Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Enthan Vaanam
Nee Enthan Vaanam
Nee Enthan Vaanam
Ebook346 pages2 hours

Nee Enthan Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமணம் ஒரு விலங்கு என்ற எண்ணம் கொண்ட நாயகியும், திருமண பந்தத்தில் நம்பிக்கையற்ற நாயகனும், பெற்றோரின் வறுபுறுத்தலை மீற முடியாமல் ஒரு ஒப்பந்தத்துடன் திருமண பந்தத்தில் நுழைகின்றனர். அந்த ஒப்பந்தம் என்ன? நடைமுறையில் அதை செயல்படுத்த முடிந்ததா. திருமணம் பற்றிய அவர்களது எண்ணம் மாறியதா என்பது தான் கதை.

Languageதமிழ்
Release dateDec 23, 2023
ISBN6580172210508
Nee Enthan Vaanam

Read more from Premalatha Balasubramaniam

Related to Nee Enthan Vaanam

Related ebooks

Reviews for Nee Enthan Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Enthan Vaanam - Premalatha Balasubramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ எந்தன் வானம்

    Nee Enthan Vaanam

    Author:

    பிரேமலதா பாலசுப்ரமணியம்

    Premalatha Balasubramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/premalatha-balasubramaniam

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் – 1

    மாங்கல்யம் தந்துனானேன

    மம ஜீவன ஹேது நா

    கண்டே பத்நாமி ஸுபகே

    த்வம்ஜீவ சரதஸ் சதம்

    இதுக்கு அர்த்தம், மங்கல வடிவாகத் திகழும் பெண்ணே! இன்று நாம் துவங்கும் இல்லற வாழ்வு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று உறுதி அளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துணைவியாக, என் சுக துக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக!

    நியாயப் படி மணமகன்தான், மணமகளைப் பார்த்து இதைச் சொல்லி, தாலி கட்டனும். சொல்லுங்கோ... என்றபடியே ஐயர் மாங்கல்யத்தை எடுத்து தர, அந்த நேரத்தில் அவர் பேச்சை மீற மனமில்லாமல் அவர் சொன்ன மந்திரத்தைச் சொல்லி, மணப்பெண்ணுக்கு உரியவையாக கருதப்படும் எந்த வெட்கமும், படபடப்பும் கொஞ்சம் கூட இல்லாமல், முள் மேல் அமர்ந்திருப்பவள் போல் ஒரு வித அவஸ்தையுடன் அமர்ந்திருந்த பானுப்ரியாவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான் ஆகாஷ்.

    தாலி கட்டி முடித்ததும் மீதம் இருந்த சம்பிரதாயங்கள் முடிந்து, சிறிது நேரத்தில் வரவேற்பும் ஆரம்பமாகி விட, பானுப்ரியாவுக்கு எப்போது எல்லாம் முடியும், கட்டி இருக்கும் பட்டு புடவையை மாற்றி சௌகரியமான உடை அணிவோம் என்று இருந்தது.

    வந்திருந்த நண்பர்களும், உறவினர்களும் வாழ்த்து சொல்லி பரிசு அளிக்க, இன்முகத்தோடு பெற்றுக் கொண்டாலும், மணமக்கள் இருவர் மனதிலும், புது மணமக்களுக்கே உரித்தான எந்த மகிழ்ச்சியும், ஆர்வமும், இனிய படபடப்பும் இல்லை!

    இதே நாளில், முந்தைய முகூர்த்ததில் கணவன் மனைவியான ஆனந்த்-பானுரேகா தம்பதியினர், இவர்கள் இருவருக்கும் நேர் எதிரான மனநிலையில் இருந்தனர்.

    அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலிக்க, ஒருவரை ஒருவர் பார்வையால் வருடியபடி, கைகளை இணைத்து கொண்டு அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க, ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், எல்லாம் இதுகளால் வந்தது! என்ற எரிச்சலும் கூடவே வந்தது, பானுப்ரியாவுக்கு மட்டுமல்ல! ஆகாஷுக்கும்தான்!

    பானுரேகா, பானுப்ரியாவின் தமக்கை! தமக்கை என்றால் வயதில் மூத்தவள் என்றில்லை! நிமிட அளவில் மூத்தவள்! அவளுடைய இரட்டை!

    ஆனந்த், ஆகாஷின் அண்ணன்.

    தென்னை மரத்தில் தேள் கொட்டினத்துக்கு, பனை மரத்தில் நெறி கட்டிச்சாம்!

    எரிச்சலை மறைத்துக் கொண்டு பானுப்ரியா முணுமுணுக்க, ஆகாஷ் ஆச்சரியமாக, கொஞ்ச நேரம் முன்பு தன் மனைவியானவளைத் திரும்பி பார்த்தான்.

    என்ன ஆச்சு? கோபமா இருக்கியா?

    ஆகாஷ் கேட்டதும், ப்ரியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. யாராவது பார்ப்பார்கள் என்று முகத்தில் எரிச்சலைக் கூட வெளியே காட்டவில்லையே அவள்! இவன் எப்படி அவள் கோபமாக இருக்கிறாள் என்று கண்டு பிடித்தான்?

    அவளது ஆச்சரியமான பார்வைக்கு பதிலாக, பழமொழி சொல்றியே. அதான் கேட்டேன்! என்றான் அவன் புன்னகையுடன்!

    யூ மீன்... கோபமா இருக்கும்போது நான் பழமொழி சொல்வேனா? அப்படி இல்லையே! அடிக்கடி சொல்வேனே!

    ப்ரியா சொன்னதும், புன்னகை விரிய, யெஸ்! அதைத்தான் நானும் சொன்னேன்! என்றவனது கண்கள் சிரிப்பில் பளபளத்தது.

    ஒ! எனக்கு அடிக்கடி கோபம் வரும் என்று சொல்றியாக்கும்! என்று கோபத்துடன் சொன்னவள், ப்ச்... நீ சொல்றது சரிதான்! இப்போ எல்லாம் எனக்கு அடிக்கடி கோபம் வருது! என்று தனக்குதானே சலித்துக் கொண்டாள்.

    தான் அப்படி சொன்னதற்கு காய்ச்சி எடுக்க போகிறாள் என்று அவன் நினைத்திருக்க, அவளது சலிப்பு அவனுக்கு ஆச்சரியம் அளித்தது.

    அதே ஆச்சரியத்துடன் அவன் அவளை நோக்க, ஆனா, முன்னாடி இப்படி இல்ல தெரியுமா? எதுக்கும் அவ்வளவு ஈசியா கவலைப் பட மாட்டேன்! இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சதில் இருந்துதான் எரிச்சல், கோபம் என்று எப்ப பாரு டென்ஷன் ஆகறேன்! அதை வெளியில வேற காட்ட முடியலையா? அது இன்னும் கொடுமையா இருக்கு! என்று ஆதங்கப் பட்டவளின் முகத்தில் மீண்டும் எரிச்சல் படர்ந்தது.

    ப்ரியா, முகத்தை சரியா வைச்சுக்கோ. யாரோ வராங்க பாரு! என்று ஆகாஷ் சொல்ல, பானுப்ரியாவுக்கு எரிச்சல் அதிகமாகியது.

    ‘இதுதான்! யாரும் இப்படி எல்லாம் அதிகாரம் செய்யக் கூடாது என்றுதானே திருமணமே வேண்டாம் என்று நினைத்தேன்!’ என்று நினைக்கும்போதே, ஆகாஷ் அதிகாரமாக சொல்லவில்லை என்று அவளது நியாய மனம் அறிவுறுத்த, தானாக அவள் முகம் சரியானது.

    பக்கத்தில் வந்த அவளது தூரத்து உறவான அத்தை, ஹப்பா... இப்பவாவது கல்யாணமே வேண்டாம் என்று பினாத்தி கொண்டிருந்ததை விட்டுட்டு கல்யாணம் செஞ்சுகிட்டியே! சந்தோஷம்டி! சீக்கிரமே குழந்தை பெத்து சந்தோஷமா இரு! என்று வாழ்த்தியபடி பரிசுப் பொருளைக் கொடுக்க, உள்ளுக்குள் எரிச்சல் பட்டாலும், வெளியே சிரிப்புடன் பரிசை வாங்கிக் கொண்டவள் முகம், அவர் நகர்ந்ததும் எரிச்சலைப் பூசிக் கொள்ள, லேசாக புன்னகைத்த ஆகாஷ்,

    லீவ் இட், ப்ரியா. இன்னைக்கு ஒரு நாள் இப்படித்தான் இருக்கும்! அதுக்காக எரிச்சல் பட ஆரம்பிச்சால், நாள் முழுக்க அப்படித்தான் இருக்க வேண்டி இருக்கும்! டேக் இட் ஈசி! என,

    யூ ஆர் ரைட்! என்ற பானுப்ரியா, இந்த கூத்தெல்லாம் எப்போ முடியும் ஆகாஷ்? எனக்கு ட்ரஸ் சேஞ் செய்யணும் போல இருக்கு! என்றாள்.

    அவள் ஆகாஷிடம் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அருகில் வந்த பானுப்ரியாவின் அன்னை வசந்தி, பானு! இப்படி எல்லாம் பேசக் கூடாது! இப்போதைக்கு பட்டு புடவையை எல்லாம் மாற்றக் கூடாது! சம்மந்தி வீட்டுக்கு போகணும், அப்புறம் நம்ம வீட்டுக்கு வரணும்! அப்புறம் வேணும்னா, சிம்பிளா வேற பட்டு புடவை கட்டிக்கலாம்! என்று மெல்லியக் குரலில் சொல்ல, பானுப்ரியாவுக்கோ, கடவுளே! மறுபடியும் பட்டு புடவையா! என்று எரிச்சல் அதிகமானது.

    அம்மா, இதெல்லாம் அநியாயம்... என்று ஆரம்பித்த மகளிடம், ப்ச்... நல்ல நாள் அதுவுமா இப்படி எல்லாம் பேசக் கூடாது! நம்ம ரேகாவைப் பாரு, எவ்வளவு சந்தோஷமா சிரிச்ச முகத்தோடு உட்கார்ந்திருக்கா. இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை உர்ருன்னு வைச்சுக்காமல், கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு! என்று மேலும் மெல்லிய குரலில் மகளை அதட்டி விட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தார் வசந்தி.

    இதற்கு மேல் நின்றால், மகளின் சுயரூபத்தை பார்க்க வேண்டி இருக்குமே என்ற பயம் அவருக்கு! பானுப்ரியாவிடம் இவ்வளவு பேசியதே அதிகப் படி! இதுவே வீட்டில் என்றால், ஒரு வார்த்தைக்கு பத்து வார்த்தை சொல்லி, பெண் தன் வாயை அடைத்திருப்பாள் என்பதை அவர் அறியாதவரா என்ன?

    ச்சே! என்று திரும்பிய பானுப்ரியாவின் கண்களில் ஆகாஷின் புன்னகை பட, என்ன? என்ன சிரிப்பு? என்று அதட்டினாள்.

    உங்க அம்மா சொல்லிட்டு போனதை நினைச்சேன்! சிரிச்சேன்!

    அவனும் தயங்காமல் விடை சொல்ல, தன்னை இஞ்சி தின்ற குரங்கு என்று அன்னை சொல்லிச் சென்றதை சொல்கிறான் என்பதை உணர்ந்தவள், கொழுப்பா? என்று அவனை முறைக்க,

    உனக்கு மட்டும் கொழுப்புக்கு குறைச்சலா என்ன? என் போட்டோவை பார்த்துட்டு என்ன சொன்னே? ஆடு திருடினவன் மாதிரி முழிச்சிட்டு நிக்கிறேன்னு சொன்னே இல்ல? என்று ஆகாஷ் பழையதைக் கிளற,

    சரி விடு ஆகாஷ். எல்லாரும் நம்மையே பார்க்கிறாங்க! என்று பானுப்ரியா அந்தப் பேச்சை முடிக்க முயல, ஆகாஷின் புன்னகை விரிந்தது. ப்ரியாவுக்கும் தான் அவனை அந்த மாதிரி சொன்ன அந்த தருணத்தைப் பற்றிய நினைப்பில், அவளையும் அறியாமல் முறுவல் மலர்ந்தது.

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்ள, அவர்களது மனம் பின்னோக்கி நகர்ந்தது.

    கொஞ்ச தூரம் போன பிறகு, இருவரையும் திரும்பி பார்த்த வசந்திக்கு, அவர்கள் முகத்தில் இருந்த முறுவல் நிம்மதியைத் தந்தது.

    மன நிறைவுடன் மகளையும் மருமகனையும் பார்த்துக் கொண்டு நின்ற வசந்தியின் அருகில் வந்த முத்துக்குமரன், என்ன வசு, வைச்ச கண் வாங்காமல் உன் சின்ன பெண்ணையும், மாப்பிள்ளையையும் பார்த்துட்டு இருக்கே? என்றார். அவரது குரலிலுமே உற்சாகம் பொங்கி வழிந்தது.

    எவ்வளவு அழகா இருக்கில்ல ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம்! என்று பெருமிதத்துடன் சொன்ன வசந்தி, கடவுள் புண்ணியத்தில் ரெண்டு பேரும் ஒற்றுமையா, நல்லா இருக்கணும்! என்று பிரார்த்தனை செய்ய, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய தாங்கள் போராடியது அவரது மனதில் நிழலாடியது.

    ***

    முத்துகுமரன் வசந்தி தம்பதியினரின் சீமந்த புத்திரிகள் பானுரேகாவும், பானுப்ரியாவும்! இரட்டைப் பிறவிகள்!

    பிறப்பில்தான் இருவரும் இரட்டைப் பிறவிகளே தவிர, உருவத்திலும் குணத்திலும் இருவருக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இருக்காது.

    பானுரேகா கடைந்த வெண்ணையின் நிறம் என்றால், பானுப்ரியா மாநிறத்தவள்.

    பெரியவளுக்கு இடையைத் தாண்டி கூந்தல் நீளும். சின்னவளோ, ‘இதுதான் எனக்கு வசதி’ என்று தனது நீண்ட கூந்தலை தோள் வரை வெட்டி வைத்துக் கொண்டிருப்பவள்.

    பானுரேகா இயல்பிலேயே அமைதியான சுபாவம் படைத்தவள் என்றால், பானுப்ரியா தைரியமான பெண்.

    மூத்தவள் தனக்கு வேண்டியதைக் கூட வாய் விட்டு கேட்கவே யோசிக்கிறவள் என்றால், இளையவளோ ‘நமக்கு தேவையானதை நாம்தானே கேட்டு பெற வேண்டும்!’ என்ற எண்ணம் கொண்டவள்.

    தமக்கை பாட்டு வகுப்புக்கு சென்றபோது, தங்கை கராத்தே வகுப்பு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்து அதில் சேர்ந்தாள்.

    தந்தையின் விருப்பப்படி பானுரேகா, பொறியியல் எடுத்து படித்து, அதற்கேற்ற வேலைக்கு செல்ல, பானுப்ரியாவோ, அப்பாவின் எதிர்ப்பையும் மீறி ஜர்னலிசம் படித்து, ஒரு பிரபலமான பத்திரிகையில், நிருபராக(Investigative Journalist) பணிக்கு சேர்ந்தாள்.

    என்னதான் சகோதரிகளுக்குள் எண்ணம் ஓட்டத்திலும் செயல்களிலும் வேற்றுமைகள் இருந்தாலும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தில் மட்டும் ஒற்றுமையாக இருந்தனர்.

    பானுரேகாவுக்கு ஒரு சின்ன துன்பம் என்றாலும், பானுப்ரியா துடித்து போவாள். அதே போலத்தான் பானுரேகாவுக்கும்!

    பானுரேகா, எந்த விஷயத்திலும் பெற்றோர் சொல்படி நடக்க, பானுப்ரியாவுக்கென்று தனிப்பட்ட கொள்கைகள் இருந்தன.

    பானுப்ரியாவின் கொள்கைகளில் முதன்மையானது, பெண் என்பவள் சுதந்திரமானவளாக, யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்பது!

    இந்த அப்பா எப்ப பாரு, உங்களை அதட்டிட்டு இருக்கிறதை பார்க்கவே எனக்கு எரிச்சலா இருக்கும்மா! அவர் ஸ்கூல் ஹெட் மாஸ்டர்தான். இல்லை என்று சொல்லலை. அதுக்காக ‘தண்ணீர் எடுத்துட்டு வா’ என்பதைக் கூட ‘பெஞ்சில் ஏறி நில்லு’ என்று அதட்டற தொனியில்தான் சொல்லனுமா? என்று அன்னை வசந்தியிடம் அவள் குறை படுவதுண்டு.

    போடி லூசு! பார்க்கத்தான் முரடே தவிர, குழந்தை மாதிரி மனசு அவருக்கு! வெண்ணையா பேச தெரியாதே தவிர, அவருக்கு என் மேல் எவ்வளவு அன்புன்னு எனக்குதான்டி தெரியும்!

    வசந்தி பெருமிதமாக சொல்லும்போது, பானுப்ரியாவுக்கு எரிச்சலாக இருக்கும்.

    என்ன அன்போ? அப்பா முத்துக்குமரன் அம்மா வசந்தியிடம் அமைதியாகவோ, பொறுமையாகவோ பேசி பானுப்ரியா பார்த்ததில்லை. எப்போதும் அதட்டல்தான்! பானுப்ரியா அவரை ‘அதட்டல் மன்னன்’ என்றுதான் கிண்டலாக குறிப்பிடுவாள்.

    அதற்கும் வசந்தியிடம் ஒரு பதில் இருக்கும்.அடிக்கிற கைதான் அணைக்கும்! என்று தொடங்கி, வசந்தி கணவரின் புகழ் பாட ஆரம்பித்து விடுவார்.

    அம்மா, பூமாதேவி! நான் உங்க அருமை வீட்டுக்காரரை பத்தி எதுவும் சொல்லலை. ஆளை விடுங்க! என்று பானுப்ரியா அலுத்துக் கொண்டே நகர்ந்து விடுவாள்.

    முத்துக்குமரனின் பேச்சுக்கு அவரது மனைவியும், மூத்த மகள் பானுரேகாவும் மறு பேச்சு பேசாமல் அடங்கி போக, பானுப்ரியாதான் அவரை எதிர்த்து பேசும் ஒரே ஜீவன்.

    என்ன கோபம் வந்தாலும், முத்துகுமரன் அதை தன் பெண்களிடம் நேரிடையாக காட்ட மாட்டார். மனைவிதான் அவரது வடிகால்!

    இங்கே பாருங்கம்மா... என் மேல் கோபம்னா அவரை என்கிட்ட காட்ட சொல்லுங்க. என்னமோ உங்ககிட்ட கோபம் காண்பிக்க மொத்தமா லைசன்ஸ் எடுத்த மாதிரி எதுக்கு எல்லாத்துக்கும் உங்ககிட்டே வள்ளுன்னு விழறாரு! என்று பானுப்ரியா அதற்கும் கொடி பிடிப்பாள்.

    வாயில ஒன்னு போடுவேன்! அப்பாவை அப்படி எல்லாம் பேசக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்! என்று வசந்தி அதற்கும் அவளைத்தான் திட்டுவார்.

    அவரைச் சொல்லி குற்றமில்லை! உங்களைச் சொல்லனும்! என்ற எரிச்சலோடு முணுமுணுக்கும் பானுப்ரியாவுக்கு, தான் திருமணம் எனும் சிறைக்குள் மட்டும் சிக்கி கொள்ளவே கூடாது என்ற எண்ணம் உள்ளுக்குள் வேரூன்றி இருந்தது.

    அதை அவ்வப்போது அவள் வெளிப்படுத்தும்போதேல்லாம், வயசு பொண்ணு அப்படி எல்லாம் உளறிட்டு இருக்காதே! அன்றைக்கு அப்படித்தான் உங்க அப்பாவோட ஒன்னு விட்ட தங்கை வீட்டு கல்யாணத்தில் ஏதோ உளறிட்டு இருந்தே. கேட்கிறவங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியலை! இனிமேல் கல்யாணம் செய்ய மாட்டேன் என்று சொல்லிப் பாரு! என்று வசந்தி அதட்டும்போதேல்லாம்,

    மேடம் பூமாதேவி! என்கிட்டே காட்டுற அதட்டலை எல்லாம் மிஸ்டர்.அதட்டல் மன்னன் கிட்ட கொஞ்சமாவவது காட்டுங்க! என்று பானுப்ரியா, அவரது மிரட்டலை எல்லாம் காற்றில் விட்டு விடுவது வழக்கம்.

    ஆமாம்...நான் அதட்டி நீ பயந்துட்டாலும்! என்று வசந்தி அலுத்துக் கொள்வார்.

    தெரியுதுல்ல? அப்புறம் எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் செய்யறீங்க? என்று அவரது கன்னம் பிடித்து ஆட்டி முத்தமிடுவாள் அவள்.

    விடுடி! இன்னும் சின்ன குழந்தை மாதிரியே! வெட்கத்துடன் வசந்தி சொல்லும்போது,

    ஏன்... நான் கொஞ்ச கூடாதா? மிஸ்டர்.ஏ.எம்க்கு மட்டும்தான் அந்த உரிமையா? என்று வம்பிழுத்து விட்டு,

    எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்! மிஸ்டர்.ஏ.எம்’க்கு, கொஞ்ச கூட தெரியுமான்னு! என்று அவள் மேலும் கேலியில் இறங்கும்போது, வசந்தியின் முகம் வெட்கத்தில் சிவந்து போகும்.

    ஹய்யோ! என்னமா வெட்கப்படறீங்க மா? இதெல்லாம் எனக்கு சுட்டு போட்டு போட்டாலும் வராது! என்று பானுப்ரியா மேலும் அவரை வெட்கப்பட வைத்தாலும்,

    வாயை மூடுடி, அம்மாகிட்ட பேசற பேச்சை பாரு! என்று வசந்தி அதட்டவும் மறக்க மாட்டார்.

    இப்படி, ப்ரியா வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் கலகலத்துக் கொண்டே இருக்கும்போது, அவளுக்கு எதிர் மாறாக அமைதியாக இருக்கும் ரேகா, வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்பதே தெரியாது.

    ரேகா... அப்ப அப்போ, வாயைத் திறந்து கொஞ்சம் பேசும்மா. இல்லைன்னா மத்தவங்களுக்கு உனக்கு வாய் பேச வராதோ என்று சந்தேகம் வந்து விடும்! என்று அவள் தமக்கையை வம்பிழுக்கும்போது,

    அவளுக்கும் சேர்த்து நீதான் பேசறியே! எனும் வசந்தி,

    ரெண்டு பேரையும் ஒரே மாதிரிதான் வளர்த்தேன்! அதெப்படிதான் இப்படி சம்மந்தமே இல்லாமல் இருக்கீங்களோ? என்று அதிசயிப்பார்.

    நாங்க எல்லாம், யூனிக் பெர்சனாலிட்டிம்மா! என்று தான் அணிந்திருக்கும், சட்டையின் காலரைத் தூக்கி கொண்டு பெருமிதமாக சொல்வாள் பானுப்ரியா.

    அப்பப்போ நாங்க நாங்க என்று சொல்றயே பானு, அந்த மத்தவங்கல்லாம் யாரு? என்று வசந்தி கேலியாக வினவினால்,

    என் கூட சேர்ந்து உங்களுக்கும் வாய் பெரிசா போச்சு! என்று அவளும் அன்னையை வம்பிழுப்பாள்.

    இதை எல்லாம் ஒரு புன்னகையோடு பார்த்து கொண்டிருப்பதுதான் ரேகாவின் வழக்கம்.

    பாரு, இன்னைக்கு கோவிலில் விசேஷம்! கோவிலுக்கு போக ரேகா புடவை எல்லாம் கட்டி ரெடியா இருக்கா. நீ பாரு, இன்னும் இந்த ஆம்பளை புள்ளைங்க போடற பேன்ட் சட்டையை மாட்டிகிட்டு வாயடிச்சிட்டு இருக்கே! போ... போய் புடவை கட்டிட்டு வா கோவிலுக்கு போயிட்டு வரலாம்!

    அன்னை அழைத்தால், ஏன்? இந்த ட்ரஸ் போட்டுட்டு வந்தால், சாமி கண்ணை குத்திடுவாரா என்ன? இந்த ட்ரஸ்லதான் வருவேன்! என்று பானுவும் தன் பிடியில் நிற்பாள்.

    நீ எப்போ சொன்ன பேச்சை கேட்டிருக்கே! முகமாவது கழுவிட்டு வா! என்று வசந்திதான் விட்டு கொடுக்க வேண்டியதாயிருக்கும்.

    பானுரேகா, அம்மாவிடம் விதம் விதமாக சமைக்க கற்றுக் கொள்ளும்போது, பானுப்ரியா, நெட்டை விட்டுக்கொண்டு சாப்பிடுவதோடு சரி!

    பானு...கொஞ்சமாவது சமைக்க கத்துக்கோடா. இப்போ பரவாயில்லை! கல்யாணத்துக்கு பின்னாடி உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்! என்று வசந்தி சொல்லும்போது,

    கவலையை விடுங்க மாம்! நான்தான் கல்யாணமே செஞ்சுக்க போறதில்லையே! எப்போவும் உங்க கை சாப்பாட்டைத்தான் சாப்பிட போறேன்! சோ, டோன்ட் வொர்ரி! என்று அவரைக் கவலையில் ஆழ்த்துவதோடு,

    அத்தோட, எனக்கு தேவை என்று தோணும்போது நான் கத்துக்குவேன்! அதை விட்டு விட்டு பொண்ணுங்கன்னா சமையல் கத்துகிட்டுதான் ஆகணும் என்று பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசிட்டு இருக்காதீங்க! என்று அவரையே, அவர் சொல்வது தவறோ என்று நினைக்கும்படி செய்து விடுவாள்.

    ஆனால், இதெற்கெல்லாம் அசைந்து கொடுத்து விட்டால் அவர் ப்ரியாவின் அன்னை அல்லவே!

    சும்மா சும்மா கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன் என்று அச்சானியமா பேசாதே பானு! என்று அதட்டி விட்டு,

    ஏன்டி... நீ மட்டும் சமைக்க கத்துக்க மாட்டே! ஆனால், நான் மட்டும் எப்ப பாரு உனக்கு சமைச்சு கொட்டனுமா? என்று செல்ல கோபம் கொள்வார்.

    யூ ஆர் ரைட் மா! எப்ப பாரு நீங்களே எதுக்கு சமைக்கணும்? நாம ரெண்டு பேரும் ஏ.எம். சாரை சமைக்க வைச்சு சாப்பிடுவோம்! எப்படி என்னோட ஐடியா? என்று கண்ணை உருட்டி பானுப்ரியா சொல்லும் அழகில், ரேகா வாய் விட்டு நகைப்பாள்.

    வாயாடி... என் புருஷன் எதுக்குடி சமைக்கணும்? நீ வேணா கல்யாணம் செஞ்சுகிட்டு, உன் புருஷனை சமைச்சு போட சொல்லு!

    அன்னை மீண்டும் திருமணத்திலே வந்து நிறுத்த, ஹப்பா! உங்க வீட்டுக்காரரை ஒன்னு சொல்லிட கூடாதே! என்று மகளும் கழுத்தை நொடிப்பாள்.

    பானு என்னதான் முத்துக்குமரனை அதட்டல் மன்னன் என்று வர்ணித்தாலும், தன் மகள்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் அவர். அதை வார்த்தைகளால் வெளிக்காட்ட மாட்டாரே தவிர, பெண்களுக்கு ஒன்று தேவை என்றால், எப்படியும் செய்து முடித்து விடுவார்.

    தன் பேச்சை மீறி படிப்பு, வேலை என்று இளைய மகள் நடந்து கொண்டாலும், அவள் தைரியசாலியாக இருப்பதில் அவருக்கு எப்போதுமே சந்தோஷம்தான். என்ன, அதை வெளிக்காட்டிக் கொள்வதில் அவருக்கு தயக்கம்.

    பெண்கள் படிப்பை முடித்ததும், திருமணத்துக்கு பார்க்கலாம் என்று வசந்தி சொன்ன போது கூட, பெண் குழந்தைகள் வெளியுலகத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இரண்டு வருடங்களாவது வேலைக்கு போக வேண்டும் என்று மனைவியிடம் அறிவுறுத்தியவர்.

    பெண்கள் இருவரும் சம வயதினர் என்பதால், இருவருக்கும் ஒரே நேரத்தில், திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்பது கணவன்-மனைவி இருவருக்கும் பொதுவான ஆசையாக இருந்தது.

    முத்துக்குமரனுக்கு, மூத்த மகளுக்கு வரன் தேடுவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று அசைக்க முடியாத நம்பிக்கை. நல்ல குடும்பம், நல்ல பையன் என்று பார்த்து தேர்ந்தெடுத்து விட்டு, இதுதான் மாப்பிள்ளை என்றால், அவள் ஒத்துக் கொள்வாள். அவளது அமைதியான சுபாவத்துக்கு, அவளை நல்ல படியாக வைத்து கொள்ளும் வரன் கிடைத்தால் போதும்.

    ஆனால், இளையவளுக்கு ஏற்ற வரன் தேடுவதுதான், அவருக்கு சவாலாக இருந்தது. சும்மாவே திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பவள். அப்படி சொல்லிக் கொண்டிருப்பதால், அப்படியே விட்டு விட முடியுமா என்ன?

    அவளே ஏற்றுக் கொள்ளும் வண்ணம் ஒரு மாப்பிள்ளையைக் கண்டு பிடிக்க வேண்டும். நல்ல குடும்பம், நல்ல பையனாக இருந்தால் மட்டும் போதாது. அவளது சுதந்திர சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு அவளை மதித்து நடக்கும் ஒரு வரன் கிடைத்தால்தான், அவளிடம் திருமணம் பற்றி பேசவே முடியும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும்.

    ஒரு வருடமாக தொடர்ந்து நடத்திய வரன் வேட்டையில், இரு வரன்கள் தங்கள் மகள்களுக்கு ஏற்ற வண்ணம் இருக்கிறது என்று முத்துக்குமரனும், வசந்தியுமாக ஏக மனதுடன் முடிவு செய்து, மகள்களிடம் அதைப் பற்றி பேசும்போதுதான் பிரச்சனை எழுந்தது.

    பிரச்சனை எழுந்தது பானுப்ரியாவிடம் இருந்து அல்ல! சற்றும் எதிர்பாராத விதமாக பானுரேகாவிடம் இருந்து!

    நான் ஒருத்தரை விரும்பறேன்! கல்யாணம் செஞ்சுகிட்டால், அவரைத்தான் செஞ்சுப்பேன்!

    குடும்பத்தினர், அதுவரை அவளிடம் அறிந்திராத ஒரு அழுத்தத்துடன், பானுரேகா தன் காதலைச் சொன்ன போது, முத்துக்குமரனும் வசந்தியும் மட்டுமல்லாது, எதற்கும் அதிகம் அலட்டிக் கொள்ளாத பானுப்ரியாவே அதிர்ந்துதான் போனாள்.

    அத்தியாயம் – 2

    ரேகா தன் காதலைச் சொன்னதை நம்பக் கூட முடியாமல், முத்துக்குமரன் திகைத்து போய் அமர்ந்து விட, வசந்திக்கு என்ன சொல்வது என்ன செய்வதென்றே புரியவில்லை.

    முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்டது, பானுப்ரியாதான்!

    அதிர்ந்து போயிருந்த பெற்றோரை விடவும், அழுத்தமாக சொல்லி விட்டாலும், கண்களில் பயத்துடன் நின்று கொண்டிருந்த ரேகாவைப் பார்க்க பாவமாக இருக்க, தமக்கையை அவளது அறைக்குள் தள்ளிக் கொண்டு போனவள், ரேகா... நீ சொன்னது உண்மையிலேயே உண்மைதானா? என்று விசாரித்தாள்.

    இதில யாராவது பொய் சொல்லுவாங்களா? மெல்லியக் குரலில் ரேகா பதில் அளிக்க,

    என்னால நம்பவே முடியலை ரேகா! ஆள் யாரு? என்ன செய்யறாரு? எப்போ பார்த்தே? யாரு முதல்ல லவ் சொன்னது? என்று ப்ரியா கேள்விகளை அடுக்கினாள்.

    எத்தனை கேள்விகள்? கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ பானு! என்று கேலியாக சொன்னாலும், அடுத்த கணமே, அப்பாக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும் இல்ல? என்று அவள் கவலைப் பட ஆரம்பிக்க,

    பின்னே? எனக்கே இன்னும் அதிர்ச்சி போகலை! என்ற தங்கை, தமக்கையின் கையில் அழுத்தமாக கிள்ள, ஸ்...ஆ... லூசு, ஏன்டி இப்போ என்னை கிள்ளினே? என்றாள்.

    "இல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1