Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bramman Kirukkiya Chithiram
Bramman Kirukkiya Chithiram
Bramman Kirukkiya Chithiram
Ebook173 pages1 hour

Bramman Kirukkiya Chithiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யோசனையில் இருக்கும் போது சிலர், கையில் இருக்கும் பென்சிலால் ஏதாவது கிறுக்கிப் போடுவர். பிரமனுக்கு அப்படி ஓர் ஓய்வு கிடைத்தது போலும் . தாரா...விபா வாழ்க்கை விதிகளை புரட்டி கிறுக்கி போட்டுவிட்டார்.

தாரா குடும்பம் இலங்கையை பூர்வீகமாக கொண்டு வாழும் தொழிலாள குடும்பம். சந்தோஷமான திருப்தி நிலவும். மனசுகள்.

கலவரம் ....போராட்டம் வெடிக்கிறது. அதில் சிதறிப் போகிறது குடும்பம் . தாரா...விபா அனாதை ஆகிறார்கள்.

அக்கா விபா வேலைக்காக ஊட்டி செல்கிறாள். தாரா அக்காவை தேடி ஊட்டி செல்கிறாள். அங்கே அவளுக்கு ஒரு அதிர்ச்சி . கோணல் மாணலாகுறது அவர்களது வாழ்க்கை. தாராவை தொடருங்கள் மர்மம் விளங்கும் ....

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580174610658
Bramman Kirukkiya Chithiram

Read more from Sankari Appan

Related to Bramman Kirukkiya Chithiram

Related ebooks

Related categories

Reviews for Bramman Kirukkiya Chithiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bramman Kirukkiya Chithiram - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பிரமன் கிறுக்கிய சித்திரம்

    Bramman Kirukkiya Chithiram

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 1

    தாரா பஸ்சை விட்டு இறங்கினாள். குளிர்ச்சியான காற்று அவள் முகத்தில் மோதியது. இந்தக் காற்றை வள்ளல் என்று தான் சொல்ல வேண்டும். ரோஜாக்களின் வாசத்தை அள்ளிக் கொண்டு வந்து வீசி நல்ல பேர் வாங்கிக் கொள்கிறது. ஊட்டி ரோஜா என்றால் சும்மாவா? நல் வாசத்தை உள்ளித்துக் கொண்ட தாரா அண்ணாந்து பார்த்தாள்.

    கடவுளே உனக்கு நன்றி. நீ மேலிருந்து தூவும் விடிவெள்ளி பூக்கள் என் மேல் விழும் பாக்கியம் எனக்கு இன்று கிடச்சிருக்கு. சுதந்திரம் என்ற காற்றை நான் சுவாசிக்க வைத்த உன் கருணையான உள்ளம் வேறு யாருக்கு வரும்? ஏழையான என் வாழ்க்கையில் ஒளி குடுத்திட்ட...

    வானத்தை பார்த்து அவள் கை கூப்பி வணங்கினாள். சில ஈர மழைத் துளிகள் அவள் கண்ணில் விழுந்து அவளை ஆசீர்வதித்தது. முதுகில் சுமந்திருக்கும் பேக்-பேக்கை சரி செய்து கொண்டு அவள் அந்த வீட்டை நோக்கி நடந்தாள். என்ன அழகான இடத்தில் இந்த வீடு அமைந்திருக்கிறது! அப்படி எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    மலைச் சரிவில் தெரியும் தேயிலைத் தோட்டங்கள் பச்சை நிற கார்ப்பெட்டாக ஒரு பக்கம் விரிந்திருக்க---மறு பக்கம் ஒரு சிற்றருவி வெள்ளி கம்பி போல் மலை ராணியின் முந்தானையில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது... இதை அப்படியே வரைந்து அக்காவுக்கு காட்டணும் என்று சொல்லிக் கொண்டாள்.

    ஓவியங்கள் என்றால் தாராவுக்கு ரொம்பப் பிடிக்கும். நன்றாக ரசிப்பாள். மணியம் அவர்களின் ஓவியங்களுக்கு அவள் மிகப் பெரிய ரசிகை. வரைவது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. அந்தக் கலையை யார் வேண்டுமானாலும் ஆண்டு விட முடியாது. தத்ரூபமான ஓவியங்கள் நிறைய பேசும். சரித்திரம் படைக்கும்.

    அவள் வரையும் ஓவியங்கள் எல்லாமே அவள் இலங்கையில் இருந்தபோது வரைந்தவை. ரொம்ப சிறப்பாக வரைந்திருக்கிறாள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதில் உயிர் இருந்தது. இலங்கையின் போர் சூழல்களை அவள் வரைந்தபோது அவள் கண்களில் நீர் கோர்த்தது.

    கடவுள் தந்த அழகான பூமி...கடற்கரையும் புத்த கோவில்களும் நிறைந்த செழிப்பான தீவு. இலங்கை இயற்கை கொடுத்த அற்புத கொடை. மாத்தளை பிரதேசத்தில் உள்ள வற்றாத நீர் தேக்கத்தை தாரா வரைந்து, அதை அக்கா விபாவிடம் காட்டினாள். விபா கண்களில் வியப்பு...

    தாரா...நீ இவ்வளவு அழகா வரைய எப்ப கத்துக்கிட்டே? சூப்பர் டீ.

    அது அவர்கள் குடும்பமாக சந்தோஷமாக இருந்த காலக் கட்டத்தில் வரைந்தது. கலவரம்...போராட்டம் என்று வந்த பின் இலங்கை கருகிய முத்துக்களாக சிதறி, தீயாக எரிந்து நின்ற போது அதனை அவள் வரைந்தாள். இதைக் கண்டால் பிரம்மனே கண்ணீர் சிந்தியிருப்பான்.

    இனிமே இங்கு இருக்க முடியாது தாரா... அக்கா சொன்ன போது தாரா சோகமாக உட்கார்ந்துவிட்டாள்.

    நிஜமாத்தான் போயிடணுமா அம்மா? என்று அம்மாவிடம் கேட்டாள்.

    அக்கா சொல்றது சரிதான். வேறே என்னடி செய்யறது? ஒரு கிலோ அரசி ஆயிரம் ரூபாய். காய்கறி விலை...கேஸ் பெட்ரோல் என்று எல்லாமே நம் பட்ஜெட்டுக்கு எட்டாம போயிடுச்சே... அழகான ஒரு நங்கையின் முகத்தில விழுந்த அம்மைத் தழும்புகள் போல் ஆயிடுச்சே இந்தத் தீவு...

    ஈழம் அவள் தாய் நாடு. இங்கே தான் பிறந்தாள். படித்தாள். விளையாடினாள். அப்பா உயிரோடு இருந்தபோது அவள் அவரோடு திராட்சை தோட்டத்தில் போய் வேலை பார்த்திருக்கிறாள். கொத்து கொத்தாக திராட்சை தொங்கிய அந்த தோட்டம் தான் அவர்களுக்கு சோறு போட்டது. அதன் உரிமையாளர் ஒரு சிங்களவர் தான். அப்பா துவிஜன் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

    நேர்மையும் திறமையும் விஸ்வாசமும் கொண்ட துவிஜனை கோசலா என்ற அந்த சிங்கள முதலாளி, தன் சகோதரனைப் போல் பாவித்தார். அதற்காக அவர் பல இன்னல்களை சந்தித்தார்.

    அண்ணா...நீ அந்த துவிஐனுக்கு ரொம்ப இடம் கொடுகறே. அவன் மற்ற வேலையாட்களை அதிகாரம் பண்ணுகிறான். துன்புறுத்துகிறான்...நீ அவனை முதலில் வேலையை விட்டு தூக்கு. என்று வெறுப்புடன் சொன்ன தம்பி பன்டுகாவிடம் கோசலா சொன்னார்.

    துவிஜன் நம் தோட்டத்தை நன்கு பேணி வருகிறார். சோம்பேறிகளை சாடுகிறார். இந்த தோட்டம் அவர் ரத்ததாலும் வேர்வையாலும் வளர்ந்து செழித்து இருக்கிறது. அவரின் உழைப்பை புரிந்து கொள் பண்டுகா. நான் அவரை இழக்க சம்மதிக்க மாட்டேன்...

    பண்டுகா அண்ணன் கோசலாவை தீரத்துக் கட்டிவிட்டு அந்த தோட்டதை கைப்பற்ற செய்த சதியை தெரிந்து கொண்ட துவிஜன், அவரைக் காப்பாற்ற முனைந்து ஓடிய போது...அதில் தன் இன்னுயிரை நீத்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கண்டு துடித்துப் போனார் கோசலா. பண்டுகா ஜெயிலுக்குப் போனான். ஆனால் தந்தையை இழைந்த அந்தக் குடும்பம்...?

    என்னால் உங்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுவிட்டது. நீங்கள் விரும்பினால் என் தோட்டத்தில் வேலை செய்யலாம். என்று துவிஜனின் மனைவி சுரபிக்கு வாய்ப்பு கொடுத்தார் கோசலா. அவர் மகள் சம்பகா விபா, தாராவுக்கு நல்ல தோழியாக இருந்தாள்.

    அப்பா மறைந்தாலும் கோசலாவின் நிழலில் பாதுகாப்பாக இருந்தார்கள். அந்த நாட்கள் மறைந்து போனது. கலவரங்கள் அதிகரிக்க சுரபி குடும்பம் ஒளிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. திராட்சை தோட்டத்துக்கு வேலைக்கு போக முடியவில்லை. வறுமை தாண்டவமாடியது.

    அம்மா...நீயும் தாராவும் ஒரு வருடம் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆன்லைனில் வந்துள்ள வேலைக்கு நான் விண்ணப்பித்திருந்தேன். ஊட்டியில் ஒரு திராட்சை தோட்டத்தில் எனக்கு மேனேஜர் பதவிக்கு கூப்பிட்டிருக்கிறார்கள். அவர்களே பயணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். நான் போய் காலூன்றிக் கொண்டு உங்களை கூட்டிக் கொள்கிறேன். முதல் சம்பளம் வந்ததும், உங்களுக்கு பணம் அனுப்புகிறேன். என்று சொல்லிவிட்டு விபா கிளம்பிச் சென்றாள்.

    சொன்னபடி பணம் வந்தது. தாராவின் மெயில் ஐ.டிக்கு கடிதமும் வந்தது. ஒரு நாள் சுரபிக்கு தீடீரென நெஞ்சு வலி வந்துவிட ஆஸ்பத்திரயில் சேர்க்கப்பட்டாள். என்ன பிரயோஜனம்? ஆஸ்பத்திரியில் உரிய மருந்துகள் இல்லை. கரண்ட் இல்லை. டாக்டர்கள் நர்சுகள் பலரும் வேலையில் இல்லை. ஜனங்களின் கலவரம், ஊர்வலம் ஆத்திரம் என்று இலங்கையின் முகமே மாறிவிட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் பல உயிர்கள் அநியாயமாக போனது தான் மிச்சம். அதில் சுரபியின் உயிரும் ஒன்று. விபாவால் இறுதிச் சடங்கிற்கு கூட வர முடியவில்லை.

    தாராவின் கண்ணீரை துடைக்க யாருமில்லை. ஏனென்றால் சுற்றி பலரும் கண்ணீர் வெள்ளத்தில் தான் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தார்கள். கோசலாவின் மகள் சம்பகாவின் உதவியால் தான் சுரபியை கூட எரியூட்ட முடிந்தது. ரகசியமாக அவள் செய்த உதவியை தாரா நெஞ்சு நெகிழ ஏற்றுக் கொண்டாள்.

    சம்பகா...இந்த பூமி இன்னும் முழுவதுமாக அழிந்து விடாமல் இருக்குன்னா அதுக்கு காரணம் உன்னைப் போன்றவர்கள் இருப்பதால் தான். என்றாள்.

    அரசியல்வாதிகளின் சுயநலத்திற்கும்...நீதி கேட்கும் மக்களின் போராட்டத்திற்கும் நடுவில் சிக்கியுள்ளது அப்பாவிகளின் உயிர். இது இந்த நாட்டின் சாபக் கேடு. என்றாவது அமைதி நிலவும் என்று நம்பிக்கை தான் நம்மை கொண்டு செல்கிறது. என்றாள் சம்பகா. பிறகு அவள் தாராவுக்கு பணம் கொடுத்தாள்.

    வேண்டாம் சம்பகா. அக்கா அனுப்பிய பணம் இருக்கு. வங்கி சென்று எடுத்துக் கொள்வேன்.

    அதெல்லாம் ரிஸ்க் தாரா. நீ இப்பவே ஊட்டிக்கு சென்று விடு. கலவரம் தீவிரம் அடையும்னு சொல்றாங்க.

    அக்கா அடுத்த மாதம் தான் வரச் சொல்லியிருக்கா. அப்பொழுது தான் அவளால் என் பயணத்துக்கு ஏற்பாடு பண்ண முடியும்னு மெயில் அனுப்பியிருக்கா.

    தாரா...நீ தனியா இருக்கே. நான் சொல்றதைக் கேள். இங்கிருந்து திராட்சைகளை ஏற்றிக் கொண்டு அப்பாவின் சரக்கு கப்பல் செல்கிறது. என் அண்ணன் அதுலா அதனுடன் செல்கிறான். உன்னை பத்திரமாக ஊட்டிக்கு சென்னையிலிருந்து விமானம் ஏற்றி விடுவான். நீ தடையில்லாமல் செல்ல முடியும். சுங்க அதிகார சோதனை, இலங்கை தமிழர்கள் என்று ஆயிரம் தடை வரும். அண்ணாவுடன் போ உனக்கு தொல்லைகள் இருக்காது. என்று பரபரத்தாள்.

    அதன்படியே தாரா தன் தாய் மண்ணை விட்டுக் கிளம்பினாள்.

    போயிட்டு வரேன் சம்பகா...

    பத்திரம். அண்ணா தாராவை நல்லபடியாக கொண்டு சேர்ப்பது உன் கடமை. என்றாள் செண்பகா தன் அண்ணனிடம்.

    அதுலா...நான் இன்று உயிருடன் இருக்கிறேன் என்றால் அதுக்குக் காரணமே தாராவின் அப்பா தான். அவளை பத்திரமாக கொண்டு சேரத்துவிடு. என்று கோசலா மகனிடம் சொல்லி வழி அனுப்பினார்.

    கவலைப்படாதீங்க. அது என் தலையாய கடமை. என்று பொறுப்பேற்றுக்

    கொண்டான் அதுலா. தாரா மனசங்கத்துடன் இலங்கை மண்ணை விட்டுச் சென்றாள். அவள் உயிரே போவது போல் இருந்தது.

    அது தான் அவள் முதல் கப்பல் பயணம். கொழும்பு துறைமுகத்திலிருந்து கிளம்பியது சரக்கு கப்பல். மூன்று மணி நேரப் பயணம். திராட்சைகள் கிரேட்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேல்தளத்திலிருந்து அவள் அடி வானத்தைப் பார்த்தாள். சாயங்கால வானத்தில், பொன்னிறமும் கிரும்சன் கலரும் மிக்ஸ் பண்ணிய மேகக் கூட்டங்களை பார்க்க முடிந்தது. அது மனம் அமைதியை கொடுத்தது. மெல்லிய தென்றல் உப்புக் காற்று சுமந்து வந்தது. கடலைகள் நீல பாய் விரித்தது போல் காணப்பட்டது.

    என்ன தாரா? உன் முதல் கப்பல் பயணம். ஸீ சிக்னஸ் இருக்கா? என்று கேட்டபடி வந்தான் அதுலா. அவள் இல்லை என்று தலை ஆட்டினாள். ததும்பும் அலைகளின் ரிதம் அவளுக்கு தாலாட்டு போல் இருந்தது.

    கப்பல் இலங்கையை விட்டு தூரம் நகர நகர எனக்கு மனசை என்னவோ பிசைகிறது அண்ணா. தமிழ் மண்ணில் தான் கால் வைக்கப் போறேன். ஆனால் அங்கு எனக்கு யாரையும் தெரியாது. அக்கா மட்டும் இல்லை என்றால் நான் கிளம்பி இருக்கவே மாட்டேன்.

    தாராவுக்கு சிங்கள மொழி தெரியும். அதுலுக்கு தழிழ் தெரியும். எனவே அவனுடன் அவள் தமிழிலேயே பேசினாள்.

    எந்த மண்ணில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கே தான் மண்ணே நீ வாழ்கிறாய் என்று உங்கள் அவ்வை சொல்லவில்லையா? யாதும் ஊரே யாவரும் கேளிர்...சீர் அப் தாரா.

    தாரா கண்ணில் நீர் மினுமினுப்பு தெரிந்தது. அவன் கரம் அதை துடைத்தது அவளுக்கு ஒரு சிறிய தெம்பு வந்தது.

    சென்னையில்

    Enjoying the preview?
    Page 1 of 1