Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூமாலையில் ஓர் மல்லிகை..!
பூமாலையில் ஓர் மல்லிகை..!
பூமாலையில் ஓர் மல்லிகை..!
Ebook283 pages1 hour

பூமாலையில் ஓர் மல்லிகை..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பலவகையான மணம் கமழ... சாம்பாரும் பொரியலும் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. உறவினர்கள் மணமக்களைச் சூழ்ந்து கொள்ள... பாஸ்கரின் கண்கள் தன் நண்பனைத் தேடின. 

தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த தந்தையை அழைத்தான். 

"அப்பா!" 

"என்னப்பா?"

"சேகர் எங்கே?"

"அவனா! உன் போன்ல போன் வந்திட்டே இருக்கு. இங்கே கூட்டமா இருக்கு. அதோட சிக்னலும் வீக்கா இருக்கு. அதனால வெளியே போய் பேசப் போயிருக்கான்." 

"அவன் வந்ததும் என்கிட்ட வரச் சொல்லுங்க."

"என்னப்பா! என்ன விஷயம்?" 

"நீங்கபாட்டுக்கு இன்னும் ரெண்டு நாள் இருந்திட்டு வான்னு சொல்லிட்டீங்க. அங்கே வேலையெல்லாம் அப்படியே கிடக்கும்." 

"அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ எந்த டென்ஷனும் இல்லாம... கூட ரெண்டு நாள் இருந்துட்டு வா." 

"வாட்? நாலு நாளா! நோ... நோ. என்னால முடியாது." 

"என்ன? புது மாப்பிள்ளை என்ன சொல்றார்?" - என்றவாறே வந்தான் ராஜசேகர். 

"டேய்! எங்கேடா போயிட்ட? போன்ல யாரு?"

"அண்ணன் தான்."

"யாரு? மதன் அண்ணனா?"

"ம்..." 

"என்ன சொன்னான்? வந்திட்டானா!" - மதுசூதனன் ஆர்வமாய்க் கேட்க... 

உதட்டைப் பிதுக்கினான் ராஜசேகர். 

"ம்ப்ச்! இல்லப்பா. புறப்படலாம்னு கிளம்பினாங்களாம். பட்! அவங்க வொய்ஃபுக்கு லீவ் கிடைக்கலையாம்..." 

"அப்போ வரலை?"

"நெக்ஸ்ட் வீக் வர்றாங்களாம்." 

"எதுக்கு? அதான் கல்யாணம் முடிஞ்சு போச்சே. இனி எதுக்கு அவ்வளவு தூரத்தில் இருந்து வரணும்? பேசாம அமெரிக்காவிலேயே இருந்துக்கச் சொல்லு..." - கடுகடுத்த தந்தையின் தோளில் கை வைத்தான் பாஸ்கர். 

"அப்பா! என்ன இது?" 

"பின்னே என்னடா? கல்யாணத்துக்கு வான்னா சீமந்தத்துக்கு வருவானா?" - தந்தையின் குரலில் கோபம் தொனித்தது. 

"அங்கே என்ன சூழ்நிலையோ?" 

"என்ன பெரிய சூழ்நிலை? கூடப் பொறந்த தம்பிக்குக் கல்யாணம். அதுக்குக் கூட வரமுடியலைன்னா அந்த வேலை எதுக்குன்றேன்?" 

சாவித்திரி மிரண்டு போய் இருவரையும் பார்த்தாள்.

"அப்பா! தப்பு நம்ம மேலயும் இருக்கு."

"என்ன? நாம என்ன தப்பு பண்ணினோம்?" 

"கல்யாணம்ன்னா ஜஸ்ட் ஒரு மாசம் முன்னாலேயே அண்ணன்கிட்ட சொல்ல வேண்டாமா? அப்பத்தானே அவன் அங்கே உள்ள ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிட்டு வர முடியும்?"

"அதுக்காக... நாம என்ன வேணும்னா சொல்லலை! திடீர்ன்னு ஊருக்கு வந்த இடத்தில் கல்யாணம் முடிவாகிப்போச்சு. உடனே போன் பண்ணிச் சொன்னேனே... இவன் வந்தா என்னவாம்?" 

ராஜசேகர் இருவரின் இடையே வந்து நின்றான். 

"அடடா! இப்ப எதுக்கு உங்களுக்குள்ள சண்டை...? அண்ணன் என்ன சொல்றாருன்னா கல்யாணம் சிம்பிளா ஊர்லதானே நடக்குது. சென்னையில ரிசப்ஷன் வைப்பீங்கள்ல? அதுக்கு வர்றேன்னு சொல்றார்." 

"அதுகூட நல்ல ஐடியாதானேப்பா? சேகர்! அப்போ நெக்ஸ்ட் வீக் ரிசப்ஷன் வைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடு. அப்புறம் நம்ம ஆபீஸ்ல..." 

"மாப்பிள்ளை... பால் பழம் சாப்பிட வாங்க. நல்ல நேரம் முடியப் போகுது!" - ஒரு பெண்மணி அழைக்க... 

ராஜசேகர் நண்பனை அழைத்துச் சென்றான். 

கூடியிருந்த பெண்கள் சாவித்திரியின் காதிற்குள் ஏதோ கிசுகிசுக்க... குப்பெனச் சிவந்தாள் சாவித்திரி. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 20, 2023
ISBN9798223818137
பூமாலையில் ஓர் மல்லிகை..!

Read more from Kalaivani Chokkalingam

Related to பூமாலையில் ஓர் மல்லிகை..!

Related ebooks

Reviews for பூமாலையில் ஓர் மல்லிகை..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூமாலையில் ஓர் மல்லிகை..! - Kalaivani Chokkalingam

    1

    கழுத்து நிறைந்த மாலைகளோடும் புத்தம் புதிதாய் ஏறியிருந்த பொன் தாலியோடும் பங்கஜத்தின் பாதங்களில் விழுந்தனர் பாஸ்கரும் சாவித்திரியும்.

    கண்கள் பனிக்க... கையில் இருந்த மலர்களைத் தூவி ஆசிர்வதித்தாள் பங்கஜம்.

    பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழணும். அந்த ஆண்டவன் உங்களுக்கு நிறைஞ்ச வாழ்வைத் தரணும்! - என்றவாறே இருவரையும் தொட்டு எழுப்பினாள்.

    மலர்ந்த புன்னகையோடு எழுந்த பாஸ்கரையும் கண்களில் துளிர்த்த நீரோடு நின்ற பேத்தியையும் மன நிறைவோடு பார்த்தாள். நெஞ்சம் நெகிழ்ந்தது. பேத்தியின் முகத்தை வருடினாள்.

    ராசாத்தி! கண்கலங்கக்கூடாது. உன் அம்மா... அப்பா ஆத்மா இப்போ குளிர்ந்திருக்கும். நீ சந்தோஷமா வாழுவ.

    பாட்டி! - சிறு கேவலுடன் பாட்டியைக் கட்டிக் கொண்டாள்.

    என்னம்மா இது... குழந்தையாட்டம்? அழக்கூடாது. பாரு! மாப்பிள்ளையோட முகமே மாறிப் போச்சு! - சாவித்திரியின் கண்களைத் துடைத்துவிட்டு... பாஸ்கரின் அருகே நிற்க வைத்தாள்.

    உள்ளே திரும்பிப் பணிப்பெண்ணை அழைத்தாள்.

    பார்வதி!

    அம்மா...

    அதை எடுத்திட்டு வாம்மா

    இதோம்மா! - என்றவாறே வந்த பார்வதியின் கையில் பத்திரத் தாள்கள் அடங்கிய கவர் இருந்தது. அதை வாங்கி இருவரின் கைகளிலும் வைத்தாள் பங்கஜம்.

    பாட்டி என்ன இது?

    இந்த அரண்மனையோட மனைப் பத்திரம்.

    இதை ஏன் எங்ககிட்ட கொடுக்குறீங்க பாட்டி? - வியப்பாய்க் கேட்டான் பாஸ்கர்.

    இது எங்க குடும்பச் சொத்துய்யா. எனக்கு ஒரே மகன். அவனும் பொண்டாட்டியோட கார்ல போகும் போது ஒரு விபத்துல போயிட்டான். எனக்குன்னு அவன் விட்டுட்டுப் போனது எம்பேத்தியை மட்டும்தான். எனக்குப் பிறகு இந்தச் சொத்து எம்பேத்திக்குத்தான். அதனால இது உங்ககிட்டயே இருக்கட்டும்.

    வேணாம் பாட்டி! நான் இதையெல்லாம் எதிர்பார்த்து உங்க பேத்தியைக் கல்யாணம் பண்ணலை. அப்பா... சொல்லுங்களேன்ப்பா! - செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த தந்தையை அழைத்தான்.

    பங்கஜம்மா! நான்தான் ஏற்கெனவே சொன்னேனே... உங்க மேலயும் உங்க குடும்பத்து மேலயும் உள்ள மரியாதையாலேயும்... கிருஷ்ணன் என்னோட நண்பன்றதாலேயும்தான் இந்தக் கல்யாணத்தை உங்க விருப்பப்படியே இங்கே வெச்சோம். மற்றபடி... இந்த வீடோ... உங்க சொத்தோ எங்களுக்கு வேண்டாம். இனி உங்க பேத்தி எங்க வீட்டுப் பொண்ணு. அவளை மட்டும் கொடுங்க போதும்.

    இல்ல மதுசூதனன்! இது எம்பேத்திக்கு நான் கொடுக்கிற தாய்வீட்டுச் சீதனம். தயவு செய்து மறுக்காதீங்க.

    வேண்டாம் பாட்டி! இது எப்பவுமே உங்க அரண்மனை. இதை எனக்குத் தந்திட்டு... ம்ஹூம்... வேண்டாம்! - காதுகளில் மின்னிய கல் ஜிமிக்கிகள் அசைய தலையாட்டி மறுத்தாள் சாவித்திரி.

    சாவிக்கண்ணு! பாட்டி இங்கேதான் இருப்பேன். நீ சென்னைக்குப் போயிடுவ. இங்கே எனக்கு ஏதாவது ஆச்சின்னா...?

    பாட்டி...!

    பதறாதேம்மா... எப்படியும் எனக்குப் பிறகு இதெல்லாம் உனக்குத்தானே! அதை இப்பவே தந்திட்டா எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.

    பாட்டி

    வாங்கிக்கம்மா. உன்கிட்ட இருந்தா பத்திரமா இருக்கும். உன்னை வெறுங்கையோட அனுப்ப எனக்கும் மனசில்லம்மா! மதுசூதனன் மருமக அரண்மனையையே சீதனமா கொண்டு வந்தாளாம்னு சொன்னா... உன் மாமனாருக்கும் பெருமைதானே? புகுந்த வீட்டுக்குப் பெருமை சேர்க்கிறது எம்பேத்தியோட கடமை இல்லையா? பாட்டி சொன்னா... அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். வாங்கிக்க ராஜாத்தி!

    சாவித்திரி அவஸ்தையாய் கணவனைப் பார்க்க... பாஸ்கர் புன்னகையோடு தலையாட்டினான்.

    வாங்கிக்க... பாட்டிதான் சொல்றாங்கள்ல?

    ம்... - மௌனமாய் தலையாட்டிக்கொண்டே வாங்கிக் கொண்டாள்.

    பங்கஜம் ஆனந்தமாய் புன்னகைத்து... பேத்தியின் நெற்றியில் முத்தமிட்டாள். கண்கலங்க பாஸ்கரை ஏறிட்டாள்.

    தம்பி! சாவித்திரி பச்சப்புள்ளய்யா... பெத்தவங்க நிழல்கூட இல்லாம வளர்ந்தவ. அவளுக்குத் தாயா தகப்பனா... நீதான்யா இருக்கணும்.

    அது என் கடமை பாட்டி!

    சாவித்திரி! மாப்பிள்ளை தங்கமானபுள்ள. அவர் மனசு நோகாம நடந்துக்க. இனிமே உனக்கு எல்லாமே இவர்தான்.

    சரி பாட்டி

    உன் மாமனாரைப் பெத்த தகப்பனா நினைச்சுக்க. ரொம்ப நல்ல மனுசன். உன் அப்பனும் அவனும் ரொம்ப நெருக்கமான சிநேகிதனுங்க. உன்னை அன்பா கவனிச்சுக்குவார்.

    "பங்கஜம்மா! நான் மட்டும்தான் இன்னிக்கே ஊருக்குக் கிளம்புறேன். புள்ளைங்க ரெண்டு நாள் தங்கிட்டுத்தான் கிளம்புவாங்க. அதனால ஊருக்குப் புறப்படும்போது உங்க பேத்திகிட்ட இதெல்லாம் சொன்னாப் போதும்.

    இப்போ இவங்களுக்குப் பால் பழம் கொடுத்திட்டு வந்தவங்களுக்கு விருந்து வைப்போம். நிறையப் பேர் கிளம்புறாங்க..." - மதுசூதனன் சொன்னதும் லேசாய் நெற்றியில் தட்டிக் கொண்டாள் பங்கஜம்.

    நான் ஒருத்தி! பேத்திக்குக் கல்யாணமான சந்தோஷத்தில் வந்தவங்களை மறந்திட்டேனே! ஏ மாரி... முத்து... பந்தியைப் போடுங்கப்பா. சீக்கிரம்.

    லட்சுமி! நீ பால் பழம் எடுத்திட்டு வா. சாவித்திரி... நீ மாப்பிள்ளையைக் கூட்டிட்டுப் போய் பூஜையறையில் இருக்கிற அம்மா அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க. அப்படியே விளக்கை ஏத்தி... சாமிகிட்ட நல்லா வேண்டிக்க.

    சரி பாட்டி

    போம்மா! சம்பந்தி... நாம மத்தவங்களைக் கவனிப்போம்... - பங்கஜம் பாதி வயது குறைந்தாற்போல் சுறுசுறுப்பாய் செயல்பட... சாவித்திரி புன்னகையுடன் கணவனுடன் பூஜை அறையை நெருங்கினாள்.

    கனமான தேக்குக் கதவு. அதில் குட்டி குட்டியாய் வெண்கல மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன.

    தோகை மயில் போல் நின்றிருந்த பித்தளைக் கைப்பிடியைப் பிடித்துக் கதவைத் திறக்க... க்ளிங்... க்ளிங்...’ என மணிகள் சப்தித்தன.

    பூஜையறைக்குள் நுழைந்ததும் ஏதோ தனி உலகத்திற்கு வந்தது போல் இருந்தது. அறை முழுக்கக் குளிர்ச்சியாய் வெகு அமைதியாய் இருந்தது.

    வெளியே நடந்த விருந்து உபசாரங்களோ ஸ்பீக்கரில் பாடிய பாடல்களோ துளியும் கேட்கவில்லை.

    மிக மெலிதான விளக்கொளி மட்டுமே ஒளியைக் கொடுத்துக் கொண்டிருக்க... சாவித்திரி பட்டுப்புடவை சரசரக்க... முன்னே சென்று அவளை விட சற்று உயரமாய் நின்று கொண்டிருந்த பித்தளைக் குத்துவிளக்கின் திரியைத் தீண்டி விட்டு ஏற்றினாள்.

    இப்போது அறை முழுக்க மஞ்சள் நிற ஒளி பரவ... பாஸ்கர் வியப்பாய் விழிகளை விரித்தான். அறையின் சுவர் முழுக்க அந்த அரண்மனையை ஆண்ட முன்னோர்களின் புகைப்படங்கள் ஓவியம் போல் வரையப்பட்டு வரிசையாய் சந்தன மாலைகளோடு தெரிய... கீழே அவர்களது பிறப்பு இறப்பு தேதிகள் தெரிந்தன.

    ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவனின் விழிகள் ஓரிடத்தில் நிலைத்தன. மற்றவற்றைக் காட்டிலும் அந்த இரு புகைப்படங்களும் சற்றுப் புதிதாய் வண்ணப் - புகைப்படமாய்த் தெரிய... அதை உற்று நோக்கினான்.

    ராஜகம்பீரத்தோடு நின்ற ஆண்... அதனருகே நெற்றியில் பெரிய குங்குமத்தோடு நின்ற பெண்மணி. அதில் சாவித்திரியின் சாயல் தெரிய... பார்வையைத் தன் மனைவியிடம் திருப்பினான்.

    சாவித்திரி அந்தப் புகைப்படத்தின் முன் நின்று மெலிதாய் விசும்பிக் கொண்டிருந்தாள்.

    சட்டென அவளை நெருங்கித் தோள் தொட்டுத் திருப்பினான்.

    சாவித்திரி!

    ம்...

    இது? இதுதான்...

    எங்க அப்பாவும் அம்மாவும்...

    ஓ! ஸாரி... என்றவன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான்.

    எனக்குக் கூட அம்மா இல்லை சாவித்திரி!

    பாட்டி சொன்னாங்க.

    பாட்டி இன்னொன்னும் சொன்னாங்களே?

    என்ன? - குழப்பமாய் நிமிர்ந்தாள்.

    நம்ம ரெண்டு பேரையும் இவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கச் சொன்னாங்களே! என்றான் புன்னகையோடு.

    அட ஆமாம். மறந்திட்டேன். வாங்க...

    ம்... என்றவாறே அவளை நெருங்கி நிற்க... இருவரும் ஒன்றாய் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

    மனதில் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது.

    பெரியவர்கள் தங்களை ஆசிர்வதிக்கின்றனரோ?

    இருவரும் எழுந்து புகைப்படத்தைத் தொட்டு வணங்கினர்.

    சாவித்திரியின் கண்கள் மீண்டும் கலங்கிவிட... பாஸ்கர் அவளது கவனத்தைத் திசைதிருப்ப எண்ணி அவளை அழைத்தான்.

    சாவித்திரி!

    என்னங்க?

    பூஜை அறைன்னு சொன்னாங்க. ஆனா இங்கே ஒரு சாமி படத்தையும் காணோமே?

    இவங்க எல்லாருமே எங்க முன்னோர்கள். இவங்கதான் எங்களுக்குக் காவல் தெய்வமா இருந்து காக்கிறாங்கன்னு பாட்டி சொல்வாங்க.

    ஓஹோ!

    அப்புறம்... இந்த லக்ஷ்மி விக்ரகம்தான் எங்க பரம்பரைக் கடவுள். இது ரொம்ப விசேஷமானது... என அவள் கைநீட்டிய திசையில்... அப்போதுதான் கவனித்தான் பாஸ்கர்.

    அறையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வெள்ளிப்பீடத்தில் மூன்றடி உயரத்தில் கையில் பொற்குடத்தோடு அமர்ந்த நிலையில் ஜொலித்துக் கொண்டிருந்தது, லட்சுமியின் திருஉருவச் சிலை.

    வாவ்! என்ன இப்படி டாலடிக்குது?

    இது ரொம்ப காஸ்ட்லியானது. இந்த அம்மனோட கிரீடத்தில் எல்லாம் விலையுயர்ந்த கற்கள்தான் பதிச்சிருக்கு. அதுவும் ஒரிஜினல். இது நம்ம குடும்பத்துக்கு ரொம்ப முக்கியமான பொக்கிஷம்.

    பாஸ்கர் லேசாய் மிரண்டான். என்ன சாவித்திரி இது? இவ்வளவு காஸ்ட்லியான சிலையை இப்படி அலட்சியமா வெளியே வெச்சிருக்கீங்க? திருடு போயிடாதா?

    ம்ஹும். இந்த வீட்ல நானும் பாட்டியும் மட்டும்தான் இந்த ரூமுக்குள்ள வருவோம். வேலைக்காரங்களோ... உறவுக்காரங்களோகூட இங்க வரமாட்டாங்க. யாருக்கும் இந்தச் சிலையைப் பற்றித் தெரியாது.

    ஆமா! இந்த ரூம்ல என்ன மாயம் இருக்கு சாவித்திரி? வெளியே இருந்து எந்த சவுண்ட்டும் கேட்கலையே?

    "ஆமாங்க! நாம சாமி கும்பிடும் போதும் தியானம் செய்யும் போதும் எந்த இடைஞ்சலும் இருக்கக்கூடாதுன்னு அப்பவே இவ்வளவு யோசிச்சிக் கட்டியிருக்காங்க. உள்ளே இருந்து என்ன பேசினாலும் வெளியே கேட்காது.

    ஜமீனோட குடும்ப விவகாரம், பண வரவு செலவு... இப்படி எது பேசுறதா இருந்தாலும் இந்த ரூம்ல வெச்சுத்தான் பேசுவாங்களாம்."

    வாவ்! சூப்பர்ப். நம்ம ஆட்களோட மூளையே மூளை. சரி! நாம இப்ப வெளியே போகலாமா?

    ம்... போகலாம்! - என்றவாறு பூஜை அறையை விட்டு வெளியே வந்ததும்... வெளியுலக இரைச்சல் காதை அடைத்தது.

    ‘திருநிறைச்செல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக...’ - என சௌந்தர்ராஜனின் குரல் ஒருபுறம் ஒலித்துக்கொண்டிருக்க... மறுபுறம் விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

    பலவகையான மணம் கமழ... சாம்பாரும் பொரியலும் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. உறவினர்கள் மணமக்களைச் சூழ்ந்து கொள்ள... பாஸ்கரின் கண்கள் தன் நண்பனைத் தேடின.

    தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த தந்தையை அழைத்தான்.

    அப்பா!

    என்னப்பா?

    சேகர் எங்கே?

    அவனா! உன் போன்ல போன் வந்திட்டே இருக்கு. இங்கே கூட்டமா இருக்கு. அதோட சிக்னலும் வீக்கா இருக்கு. அதனால வெளியே போய் பேசப் போயிருக்கான்.

    அவன் வந்ததும் என்கிட்ட வரச் சொல்லுங்க.

    என்னப்பா! என்ன விஷயம்?

    நீங்கபாட்டுக்கு இன்னும் ரெண்டு நாள் இருந்திட்டு வான்னு சொல்லிட்டீங்க. அங்கே வேலையெல்லாம் அப்படியே கிடக்கும்.

    அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ எந்த டென்ஷனும் இல்லாம... கூட ரெண்டு நாள் இருந்துட்டு வா.

    வாட்? நாலு நாளா! நோ... நோ. என்னால முடியாது.

    என்ன? புது மாப்பிள்ளை என்ன சொல்றார்? - என்றவாறே வந்தான் ராஜசேகர்.

    டேய்! எங்கேடா போயிட்ட? போன்ல யாரு?

    அண்ணன் தான்.

    யாரு? மதன் அண்ணனா?

    ம்...

    என்ன சொன்னான்? வந்திட்டானா! - மதுசூதனன் ஆர்வமாய்க் கேட்க...

    உதட்டைப் பிதுக்கினான் ராஜசேகர்.

    ம்ப்ச்! இல்லப்பா. புறப்படலாம்னு கிளம்பினாங்களாம். பட்! அவங்க வொய்ஃபுக்கு லீவ் கிடைக்கலையாம்...

    அப்போ வரலை?

    நெக்ஸ்ட் வீக் வர்றாங்களாம்.

    எதுக்கு? அதான் கல்யாணம் முடிஞ்சு போச்சே. இனி எதுக்கு அவ்வளவு தூரத்தில் இருந்து வரணும்? பேசாம அமெரிக்காவிலேயே இருந்துக்கச் சொல்லு... - கடுகடுத்த தந்தையின் தோளில் கை வைத்தான் பாஸ்கர்.

    அப்பா! என்ன இது?

    பின்னே என்னடா? கல்யாணத்துக்கு வான்னா சீமந்தத்துக்கு வருவானா? - தந்தையின் குரலில் கோபம் தொனித்தது.

    அங்கே என்ன சூழ்நிலையோ?

    என்ன பெரிய சூழ்நிலை? கூடப் பொறந்த தம்பிக்குக் கல்யாணம். அதுக்குக் கூட வரமுடியலைன்னா அந்த வேலை எதுக்குன்றேன்?

    சாவித்திரி மிரண்டு போய் இருவரையும் பார்த்தாள்.

    அப்பா! தப்பு நம்ம மேலயும் இருக்கு.

    என்ன? நாம என்ன தப்பு பண்ணினோம்?

    கல்யாணம்ன்னா ஜஸ்ட் ஒரு மாசம் முன்னாலேயே அண்ணன்கிட்ட சொல்ல வேண்டாமா? அப்பத்தானே அவன் அங்கே உள்ள ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிட்டு வர முடியும்?

    அதுக்காக... நாம என்ன வேணும்னா சொல்லலை! திடீர்ன்னு ஊருக்கு வந்த இடத்தில் கல்யாணம் முடிவாகிப்போச்சு. உடனே போன் பண்ணிச் சொன்னேனே... இவன் வந்தா என்னவாம்?

    ராஜசேகர் இருவரின் இடையே வந்து நின்றான்.

    அடடா! இப்ப எதுக்கு உங்களுக்குள்ள சண்டை...? அண்ணன் என்ன சொல்றாருன்னா கல்யாணம் சிம்பிளா ஊர்லதானே நடக்குது. சென்னையில ரிசப்ஷன் வைப்பீங்கள்ல? அதுக்கு வர்றேன்னு சொல்றார்.

    அதுகூட நல்ல ஐடியாதானேப்பா? சேகர்! அப்போ நெக்ஸ்ட் வீக் ரிசப்ஷன் வைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடு. அப்புறம் நம்ம ஆபீஸ்ல...

    மாப்பிள்ளை... பால் பழம் சாப்பிட வாங்க. நல்ல நேரம் முடியப் போகுது! - ஒரு பெண்மணி அழைக்க...

    ராஜசேகர் நண்பனை அழைத்துச் சென்றான்.

    கூடியிருந்த பெண்கள் சாவித்திரியின் காதிற்குள் ஏதோ கிசுகிசுக்க... குப்பெனச் சிவந்தாள் சாவித்திரி.

    2

    உயர்தர ரெஸ்டாரெண்டின் மேல்தளத்தில் தன் தோழியோடு அமர்ந்திருந்தாள் நீரஜா. பளபளப்பான முகத்தில் தற்சமயம் கடுகடுப்பு தெரிந்தது.

    கையிலிருந்த வெள்ளைநிற கைபேசியில் பாஸ்கரின் எண்ணை மீண்டும் மீண்டும் முயற்சித்து லைன் கிடைக்காமல் போகவே... எரிச்சலாய் தன் முன் இருந்த வட்ட வடிவ மேசையில் எறிந்தாள்.

    கண்ணாடிக் கோப்பையில் இருந்த காய்கறி சூப்பை ஸ்பூனால் பருகிக் கொண்டிருந்த வந்தனா நிமிர்ந்தாள்.

    நீரஜாவின் முகம் இன்னும் கடுகடுப்பாகவே இருக்க... புன்னகைத்தாள்.

    என்ன லைன் கிடைக்கலையா?

    ம்ப்ச்!

    ஏன்? சிக்னல் இல்லையா?

    அதெல்லாம் இருக்கு. யார்கிட்டயோ நான்-ஸ்டாப்பா பேசிட்டு இருக்கான். இடியட்! - கோபமாய் பற்களைக் கடித்தவளைப் பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்தாள் வந்தனா.

    தோழியின் சிரிப்பு இன்னும் ஆத்திரமூட்ட எரிந்து விழுந்தாள்.

    ஏய்! இப்ப ஏன் பல்லைக் காட்டுற? நான் அவஸ்தைப்படுறது உனக்குச் சிரிப்பா இருக்கா?

    இல்லப்பா! இப்ப ஏன் நீ இவ்வளவு டென்ஷனாகிற?

    பின்னே? ஒன் வீக்ல வந்திடுவேன்னுட்டு போனான். இன்னியோட டென்டேஸ் ஆச்சு. இன்னும் வரலை. சரி போன் பண்ணிக் கேட்கலாம்ன்னா லைன் கிடைக்கமாட்டேங்குது. அப்படியே கிடைச்சாலும் பிஸியாவே இருக்கான்.

    இங்கே உட்கார்ந்து இப்படி அவஸ்தைப்படுவதற்குப் பேசாம அவங்க கூடவே போயிருக்கலாமே?

    வாட்?

    அதான்... பாஸ்கரோட அப்பா உன்னைக் கூப்பிட்டாரில்ல... ஜாலியா ஒரு ட்ரிப் போயிட்டு வந்திருக்கலாமில்ல?

    போடி! வேற வேலையில்லை. போயும் போயும் அந்த ஊர்ல போய் எவளாவது ஒன் வீக் இருப்பாளா?

    என்ன நீரு இப்படிச் சொல்றே? கொடைக்கானல் போக உனக்குக் கசக்குதா?

    ஏய்! பாஸ்கியோட ஊரு ஒண்ணும் கொடைக்கானல் இல்ல...

    பின்னே?

    "அங்க இருந்து ஒரு அம்பது கிலோ மீட்டர் போகணும். ஒரு அதரப் பழமையான ஊரு. அந்த ஊரோட பேரைக்கூட நாம கேள்விப்பட்டிருக்க மாட்டோம். சுத்த போர்.

    ரெண்டு வருஷம் முன்னால போயிட்டு ரொம்பத் திண்டாடிப் போயிட்டேன். ஷாப்பிங் போக முடியாது.

    நினைச்ச நேரம் இப்படி ஹோட்டலுக்குப் போக முடியாது. அவ்வளவு ஏன்? இப்படி மாடர்னா டிரஸ் கூடப் போட முடியாது..." - சலிப்பாய் தோளைக் குலுக்கினாள்.

    இஸிட்?

    "யா! அப்படியே போட்டாலும் அங்கே உள்ள பெரிசுங்க ஆயிரம் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுதுங்க. அப்பப்பா! பெரிய டார்ச்சர். அப்பவே பாஸ்கிட்ட சொல்லிட்டேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1