Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கலைந்திடும் கனவுகள்...
கலைந்திடும் கனவுகள்...
கலைந்திடும் கனவுகள்...
Ebook146 pages53 minutes

கலைந்திடும் கனவுகள்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலைநேர சுறுசுறுப்பான மனிதர்கள் அந்த கரிசல் மண்ணில் வெற்றுப் பாதத்தோடு சாரைசாரையாய் சென்று கொண்டிருந்தனர். ஊருக்கு வெளியே வயல்காட்டைத் தாண்டி கேழ்வரகும், சோளக்காடும் சூழ்ந்திருக்க... நடுவே வீற்றிருந்தது அந்த தீப்பெட்டித் தொழிற்சாலை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தன் கந்தகநெடியை மணம் பரப்பிக் கொண்டிருந்த அந்த தொழிற்சாலை, விளாம்பட்டி கிராம மக்களின் பசியை மட்டுமல்ல... அவ்வப்போது அவர்களில் சிலர் உயிரையும் போக்கிக் கொண்டிருந்தது. 

பட்டணத்து வாழ்க்கைபோல் இங்குள்ள மக்களும் விடிந்தால் பரபரப்பாக வேலைக்கு புறப்படுபவர்கள்தான். ஆனால் இவர்களிடம் இஸ்திரி செய்யப்பட்ட கலையாத உடையோ, நறுமண திரவியங்களின் வாசனையோ, அலைபேசியின் சிணுங்கல்களோ, வாகனங்களோ கிடையாது. 

எண்ணெய் தேய்த்து இறுக பின்னலிட்ட சிகையலங்காரம், எளிய, சில சமயம் நைந்து வெளிறிய உடைகள், தூக்குப் பாத்திரங்களில் மதிய உணவு... அதிலும் கூடுமானவரை கம்பங்கஞ்சி... வெற்றுப்பாதம் என யதார்த்தமான... நடைப் பயணம். இது அவர்களது ஏழ்மையை பறைசாற்றுவதாய் தோன்றலாம். 

ஆனால் ஒவ்வொன்றும் அவர்களது தற்காப்பு சம்பந்தப்பட்டவை கூட. தகரக்கூரை பதித்த கொட்டகையில் அமர்ந்து நாள் முழுக்க தீப்பெட்டி ஒட்டுபவர்களுக்கும், வெப்பத்தில் நின்று தீக்குச்சிகளுக்கு மருந்தை தோய்ப்பவர்களுக்கும்... உடல் உஷ்ணத்தை தவிர்க்க தலையில் எண்ணெய் அவசியம். 

மருந்தும், நெருப்பும் எந்நேரமும் பற்றிக் கொள்ளக் கூடும் என்பதால்... நைலக்ஸும், ஷிபானும் உடுத்திக் கொள்ள முடியாது. நெருப்பு பட்டால் உடம்போடு ஒட்டிக் கொள்ளும் ஆடைகளை உடுத்தக் கூடாது என்பது அவர்களுக்கு இடப்படும் சட்டம் மட்டுமல்ல... அவர்களது பாதுகாப்புக்கு இந்த பருத்தி ஆடைகளே கவசம். 

வெயிலுக்கும், வெப்பத்திற்கும் ஏற்ற உணவு கம்பங்கஞ்சியும், மோரும் என்பதால் அவர்களது ஆரோக்கியம் ஒருபோதும் குறைவுபட்டதில்லை. அதன் காரணமாக விடுப்பு எடுக்கவோ, சம்பளப் பணத்தை பிடித்து விடுவார்களோ என அஞ்சவும் அவசியமில்லாமல் போய் விடும். 

இங்குள்ள மக்களுக்கு பூக்களின் மணமோ, முகத்தில் தடவும் பவுடரின் வாசனையோ அத்தனை பரிச்சயம் கிடையாது. ஆனால் எப்போதும் உடம்போடும், உடைகளோடும் ஒட்டிக் கொண்டிருக்கும் துத்தநாகமும், கந்தகமும் அவர்கள் நாசியோடு உறைந்து போனவை. என்றாலும் இவர்கள் ஒருபோதும் எதற்காகவும் முகம் சுளிப்பதும் இல்லை. கிடைக்காத பொருளை எண்ணி ஏங்குவதும் இல்லை. 

அந்த உழைக்கும் வர்க்கம் நடக்கும் ஒற்றையடிப் பாதைகூட அவர்களை எண்ணி பெருமிதம் கொள்ளும். வழக்கமாய் நடக்கும்போது உரையாடும் சலசலப்பு இன்றும் தொடரவே மவுனமாய் நடந்து வந்து கொண்டிருந்த பூங்குழலியை அசைத்தாள் வடிவழகி. 

"ஏம்புள்ள உம்முன்னு வர்ற?" 

"ம்? ஒ...ண்ணுமில்ல..." 

"சும்மா சொல்லு புள்ள. கண்ணாலம் எப்படி நடக்குமோன்னு பயப்படுறியா?" 

"இல்லல்ல..." 

"வேற என்ன?" 

"வடிவு! கல்யாணத்துக்கு ரொக்க பணம் கொஞ்சம் குறையுது."

"கொஞ்சம்னா... எவ்வளவு புள்ள?" 

"ஐயாயிரம் குறையுதாம்." 

"ஆத்தாடி! அம்புட்டு பணத்துக்கு என்ன புள்ள பண்ணப் போற? அதுவும் ரெண்டு நாள்ல கண்ணாலத்த வெச்சிக்கிட்டு?" 

"அதான் புள்ள குழப்பமா இருக்கு. அம்மா என்னன்னா... அந்த ஆந்தக்கண்ணன்கிட்ட கேட்கச் சொல்லுது. எனக்கு என்ன பண்ணன்னே தெரியல." 

"இதுக்குத்தான் மூஞ்சை இப்படி உர்ருன்னு வெச்சிட்டு இருக்கியா? சும்மா கேளு புள்ள. அவன் என்ன இனாமாவா தரப் போறான். மாசமானா நம்ம சம்பளத்தில புடிச்சுக்கப் போறான். தைரியமாக் கேளு." 

"இல்ல வடிவு! சும்மாவே எனக்கும், அவனுக்கும் ஆகாது. அவன்கிட்ட போய் கையேந்துனுமேன்னு அவமானமா இருக்கு" என்றபோது பூங்குழலியின் முகம் வருந்தியது. 

"விசனப்படாத புள்ள. இதெல்லாம் நம்ம தலையெழுத்து."

"தலையெழுத்து இல்ல வடிவு! என் அப்பன் செய்த வினை." 

"ஏன் புள்ள... இந்தத் தரமும் துட்ட திருடிட்டாரா?" 

"திருடல. ஆனா... தெண்டச் செலவை இழுத்து வெச்சிட்டாரு." 

"என்ன செய்தாரு?" 

"தாறுமாறாக் குடிச்சிட்டு முந்தா நாளு ஒரே சத்தம். வயிறு காந்துது, வயிறு காந்துதுன்னு. அம்மாவும் என்ன மருந்தெல்லாமோ குடுத்திச்சு. அவ்வளவையும் வாந்தியெடுத்திட்டாரு. செத்துப் போயிடுவேன்னு கூப்பாடு போட்டுட்டார். அர்த்தராத்திரியில் வண்டி பிடிச்சு விளாத்திகுளத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க. தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்து ஒரே நாள் ராத்திரியில ஆறாயிரம் காலி." 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223351276
கலைந்திடும் கனவுகள்...

Read more from Kalaivani Chokkalingam

Related to கலைந்திடும் கனவுகள்...

Related ebooks

Related categories

Reviews for கலைந்திடும் கனவுகள்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கலைந்திடும் கனவுகள்... - Kalaivani Chokkalingam

    1

    காலைநேர சுறுசுறுப்பான மனிதர்கள் அந்த கரிசல் மண்ணில் வெற்றுப் பாதத்தோடு சாரைசாரையாய் சென்று கொண்டிருந்தனர். ஊருக்கு வெளியே வயல்காட்டைத் தாண்டி கேழ்வரகும், சோளக்காடும் சூழ்ந்திருக்க... நடுவே வீற்றிருந்தது அந்த தீப்பெட்டித் தொழிற்சாலை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தன் கந்தகநெடியை மணம் பரப்பிக் கொண்டிருந்த அந்த தொழிற்சாலை, விளாம்பட்டி கிராம மக்களின் பசியை மட்டுமல்ல... அவ்வப்போது அவர்களில் சிலர் உயிரையும் போக்கிக் கொண்டிருந்தது.

    பட்டணத்து வாழ்க்கைபோல் இங்குள்ள மக்களும் விடிந்தால் பரபரப்பாக வேலைக்கு புறப்படுபவர்கள்தான். ஆனால் இவர்களிடம் இஸ்திரி செய்யப்பட்ட கலையாத உடையோ, நறுமண திரவியங்களின் வாசனையோ, அலைபேசியின் சிணுங்கல்களோ, வாகனங்களோ கிடையாது.

    எண்ணெய் தேய்த்து இறுக பின்னலிட்ட சிகையலங்காரம், எளிய, சில சமயம் நைந்து வெளிறிய உடைகள், தூக்குப் பாத்திரங்களில் மதிய உணவு... அதிலும் கூடுமானவரை கம்பங்கஞ்சி... வெற்றுப்பாதம் என யதார்த்தமான... நடைப் பயணம். இது அவர்களது ஏழ்மையை பறைசாற்றுவதாய் தோன்றலாம்.

    ஆனால் ஒவ்வொன்றும் அவர்களது தற்காப்பு சம்பந்தப்பட்டவை கூட. தகரக்கூரை பதித்த கொட்டகையில் அமர்ந்து நாள் முழுக்க தீப்பெட்டி ஒட்டுபவர்களுக்கும், வெப்பத்தில் நின்று தீக்குச்சிகளுக்கு மருந்தை தோய்ப்பவர்களுக்கும்... உடல் உஷ்ணத்தை தவிர்க்க தலையில் எண்ணெய் அவசியம்.

    மருந்தும், நெருப்பும் எந்நேரமும் பற்றிக் கொள்ளக் கூடும் என்பதால்... நைலக்ஸும், ஷிபானும் உடுத்திக் கொள்ள முடியாது. நெருப்பு பட்டால் உடம்போடு ஒட்டிக் கொள்ளும் ஆடைகளை உடுத்தக் கூடாது என்பது அவர்களுக்கு இடப்படும் சட்டம் மட்டுமல்ல... அவர்களது பாதுகாப்புக்கு இந்த பருத்தி ஆடைகளே கவசம்.

    வெயிலுக்கும், வெப்பத்திற்கும் ஏற்ற உணவு கம்பங்கஞ்சியும், மோரும் என்பதால் அவர்களது ஆரோக்கியம் ஒருபோதும் குறைவுபட்டதில்லை. அதன் காரணமாக விடுப்பு எடுக்கவோ, சம்பளப் பணத்தை பிடித்து விடுவார்களோ என அஞ்சவும் அவசியமில்லாமல் போய் விடும்.

    இங்குள்ள மக்களுக்கு பூக்களின் மணமோ, முகத்தில் தடவும் பவுடரின் வாசனையோ அத்தனை பரிச்சயம் கிடையாது. ஆனால் எப்போதும் உடம்போடும், உடைகளோடும் ஒட்டிக் கொண்டிருக்கும் துத்தநாகமும், கந்தகமும் அவர்கள் நாசியோடு உறைந்து போனவை. என்றாலும் இவர்கள் ஒருபோதும் எதற்காகவும் முகம் சுளிப்பதும் இல்லை. கிடைக்காத பொருளை எண்ணி ஏங்குவதும் இல்லை.

    அந்த உழைக்கும் வர்க்கம் நடக்கும் ஒற்றையடிப் பாதைகூட அவர்களை எண்ணி பெருமிதம் கொள்ளும். வழக்கமாய் நடக்கும்போது உரையாடும் சலசலப்பு இன்றும் தொடரவே மவுனமாய் நடந்து வந்து கொண்டிருந்த பூங்குழலியை அசைத்தாள் வடிவழகி.

    ஏம்புள்ள உம்முன்னு வர்ற?

    ம்? ஒ...ண்ணுமில்ல...

    சும்மா சொல்லு புள்ள. கண்ணாலம் எப்படி நடக்குமோன்னு பயப்படுறியா?

    இல்லல்ல...

    வேற என்ன?

    வடிவு! கல்யாணத்துக்கு ரொக்க பணம் கொஞ்சம் குறையுது.

    கொஞ்சம்னா... எவ்வளவு புள்ள?

    ஐயாயிரம் குறையுதாம்.

    ஆத்தாடி! அம்புட்டு பணத்துக்கு என்ன புள்ள பண்ணப் போற? அதுவும் ரெண்டு நாள்ல கண்ணாலத்த வெச்சிக்கிட்டு?

    அதான் புள்ள குழப்பமா இருக்கு. அம்மா என்னன்னா... அந்த ஆந்தக்கண்ணன்கிட்ட கேட்கச் சொல்லுது. எனக்கு என்ன பண்ணன்னே தெரியல.

    இதுக்குத்தான் மூஞ்சை இப்படி உர்ருன்னு வெச்சிட்டு இருக்கியா? சும்மா கேளு புள்ள. அவன் என்ன இனாமாவா தரப் போறான். மாசமானா நம்ம சம்பளத்தில புடிச்சுக்கப் போறான். தைரியமாக் கேளு.

    இல்ல வடிவு! சும்மாவே எனக்கும், அவனுக்கும் ஆகாது. அவன்கிட்ட போய் கையேந்துனுமேன்னு அவமானமா இருக்கு என்றபோது பூங்குழலியின் முகம் வருந்தியது.

    விசனப்படாத புள்ள. இதெல்லாம் நம்ம தலையெழுத்து.

    தலையெழுத்து இல்ல வடிவு! என் அப்பன் செய்த வினை.

    ஏன் புள்ள... இந்தத் தரமும் துட்ட திருடிட்டாரா?

    திருடல. ஆனா... தெண்டச் செலவை இழுத்து வெச்சிட்டாரு.

    என்ன செய்தாரு?

    தாறுமாறாக் குடிச்சிட்டு முந்தா நாளு ஒரே சத்தம். வயிறு காந்துது, வயிறு காந்துதுன்னு. அம்மாவும் என்ன மருந்தெல்லாமோ குடுத்திச்சு. அவ்வளவையும் வாந்தியெடுத்திட்டாரு. செத்துப் போயிடுவேன்னு கூப்பாடு போட்டுட்டார். அர்த்தராத்திரியில் வண்டி பிடிச்சு விளாத்திகுளத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க. தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்து ஒரே நாள் ராத்திரியில ஆறாயிரம் காலி.

    கல்யாணத்துக்குன்னு சேமிச்ச துட்டு வடிவு. ஒரே நாள்ல வீணாப் போச்சு. அக்கா பாவம்! இந்த தடவையும் கல்யாணம் நின்னு போயிரும்னு பயப்படுறா. இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. ரொக்கப்பணம் கைக்கு வராம மாமியாக்காரி தாலி ஏற விட மாட்டா. இப்பவே ஆயிரம் சட்டம் பேசுறா. இதுல துட்டு கம்மியா இருக்குன்னு தெரிஞ்சா பேயாட்டம் ஆடிடுவா.

    அதனால வேற யார்கிட்டயும் சொல்லல. அந்த ஆந்தைக்கண்ணன் என்ன சொல்வானோ? நாளைக் கடத்திட்டான்னா... ஐயோ... கல்யாணம் எப்படி நடக்கும்? - பூங்குழலியின் குரல் உடைந்து போக, தோழியை அணைத்துக் கொண்டாள் வடிவழகி.

    பயப்படாதே புள்ள. முண்டக்கண்ணன் கொஞ்சம் வழிவானே தவிர கல்யாணம் விசயத்தில விளையாடமாட்டான். நிலமைய சொல்லு. ரெண்டு வார்த்தை சிரிச்சுப் பேசு. உடனே பணத்தை எண்ணி தந்திடுவான்.

    என்ன? பணத்துக்காக அவன்கிட்ட நான் பல்லைக் காட்டணுமா?

    "கோபப்படாதே புள்ள. நம்மை மாதிரி அன்னாடங்காய்ச்சிக சில சமயம் மான, ரோசத்தையெல்லாம் மூட்டை கட்டி வெச்சித்தான் ஆகணும். இல்லேன்னா பொழைக்க முடியாது.

    வடிவு?

    உண்மைதானே குழலி? தீப்பெட்டிய அளக்கிற வைத்தி, மாவு அள்ளுற சாரங்கன் இந்த முண்டக்கண்ணன்னு எத்தனையோ கழுகுக நம்மைச் சுத்தி அலையுதுக. அதுகளை சமாளிக்க முடியலன்னா வீட்ல உக்கார்ந்து மோட்டு வளையை வெறிச்சிட்டு இருக்க வேண்டியதுதான். அப்புறம் வயித்துப் பாட்டுக்கு என்ன பண்றது? சொல்லு! வடிவழகியின் வார்த்தையில் இருந்த உண்மை பூங்குழலியை மௌனமாக்கியது.

    ‘வடிவு சொல்வது முழுக்க முழுக்க உண்மை. வீட்டை விட்டு வெளியே உழைக்கச் செல்லும் பெண்களுக்கு பல வழிகளில் துன்பமும், துயரமும் விரட்டத்தான் செய்கிறது. ஆனால் அவற்றிக்கு பயந்தால் பிழைப்பு என்னாவது? குடும்பத்தில் பெற்றவன் சரியில்லை என்றால் எத்தனை துயரங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது?’

    கதிரேசன் ஒரு மொடாக்குடியர். ஒருநாளில் எத்தனை நிமிடங்கள் அவர் தெளிவாய் இருப்பார் என அவர் மனைவி அஞ்சுகத்திற்கோ... அவர்களது பிள்ளைகளுக்கோ தெரியாது. தந்தை தள்ளாடாமல் நடந்து, உளறாமல் பேசிப் பார்த்து வருடக் கணக்காகிறது.

    ஊரில் இருந்த பஞ்சு மில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோதாவது வாரத்தில் ஒருநாள் சம்பள தினம் அன்று மட்டும் குடித்து விட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தான். அவர்களது நேரம் அந்த பஞ்சு மில்லும் நட்டத்தில் ஓட, அதைத் தொடர்ந்து நடத்த இயலாமல் மூடிவிட்டார் உரிமையாளர்.

    அன்றிலிருந்து வேறு வேலைக்கும் போகாமல்... மனைவி, மக்களின் உழைப்பை உறிஞ்சி, அவ்வப்போது அவர்களை அடித்து, உதைத்து தன் வயிற்றை நிறைத்துக் கொள்வார் கதிரேசன். வீட்டில் இருந்து தகப்பனின் அலம்பலைக் கண்டு கொதிப்பதை விட, இப்படி வேலைக்கு வருவது மேல் எனத் தொடங்கிய பயணம்... இதோ பதினோரு வருடமாய்த் தொடர்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளோ? - நீண்ட பெருமூச்சோடு நிமிர்த்தபோது தீப்பெட்டித் தொழிற்சாலை வாயிலை அடைந்திருந்தனர்.

    பணியைத் துவக்கும் நேரத்தை அங்குள்ள அலாரம் அறிவிக்க, பரபரப்பாய் தங்களது சாப்பாட்டு பாத்திரங்களை வழக்கமாய் வைக்கும் அறையில் வைத்து விட்டு பெரிதாய் இருந்த நடுக்கூடத்திற்குள் நுழைந்தனர்.

    வலப்பக்கப் பிரிவில் தீக்குச்சிகளை மலைபோல் குவித்து வைத்திருக்க, அவற்றை மருந்து தோய்க்க, சக்கைகளில் வரிசைப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அங்கே பிரிய, பெண்கள் குழு இடப்பக்கம் நுழைந்தனர்.

    தீப்பெட்டியின் அடிப்பாகம் செய்யும் இடம் அது. நான்கு பெண்கள் பசையைக் காய்ச்ச ஆயத்தமாய், பாதிப்பேர் பேப்பர் கட்டை எடுத்து பகிர்ந்து கொண்டனர். சில்லுக்கட்டு, அடிப்பெட்டி செய்யும் கட்டை சகிதமாய் அனைவரும் தரையில் அமர, பூங்குழலி பசை காய்ச்சும் பெண்மணியை நெருங்கினாள்.

    செல்விக்கா!

    "என்ன குழலி?’

    அக்கா! பசை, பேப்பர் எல்லாம் எடுத்து வைங்க. நான்... மானேஜரை பார்த்திட்டு வந்திடுறேன்.

    இப்பவா? என்ன விசயமாப் போற?

    கொஞ்சம் பணம் கேட்கணும்! இப்பப் போனாத்தானே பார்த்துப் பேச முடியும்? அதான்....

    சரி சரி. போய் வா! -

    Enjoying the preview?
    Page 1 of 1