Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathirunthai Anbe
Kaathirunthai Anbe
Kaathirunthai Anbe
Ebook144 pages59 minutes

Kaathirunthai Anbe

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூரணி.. சித்தார்த் புதிதாக கல்யாணம் ஆன தம்பதிகள். மாமியார் அபிராமி ஒரு பொம்மை போல் இருக்கிறாள். மாமனார் துபையில் வேலை பார்க்கிறார். மச்சினர் சேகர் ஆறு வயது பையன் போல் மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கிறான். இவர்களை கவனிக்க லீலா என்ற தூரத்து சொந்தமான பெண் இருக்கிறாள். போகப் போக பூரணி லீலா மேல் சந்தேகப்படுகிறாள். திகிலான சம்பவங்கள் நடக்கின்றன. அபிராமிக்கு ஒரு மகள் பிறந்து இறந்துவிட அவள் அதனால் இப்படி ஆகிவிட்டாள் என்று லீலா சொல்வதை பூரணி நம்பவில்லை. ஆனால் அபிராமி தன் மகள் அன்புக்காக காத்திருப்பதாக சொல்ல. பூரணி குழம்புகிற நேரம்.....பல நம்ப முடியாத சம்பவங்கள் நடக்கிறது. அபிராமி காத்திருந்தது கிடைத்ததா,,? படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580174610661
Kaathirunthai Anbe

Read more from Sankari Appan

Related to Kaathirunthai Anbe

Related ebooks

Reviews for Kaathirunthai Anbe

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathirunthai Anbe - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காத்திருந்தாய் அன்பே

    Kaathirunthai Anbe

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 1

    பூரணி இதுவரை ஷவரில் குளித்தது இல்லை. பூ பூவாய் விழும் நீர் அவள் உடலை மட்டுமல்ல அவள் உள்ளத்தையும் குளிர்வித்தது. கிராமத்தில் வளர்ந்த பெண். அவள் குளித்துக் கொண்டிருந்த குளியலறை அளவை விட சிறிய அறை தான் அவள் வீடாக இருந்தது. அவளும் அவள் அப்பாவும் தான். மதுரை அருகில் அணைப்பட்டி கிராமம் தான் அவள் பிறந்து வளர்ந்த இடம். வைகையில் தண்ணீர் திறந்து விடும் நேரம் அணைப்பெட்டியில் ஆறு, நீர் நிரம்பி ஓடும். அதில் குளிப்பது ஒரு தனி சுகம். முங்கி முங்கி குளித்து பிறகு அங்கு உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிடுவார்கள், அவளும் அவள் அப்பாவும். கூட்டாஞ்சோறு அல்லது புளி சாதம் பண்ணி எடுத்து வருவாள். அம்மா இருந்த போது இன்னும் சந்தோஷமாக இருக்கும். அம்மா இறந்த பிறகு கொஞ்ச நாள் இங்கு வராமலேயே இருந்தார்கள். பிறகு ஆற்றில் குளிக்க வேண்டும் என்கிற ஆசை அவளை அங்கு இழுத்து வந்தது. பூரணி தன் பிறந்த வீட்டு பழக்க வழக்கங்களை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டாள். ஆற்றில் குளிப்பது போல் இல்லாவிட்டாலும் இந்த ஷவர் குளியல் இதமாகத்தான் இருக்கிறது. குளித்து முடித்து அழகான நீலப் பூக்கள் போட்ட காட்டன் புடவையுடன் வெளியே வந்தாள் பூரணி. சித்தார்த் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

    என்ன அப்படி பார்க்றீங்க? என்று வெட்கத்துடன் கேட்டாள் பூரணி.

    சும்மா தான்...நீ குளித்துவிட்டு வருவாய் உன்னிடம் சொல்லிக் கொண்டு ஆபீஸ் கிளம்பலாம் என்று பார்த்தால்...நீ தண்ணீர் தொட்டியவே காலி பண்ணீட்டு வர்ற...மறுபடியும் மோட்டார் போடச் சொல்லி லீலா அக்காவிடம் சொல்லவேண்டியதாகப் போச்சு...

    சாரிங்க...நான் இதுவரை ஆற்றில் தான் குளித்திருக்கிறேன். இது வித்தியாசமாக இருந்ததா...அதான் என்னையும் அறியாமல்...

    பரவாயில்லை...நான் நினைத்தேன் குளியறை ஜன்னல் வழியாக குதித்து, உன் ஊர் ஆற்றில் குளிக்க ஒடிவிட்டாயோ என்று...சரி நம்ம தேன்நிலவு முடிந்து இன்று தான் நான் முதல் முதல் ஆபிஸ் போகிறேன்...போக மனசே இல்லை. லீவ் போட்டுடட்டுமா?

    அய்யோ வேண்டாம்...அப்புறம் லீலா ஆன்ட்டி கேலி செய்யப் போறாங்க... அவன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான். அவன் கார் கிளம்பும் வரை மாடி பால்கனியில் நின்று அவனுக்கு கையசைத்து வழி அனுப்பினாள் பூரணி. பூரணி... என்று அழைத்தபடி வந்தாள் லீலா. அவள் கையில் துவைத்த துணிகள் ஒரு பெரிய பக்கெட் நிறைய இருந்தது. பூரணி சங்கடத்துடன் நான் உலர்த்றேன்மா...’ என்று பக்கெட்டை வாங்கிக் கொண்டாள். அவளைப் பார்த்து சிரித்த லீலா...பக்கெட்டை அவள் கையில் கொடுத்துவிட்டு, அவள் அறையை எட்டிப் பார்த்தாள். காலங்கார்த்தாலேயே ஏ.சி ஓடுது...சினிமா பாட்டு பாடுது...மெத்தையை கூட சரி பண்ணலை...பரவையில்லை குளிச்சிட்டே அந்த மட்டுக்கும்... என்று சிரித்தபடி சொன்னாள். பூரணியின் முகம் வாடியது. லீலாவின் குரல் இனிமையான குரல் தான், ஆனால் குற்றம் சாட்டும் தொனி இருந்தது. கோவிச்சுக்காதே...புதுசா கல்யாணம் ஆகி இருக்கு...அப்படித்தான் இருப்பீங்க. ஆனா போகப் போக நீ இந்தக் குடும்ப நிர்வாகத்தை எடுத்து செய்யணும். இந்த வீட்டில் சமையலறை இருக்கு, பட்டாசாலை இருக்கு, ஸ்டோர் ரூம் இருக்கு...பெட்ரூம் மட்டும் தான் இருக்குன்னு நினைச்சிடாதே...சும்மா ஜோக்...எனக்கு அம்பது வயசாச்சு...இனி உன் மாமியாரையும் உன் மச்சினனையும் கவனிப்பது மட்டும் தான் என் வேலை. மற்றதெல்லாம் நீதான் பார்த்துக்கணும்...என்ன பார்த்துப்பே தானே? அவள் தலை ஆட்டினாள். சரி...உன் புருஷனுக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்றேன்...அப்புறம் உனக்கு சமைக்கத் தெரியுமா? இங்கு தினமும் மூணு வகை சமையல் செய்யணும். உன் மாமியாருக்கு காரமில்லாமே...மச்சினனுக்கு வறுத்த அயிட்டங்கள்...சித்தார்த்துக்கு தினமும் இரண்டு வகை காய்கறி...கூட்டு ஒன்று பொரியல் ஒன்று...மலைப்பா இருக்கா? சமையல்காரி நாகு இருக்கா...அவளை சூப்பர்வைஸ் பண்ணாட்டி சாப்பாடு வாயிலே வைக்க விளங்காது...சரி கீழே வா...உன் மாமியாருக்கு இன்று இடியாப்பம்...எடுத்துக் கொண்டு கொடு... சொல்லிக் கொண்டே லீலா போக. பூரணி பின் தொடர்ந்தாள். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. மாமியார் அபிராமி அந்த வீட்டில் ஒரு பொம்மை. கல்யாணத்தின்போது மனமேடை அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்த்தி வைக்கப் பட்டாள். அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். ஆசீர்வாதம் பண்ணுங்க அக்கா என்று லீலா சொன்ன பிறகு தான் பரக்க பரக்க பார்த்து லீலா கற்றுக் கொடுத்தபடி கைகளை உயர்த்தி ஆசீர்வதித்து, திருநீர் பூசிவிட்டாள். மச்சினர் சேகர் சிறு குழந்தை போல் கேள்விகள் கேட்டுக் கொண்டு கையை தட்டிக் கொண்டு அங்குள்ள சிறுவர்களுடன் சரி சமமாக விளையாடிக் கொண்டிருந்தான். சிதார்த்தைவிட எட்டு வயது பெரியவன். பிறக்கும் போதே அண்ணா இப்படித்தானாம்...அப்பா சொல்லி இருக்கார்...எவ்வளவோ வைத்தியம் செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. லீலா அக்கா தூரத்து உறவினள். ஆதரவற்று இருந்தார்கள். அப்பா தான் கூட்டிக் கொண்டு வந்து வீட்டை நிர்வாகம் பண்ண வைத்தார். லீலா அக்கா புண்ணியத்தில் தான் இந்த வீட்டு வண்டி ஓடுது. இனி நீ தான் எல்லாம் பார்த்துக்கணும்... என்று முதல் இரவன்றே சொல்லி இருந்தான் சித்தார்த். அம்மா ஏன் இப்படி... என்று பூரணி இழுத்த போது, அவன் சொன்னான். தெரியலை...நான் பிறந்தது முதல் லீலா அக்கா தான் என்னை கவனித்துக் கொண்டார்கள். அம்மாவை பார்க்கவே பயப்படுவேன். வளர வளர அம்மா இப்படித்தான் பயப்பட வேண்டாம் என்று புரிந்தது...பாவம் அம்மா. எனக்கு ஒரு அக்கா உண்டாம் பிறந்த சில மாதங்களிலேயே இறந்து போய்விட்டதாம். அதிலிருந்து அம்மா படிப் படியாக இப்படி ஆகிவிட்டார்களாம். நான் பிறந்ததும் அறவே பொம்மை ஆகிவிட்டார்களாம். அப்பா முதலில் இங்கு தான் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். நான் வேலைக்குப் போன பின் அப்பாவுக்கு துபையில் ஒரு ஆபர் கிடைத்தது. அதை ஏற்றுக் கொண்டார்கள். என்று விளக்கம் அளித்திருந்தான் சித்தார்த். மாமனார் மார்க்கண்டன் கல்யாணத்தின் போது அவளிடம் சொன்னது பூரணிக்கு நியாபகம் வந்தது. அம்மா பூரணி...உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதான் மகனுக்கு பேசி முடிச்சிட்டேன். நீ தான்மா இந்த வீட்டை இனி நன்கு கவனிக்கணும். என்னடா இவர் இவ்வளவு பெரிய பொறுப்பை என் தலையில் கட்டி விட்டுப் போகிறாரே என்று உனக்குத் தோணும்...வேறு வழி இல்லை...என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன்மா...பார்த்துக்கோம்மா... ஒரு குழந்தை போல் அவர் கண் கலங்கி, அவள் கையை பிடித்துக் கொண்டு சொன்னபோது உடனேயே பூரணி கவலைபடாதீங்க மாமா. நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க. நான் எல்லாரையும் என் கண் போல் பார்த்துக்குவேன். என்றாள். அது போதும்மா..." என்று அவர் பிரியாவிடை பெற்றுச் சென்றார். பூரணிக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

    பூரணி சமையலறைக்குள் நுழைந்தாள். எவ்வளவு பெரிசு! நவீன உபகரணங்கள். மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட அலமாரிகள். அடுக்கி வைக்கப்பட்ட டப்பாக்களில் சமையலுக்கு வேண்டிய உப்பு புளி மிளகாய்...கரண்டிகள் வைக்க துளை இடப்பட்ட ஒரு எவர்சில்வர் கம்பி. ஒரு ஓரமாக டபுள் டோர் ப்ரிட்ஜ்...நட்ட நடுவில் ஒரு வட்ட மேடை. அதில் காய்கறி நறுக்க...கீரை ஆய என்று கட்டிங் போர்டு. வலது ஓரம் சிங்க். அவள் வீட்டில் சமையல் சாமான்கள் அதிகம் இல்லை. இருந்ததும் சமையல் மேடைக்குள் அடங்கி விடும். அம்மி தான். ஆட்டுரல் தான். மிக்ஸி கிடையாது. அப்பாவின் வருமானம் பெரிதாக எதையும் வாங்க இடம் கொடுத்ததில்லை. ஆனால் அவள் வீட்டில் சந்தோஷம் நிறைய இருந்தது. யார் கெடுபிடியும் இல்லை. அதிகாரம் பண்ண ஆள் இல்லை. அவள் விருப்பபடி எது வேண்டுமானாலும் சமைக்கலாம். காய்கறி வாங்குவது கூட என்னென்ன வாங்க வேண்டும் என்று அவள் கொடுக்கும் லிஸ்ட் படிதான் வாங்குவார் அப்பா. இரண்டு வகை கறி...நாலு வகை சமையல் எல்லாம் இல்லை. பச்சரிசி சோறு...தேங்காய் துவையல்...சிறிய அப்பளம் ஆளுக்கு ஒன்று என்று சாப்பாடு முடிந்து விடும். மோர் தான். கருவேப்பலையுடன் ஒரு துண்டு இஞ்சி நறுக்கிப் போட்டு...அளவாக உப்பு போட்டு வைப்பாள். சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் தேவாமிர்தம் போல் இருக்கும். தொட்டுக்க அவள் போடும் ஊறுகாய் உண்டு. சீசனுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1