Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paayum Oli Nee Enakku..!
Paayum Oli Nee Enakku..!
Paayum Oli Nee Enakku..!
Ebook381 pages2 hours

Paayum Oli Nee Enakku..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"சாரி டாக்டர்... என்னால இந்த சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியாது!"

"இல்லை அபிராமி, இதை வளர விட்டால் உங்களுக்கு மனச்சிதைவு ஏற்பட கூட வாய்ப்பு இருக்கு!" என்று அவளுக்கு புரிய வைத்திடும் வேகத்தில் டாக்டர் சொல்ல,

"இல்லை! இல்லை!! அப்படி எதுவும் ஆகாது... நீங்க எனக்கு சிகிச்சை கொடுத்து என் அத்தானோட நினைவுகளை, அவரோட நான் வாழற வாழ்க்கையை பறிச்சிட்டீங்கன்னாதான் எனக்கு ஏதாவது ஆகிடும்!" என்று வெறி பிடித்தவள் போல் கத்திய அபிராமியின் தேகம், உணர்ச்சிகளின் தாக்கத்தில் நடுங்கத் தொடங்கியது.

அவளது அந்த வெடிப்பு, இப்போதிருக்கும் நிலைமையில் அவளுக்கு நல்லதில்லை என்று எண்ணிய டாக்டர், "ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் அபிராமி!" என்று அவளை அமைதிப் படுத்த முயன்றார்.

"இல்லை... நான் சொல்லிடறேன்!” என்று பிடிவாதத்துடன் அபிராமி தொடர்ந்தாள்.

“என்னால நான் வாழற இந்த வாழ்க்கையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது... அது... அது மட்டும் இல்லன்னா, என்னால எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாது! அந்த வாழ்க்கைதான் எனக்கு வாழறதுக்கான சக்தி கொடுக்குது!. அந்த வாழ்க்கை இல்லைன்னா என்னால சரியா மூச்சு… மூச்சு கூட விட முடியாது டாக்டர்... மூச்சு முட்டி நான் செத்து போய் விடுவேன்... கண்டிப்பா செத்தே போய் விடுவேன்!"

பைத்தியம் பிடித்தவளைப் போலப் பிதற்றியவள், "என்னை விட்டுடுங்க... இப்படியே விட்டுடுங்க... எனக்கு எந்த சிகிச்சையும் வேண்டாம்... வேண்டாம்... வேண்டாம்!" என்று கதறி அழ ஆரம்பித்தாள்.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580172210511
Paayum Oli Nee Enakku..!

Read more from Premalatha Balasubramaniam

Related to Paayum Oli Nee Enakku..!

Related ebooks

Reviews for Paayum Oli Nee Enakku..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paayum Oli Nee Enakku..! - Premalatha Balasubramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாயும் ஒளி நீ எனக்கு..!

    Paayum Oli Nee Enakku..!

    Author:

    பிரேமலதா பாலசுப்ரமணியம்

    Premalatha Balasubramania

    For more books

    https://www.pustaka.co.in/home/author/premalatha-balasubramaniam

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் – 1

    எண்ணிய முடிதல் வேண்டும்

    நல்லவே எண்ணல் வேண்டும்

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்

    தெளிந்தநல் அறிவு வேண்டும

    பண்ணிய பாவ மெல்லாம்

    பரிதிமுன் பனியே போல

    நண்ணிய நின்முன் இங்கு

    நசிந்திடல் வேண்டும் அன்னாய்!

    எல்லா ஸ்லோகங்களையும் சொல்லி முடித்து பின் வழக்கம் போல, பாரதியார் அன்னை சக்தியிடம் வேண்டியதையே, தானும் வேண்டிக்கொண்டு பூஜை அறையில் இருந்து வெளியே வந்தாள் அபிராமி.

    என்ன அபிம்மா, இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமே கிளம்பறே? என்று வினவியபடியே, அபிராமிக்கு உணவு எடுத்து வைத்தார் கற்பகம்.

    நேற்றே சொன்னேனே அம்மா, சூர்யா இண்டஸ்ட்ரீஸ் எம்.டி இன்னைக்கு நம்ம இல்லத்துக்கு வருகிறார் என்று? காலையில் எட்டு மணிக்கு பார்க்க முடிந்தால் நல்லது என்று அவங்க காரியதரிசி சொல்லி இருந்தாங்க, அதனால்தான் சீக்கிரம் கிளம்பறேன். அவர் மட்டும் இந்த வருஷம் நமக்கு ஃபன்ட் கொடுக்கிறதா ஒத்துகிட்டால், இந்த வருஷமே பிள்ளைகள் படிப்புக்கான அமைப்பையும் தொடங்கிடலாம்!. என்று ஆர்வமாக சொன்னவள், விரைவாக உண்டு விட்டு கிளம்பிச் செல்ல, அவளைப் பார்த்த கற்பகத்தின் கண்களில் கனிவோடு பெருமையும் கலந்திருந்தது.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த பெண்ணா இவள்? என்ற எண்ணம் எப்போதும் போல ஆச்சரியத்தை உண்டு பண்ணியதோடு, ஒரு பெருமூச்சையும் வர வைத்தது.

    இந்த வயதில், ஆதரவற்ற பெண்களுக்கென்று ஒரு இல்லம் நடத்தும் அபிராமியைப் பற்றி பெருமையாய் இருந்தாலும், தனக்கென்று ஒரு வாழ்வை இந்த பெண் எப்பொழுது அமைத்து கொள்ளப் போகிறாள் என்ற கவலையும் இருக்கத்தான் செய்தது.

    திருமணத்தைப் பற்றிப் பேசவே கூடாது என்று அபிராமி தடை விதித்திருந்தாலும், அவ்வப்போது அந்த பேச்சை எடுக்காமல் கற்பகமும் விட்டதில்லை. அவள் பிடி கொடுத்தால்தானே இவராலும் எதையாவது செய்ய முடியும்?

    எப்போதும் போல ‘கடவுளே! இந்த பெண்ணின் மனதை மாற்றி அவளுக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடு!’ என்று வேண்டிக்கொண்டார் கற்பகம்.

    தங்கள் வீட்டில் இருந்து கூப்பிடு தொலைவில் இருக்கும் சக்தி இல்லத்துக்கு வந்த அபிராமி, அங்கே வேலை செய்யும் செக்யூரிட்டியை அழைத்தாள்.

    தாஸ் அண்ணா, இன்னைக்கு எட்டு மணிக்கு மிஸ்டர்.சூர்யபிரகாசம் என்று ஒருத்தர் வருவார். அவரைக் காக்க வைக்காமல் உள்ளே அனுப்பிடுங்க. ரொம்ப முக்கியமான மனிதர் அவர்! என்று சொல்லி விட்டு, அவரிடம் காண்பிப்பதற்காக நேற்றே எடுத்து வைத்து இருந்த கோப்புகளைப் பார்க்கத் துவங்கினாள்.

    அந்த வீட்டின் கீழ்ப்புறம் சக்தி இல்லமும், மேலே சக்தி ஆடையகமும் இயங்கி வருகிறது.

    சக்தி இல்லத்தில் இருக்கும் பெண்களோடு, வேறு பெண்களும் சக்தி ஆடையகத்தில் வேலை செய்கின்றனர்.

    இரண்டு பெரிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு, ஜாப் வொர்க் வேலை செய்து வரும் பணியைத்தான் சக்தி ஆடையகத்தில் செய்து வருகிறார்கள்.

    என்ன அபி, இன்னைக்கு சீக்கிரமே வந்திட்டே? எதாவது முக்கியமான வேலையா? என்று விசாரித்த படி வந்து நின்ற சுந்தரியைப் பார்த்து புன்னகைத்த அபிராமி,

    இன்னைக்கு நன்கொடை தருகிற விஷயமா ஒரு பெரிய மனுஷர் வராருக்கா. அதான் நானும் சீக்கிரமே வந்துட்டேன். என்றாள்.

    அவர் வந்தவுடனே, டீ, காபி ஏதாவது வேணும்னா சொல்லு அபி, எடுத்துட்டு வரேன். என்ற சுந்தரி சொல்ல, அபிராமி தலையாட்டி விட்டு, பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை சரிப்படுத்தி வைக்கத் துவங்கினாள்.

    அப்போதும் போகாமல் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த சுந்தரியை நோக்கியவள், என்னக்கா? என்ன விஷயம்? என்று விசாரித்தாள்.

    இல்லை அபி... பீஸ் எடுத்துட்டு வந்து தரானே, அந்த முத்து... அவன் நம்ம சித்ரா கிட்ட கொஞ்சம் அதிகமா பேசறான்னு தோணுது. என்று தயங்கி தயங்கி சுந்தரி சொல்ல, அபிராமியின் முகம் மாறியது.

    ரெண்டு நாளா நானும் உன்கிட்ட சொல்லனும்னு நினைக்கிறேன். தனியா பார்க்கவே முடியலை. சித்ரா அவன்கிட்ட முகம் கொடுத்து பேசறது இல்லை. இருந்தாலும் அவனும் விடாமல் பேசிட்டு இருக்கான். அதான் உன் காதுக்கு விஷயத்தை கொண்டு வந்திடலாம்னு. என்று ஒரு வழியாக விஷயத்தை சொல்லி முடித்தாள் சுந்தரி.

    ம்ம்ம்... இன்னைக்கு முத்து வந்தார்னா, என்கிட்டே அனுப்புங்க அக்கா. என்று சொல்லி விட்டு, சுந்தரியை அனுப்பிய அபிராமிக்கு மனதில் கவலை பிறந்தது.

    அவளுக்கு தெரிந்த வரை முத்து ரொம்ப நல்ல மனிதன்தான். சித்ராவிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று புரியவில்லை. சுந்தரியும் உண்மை இல்லாத விஷயத்தை சொல்லுபவள் இல்லை என்பதால், முத்துவிடம் இன்று விசாரிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், தனித்து வாழும் பெண்களுக்கென்று ஒரு இல்லம் உருவாக்க வேண்டும் என்ற திட்டம் எல்லாம் அவளுக்கு இருந்ததில்லை. சமுதாயத்தில் நான்கு பேருக்கு உதவியாக, ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுதியாக ஓடிக்கொண்டிருந்தது.

    என்ன செய்ய போகிறோம் என்ற யோசித்துக் கொண்டிருந்த போதுதான், சுந்தரியை சந்திக்க நேர்ந்தது.

    அபிராமியும் கற்பகமும் குடி இருந்த தெருவில்தான், சுந்தரி தன் கணவனோடு வசித்து வந்தாள். தினமும் குடித்து விட்டு வரும் அவள் கணவன், அவளை அடித்து துன்புறுத்துவதை, வீட்டு வேலை செய்ய வரும் அஞ்சலை கற்பகத்திடம் புலம்புவதை அபிராமியும் கேட்டிருக்கிறாள்.

    கணவன் மனைவிக்குள் என்ன பிணக்கு என்று தெரியாவிட்டாலும், தாலி கட்டி விட்ட ஒரே காரணத்துக்காக மனைவியை கணவன் அடிப்பதை அபிராமியால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை.

    கண்களில் நிராசையோடு இருக்கும் சுந்தரியை சந்திக்க நேரிடும்போதெல்லாம், அபிராமிக்கு சுந்தரியின் கணவன் மேல் ஆத்திரம் எழுவதுண்டு. ஆனால், மற்றவர் விஷயத்தில் தலையிட அவளுக்கு உரிமை இல்லை என்பதால், ஆத்திரத்தை அடக்கி கொள்ளுவாள்.

    அவளது ஆத்திரத்தை வெளியிடும் சந்தர்ப்பமும் வந்தது.

    ஒரு நாள் இரவு, சுந்தரியின் வீட்டில் இருந்து அவள் அலறும் சத்தம் கேட்டது. எப்போதும் நடக்கும் விஷயம்தான் என்றாலும், அன்று இரைச்சல் அதிகமாகவே இருந்தது.

    எப்போதும் போல, ஆத்திரத்தை அடக்கி கொள்ள அபிராமி முயன்றபோது, வெளியே இரைச்சல் அதிகமாக, அபிராமியும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். வெளியே வந்தவள் கண்ட காட்சி அவளைப் பதற வைத்தது.

    வீதியில் தலைவிரி கோலமாக சுந்தரி தரையில் இருக்க, அவள் மேல் கெரோசினை ஊற்றிக்கொண்டிருந்தான் அந்த கணவன் என்னும் கொடியவன்.

    வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களைப் போல, அபிராமியால் அமைதியாக இருக்க முடியவில்லை. சட்டென்று உள்ளே சென்றவள், எதையோ எடுத்துக்கொண்டு வந்து, விடுவிடுவென்று சுந்தரியின் கணவனை நோக்கி முன்னேறினாள்.

    அருகில் சென்றதும், கெரோசின் கேனை அவனிடம் இருந்து பிடுங்கிவள், மீதம் இருந்த கெரோசினை அவன் மேலேயே ஊற்றினாள்.

    பிறகு, அபிராமி தீப்பெட்டியில் இருந்து குச்சியை எடுத்து உரசப் போகவும், ஏய்... ஏய்... அப்படி செய்யாதே! என்று அகமும் புறமும் பதறியபடி அவன் அலறினான்.

    கோபத்துடன் தீப்பெட்டியை விசிறி அடித்தவள், ஓ! உன் உயிர் மட்டும் அவ்வளவு வெல்லக் கட்டியா? இப்போ இவ்வளவு நேரம் அதைத்தானே நீ செய்ய இருந்தே? என்று அவனை ஆத்திரத்துடன் உறுத்தபடி வினவினாள்.

    அவள் தீப்பெட்டியை தூக்கி போட்டவுடன், தன் நிலையை அடைந்தவன், அவள் மிரட்டவே அப்படி செய்தாள் என்று புரிந்ததும், இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இடையே உள்ள விஷயம். நீ ஏன் அநாவசியமா தலையிடறே? என்று ஆணவத்துடன் எதிர்கேள்வி கேட்டான்.

    உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் இடையே உள்ள விஷயம்னா அது உன் வீட்டுக்குள்ளே இருந்திருக்கணும். இப்படி வீதிக்கு வந்தால், என்னை மாதிரி நாலு பேர் கேட்கத்தான் செய்வாங்க. என்று சொன்னவளின் பார்வை, ஒரு குற்றச்சாட்டுடன் கூட்டமாய் நின்றிருந்தவர்கள் மேல் பாய்ந்தது.

    அவளது பார்வை சில பேரைத் தலை குனியச் செய்ய, ஒரு நடுத்தர வயதுக்காரர் அவள் உதவிக்கு வந்தார்.

    அந்த பொண்ணு சொல்றது சரிதானேப்பா? நீ இவ்வளவு நாள் வீட்டுக்குள்ள உன் பொண்டாட்டியைப் போட்டு அடிக்கும்போது, நாங்க ஏதாவது கேட்டோமா? இப்போ வீதிக்கு பிரச்சனையை எடுத்து வந்ததே நீதானே? என்று சொல்ல, ஒவ்வொருத்தராய் அவனைக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

    எல்லாரையும் சப்போர்ட்டுக்கு கூப்பிட்டு இருக்கியாடி? போ! சப்போர்ட்டுக்கு வந்தவங்க வீட்டுக்கே போ! என்று ஆத்திரத்தோடு சொல்லியவன், கதவை அறைந்து சாத்திக்கொண்டு உள்ளே போய் விட்டான்.

    மெல்ல கூட்டம் கலைய கண்ணீரோடு நின்று கொண்டிருந்த சுந்தரியை அபிராமிதான் தன் வீட்டுக்கு அழைத்து வந்தாள். கற்பகம் உணவு எடுத்து வர, இருவரும் வற்புறுத்தி சுந்தரியை சாப்பிட வைத்தனர்.

    உணவு உள்ளே சென்றதும், கொஞ்சம் தெம்பு வந்ததோ? சுந்தரியின் கண்ணீரும் மெல்ல நின்றது.

    தினமும் இப்படி சித்திரவதை செய்யறானே. நீங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கூடாதா? என்று ஆற்றாமையுடன் அபிராமி சுந்தரியிடம் வினவினாள்.

    புகார் கொடுத்துட்டு? அப்புறம் என்னம்மா செய்ய சொல்றீங்க? அவங்க சமாதானம் பேசி அங்கேதானே அனுப்புவாங்க. இவரோட ஆத்திரம் இன்னும் ஜாஸ்தியா ஆயிடாதா? அப்படியே அவங்க இவரை ஜெயில்ல போட்டாலும், அப்புறம் நான் எங்கே போவேன்? என்று புதிதாய்ப் பெருகிய கண்ணீரோடு சுந்தரி கேள்வி கேட்ட போது, அபிராமியாலும் பதில் சொல்ல இயலவில்லை.

    அப்படி என்னதான் பிரச்சனை உங்களுக்கும் அவருக்கும்? அடுத்தவர் பிரச்சனைதான் என்றாலும், என்னவென்று தெரிந்தால் தன்னால் உதவ முடியுமோ என்ற நோக்கத்தில், என்று சுந்தரியிடம் விசாரித்த அபிராமிக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது.

    சுந்தரிக்கு அப்பா சித்தாள் வேலை செய்து வந்த இடத்தில்தான், சோமநாதன் மேஸ்திரியாக வேலை பார்த்திருக்கிறான். ஒரு நாள் சுந்தரியின் அப்பாவுக்கு உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போய் விட, சோமநாதன் உதவி செய்து இருக்கிறான். சுந்தரியின் அப்பா உயிர் விடும் தருவாயில், தன் மகளை நினைத்து வருத்தப்பட, சோமநாதன் தானே அவளைத் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி விட, அவரும் நிம்மதியுடன் மூச்சை விட்டிருக்கிறார்.

    தனக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் என்பதே இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்த சுந்தரிக்குமே, அந்த திருமணத்தில் சந்தோஷம்தான். தந்தை இறந்த பிறகு, தனக்கும் ஒரு துணை கிடைத்ததில் நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதியும் அடியோடு அழிந்தது, சோமநாதன் ஆண்மையற்றவன் என்று தெரிய வந்த போது! அப்போதும் சுந்தரி அவனைக் குற்றம் சாட்டவில்லை. தனக்கு விதித்தது இவ்வளவுதான் என்று அமைதியாகத்தான் இருந்தாள்.

    அவள் அமைதியாக இருந்ததே, சோமனாதனுக்கு சந்தேகத்தை கிளப்பியது. அவள் மீது அவதூறு சுமத்தி தன் குறையை மறைக்க முயற்சித்திருக்கிறான். தன் மேல் குற்றமில்லாத போதும், ஒண்டுவதற்கு வேறு இடம் இல்லாத காரணத்தினால், சுந்தரியும் அவனது கொடுமைகளைப் பொறுத்து வந்திருக்கிறாள்.

    இன்று நிலைமை மோசமாகி இருக்கிறது. எப்போதும் பொறுமையாக இருந்த சுந்தரி, அவனது வசவுகளையும் அடியையும் பொறுக்க முடியாமல், எதிர்ப்பேச்சு பேசி விட, அவனுக்கு கோபம் அதிகமாகி இருக்கிறது.

    ஏதோ ஒரு புது துணை கிடைத்த தைரியத்தில் அவள் பேசுகிறாள் என்று சோமநாதன் நாக்கில் நரம்பில்லாமல் பேச, சுந்தரியும் எரிச்சலில், ‘ஆமாம்... துணை கிடைச்சுதான் இருக்கு’ என்று சொல்லி இருக்கிறாள். அவளது அந்த பேச்சு, அவனை ரொம்பவும் தூண்டி விட்டிருக்கிறது. அவனுடைய ஆத்திரத்தின் விளைவே இன்றைய நிகழ்வு.

    இந்த ஆள் பண்ற கொடுமையில, செத்திடலாம்னு கூட தோணும்மா. ஆனால் அதுக்கு கூட மனசில தைரியம் வேணுமேம்மா! என்று சுந்தரி அழுத போது, அபிராமிக்கு மனதைப் பிசைந்தது.

    இனிமேல் என்ன செய்யறதுன்னு தெரியலை. எட்டாம் கிளாஸ் வரைக்கும்தான் நான் படிச்சிருக்கேன். என்ன வேலை கிடைக்கும்னு தெரியலை. அப்படியே நாலு வீட்டில பத்து பாத்திரம் தேய்ச்சு பொழப்பை ஓட்டினாலும், எங்கேம்மா தங்குறது? வயசானவளா இருந்தால் கூட பரவாயில்லை, தங்க கூட இடம் இல்லை என்பதுதான் எனக்கு இப்போ பெரிய பிரச்சனைம்மா. என்று கண்ணீர் வடித்த போது, அபிராமி யோசனையுடன் கற்பகத்தைப் பார்த்தாள்.

    அபிராமியின் எண்ணம் புரிந்தாற்போல, கற்பகம் சரி என்பது போல தலை அசைக்க, நீங்க எங்க வீட்டிலேயே இருக்கலாம் சுந்தரி அக்கா. எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்யலாம். உங்க கணவர் வந்து கூப்பிட்டால் அவர் கூட போற எண்ணம் இருக்கா? என்று அபிராமி சுந்தரியிடம் விசாரித்தாள்.

    இல்லைம்மா. கண்டிப்பா இல்லை! என்று உறுதியுடன் சுந்தரி சொல்ல, நாளைக்கே காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திடலாம்! என்றாள் அபிராமி.

    வேண்டாம்மா! என்று சுந்தரி அவசரமாக மறுக்க, என்ன? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று ஏதாவது சொல்லப் போறீங்களா? என்று அபிராமி எரிச்சலுடன் மொழிந்தாள்.

    அப்படி எல்லாம் இல்லைம்மா. அந்த ஆளை விட்டுட்டு வரேன் என்று முடிவு செய்த பின்னால, இது எல்லாம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்மா. என்று சுந்தரி சொன்ன போது, புகார் கொடுப்பதைப் பற்றி அதற்கு மேல் அவள் வற்புறுத்தவும் இல்லை.

    ஒதுங்க ஒரு நிழல் கிடைத்து விட்டது என்ற நிம்மதியில் சுந்தரி உறங்கி விட, அபிராமிக்குத்தான் உறக்கம் தொலைந்து போனது.

    ஒரு பெண் ஆதரவற்ற நிலையில் இருப்பது, எவ்வளவு பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது என்று யோசித்தவளுக்கு, இவ்வளவு நாளாக என்ன செய்வது என்ற எண்ணத் தேடலுக்கு விடை கிடைத்தாற்போல இருந்தது.

    இதே சுந்தரி, வயதானவளாக இருந்திருந்தால், ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்ளலாம். குழந்தையாக இருந்திருந்தாலோ, ஒரு குழந்தைகள் காப்பகத்தில் இடம் கிடைத்திருக்க கூடும். இப்படி ஆதரவற்ற பெண்கள் எங்கே போவார்கள் என்று அபிராமி யோசித்ததின் விளைவே சக்தி இல்லம்.

    ஆதரவற்ற பெண்களுக்காக ஒரு இல்லம் தொடங்கி, அவர்களுக்குத் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தர வேண்டும் என்று அபிராமி அன்றுதான் முடிவெடுத்தாள்.

    ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இல்லத்தில் இப்போது முப்பது பேர் இருக்கிறார்கள். ஆதரவற்ற பெண்களுக்கு இடம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது உள்ளத்தில் வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டுவதுதான் அபிராமியின் முக்கிய வேலை.

    இல்லத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாலேயும் ஒவ்வொரு கண்ணீர் நிறைந்த கதை நிரம்பி இருக்கிறது. ஆனால், இங்கே வந்த பிறகு எல்லார் கண்களிலும் இருந்த நிராசை மறைந்து போய், தன்னம்பிக்கை ஒளி வீசுவதைப் பார்க்கும்போது, அபிராமிக்கு மனம் நிறைந்து போகும்.

    நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், எட்டு பெண்களோடு பேரோடு அபிராமியும் கற்பகமும் ஒரு வீட்டில் வசித்த போது, ஒரு விஷமி அங்கிருந்த பெண்களில் ஒருவரிடம் வம்பு செய்ய போக, பிரச்சனை வெடித்து, வீட்டின் சொந்தக்காரர் வீட்டைக் காலி செய்ய சொன்னார்.

    தங்களுக்கென்று சொந்த இடம் இருந்தால்தான் நல்லது என்று உணர்ந்த அபிராமி, அதுவரை தன் தாத்தா தந்து விட்டு போன பணத்தைத் தொடாது இருந்தவள், அதை எடுத்து, இந்த பழைய வீட்டை விலைக்கு வாங்கினாள்.

    தான் மேலாளாராக வேலை செய்த கார்மென்ட் கம்பெனியில் இருந்து ஜாப் வொர்க் ஆர்டர்களைப் பெற்றவள், வங்கியில் கடன் வாங்கி தையல் இயந்திரங்களை வாங்கிப் போட்டு, இல்லத்தில் இருந்தவர்களுக்கு வேலை கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து வேலை செய்ய வைத்தாள். அப்போது தோன்றியதுதான், சக்தி தையலகம்.

    இல்லத்தில் இருக்கும் சில பெண்களுக்கு, குழந்தைகளும் உண்டு. அவர்களும் இல்லத்தில்தான் வளர்கின்றனர்.

    அந்த குழந்தைகள் படிக்கும் பள்ளியின் விழாவுக்கு ஒரு முறை சென்றபோதுதான் குமரனை சந்தித்தாள். பன்னிரண்டாம் படிக்கும் அந்த பையன் எல்லா பாடத்திலும் முதல் மதிப்பெண் வாங்குகிறான் என்பது தெரிந்தது. மருத்துவப் படிப்பு படிக்கும் ஆசை இருக்கும் அந்த பிள்ளைக்கு, அதற்கான பொருளாதார வசதி இல்லை என்று பள்ளி நிர்வாகம் அறிவித்து, வந்திருந்தவர்களிடம், அவனது படிப்புக்கு உதவி செய்யும்படி சொல்லியபோது, அபிராமிக்கு மனது கனத்துப் போயிற்று.

    இப்படி எத்தனை பிள்ளைகள் அறிவிருந்தும், படிக்கும் ஆர்வமிருந்தும், வசதி இல்லாததால் படிப்பை இழக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகையில் படித்து நினைவுக்கு வந்தது. அந்த மாதிரி பிள்ளைகளுக்கு, தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது.

    சக்தி தையலகத்தில் இருந்து வரும் தொகையை, சம்பளம், பராமரிப்பு செலவு போக மீதியை, இல்லத்தில் உள்ள பெண்களின் எதிர்காலத்துக்கு என்றுதான் அவர்கள் பெயரிலேயே சேர்த்து வைக்கிறாள். அதை எடுத்து வசதியற்ற பிள்ளைகளின் கல்விசெலவுக்கு பயன்படுத்தலாம்தான் என்றாலும், புதியதாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, உதவி செய்ய விருப்பம் இருப்பவரிடம் இருந்து பணத்தைப் பெற்று, இந்த வேலையை செய்யலாம் என்று கற்பகம்தான் யோசனை சொன்னார்.

    அதன்படி, நிறைய நிறுவனங்களுக்கு பிள்ளைகளின் தேவையை எடுத்து சொல்லி, நிதி உதவி கோரி கடிதம் அனுப்புவதும் அவளது தினசரி வேளைகளில் முக்கியமான ஒன்றாயிற்று. அப்படி செய்ததில், பலனும் இருக்கத்தான் செய்தது.

    அந்த பலன்களில் ஒன்றுதான், சூர்யா இண்டஸ்ட்ரீஸ் எம்.டி, இங்கே வருகை தருகிறேன் என்று சொன்னது. அவரே நேரில் வருவார் என்று அவரது காரியதரிசி சொன்ன போது, அபிராமிக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

    அவரே நேரில் வருவதற்கு என்ன காரணம் இருந்தாலும், குழந்தைகளின் கல்வித் தேவைக்காக அவரிடம் இருந்து ஒரு நல்ல தொகையை, பெற்று விட வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு மேலோங்கி இருந்தது.

    சூர்யா இண்டஸ்ட்ரீஸ் துவங்கி முப்பது வருட காலம் ஆகி இருந்தது என்றும் அதன் எம்.டி நல்ல செயல்களை செய்வதில் விருப்பமுள்ளவர் என்றும் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள்.

    முப்பது வருட தொழில் அனுபவம் பெற்றவரோடு பேசப் போவது கொஞ்சம் தயக்கத்தை கொடுத்திருந்தாலும், தான் ஏற்றிருக்கும் செயலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன் தயக்கத்தை உதறி, திரு.சூர்யப்ரகாசத்திடம் பேசுவதற்கு ஒத்திகை பார்த்த படி, அவரது வரவுக்காக காத்திருந்தவள், அவர் வந்து நின்றபோது, பேச நினைத்தது எல்லாம் மறந்து ஆச்சரியத்தில் வாயடைத்து போய் நின்றாள்.

    கண்ணம்மாவின் காதல்

    தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் கண்ணம்மா.

    என்ன அத்தான்? இன்னைக்கும் லேட்டாதான் வருவீங்களா? எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா? வெளியில போலாம் என்று காலையிலேயே சொல்லி இருந்தேன்தானே? குழந்தைகள் கூட ஆசையா காத்திருந்திட்டு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தூங்கினாங்க." என்று முகத்தை திருப்பியபடி, திருமண நாள் அதுவுமாய், தாமதாமாக வந்த தன் கணவனிடம் குறையுடன் கேள்விகளை அடுக்கினாள் அவனது கண்ணம்மா!

    மெதுவாடா! கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. என்ற கணவன், சீக்கிரமே கிளம்பிட்டேன்டா கண்ணம்மா. கிளம்பற நேரத்தில் ஒரு அவசர வேலை வந்திடுச்சு. அதான். என்று அருகில் வந்து அவளது தாடையைப் பிடித்து கொஞ்சி சமாதானப்படுத்தினான்.

    அவனது வேலையின் முக்கியத்துவம் அறிந்தவள் என்பதால், மனைவியும் அதற்கு மேல் அவனை எதுவும் கேட்கவில்லை.

    குழந்தைங்க ரொம்ப எதிர்பார்த்திட்டு இருந்தாங்களா? என்ற கணவனின் கேள்விக்கு,

    ம்...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தூங்குச்சுங்க. நான் கோபமா இருந்தேன்னு, அப்பா வேலை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே அம்மா, இன்னொரு நாள் நாம வெளியே போனால் போச்சு, அப்படின்னு என்னை சமாதானம் செஞ்சுதுங்க. எல்லாரையும் உங்க பக்கம் சேர்த்து வைச்சிருக்கீங்க! என்று சிணுங்கலோடு சொன்ன மனைவியின் குரலில் குறை இல்லாமல் பெருமிதமே பொங்கி வழிந்தது.

    எல்லாரையும் என் பக்கம் சாய்ச்சு வைச்சிருந்தாலும், நான் எப்பவும் உன் பக்கம் தானே? என்று குழைந்தவன், கண்ணம்மா, உனக்கு இந்த கல்யாண நாளுக்காக ஒரு பரிசு வாங்கி வந்திருக்கேன்! என்றான்.

    எனக்குதான் எப்போதோ பரிசு கிடைச்சாச்சே! என்றபடி, கணவனையும், தங்கள் இரட்டை குழந்தைகளையும் சுட்டியவளின் விரல், எப்போதும் போலத் தன் கணவனின் கன்னக்குழியில் பதிந்தது.

    எப்படி அத்தான் உங்களுக்கு மட்டும் இவ்வளவு அழகா குழி விழுது? என்று ஆச்சரியமாக வினவினாள்.

    ஹே... இதையே எத்தனை தடவை கேட்பே? என்ன பரிசு வாங்கிட்டு வந்தேன்னு கேட்காலாம் இல்லை?

    எனக்குதானே வாங்கிட்டு வந்திருக்கீங்க? கேட்டால்தான் தருவீங்களா என்ன?

    கள்ளி! என்னனு கேட்க மாட்டாயே! என்றபடி ஒரு முத்துமாலையை எடுத்தவன், அவளது சங்கு கழுத்தில் முத்து மாலையோடு தன் முத்தத்தையும் சேர்த்து அணிவித்தான்.

    பிடிச்சிருக்கா? என்றவனின் கிசுகிசுப்பான குரல் மயக்கத்தைத் தர, ரொம்ப! என்று மெல்லிய குரலில் மிழற்றினாள் அவனது கண்ணம்மா.

    அவளது மயக்கத்தை ரசித்தவாறே, நான் முத்தத்தை கேட்கலைடா கண்ணம்மா. முத்துச்சரதைப் பற்றி கேட்டேன்! என்றான் கணவன்.

    உங்களை...! என்று பல்லைக் கடித்தபடி அவனது தோளில் சாய்ந்திருந்த தன் தலையை நிமிர்த்தியவள்,

    கல்யாண நாள் அதுவுமா, இப்படியா என்னை முறைக்கிறது? பரிசு தரலைன்ன கூட பரவாயில்லை, இப்படி முறைக்காதேடா. உன் அத்தானைப் பார்த்தால் உனக்கு பாவமா இல்லை? என்று அப்பாவி போல கேட்கவும்,

    ஹய்யோ... ரொம்பத்தான்! என்று உதடு சுழித்தாலும், புன்னகையுடன் தன் கணவனின் கன்னக் குழியில் தன் இதழ்களால் பரிசு கொடுக்கவும் தவறவில்லை.

    கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி... என்று பாடியபடியே, அவளது அத்தான் பதில் பரிசு தர,

    ஹே... அது குழந்தைக்காக பாரதி பாடி இருக்கார். பிழை திருத்தம் செய்தவளிடம், நீயும் எனக்கு குழந்தைதானே கண்ணம்மா! என்றவன், தன் குழந்தையை சீராட்ட ஆரம்பித்தான்.

    அத்தியாயம் – 2

    என்னப்பா இவ்வளவு காலையிலே எங்கே கிளம்பிட்டே? என்று பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்த சூர்யாவின் பின்னால் வந்த பவானி வினவினார்.

    சக்தி இல்லம் என்று ஒரு ஹோம் அம்மா, அங்கே இருந்து நிதி உதவி கேட்டு கடிதம் வந்து இருந்தது. அதான் நேரிலேயே போய் என்ன தேவை என்று பார்க்க போகிறேன். ஆபிசில் பத்து மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அதுக்கு முன்னாடி இங்கே போய் பார்த்திடலாம் என்றுதான் கிளம்பறேன்.

    நேற்றே சீக்கிரம் கிளம்ப போறேன் என்று சொல்லி இருக்க கூடாதா? இன்னும் டிபன் வேலையே முடியலை. சரி இரு தோசையாவது ஊத்தறேன். என்று வேகமாக சமையல்

    Enjoying the preview?
    Page 1 of 1