ எம்பொறுப்பு. நீங்க எந்தக் கவலையும் இல்லாம இருங்க." 

"ரொம்ப நன்றி மாப்பிள்ளை! புறப்படுங்க." 

"சக்தி! போலாமா?" 

"கிளம்புறோம் மாமா!" 

"போயிட்டு வாங்க. பத்திரமா போயிட்டு வாங்க." 

"அப்பா! உடம்பை பார்த்துக்கோங்கப்பா. மாத்திரையெல்லாம் வேளாவேளைக்கு போடுங்க." 

"சரிம்மா! மாப்பிள்ளை கார்ல ஏறிட்டார். நீயும் ஏறும்மா!"

"சரிப்பா... தந்தையை விட்டுப் பிரியப் போகிறோம் என்ற எண்ணம் கண்ணீரை வரவழைக்க, மெலிதாய் விசும்பியபடி காரில் ஏறி கணவனருகே அமர்ந்தாள். ரங்கனின் நெஞ்சம் நிறைந்தது. 

"அரைவயிற்றுக் கஞ்சிக்கே அல்லாடும் ஒரு தொழுநோயாளியின் மகளுக்கு காரில் வந்து இறங்கும் மாப்பிள்ளையா? ஆதிபராசக்தி கொடுத்து வெச்சவதான்" என தெருவே கூடி நின்று வேடிக்கை பார்க்க, சற்று கர்வமாகவே புன்னகைத்தார் ரங்கன். 

விதியின் சாபத்தால் தொழுநோய் கண்டு படுத்தவரை இதே ஊர்தான் 'குஷ்டநோயாளி! இவன் ஊருக்குள் இருந்தால் எல்லாருக்கும் இவன் நோய் வந்து விடும். ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும்' என்று அன்று விரட்டியது. 

'இன்று அதே ஊர் சனங்கள் தன் மகளின் மணக்கோலம் கண்டு வெம்புகிறது. நன்றாய் வெம்பட்டும்! என் மகள் ராஜவாழ்க்கை வாழப்போகிறாள். இனி அவள் அமோகமாய் இருப்பாள்!' மனம் நிறைந்த சந்தோஷத்தோடு பாதிக்குமேல் விரல்களை இழந்திருந்த கையை அசைத்து மகளை வழியனுப்பினார். 

 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 15, 2023
ISBN9798223992905
பூ ஒன்று புயலாகிறது!

Read more from Kalaivani Chokkalingam

Related to பூ ஒன்று புயலாகிறது!

Related ebooks

Reviews for பூ ஒன்று புயலாகிறது!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூ ஒன்று புயலாகிறது! - Kalaivani Chokkalingam

    1

    தந்தையின் காலில் விழுந்து வணங்கினாள் ஆதிபராசக்தி. மணம் முடித்து கணவனுடன் புதுவாழ்வைத் தேடி புறப்படும் மகளைத் தொட்டுத் தூக்க மனமின்றி பழுதான இரு கரங்களையும் உயர்த்தி ஆசிர்வதித்தார் ரங்கன்.

    நல்லா இரும்மா! தீர்க்கசுமங்கலியாய் இரு. உன் அம்மா எப்பவும் உனக்கு துணையிருப்பாள் தந்தையின் ஆசியில் கண்கள் கலங்க எழுந்தாள் ஆதிபராசக்தி. கருவிழிகள் இரண்டும் நீரில் மிதக்க, ரங்கன் பதறினார்.

    ஏம்மா கண் கலங்குற? மொதமொறையா மாப்பிள்ளை கூட வாழப்போற வீட்டுக்குப் போகப்போற கண்கலங்கக் கூடாது. தொடைச்சுக்க!

    அப்பா! நான்... நானும் போயிட்டா நீங்க தனியா எப்படிப்பா இருப்பீங்க?

    அட என்னம்மா! காலையில தோட்டத்துக்குப் போனால் இருட்டின பிறகுதான் வீட்டுக்கு வருவேன். மூணுவேளையும் தோட்டக்காரங்க வீட்ல இருந்து சாப்பாடு வந்திடும். படுத்துக்க நம்ம குடிசை இருக்கு. இதைவிட வேறென்ன வேணும்?

    இ... இல்லப்பா! நீங்க தனியா...

    நான் என்ன குழந்தையாம்மா? என்னைப் பத்தி கவலைப்பட்டு உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே! மாப்பிள்ளை தங்கமானவரும்மா! இல்லேன்னா ஊரே ஒதுக்கி வெச்ச நம்ம வீட்ல வந்து பெண் கேட்பாரா? அவர் கடவுள்மா. அவர் மனம் கோணாம நடந்துக்க.

    சரிப்பா!

    என்னைப் பத்தி நினைச்சு வருத்தப்படாதே. மாப்பிள்ள மனசுப்படி நடந்துக்க.

    சரிப்பா!

    அப்பாவால கடிதாசி எல்லாம் எழுத முடியாதும்மா. முடிஞ்சா மாப்பிள்ளைக்கு நேரம் கிடைக்கும்போது ஒரு நடை வந்திட்டுப் போங்கம்மா

    சரிப்பா!

    அம்மாடி! இத்தன நாளா கிராமத்தில வீட்டுக்குள்ளேயே இருந்திட்ட. இப்போ நீ போகப் போறது பட்டணம். அங்கே நாலு மனுஷன் நாலு விதமாய் இருப்பாங்க. பார்த்து கவனமாய் இருந்துக்கம்மா!

    சரிப்பா!

    மாப்பிள்ளை சொல்ற வார்த்தையைக் கேட்டு நட. அந்நிய ஆட்கள்கிட்ட பேச்சுவார்த்தை அதிகம் வெச்சுக்காதே! நம்ம பேரு கெட்டுப் போயிடக்கூடாது. புரியுதா? ரங்கன் அக்கறையாய் அறிவுரைகளை அடுக்கிக் கொண்டே போக, அஸ்வத்தாமன் பேசிக் கொண்டிருந்த அலைபேசியை துண்டித்து விட்டு வந்தான்.

    போதும் மாமா! அவ என்ன பள்ளிக்கூடத்துக்குப் போற குழந்தையா?

    அவ குழந்தைதான் மாப்பிள்ளை! அறியாத வயசிலயே தாயை இழந்திட்டாள். கூடி வாழ அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி இல்லாத ஒத்தப்புள்ள. பத்து, பனிரெண்டு வயசுல இருந்தே அவதான் என்னைக் கவனிச்சுக்கிட்டா. பெத்த அப்பனா நான் அவளுக்கு எதையுமே செய்யல.

    அப்பா!

    மாப்பிள்ளை! எம் பொண்ணுக்கு என்னால எந்த சந்தோஷமும் கிடைக்கல. இப்போ தெய்வமா நீங்க கிடைச்சிருக்கீங்க. அவளைக் கண் கலங்காம... சந்தோஷமா வெச்சுக்கங்க மாப்பிள்ளை!

    இதையெல்லாம் நீங்க எனக்கு சொல்லணுமா மாமா? நானும் அம்மா, அப்பா இல்லாதவன்தான். ஒருவகையில நானும், இவளும் ஒன்னுதான். இனிமே இவ எம்பொறுப்பு. நீங்க எந்தக் கவலையும் இல்லாம இருங்க.

    ரொம்ப நன்றி மாப்பிள்ளை! புறப்படுங்க.

    சக்தி! போலாமா?

    கிளம்புறோம் மாமா!

    போயிட்டு வாங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

    அப்பா! உடம்பை பார்த்துக்கோங்கப்பா. மாத்திரையெல்லாம் வேளாவேளைக்கு போடுங்க.

    சரிம்மா! மாப்பிள்ளை கார்ல ஏறிட்டார். நீயும் ஏறும்மா!

    "சரிப்பா... தந்தையை விட்டுப் பிரியப் போகிறோம் என்ற எண்ணம் கண்ணீரை வரவழைக்க, மெலிதாய் விசும்பியபடி காரில் ஏறி கணவனருகே அமர்ந்தாள். ரங்கனின் நெஞ்சம் நிறைந்தது.

    அரைவயிற்றுக் கஞ்சிக்கே அல்லாடும் ஒரு தொழுநோயாளியின் மகளுக்கு காரில் வந்து இறங்கும் மாப்பிள்ளையா? ஆதிபராசக்தி கொடுத்து வெச்சவதான் என தெருவே கூடி நின்று வேடிக்கை பார்க்க, சற்று கர்வமாகவே புன்னகைத்தார் ரங்கன்.

    விதியின் சாபத்தால் தொழுநோய் கண்டு படுத்தவரை இதே ஊர்தான் ‘குஷ்டநோயாளி! இவன் ஊருக்குள் இருந்தால் எல்லாருக்கும் இவன் நோய் வந்து விடும். ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும்’ என்று அன்று விரட்டியது.

    ‘இன்று அதே ஊர் சனங்கள் தன் மகளின் மணக்கோலம் கண்டு வெம்புகிறது. நன்றாய் வெம்பட்டும்! என் மகள் ராஜவாழ்க்கை வாழப்போகிறாள். இனி அவள் அமோகமாய் இருப்பாள்!’ மனம் நிறைந்த சந்தோஷத்தோடு பாதிக்குமேல் விரல்களை இழந்திருந்த கையை அசைத்து மகளை வழியனுப்பினார்.

    கார் புறப்பட, ஆதிபராசக்தி தன் தந்தையின் உருவம் கண்னை விட்டு மறையும்வரை கையசைத்துக் கொண்டே வந்தாள். கார் பிரதான சாலையை அடைந்ததும் கண்களைத் துடைத்துக் கொண்டவளை ஏறிட்டான் அஸ்வத்தாமன்.

    சக்தி!

    ம்?

    நீ என்ன படிச்சிருக்கே?

    நான்... அஞ்சாங்கிளாஸ்வரைக்கும் படிச்சிருக்கேன்.

    அஞ்சுதானா? ஏன் அதுக்கு மேலே படிக்கல?

    எங்க ஊர்ல அஞ்சாங்கிளாஸ்வரைதான் இருக்கு. ஐஸ்கூலு. போகணும்னா பக்கத்து ஊருக்குத்தான் போகணும். ஆனா அப்பா உடம்பு முடியாம படுக்கையில இருந்ததால் நான் அதுக்கு மேலே படிக்கல.

    சரி போகட்டும். நாம இப்போ போறது மும்பை. அங்கே இந்த மாதிரி தமிழ் பேசுறவங்க இருக்க மாட்டாங்க. நீயோ அதிகம் படிக்காதவ. ஸோ! கூடுமானவரைக்கும் நீ வீட்டுக்குள்ளேயேதான் இருக்கணும். சரியா?

    அச்சச்சோ! அப்போ அங்கே யார்கிட்டேயும் பேச முடியாதா?

    அதான் நான் இருக்கேனே! என்கூட பேசு! என்றவாறே மனைவியை இன்னும் நெருங்கி அமர, ஆதிபராசக்தியின் முகம் நாணிச் சிவந்தது.

    அப்புறம் சக்தி! ஒருவேளை அங்கே யாரிடமாவது பேச நேர்ந்தால் கூட எம்பேரு ஆதிபராசக்தி. எம் புருஷன் பேரு அஸ்வத்தாமன்னு சொல்லவேண்டாம்.

    ஏன்?

    என்னோட பேர் அஸ்வத். அங்கே எல்லாருக்கும் அஸ்வத்துன்னு சொன்னால்தான் தெரியும். அதே மாதிரி உன் பெயரும் யாருக்கும் வாயில் நுழையாது. ஸோ! இனிமேல் நீ சக்தி. சக்தி மட்டும்தான்.

    ச...க்தி! ம். இந்த பேருகூட நல்லாத்தான் இருக்கு. தோட்டத்து வீட்டு அம்மா கூட என்னை இப்படித்தான் கூப்பிடுவாங்க.

    குட்! அப்புறம் நான் யாரு என்ன செய்யுறேன்னு யார் கேட்டாலும், யார் கேட்டாலும் நீ எதுவும் சொல்லக்கூடாது.

    ஏங்க?

    நான் ராணுவ உளவாளி!

    அப்படின்னா?"

    நம்ம நாட்டுக்காக போராடுற வீரன். ராணுவ வீரன்.

    ஆனா... நீங்க அந்தப் பச்சைக்கலர் துணியெல்லாம் போடலையே! மீசைகூட முறுக்கு மீசை இல்ல

    என்றவளை புருவம் உயர்த்திப் பார்த்தான்.

    ம். பரவாயில்லையே! இதெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்க?

    அது... நிறைய சினிமாவில பார்த்திருக்கேன்!

    நீ சொல்றமாதிரி யூனிபார்ம் போட்டிருக்கிறவங்க எல்லாம் எல்லைப்படையில வேலை செய்யுறவங்க. நாங்க ஜனங்களோட ஜனங்களாய் இருந்து தீவிரவாதிகளை நடமாடவிடாம கவனிக்கிறவங்க. நாங்க யாருன்னு யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா வேலை போயிடும்.

    ஐயோ!

    அதான் உன் அப்பாகிட்ட கூட கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலைன்னு சொன்னேன். நீயும் அப்படித்தான் சொல்லணும். புரியுதா?

    ம்.

    அப்புறம் நான், என் பிரெண்ட் நாலு பேர்! நாங்க எல்லாருமே நம்ம வீட்ல இருந்துதான் முக்கியமான வேலை எல்லாம் செய்வோம். அதையும் ராத்திரி நேரத்திலதான் செய்வோம். நீ படிக்காதவ. உனக்கு எங்க வேலை புரியாது. எங்களை தொந்தரவு செய்யக்கூடாது.

    செய்யமாட்டேன்!

    அப்புறம் அங்கே உள்ளவங்க ஹிந்திதான் பேசுவாங்க. அது உனக்குப் புரியாது. அதனால என்னைக் கேட்காமல் வெளியே போய் மாட்டிக்காதே! அப்புறம் அட்ரஸ் தெரியாம திண்டாடிடுவ.

    ம்ஹும்! தனியாய் போகவே மாட்டேன்!

    குட்! தேங்க்ஸ் சக்தி!

    எதுக்குங்க?

    எனக்கு வரப்போற பொண்ணு எப்படியெல்லாம் இருக்கணும்னு எதிர்பார்த்தேனோ அதைவிட ஒருபடி மேலயே நீ இருக்க. சந்தோஷமாய் இருக்கு.

    அப்பா உங்க மனசு கோணாமல், உங்கள் பேச்சைக் கேட்டு. நடக்கணும்னு சொல்லியிருக்காங்க!

    குட்! நல்ல மாமனார்! நல்ல பெண்டாட்டி! நான் கொடுத்து வெச்சவன்!

    இல்லங்க! நான்தான் கொடுத்து வெச்சவ!

    சக்தி?

    "எங்க அப்பாவோட

    Enjoying the preview?
    Page 1 of 1