Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நீயும், நானும் ஒன்று...
நீயும், நானும் ஒன்று...
நீயும், நானும் ஒன்று...
Ebook130 pages2 hours

நீயும், நானும் ஒன்று...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அண்ணனுக்குத் தகவல் சொல்லிவிட்டுப் போக வேண்டுமே. ஒரு முடிவோடு டேப்பை ஆன் பண்ணினான். சில நிமிடம் பேசிவிட்டு அதை செட் பண்ணிவிட்டு அறை விளக்கின் சுவிட்சோடு கனெக்ஷன் கொடுத்து விட்டு கதவைப் பூட்டினான். வெளியேற முயற்சிக்கையில் அவனது செல்போன் சிணுங்கியது. 

மீண்டும் கதவைத் திறந்து கட்டிலில் கிடந்த செல்லை எடுத்து திரையைப் பார்த்தான்.

அப்பா! 

பொங்கிய கண்ணீரை சமாளித்துக்கொண்டு, "அப்பா! நானே பேசணும்னு நினைச்சேம்ப்பா" என்றான் மெல்ல. 

மறுமுனையில் ராஜதுரை சற்றே பதற்றமாய் பேசினார். 

"நந்துக்கண்ணா! நீ இப்போ அண்ணன் கூடவா இருக்க. என்னப்பா? உடம்பு எதுவும் சரியில்லையா? அப்பா கிளம்பி வரட்டுமா?" 

"இல்லப்பா. சும்மா ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்திட்டுப் போகலாம்னு வந்தேம்ப்பா. இதோ கிளம்பிட்டே இருக்கேன்." 

"கிளம்பிட்டியா? இப்பத்தான் ஸ்ரீராம்கிட்ட பேசினேன். நீ இங்க வந்திருக்கிறதா சொன்னான். அதான் கொஞ்சம் பயந்துட்டேன்." 

"பயப்படுற மாதிரி ஒண்ணுமில்லப்பா. அம்மாகிட்ட போனைக் கொடுங்கப்பா. பேசணும் போல இருக்கு." 

"அடடா! அம்மாவும் அஞ்சலியும் ஹாஸ்பிடலுக்கு போனாங்கப்பா. இன்னும் வரலியே." 

"சரிப்பா... நான் கிளம்பணும். அப்புறம் பேசிக்கிறேன்." 

"நந்து உடம்பு எப்படிப்பா இருக்கு? மருந்து, மாத்திரை எல்லாம் வேளாவேளைக்கு சாப்பிடுறியா?" 

"ம்... ம்..." 

"என்னப்பா ம் கொட்டுற... மாத்திரையெல்லாம் கரெக்ட்டா சாப்பிடுப்பா. அப்பத்தான் சீக்கிரமே குணமாகும். உனக்கு குணமான பின்னாலதான் ராஜாவுக்கு வரன் பார்க்கணும்." 

"அண்ணனுக்கு பாருங்கப்பா. இனிமே என்னால எந்தப் பிரச்சினையும் வராது." 

"என்னப்பா சொல்ற?" 

"எனக்கு எல்லாம் சரியாகிடும்ப்பா. நீங்க தைரியமா அண்ணனுக்கு பொண்ணு பாருங்க." 

"சரிப்பா... நான் வந்ததும் இதைப் பத்தி பேசிக்கலாம். உடம்பைப் பார்த்துக்கோ. போனை வெச்சிடவா?" 

"சரிப்பா" என்றவாறு போனை வைத்தான் நந்தகுமாரன்.

ஒரு நீண்ட பெருமூச்சோடு அறையை மூடிவிட்டு கீழே இறங்கி கதவையும் பூட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான். 

வெற்றுக் கால்களோடு வெகுதூரம் நடந்து கடற்கரையை அடைந்தான். கடற்கரையின் சில்லிட்ட காற்று அவனை ஆரத் தழுவிக் கொண்டது. 

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கடலில் உற்சாகக் குளியல் போட்டுக் கொண்டிருக்க, கூட்டத்தை விட்டு விலகி சற்றுத் தூரமாய் நடந்து சென்றான். 

ஆள் அரவமற்ற பகுதி வந்ததும் நின்றான். அந்த இடத்தில் கடல் கூட அமைதியாகவே இருந்தது. சுற்றிலும் பாறைக் கூட்டங்கள் தெரிய, இங்கு யாரும் குளிக்கமாட்டார்கள் என்று தெரிந்து அந்த இடத்தையே தேர்ந்தெடுத்தான். 

அலைகளற்ற அந்தக் கடல் அவனை வா வா என அழைக்க, நந்தா சற்றும் தாமதியாமல் கடலுக்குள் இறங்கினான். கடலின் எல்லைக்கே சென்று விடுபவனைப் போல ஒரு நேர்பார்வையோடு அவன் செல்ல, இரண்டே நிமிடத்தில் கடல் அவனைத் தனக்குள் அழைத்து அணைத்துக் கொண்டது. 

சிப்பி பொறுக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள் தூரத்தில் தெரிந்த நந்தகுமாரனின் தலையைப் பார்த்துவிட்டு கூச்சலிட்டனர்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 20, 2023
ISBN9798215689004
நீயும், நானும் ஒன்று...

Read more from Kalaivani Chokkalingam

Related to நீயும், நானும் ஒன்று...

Related ebooks

Reviews for நீயும், நானும் ஒன்று...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நீயும், நானும் ஒன்று... - Kalaivani Chokkalingam

    1

    திருவனந்தபுரம். விருந்தினர் மாளிகையின் மூன்றாவது மாடியின் பால்கனியில் மூங்கில் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான் நந்தகுமாரன். அழகிய சிவந்த முகம் லேசாய் வாடியிருந்தது. கருகருவென சுருண்ட கேசம் வாரப்படாமல் அலட்சியமாய் கிடந்தது. காந்தக் கண்கள் துளி நீரோடு கலங்கியிருக்க, எப்போதும் குடி கொண்டிருக்கும் புன்னகையைத் தொலைத்த உதடுகள் உலர்ந்து வெடிப்போடு தெரிந்தது.

    உயர்ந்து நின்ற பாக்குமரத்தையே வெறித்துக்கொண்டிருந்த கண்களில் தேங்கியிருந்த நீர் விழட்டுமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பால்கனியின் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு கலைந்தான் நந்தகுமாரன்.

    தலைக்குக் குளித்து முடித்து தலையைத் துவட்டிக்கொண்டே வந்த ராஜகுமாரன் வியப்புடன் தம்பியை ஏறிட்டான்.

    நந்தா! இவ்வளவு சீக்கிரம் எழுந்திட்டியா? வாட் எ சர்ப்ரைஸ்!

    அண்ணனின் உற்சாகக் குரலில் வலுக்கட்டாயமாக சிரித்து விட்டு எழுந்து நின்றான் நந்தகுமாரன்.

    என்ன அண்ணா? இப்பவே குளிச்சிட்டு எங்கே கிளம்பிட்டே?

    நேத்து நைட் சாப்பிடும் போதே சொன்னேனே... மறந்துட்டியா?

    சாரிண்ணா... ஞாபகம் இல்லை.

    நம்ம மானேஜரோட பொண்ணுக்கு இன்னிக்குக் கல்யாணம். கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணிட்டு அப்படியே ஓட்டலுக்குப் போயிடுவேன்.

    ஓ... அப்போ இன்னிக்கும் என்கூட இருக்கமாட்டியா?

    தம்பியின் முகம் சோர்ந்து போனதைக் கண்டு அவனை நெருங்கினான் ராஜகுமாரன்.

    என்னாச்சு நந்தா? ஏன் முகமெல்லாம் வாடியிருக்கு. உடம்பு சரியில்லையா? என்றவன் தம்பியின் முகத்தை, கையைப் பரிவோடு தொட்டுப் பார்த்தான்.

    ம்ப்ச்... அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா.

    நைட் நீ சரியா சாப்பிடக்கூட இல்லையே. ஏன்டா... எதுவும் பிரச்சினையா? சொல்லுடா!

    அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா. நீ கல்யாணத்துக்குப் போகணுமே. கிளம்பு.

    அது இருக்கட்டும்டா. ரெண்டு நாளாவே உன் முகம் சரியில்லயே. சன்டே ஒரு நாள் தங்கவே அவ்வளவு யோசிப்பே. இப்ப வந்து நாலு நாளாகுது. அமைதியா இருக்க. சென்னைக்குப் போக வேண்டாமா? கேட்டுக்கொண்டே தன் அருகே அமர்ந்த அண்ணனை தயக்கமாய் ஏறிட்டான் நந்தகுமாரன்.

    அண்ணா...

    என்னடா... சொல்லு.

    நான்... நான் இனிமே... இங்கேயே இருந்திடவா?

    ஆச்சர்யமாய் நிமிர்ந்தான் ராஜகுமாரன். ‘தந்தை எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் வார இறுதி நாளில் வந்துவிட்டு மறுநாளே கம்பெனி வேலை என்று பறந்து விடுபவன் இப்போது ஏன் இப்படிச் சொல்கிறான்? என்ன ஆயிற்று?’

    நந்து! என்னடா சொல்றே? வியப்பாய்க் கேட்டான்.

    ஆமாண்ணா நான்... உன்கூடவே இருந்திடுறேன்.

    அப்போ... நம்ம கம்பெனியை யார் பார்த்துப்பா...?

    அது... அதை வேண்டுமானால் அப்பா பார்த்துக் கொள்ளட்டுமே...

    அப்பாவா? என்ன நந்து பேசுகிறாய். அப்பாவும் அம்மாவும் மலேசியா போய் முழுதாய் ஒரு வாரம்கூட ஆகவில்லையே. நம்ம அஞ்சலிக்கு இது ஒன்பதாம் மாதம். பிரசவம் முடிஞ்சு கொஞ்ச நாள் கூடவே இருந்து குழந்தையையும் அவளையும் கவனிச்சுக்க வேண்டாமா? அதுக்காகத்தானே போயிருக்காங்க.

    ஆமாம் இல்ல... அவங்க எப்போண்ணா வருவாங்க? நந்தகுமாரனின் குரலில் ஏமாற்றமும் இயலாமையும் தொனித்தது.

    குறைந்தபட்சம் மூணு நாலு மாசம் ஆகுமேடா.

    நா... நாலுமாசம் ஆகுமா? அப்போ... அதுவரைக்கும் கம்பெனியை யார் பார்த்துக்கிறது? நம்ம ஸ்ரீராம்கிட்ட பொறுப்பை ஒப்படைக்கலாமா?

    வெயிட் நந்து! என்னாச்சு உனக்கு? அவன் உன்னோட பி.ஏ.டா. அவன் எப்படி பொறுப்பை ஏத்துக்கிட்டு செய்வான்? அது எப்படி சரியா வரும்?

    வேற என்ன பண்ணலாம் அண்ணா?

    முதல்ல என்கிட்ட உண்மையை மட்டும் பேசு நந்து. சென்னையில் என்ன நடந்தது? கண்களில் கூர்மையோடு ராஜகுமாரன் கேட்டதும் சற்று தடுமாறினான் அவன்.

    அது... வந்து... ஒண்ணுமே நடக்கலையே.

    பொய் பேசாதே நந்து. உனக்குப் பொய் சொல்லத் தெரியாது.

    பொசுக்கென கண்ணீர் வழிந்தது.

    பதறிப் போனான் ராஜகுமாரன்.

    நந்து! என்னடா ஆச்சு. ஏன் அழறே? பதறியவனின் கைகளைப் பற்றிக் கொண்டான் நந்தகுமாரன்.

    அண்ணா! நான்... நான் ஏமாந்துட்டேண்ணா...

    நந்து! என்னடா சொல்றே?

    ஆமாண்ணா. நான் ஏமாந்திட்டேன். ரொம்ப மோசமா ஏமாந்திட்டேன். முகத்தை மூடிக்கொண்டான் நந்தகுமாரன். அவசரமாய் கைகளை விலக்கி விட்டான் ராஜகுமாரன்.

    என்னடா சொல்றே? யார்கிட்ட ஏமாந்தே... எப்படி?

    அண்ணா! நம்ம கம்பெனியில... எனத் தொடங்கியபோது வீட்டிற்குள் தொலைபேசி அடிக்கத் தொடங்கியது.

    ச்சே! இது வேற... நேரம் காலம் தெரியாம... சலித்துக்கொண்டே ராஜகுமாரன் எழுந்து வீட்டினுள் செல்ல, கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக்கொண்டே அண்ணனின் பின்னே சென்றான் நந்தகுமாரன்.

    ம்... கிளம்பிட்டு இருக்கேன். வந்திடுறேன். நீங்க கிளம்புங்க. நான் கார்ல வந்திடுறேன். ஓ.கே. என்றவாறு போனை வைத்தான்.

    யாருண்ணா?

    நம்ம ரித்தீஷ்தான். வொர்க்கர்ஸ் எல்லாரும் மேரேஜுக்கு போக புறப்பட்டுட்டாங்களாம்.

    நீ கிளம்புண்ணா. நாம அப்புறமா பேசலாம்.

    இல்ல... நீ சொல்லு... என்ன ஏமாந்தே?

    அண்ணா... அதைப் பேச நிறைய டைம் வேணும். எந்த இடையூறும் இல்லாம பேசணும். முதல்ல நீ கல்யாணத்துக்குப் போ.

    சரி, அப்போ நீயும் கிளம்பு.

    நானா?

    ஆமான்டா. உன்னைத் தனியா விட்டுட்டுப் போக எனக்கு மனசில்ல. நீயும் வா. கல்யாணத்துக்குப் போயிட்டு நாம நேரே வீட்டுக்கு வந்திடலாம். சீக்கிரம் குளிச்சிட்டுக் கிளம்பு.

    இல்லண்ணா. நான் இன்னும் ஷேவ் கூட பண்ணல. ஷேவ் பண்ணி குளிச்சிட்டுப் புறப்பட்டு வர்றதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிடும். நீ போயிட்டு வாண்ணா. நான் குளிச்சிட்டு சாப்பிட்டு வெயிட் பண்றேன்.

    நந்து! நானும் மேரேஜுக்கு போகாம இருந்துடறேனே?

    அண்ணே! பசுபதி எத்தனை வருஷமா நம்மகிட்ட மானேஜரா இருக்கார். அப்பாவும் இப்போ ஊர்ல இல்ல. நீ கண்டிப்பா போகணும். போயிட்டு வாண்ணா.

    ம். சரி... நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு... எதைப்பத்தியும் கவலைப்படாதே. நான் வந்தப்புறம் எல்லாம் பேசிக்கலாம். சரியா?

    சரிண்ணா.

    சரி, நான் கிளம்பறேன் என்றவாறு தன் அறைக்குள் நுழைந்து பத்தே நிமிடத்தில் தயாராய் வந்து நின்ற அண்ணனைப் பார்த்து விழிகளை விரித்தான் நந்தகுமாரன்.

    அண்ணா! இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க.

    சரிடா... டயமாச்சு. வரட்டுமா? தம்பியின் கன்னத்தில் லேசாய்த் தட்டிவிட்டு புறப்பட்டான் ராஜகுமாரன்.

    புன்னகையோடு வாசல் வரை வந்து அண்ணன் காரில் ஏறி கையசைக்கும் வரை நின்று வழி அனுப்பிவிட்டு, அண்ணனின் கார் கண்ணை விட்டு மறையும் வரை நின்றுகொண்டே இருந்தான் நந்தகுமாரன்.

    அதுவரை மறைந்திருந்த சோகம் மீண்டும் வந்து சூழ்ந்துகொள்ள, கதவைப் பூட்டிவிட்டு மாடிப்படியேறி தன் அறைக்குள் வந்து நுழைந்து கொண்டான். துக்கம் தொண்டையை அடைக்க, மீண்டும் விழிகளில் நீர் சுரந்தது.

    ‘பார்க்க அழகா இருக்கே. நிறைய படிச்சிருக்கே. நிறைய பணம் வெச்சிருக்க. உன்னைக் கல்யாணம் பண்ணினா கடைசிவரை சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சுத்தான் நீ கேட்டதும் சம்மதிச்சேன். அதுக்காக உன் உடம்புல இவ்வளவு பெரிய குறையை வச்சிக்கிட்டு எந்த தைரியத்துல என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலாம்.’

    ‘இதோ பார் நந்தா. உன்னோட குறை இப்பவே தெரிஞ்சதேன்னு சந்தோஷப்பட்டுக்க. ஏன்னா கல்யாணத்துக்குப் பிறகு தெரிஞ்சாலும் நான் இதே முடிவைத்தான் எடுத்திருப்பேன். கணவன் கண்கண்ட தெய்வம்னு நினைக்கிற ரகமில்லை நான். புரிஞ்சுதா? அதனால கோழை மாதிரி அழறதை விட்டுட்டு உனக்குன்னு எவளாவது நொண்டியோ, கூனோ,

    Enjoying the preview?
    Page 1 of 1