Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirena Nee Vanthai!
Uyirena Nee Vanthai!
Uyirena Nee Vanthai!
Ebook319 pages2 hours

Uyirena Nee Vanthai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சொந்த ஊரை, தாய் தந்தையரை விட்டு தனியாக வசிக்கும் ஆதியை நேசித்து பிடிவாதமாக திருமணம் செய்கிறாள் வந்தனா. அவர்கள் நேசத்தின் அடையாளமாக ஒரு குழந்தையும் உருவாக, அக்குழந்தை வேண்டாமென்று மறுக்கிறான் ஆதி. அவள் காரணம் வினவ, இது நாள் வரை ரகசியமாக இருந்த தன் கடந்த காலத்தை அவளுடன் பகிர, அவளும் தன்னுடைய ரகசியத்தை உடைக்க, ஆதி அதிர்ந்து போகிறான். அவர்கள் வாழ்வின் ரகசியம் என்ன என்பதை கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580172210514
Uyirena Nee Vanthai!

Read more from Premalatha Balasubramaniam

Related to Uyirena Nee Vanthai!

Related ebooks

Reviews for Uyirena Nee Vanthai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirena Nee Vanthai! - Premalatha Balasubramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உயிரென நீ வந்தாய்!

    Uyirena Nee Vanthai!

    Author:

    பிரேமலதா பாலசுப்ரமணியம்

    Premalatha Balasubramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/premalatha-balasubramaniam

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 1

    "குறை ஒன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா...

    குறை ஒன்றும் இல்லை, கண்ணா...

    குறை ஒன்றும் இல்லை, கோவிந்தா..."

    அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டிருந்த ஆதித்யனுக்கு, பக்கத்தில் இருந்த பெருமாள் கோயிலில் ஒலித்து கொண்டிருந்த எம்எஸ் அம்மாவின் குரல் எப்பொழுதும் போல பிரமிப்பை ஏற்படுத்தியதோடு அவனது அன்னையின் நினைவையும் வரவழைத்தது.

    ஆண்டவனிடம் முழு சரணாகதி அடைந்த ஒரு பக்தனின் மன வெளிப்பாடாக அமைந்த அந்த பாடல், அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். தினமும் பூஜையில் பாடுவார்கள். ஆதித்யன் கூட அம்மாவை கேலி செய்வான். குறை ஒன்றும் இல்லைன்னு பாடிட்டு, எப்படிம்மா வரிசையா வேண்டுதலையும் வைக்கறீங்க? என்று.

    கடவுள் கிட்ட பிரார்த்தனை செய்யறதை கேலி பண்ண கூடாது, கண்ணா! என்று அம்மா சொல்வார்கள். எதற்குமே கோபம் வராது அவனது அன்னைக்கு.

    அன்னையைப் பற்றி நினைத்ததும், அவர்களை பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. ஆனால்... ம்ஹூம், இப்படியே யோசித்து கொண்டிருந்தால், அலுவலகம் செல்ல நேரமாகி விடும் என்று நினைத்தவன், வேகமாக கிளம்பினான்.

    வெளியே வந்தவனை, எதிர்த்த பிளாட்டில் வசிக்கும் தம்பதியினரின் நான்கு வயது குழந்தை ரம்யாவின் குட் மார்னிங், அங்கிள்! என்ற இனிமையான குரல் எதிர்கொண்டது.

    வெரி குட் மார்னிங் ரம்யா குட்டி... குட்டிம்மா இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலையா?

    இல்ல அங்கிள், இன்னைக்கு நான் லீவ்... என்ற குழந்தை அவனை நோக்கி தன் சின்ன கையை நீட்டியது.

    என்னடா?

    சாக்லேட்

    சாக்லேட்டா? வாரத்துக்கு ஒன்னுதானே சொன்னேன்... அஞ்சு நாள்தானே ஆச்சு?

    சரிதான் அங்கிள், இன்னைக்கு எங்க சித்தி கல்யாணத்துக்காக ஊருக்கு போறோம்... ஒரு வாரம் கழிச்சுதான் வருவோம்... அப்புறம் இந்த வார சாக்லேட் மிஸ் ஆயிடும் இல்ல...... அதுதான் இப்பவே வாங்கிக்கலாம்னு கேட்டேன். என்ற குழந்தையின் சாமர்த்தியத்தை வியந்து கொண்டே, தன் பாக்கெட்டில் இருந்து சாக்லேட்டை எடுத்து கொடுத்தவன், குழந்தையின் உயரத்துக்கு குனிந்து கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு விட்டு கிளம்பினான்.

    அவனுக்கும் தெரியும் இன்று அவர்கள் ஊருக்கு போகிறார்கள் என்று. அவள் அப்பா நேற்றே சொல்லி இருந்தார். அதனால்தான் அவளுக்கு கொடுப்பதற்காக சாக்லேட் வாங்கி வைத்திருந்தான்.

    ஆனாலும் குழந்தை சாக்லேட்டை வாங்கிய விதத்தை நினைத்து புன்னகைத்தவனுக்கு, ரம்யாவை முதலில் பார்த்த ஞாபகம் வந்தது.

    இந்த பிளாட்டுக்கு வந்த முதல் நாள், அவன் கதவைத் திறந்த போது, நீங்கதான், இங்கே புதுசா வர போறவங்களா? என்ற குரல் கேட்டு திரும்பியவன் கண்ணில் ஆராய்ச்சி பார்வையுடன் நின்ற குழந்தை கண்ணில் பட்டது.

    ஆமாம்...

    ஆன்ட்டி வரலையா? என்ற கேள்வியில் ஆச்சரியமடைந்தவன், ஏன், ஆன்ட்டிக்கு எதாவது வச்சிருக்கிங்களா? என்றான்.

    இல்ல அங்கிள், போன தடவ வந்த ஆன்ட்டி, முதல் நாள் வந்தப்போ, மில்க் ஷேக் ஒன்னு கொடுத்தாங்க, ரொம்ப டேஸ்டா இருந்தது, அதான் கேட்டேன். என்று குழந்தை சொல்ல, பாயசத்தைத்தான் மில்க் ஷேக் என்று சொல்கிறது என்று தெரிந்ததும் ஆதித்யனுக்கு புன்னகை மலர்ந்தது.

    நான் மட்டும்தான் இங்கே வர போறேன், ஆன்ட்டி எல்லாம் கிடையாது. என்று சொன்னவுடன் குழந்தையின் முகம் வாடியது.

    உடனே, உங்களுக்கு அந்த மில்க் ஷேக் செய்ய தெரியுமா? என்று ஆவலுடன் கேட்ட குழந்தைக்கு அவன் பதில் சொல்லுமுன், ரம்யா... ரம்யா... என்று உள்ளே இருந்து குரல் கேட்டதும், குழந்தை உள்ளே ஓடி விட்டது.

    குழந்தையின் வாடிய முகம் ஏனோ மனதை வருத்த, கடைக்கு சென்று ஒரு பெரிய மில்கி பார் வாங்கி கொண்டு வந்து, குழந்தையின் வீட்டு கதவை தட்டினான்.

    கதவை திறந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், என்ன வேணும் சார்? என்று கேட்க, அவன் தன்னை அறிமுகப்படுதிக்கொண்டு, தனக்கும் குழந்தைக்கும் நடந்த உரையாடலை சொல்லி, இப்பொழுது சாக்லேட் கொடுக்க வந்திருப்பதாகவும் சொன்னான்.

    அவன் சொன்னதை கேட்டவர், சாரி சார், வந்த அன்னைக்கே உங்களை தொந்தரவு பண்ணிட்டா போலிருக்கு... என்று சொல்லி அவனை உள்ளே அழைத்தார்.

    அதெல்லாம் இல்லை... குழந்தைகளால் மட்டும்தான் சார், அப்படி மனதில் பட்டதை உடனே பேச முடியும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த குழந்தை ஒரு பெண்மணியோடு ஹாலுக்கு வந்தது.

    குழந்தையை பார்த்ததும், ஹாய் ரம்யா... எனக்கு மில்க் ஷேக் எல்லாம் பண்ண தெரியாது... அதான் உனக்கு மில்கி பார் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி கொடுக்க, அது உடனே வாங்காமல், அந்த பெண்மணியை பார்க்க, கொஞ்ச நேரம் முன்பு அந்த போடு போட்ட குழந்தை இப்பொழுது சாக்லேட்டை வாங்க அனுமதி கேட்பதை பார்த்ததும், அவனுக்கு புன்னகை வந்தது. ஒரு வழியாக தேங்க் யூ! சொல்லி சாக்லேட்டை வாங்கி கொண்டது குழந்தை.

    பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், குழந்தை ரொம்ப ஸ்வீட்... உங்களுடைய பேத்தியா சார்? என்று அவன் கேட்டதும், பெரியவர்கள் இருவரின் முகமும் மாறியது. அவரையும் அந்த பெண்மணியையும் மாறி மாறி பார்த்தவன், தான் ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என்று எண்ணி, என்னவென்று கேட்பதற்குள், பெரியவர் சமாளித்துக்கொண்டு, இல்லை சார், எங்க குழந்தைதான், லேட் மேரேஜ்" என்று சொல்லவும் அவனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது.

    சாரி சார், சாரி... வெரி வெரி சாரி... என்று அவன் சாரி கேட்டுக்கொண்டே போக, அவர் பரவாயில்லை சார், தெரிஞ்சவங்களே கேலி பண்றாங்க... நீங்க தெரியாமல் கேட்டதுக்கு போய் ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க? என்றார்.

    அதற்குள் குழந்தை பாதி சாக்லேட்டை சாப்பிட்டு முடித்து, வாயை கொப்பளித்து விட்டு, மீதியை பிரிட்ஜில் வைத்திருந்தது. இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்தவன், நல்ல பழக்கம் சொல்லி கொடுத்திருக்கிங்க மேடம் எனவும் அந்த தாயின் முகம் மலர்ந்தது.

    குழந்தையை அருகில் அழைத்தவன், படிக்கும் பள்ளி மற்றும் வகுப்பை கேட்க, உற்சாகத்துடன் பதில் சொல்லிய குழந்தை, தான் எப்பவும் மிஸ்ஸிடம் ‘குட் கேர்ள்’ என்று பேர் எடுப்பதை பெருமையுடன் சொல்ல, பேசிக்கொண்டே இருந்ததில் வாரத்துக்கு ஒரு சாக்லேட் தருவதாக, குழந்தைக்கும் அவனுக்கும் ஒப்பந்தம் ஆனது.

    அவன் இயல்பாக பழகிய விதத்தை பார்த்து, ரம்யாவின் தந்தை ராமநாதனுக்கு ஆதியை மிகவும் பிடித்து போனது. தினமும் இரவு படுக்க போகும் முன் அவருடன் பேசுவது வழக்கமாயிற்று. அவனுக்கும், தேவை இல்லாத கேள்விகள் இல்லாமல் அவர் இயல்பாக பேசுவது பிடித்தது. ஒரு நாள் அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது, ராமநாதன், எனக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கிறிங்க? என்று கேட்டார்.

    அவரது கேள்விக்கு பதில் சொல்லாமல், ஏற்கனவே எதோ உளறி உங்க மனசை கஷ்டபடுத்திட்டேன் சார், நீங்களே சொல்லுங்க என்றான்.

    நாற்பத்தி மூணு என்றார் அவர்.

    ஆதிக்கு ஆச்சரியமாக இருந்தது. தலை முக்கால் பாகம் நரைத்திருந்த அவர் உருவத்தை வைத்து பார்த்தால் நிச்சயம் ஐம்பதுக்கு மேல்தான் சொல்ல முடியும். நல்லவேளை... தான் எதாவது உளராமல் இருந்தோமே என்று இருந்தது அவனுக்கு.

    அவனது ஆச்சரியத்தை பார்த்தவர், சிரித்துக்கொண்டே அம்மா அப்பா நான் வேலைக்கு சேர்ந்த உடனேயே இறந்துட்டாங்க தம்பி, எனக்கு பிறகு பிறந்த மூன்று தங்கைகளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டு நிமிர்ந்த போதே வயசு முப்பது ஆறு ஆயிடுச்சு. இதுக்கு மேல் கல்யாணம் எதுக்குன்னு ரெண்டு வருஷம், தங்கைகள் குடும்பத்துக்காகவே உழைச்சிட்டு இருந்தேன். ஒரு நாள் திடீர்னு உடம்புக்கு வந்தது தம்பி... ஹாஸ்பிடல்ல சேர்க்க வேண்டிய நிலைமை... தங்கச்சிங்க மூணு பேரும் வந்து பார்த்ததோட சரி... என் கூட யாருமே இல்லை... அப்போதான் நம்மளுக்குன்னு ஒரு துணை வேணும்னு தோணுச்சு... அப்புறம் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து என்னை மாதிரியே துணை தேவைப்படுற சங்கரியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... ரம்யா பிறந்ததுக்கு அப்புறம் வாழ்க்கைக்கே ஒரு புது அர்த்தம் வந்த மாதிரி இருக்கு... என்ன இருந்தாலும் நமக்குன்னு ஒரு மனைவி, குழந்தை இருப்பது ஒரு சந்தோஷம்தான் என்று அவர் சொன்னதை நினைத்து பார்த்தவனுக்கு ஒரு பெருமூச்சு எழுந்தது.

    அலுவலகத்தின் உள்ளே சென்றதும், வரவேற்பில் இருந்த நிஷா, ஹாய் ஆதி! குட் மார்னிங் என்றாள். பதிலுக்கு குட் மார்னிங் சொல்லி விட்டு அவன் நகரும்போது, ஒரு நிமிஷம்... என்று சொல்லி அவனை நிறுத்தியவள், ஒரு வாரமா உங்ககிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருக்கேனே... இன்னைக்காவது, சாயந்தரம் காபி ஷாப் போகலாமா? என்றாள்.

    ஆதிக்கு ஆயாசமாக வந்தது. இவளும் ஒரு வாரமாக கேட்கிறாள். இவனும் ஒவ்வொரு நாளும், வர முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். இருந்தும் அவள் சளைக்கவில்லை. இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டி விட வேண்டும் என்ற நினைப்புடன் அவளை பார்த்தவன், சாரி நிஷா... இன்னைக்கு என் கேர்ள் பிரண்டோடு வெளியில் போகணும், இன்னைக்குன்னு இல்லை... இனிமேல் எப்போவும் என்னை எங்கேயும் கூப்பிடாதிங்க... ஏன்னா, அவளுக்கு நான் எந்த பெண்ணோடும் வெளியில் போறது பிடிக்காது... அவளுக்கு மட்டுமில்லை... எனக்கும் பிடிக்காது என்று சொன்னவன், அவள் முகம் மாறியதை கவனிக்காமல் உள்ளே சென்றான்.

    அவன் பின்னேயே வந்த அருள், ஹேய் ஆதி, நீ நிஷா கிட்ட சொன்னது உண்மையா? ஆளு பூனை மாதிரி இருந்துகிட்டு, இதெல்லாம் வேற இருக்கா? என்று கேலி செய்ய, நீ வேறப்பா, டெய்லி அவங்களும் கூப்பிடறாங்க... நானும் எதாவது ஒரு காரணம் சொல்றேன்... இதுக்கு ஒரு முடிவு கட்டனும்னுதான் அப்படி சொன்னேன் என்றான்.

    ஏன் ஆதி, நிஷா அழகாத்தானே இருக்கிறாள்... நல்ல பெண்ணும் கூட... எனக்கு தெரிஞ்சு அவள் வேற யார்கிட்டயும் இப்படி பேசினதே இல்லப்பா... நான் கூட ரெண்டு தரம் முயற்சி பண்ணி பார்த்திருக்கேன்... அவள் பிடி கொடுத்து பேசவில்லை... ஒருவேளை அவளுக்கு உன் மேல் உண்மையிலேயே இன்ட்ரெஸ்ட் இருக்கோ என்னமோ?

    ப்ளீஸ் அருள்... இந்த விஷயத்தை இதோடு விடு, எனக்கு இதில எல்லாம் விருப்பம் இல்லை என்று சொன்னவன், அதோடு வேலையில் இறங்கினான்.

    வேலை நேரம் முடிந்ததும், அவசரமாக கிளம்பிய ஆதியை பார்த்த அருள், ஹேய்... நீ தினமும் வேலை முடிஞ்சதும் அவசரமாய் கிளம்புவதை பார்த்தால், காலையில் நிஷா கிட்ட சொன்ன மாதிரி உண்மையிலேயே கேர்ள் பிரண்டை பார்க்க போற மாதிரிதான் இருக்கு என்று கிண்டல் செய்ய, ஆதி பதில் சொல்லாமல் ஒரு மெல்லிய புன்னகையுடன் கிளம்பினான்.

    அதானே... உன் வாயில் இருந்து ஒரு முத்தும் உதிராதே... சரியான கல்லுளி மங்கன் என்று அருள் சலித்துக்கொண்டான். ஆதி வேலையில் சேர்ந்த இந்த இரண்டு வாரத்தில், யாரிடமும் தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை. மற்றவர்கள் அவன் பேச மாட்டான் என்று ஒதுங்கி போக, அருள்தான் ஆதியிடம் தானாக வந்து பேசுவான். தானாக வந்து பேசுகிறவனிடம் எப்படி பேசாமல் இருப்பது என்று ஆதியும் அருளிடம் பேசுவான்.

    பேச்சு சொந்த விஷயங்களை பற்றி ஆரம்பித்து விட்டால், ஆதி ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்து விடுவான். அருளுக்கு அதில் வருத்தம் இருந்தாலும், ஆதியிடம் இருந்த எதோ ஒன்று அருளை ஆதியிடம் இருந்து ஒதுங்கி போகாமல் இருக்க வைத்தது.

    வேலை முடிந்ததும், ஆதி நேராக அன்னை இல்லத்துக்கு சென்றான். எப்பொழுதும் ஆறு மணிக்கெல்லாம் அங்கே போய் விடுவான். அம்மா, அப்பாவை விட்டு விட்டு இங்கே வந்த இந்த இரண்டு வாரத்தில், அலுவலக நேரம் முடிந்ததும், அவன் பொழுது போவது அன்னை இல்லத்தில்தான்.

    அங்கே சென்று பிள்ளைகளிடம் விளையாடுவது, பாடம் சொல்லிக்கொடுப்பது என்று பொழுது போகும். பிறகு, இரவு எட்டு மணிக்கு கிளம்பினால், ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, ரம்யா வீட்டினரோடு சிறிது நேரம் பேசி இருந்து விட்டு உறங்கப் போவான்.

    காலையில் இருந்தே காதல், கல்யாணம் என்றெல்லாம் பேச்சு நடந்தந்து அவன் மனதில் சஞ்சலத்தை உண்டு பண்ணி இருந்தது. அவனுக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? ஆனால்... ‘இப்போது எதற்கு அந்த எண்ணம்?’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு வேகமாக நடந்தான்.

    ஆதி, அன்னை இல்லத்தின் வாயிலை அடைந்த போது, அங்கே இருந்த மாமரத்தின் கீழே இருந்து பிள்ளைகள் ஆரவாரம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான்.

    மரத்தின் மேலே இருந்து, சண்டை போடாமல் ஒவ்வொருத்தரா நான் போடற மாங்காயை பிடிக்கணும், சண்டை போட்டால், நான் கீழே இறங்கி வந்துடுவேன், சொல்லிட்டேன்... என்ற கண்டிப்பு குரல் கேட்டது.

    குரலில் கண்டிப்பு இருந்தாலும், அதில் இருந்த இனிமை ஆதியின் மனதை வருட, யார் மரத்தின் மேல் இருக்கிறார்கள் என்று நின்ற இடத்தில் இருந்தே பார்க்க, இளமஞ்சள் நிற சல்வார் அணிந்த பெண்ணின் கால் தெரிந்தது. அவன் கொஞ்ச தூரத்தில் இருந்தே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

    அவளின் கண்டிப்பு குரல் வேலை செய்தது. அதுவரை, ‘எனக்கு... உனக்கு...’ என்று சண்டையிட்டு கொண்டிருந்த பிள்ளைகள், சமர்த்தாக தங்களுக்கான மாங்காயை அவள் மேலிருந்து போட பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

    ‘கெட்டிக்காரிதான்’ என்று அவன் மனதுக்குள் மெச்சும்போதே, அவள் குரல் மீண்டும் கேட்டது. எல்லாருக்கும் மாங்காய் கிடைச்சாச்சு இல்லை... நான் இறங்கிடவா? என்று கேட்டவள், பிள்ளைகள் ஒத்துக்கொண்டதும், ரவி, மது... ரெண்டு பெரும் ஏணியை நல்லா பிடிங்கப்பா, அது ஏற்கனவே கொஞ்சம் சரியில்லை போல என்று சொல்லிக்கொண்டே ஏணியில் காலை வைத்தாள்.

    அதுவரை கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டிருந்த ஆதி, அவள் முகத்தை பார்க்கும் ஆவலில் வேகமாக மரத்தை நெருங்கினான். அவனை பார்த்ததும், ஏணியை பிடித்து கொண்டிருந்த ரவி, ஹை... ஆதி அண்ணன் வந்திட்டாரு என்று கூச்சலிட, அந்த திடீர் சத்தத்தில் ஏணியில் இறங்கி கொண்டிருந்தவள் திடுக்கிட்டு திரும்ப, கால் இடறி கீழே விழப் போனாள்.

    அவளையே பார்த்துக்கொண்டு வந்த ஆதியின் கண்களில் அவள் விழப்போவது பட, வேகமாக ஓடி வந்தவன், அவள் இடையை தாங்கி பிடித்து விழாமல் நிறுத்தினான்.

    மீதி இருந்த இரண்டு படிகளை சமாளித்துக்கொண்டு இறங்கியவள், அவனை பார்த்து கூச்சத்துடன் புன்னகைத்தபடி, தேங்க்ஸ்... என்றாள். ஏற்கனவே அவளது குரலால் கவரப்பட்டிருந்த ஆதியை, அந்த சின்ன புன்னகை இன்னும் வசியப்படுத்த, கண் சிமிட்டாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

    தன்னுடையை நன்றிக்கு எந்த எதிரொலியும் காட்டாமல், தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவன் முகத்துக்கு நேராக தன் கையை ஆட்டியவள், ஹலோ! என்ன ஆச்சு? நின்னுகிட்டே தூங்கறிங்களா என்ன? என்று கேலி செய்யவும், தன் தலையை உலுக்கி கொண்டவன், ஏணியில் இறங்கும்போது, அதில் கவனம் இல்லாமல் தூங்கி கொண்டிருந்தவங்க கேட்கிற கேள்வியை பார் என்று சத்தமாகவே முணுமுணுத்தான்.

    ஹலோ! யார் சார் தூங்கிட்டு இருந்தாங்க? யாரோ விஐபி வர ரேஞ்சுக்கு இந்த பையன் போட்ட சத்தத்தில் கொஞ்சம் தடுமாறி விழ இருந்தேன்... அதுக்கு போய் என்ன என்னமோ சொல்றீங்க? நீங்க பிடிக்கலைன்னாலும் நானே சமாளிச்சு இருப்பேன் என்று படபடவென பொரிந்தவளின் முக பாவத்தை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, அவளை இன்னமும் சீண்ட தோன்றியது.

    அப்படியா? உதவி பண்ணது என் தப்புதான்... குரங்கு மாதிரி மரத்தில் ஏறி மாங்காய் பறிச்சவங்களுக்கு, கீழே விழாமல் சமாளிச்சிருக்க முடியும்னு தெரியாம போயிடுச்சு.

    ஹலோ! யாரை பார்த்து குரங்குன்னு சொல்றீங்க? மரத்தில் ஏறி மாங்காய் பறிக்கிறவங்க எல்லாம் உங்களுக்கு குரங்கா? என்று பதிலுக்கு அவள் கோபத்துடன் கேட்க, அவள் கோபத்தை கண்டு கொள்ளாத ஆதி, என்ன ஆச்சு? எதாவது போனை முழுங்கிட்டீங்களா என்ன? வார்த்தைக்கு வார்த்தை ஹலோ போடறீங்க? என்று கிண்டல் செய்தான்.

    ஹ... என்று தொடங்கியவள் சமாளித்துக்கொண்டு "அது எப்படி என்னை பார்த்து நீங்க குரங்குன்னு சொல்லலாம்? என்னை பார்த்தா அப்படியா தெரியுது? என்றாள் கோபக்குரலில். என்னதான் குரலில் கோபம் இருந்தாலும், அதில் கொஞ்சம் ஆதங்கமும் சேர்ந்து இருந்ததோ?

    பதிலுக்குக்காக காத்திருந்தவளை பார்த்த ஆதிக்கு, கோபத்தில் சிவந்திருந்த அவளது முகம் அவளது அழகை சற்றும் குறைக்கவில்லை என்பது தெரிந்தது. அவளை சீண்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குரங்கு என்று சொன்னது கொஞ்சம் அதிகப்படிதான் என்று தோன்ற, சாரி... நான் அப்படி நினைத்து சொல்லலை என்றான்.

    அவன் சாரி சொன்னதும், அவள் முகம் சட்டென்று சரியானதை பார்த்த ஆதிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது ஆச்சரியத்தை பொருட்படுத்தாமல் அவள், தாங்கள் பேசிக்கொண்டிருப்பதை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளை நோக்கி, போங்க... போங்க... உங்க ஆதி அண்ணன் வந்திட்டார்... புத்தகத்தை எடுத்திட்டு வந்து படிக்க ஆரம்பிங்க என்று அனுப்பி வைத்தாள்.

    பிள்ளைகள் சென்றதும், சும்மா உங்களை கிண்டல் செய்ய போய் அந்த மாதிரி சொல்லிட்டேன், மறுபடியும் சாரி என்று உண்மையான வருத்ததுடன் சொன்னவனை நோக்கி புன்னகையை சிந்தியவள், இட்ஸ் ஓகே... நான் வந்தனா... இங்கே சேர்ந்திருக்கும் புது நர்ஸ் என்று அறிமுகபடுத்திக்கொண்டாள். ஆளை போலவே பெயரும் அழகாக இருக்கிறது என்று மனதில் நினைத்துக்கொண்டான்

    அதென்ன வந்த அன்னைக்கே மரத்தில ஏறிட்டிங்க?

    இல்லை... ரெண்டு நாளா குழந்தைங்க செக்யூரிட்டி அண்ணன் கிட்ட கேட்டுட்டு இருக்காங்களாம்... அவர் கால்ல சுளுக்கு இருக்கவே ஏற முடியாதுன்னு சொல்லிட்டாராம்... பசங்க பேசும்போது கேட்டேன்... எனக்கும் மாங்காயை பார்த்தவுடன், சின்ன வயசில மரத்தில ஏறி மாங்காய் பறிச்சது எல்லாம் ஞாபகத்துக்கு வந்ததா? அதான் ஏறிட்டேன்

    அவள் படபடவென்று பேசுவதை ரசித்து கேட்ட ஆதி, பிள்ளைகள் படிக்கும் அறையை நோக்கி சென்று, குழந்தைகளோடு ஒன்றிப்போனான்.

    வேலை முடிந்ததும், எப்போதும் போல அன்னை இல்லத்தின் தலைவியான சாரதா அம்மாவின் அறைக்கு போனவன், அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பும்போது, எதிரில் வந்தனா வந்தாள்.

    ஆதி... நம்ம இல்லத்தில் ஒரு நர்ஸ் இருந்தால் நல்லதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பீங்களே, இன்னைக்குத்தான் சேர்ந்திருக்காங்க... அலுவலக வேலையிலும் ரொம்ப உதவியா இருக்காங்க... பேர் வந்தனா என்று அறிமுகம் செய்தவர்,

    வந்தனா, நான் சொன்னேனே மிஸ்டர்.ஆதி... பொருளால் மட்டுமில்லாமல் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தர சர்வீசும் செய்யறவர் என்று... அது இவர்தான் என்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்க, இருவரும், தாங்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதை எண்ணி புன்னகையுடன் தலை அசைத்தனர்.

    அந்த புன்னகையோடு, வெளியே வந்த ஆதிக்கு வீடு செல்லும் வரையிலும் புன்னகை மறையவில்லை. குளித்து விட்டு மெத்தையில் சாய்ந்து கண்களை மூடியதும், காத்திருந்ததை போல, வந்தனாவை சந்தித்த காட்சி மனதில் விரித்து புன்னகைமலர்ந்தது. முகத்தை பார்க்கும் முன்பே அவனை கவர்ந்த அந்த கண்டிப்பான குரல், சிறு கூச்சத்துடன் கூடிய புன்னகை, அவளது கோபம், சாரி சொன்னவுடன் அலட்டி கொள்ளாமல் இயல்பாக பேசிய அவள் குணம் என்று முழுக்க முழுக்க அவளது எண்ணமே தோன்றி உறக்கம் வராமல் இம்சை செய்தது.

    பெண்களிடம் எப்போதுமே அளவோடு பேச்சை நிறுத்திக்கொள்ளும் அவன், அவளிடம் வம்பிழுத்தது அவனுக்கே ஆச்சரியம்தான். அதுவும் குரங்கு மாதிரி என்று சொன்னது அவனுக்கே மனம் ஆறவில்லை. அவள் இடத்தில

    Enjoying the preview?
    Page 1 of 1