Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pinangalin Kathai
Pinangalin Kathai
Pinangalin Kathai
Ebook258 pages1 hour

Pinangalin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொண்டை வறண்ட தொண்டை மண்டலம்

அன்பிற்கினிய உங்களுக்கு... வணக்கம்!

எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ஊர்ப்பிடாரி' படித்துவிட்டு கைப்பேசியிலும், மின்னஞ்சல் மூலமும் பல பேர் என்னோடு பேசினார்கள். ஆனால் ஒரு கடிதம் கூட என் வாசலுக்கு வரவில்லை. கடிதங்களை இழந்து விட்டுத்தான் கைப்பேசிகளோடு அலைகிறோம். தந்தி சேவையைப் போல அஞ்சல் சேவைக்கும் நாம் விடை கொடுக்கும் நாள் விரைவில் வரலாம். இழப்புகளை எளிதில் ஏற்றுக்கொள்ள மனசு மறுக்கிறது என்றாலும் இழப்புகளை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்.

ஊர்ப்பிடாரி தொகுப்பு எனக்குள் இரண்டு ஆச்சரியங்களை விதைத்தது. ஒன்று, அக்கதைகளை யாரெல்லாம் படித்துவிட்டு அதைப்பற்றி என்னோடு பேசுவார்கள் என நான் நினைத்தேனோ அவர்களில் பலர் அதைப்பற்றி பேசவே இல்லை.

இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக்கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்துவிட்டு என்னிடம் மனம் திறந்து பேசியது இரண்டாவது ஆச்சரியம். எனது கிராமத்தைச் சேர்ந்த சில விவசாயிகளும் அதில் அடக்கம்.

‘சிர்மணி' கதையைப் படித்துவிட்டு சிர்மணியின் மறைவுக்குப் பிறகான ஒருநாளில் அந்த கதாபாத்திரத்தின் சகோதரர் பெங்களூருவிலிருந்து தொலைபேசியில் என்னுடன் நெகிழ்ச்சியுடன் பேசியதும், தேம்பி அழுததும் என்னை பலமாய் யோசிக்க வைத்தது. சில கதை மனிதர்களை எத்தனைதான் மறைத்து மறைத்து எழுதினாலும் சட்டென்று அந்தத் திரை விலக்கப்படும்போது கதாபாத்திரங்களைவிட படைப்பாளிகள் சற்று அதிகமாகவே திணறவேண்டி இருக்கிறது.

சிப்பாய் கணேசன், வலிகள் கதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்து ஆந்திரப் பிரதேச மக்களிடமும் உலவ விட்ட தொண்டநாடு தெலுகு ரசயிதல சங்கத்திற்கு இந்த தருணத்தில் நன்றி சொல்வது அவசியம் என நினைக்கிறேன்.

எப்போதும்போல எனது படைப்புகளின்மீதும் என்மீதும் மிகுந்த பாசம் கொண்ட தோழர்கள் கமலாலயன், கவிஞர் முகில், புல்வெளி காமராசன், மு.முருகேஷ் ஆகியோருக்கும் எனது நன்றிகளைப் பகிர வேண்டும்.

எனது துணைவி மஞ்சுளா, குழந்தைகள் ஓவியா, சிந்து, நிலவழகன் ஆகியோரின் தியாகங்களும், இழப்புகளும்தான் எனது படைப்புகளுக்கு நீரூற்றாய் அமைவதாய் பெருமை கொள்கிறேன். அவர்களின் பங்களிப்பின்றி என்னால் எழுத முடியுமென நான் நம்பவில்லை.

‘தொண்டை நன்னாடு சான்றோருடைத்து' என்று பாடப்பாட எங்களின் மண் தற்போது வறட்சிக்கு பெயர் பெற்ற மண்டலமாக மாறி வருகிறது. பாலாற்றையும், பொன்னை ஆற்றையும் காவு கொடுத்துவிட்டு, தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் மூச்சடைத்து, முழி பிதுங்கி நிற்கிறோம். தொண்டை வறண்டு, பெருந்தாகமெடுத்து தவிக்கும் என் மண்ணுக்கு எனது கதைகள் எவ்விதத்தில் உதவும்? அதற்கான விடையைத் தேடியே எனது பயணம் தொடர்கிறது. இன்னமும்கூட சில வெகுஜன இதழ்கள் எங்களின் வட்டார மொழிக் கதைகளை நிராகரித்தாலும் இந்தத் தொகுப்பிலும் எனது மக்களின் ஏக்கங்களையும், இழந்துபோன அவர்களின் கனவுகளையும் பிடிவாதத்தோடு எங்கள் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறேன்.

இந்தக் கதைகளைப் படித்துவிட்டு உங்களின் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்வதும், மறந்துபோவதும் உங்களின் சுதந்திரம். நன்றி.

பிரியங்களுடன்
கவிப்பித்தன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127804430
Pinangalin Kathai

Read more from Kavipithan

Related to Pinangalin Kathai

Related ebooks

Reviews for Pinangalin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pinangalin Kathai - Kavipithan

    http://www.pustaka.co.in

    பிணங்களின் கதை

    சிறுகதைகள்

    Pinangalin Kathai

    Sirukathaigal

    Author:

    கவிப்பித்தன்

    Kavipithan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கொள்கைகளுக்காக

    தன்னையும்

    தன் குடும்பத்தையும்

    இழந்த

    எங்களின் சின்னத் தாத்தா

    கர்நாடக திராவிடர் கழகத்தின்

    முன்னாள் மாநிலத் தலைவர்

    வி.சி.கிருஷ்ணன் அவர்களின்

    நினைவுகளுக்கு!

    ***

    உள்ளே...

    1. புதிய தரிசனம்

    2. கரக ரெட்டியார்

    3. வண்ணாந்துறை

    4. கோல்மாத்து

    5. ரிஷிமூலம்

    6. மாய பிம்பங்கள்

    7. தாய்மை

    8. தலைமுறைகள்

    9. வாயில்லாதவை

    10. தெரு நாய்கள்

    11. நடுநிசிக் காட்டேரிகள்

    12. கொண்ட்டுபுளி

    13. பின்கட்டு

    14. எட்டி மரம்

    15. பிணங்களின் கதை

    ***

    ஓராயிரம் நன்றி

    பிரபஞ்சன், கமலாலயன், முகில், முல்லைவாசன், ச.ஆறுமுகம், கீற்று, காம் ரமேஷ், பாரவி, சுந்தா, புல்வெளி, காமராசன், சுகிர்தராணி, கம்பீரன், 'பாரதி புத்தகாலயம்' நாகராஜன், கி.பார்த்திபராஜா, வைகறைச்செல்வன், ஒட்ர புருசோத்தம்

    மு.ஜெய்குமார், மு.பாண்டுரங்கன், மு.அமுதா, ஆ.ருத்ரமூர்த்தி, பாகவெளி கோ. ஆண்டி, கோ. பழனி, வசூர் பாஸ்கரன், பல்லேரி அண்ணாமலை, பாரதி புத்தகாலயம்

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், தொண்டநாடு தெலுகு ரசயிதல சங்கம்.

    கதைகளை வெளியிட்ட தினமணி கதிர், தளம், மக்கள் புது முரசு, கீற்று டாட் காம் மற்றும் 'புதிய தரிசனம்' கதையை பரிசுக்குரிய கதையாக தேர்வு செய்த 'பல்சுவை காவியம்' ஆகியவற்றிற்கும் நெஞ்சு நிறைந்த நன்றி!

    ***

    தொண்டை வறண்ட தொண்டை மண்டலம்

    அன்பிற்கினிய உங்களுக்கு... வணக்கம்!

    எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'ஊர்ப்பிடாரி' படித்துவிட்டு கைப்பேசியிலும், மின்னஞ்சல் மூலமும் பல பேர் என்னோடு பேசினார்கள். ஆனால் ஒரு கடிதம் கூட என் வாசலுக்கு வரவில்லை. கடிதங்களை இழந்து விட்டுத்தான் கைப்பேசிகளோடு அலைகிறோம். தந்தி சேவையைப் போல அஞ்சல் சேவைக்கும் நாம் விடை கொடுக்கும் நாள் விரைவில் வரலாம். இழப்புகளை எளிதில் ஏற்றுக்கொள்ள மனசு மறுக்கிறது என்றாலும் இழப்புகளை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்.

    ஊர்ப்பிடாரி தொகுப்பு எனக்குள் இரண்டு ஆச்சரியங்களை விதைத்தது. ஒன்று, அக்கதைகளை யாரெல்லாம் படித்துவிட்டு அதைப்பற்றி என்னோடு பேசுவார்கள் என நான் நினைத்தேனோ அவர்களில் பலர் அதைப்பற்றி பேசவே இல்லை.

    இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக்கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்துவிட்டு என்னிடம் மனம் திறந்து பேசியது இரண்டாவது ஆச்சரியம். எனது கிராமத்தைச் சேர்ந்த சில விவசாயிகளும் அதில் அடக்கம்.

    'சிர்மணி' கதையைப் படித்துவிட்டு சிர்மணியின் மறைவுக்குப் பிறகான ஒருநாளில் அந்த கதாபாத்திரத்தின் சகோதரர் பெங்களூருவிலிருந்து தொலைபேசியில் என்னுடன் நெகிழ்ச்சியுடன் பேசியதும், தேம்பி அழுததும் என்னை பலமாய் யோசிக்க வைத்தது. சில கதை மனிதர்களை எத்தனைதான் மறைத்து மறைத்து எழுதினாலும் சட்டென்று அந்தத் திரை விலக்கப்படும்போது கதாபாத்திரங்களைவிட படைப்பாளிகள் சற்று அதிகமாகவே திணறவேண்டி இருக்கிறது.

    சிப்பாய் கணேசன், வலிகள் கதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்து ஆந்திரப் பிரதேச மக்களிடமும் உலவ விட்ட தொண்டநாடு தெலுகு ரசயிதல சங்கத்திற்கு இந்த தருணத்தில் நன்றி சொல்வது அவசியம் என நினைக்கிறேன்.

    எப்போதும்போல எனது படைப்புகளின்மீதும் என்மீதும் மிகுந்த பாசம் கொண்ட தோழர்கள் கமலாலயன், கவிஞர் முகில், புல்வெளி காமராசன், மு.முருகேஷ் ஆகியோருக்கும் எனது நன்றிகளைப் பகிர வேண்டும்.

    இந்தத் தொகுப்பை அச்சிட்டு வெளியிட்ட ஆதி பதிப்பகமும், நண்பர் முரளி அவர்களும் மிகுந்த நன்றிக்குரியவர்களாக நினைக்கிறேன்.

    எனது துணைவி மஞ்சுளா, குழந்தைகள் ஓவியா, சிந்து, நிலவழகன் ஆகியோரின் தியாகங்களும், இழப்புகளும்தான் எனது படைப்புகளுக்கு நீரூற்றாய் அமைவதாய் பெருமை கொள்கிறேன். அவர்களின் பங்களிப்பின்றி என்னால் எழுத முடியுமென நான் நம்பவில்லை.

    'தொண்டை நன்னாடு சான்றோருடைத்து' என்று பாடப்பாட எங்களின் மண் தற்போது வறட்சிக்கு பெயர் பெற்ற மண்டலமாக மாறி வருகிறது. பாலாற்றையும், பொன்னை ஆற்றையும் காவு கொடுத்துவிட்டு, தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் மூச்சடைத்து, முழி பிதுங்கி நிற்கிறோம். தொண்டை வறண்டு, பெருந்தாகமெடுத்து தவிக்கும் என் மண்ணுக்கு எனது கதைகள் எவ்விதத்தில் உதவும்? அதற்கான விடையைத் தேடியே எனது பயணம் தொடர்கிறது.

    இன்னமும்கூட சில வெகுஜன இதழ்கள் எங்களின் வட்டார மொழிக் கதைகளை நிராகரித்தாலும் இந்தத் தொகுப்பிலும் எனது மக்களின் ஏக்கங்களையும், இழந்துபோன அவர்களின் கனவுகளையும் பிடிவாதத்தோடு எங்கள் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறேன்.

    இந்தக் கதைகளைப் படித்துவிட்டு உங்களின் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்வதும், மறந்துபோவதும் உங்களின் சுதந்திரம். நன்றி.

    பிரியங்களுடன்

    கவிப்பித்தன்

    தென்றல் இல்லம்,

    வசூர் அஞ்சல், வழி - பொன்னை,

    வேலூர் மாவட்டம்,

    தமிழ்நாடு - 632 514.

    பேச : 94434 30158, 89400 15102

    ***

    1. புதிய தரிசனம்

    அந்தப் பைத்தியக்காரியைப் பார்க்கப் பார்க்க ஆத்திரமாக வந்தது சங்கீதாவுக்கு. கடையில் கண்ணாடிப் பேழைக்குள் இருக்கும் ஜிலேபியை கண்காளாலேயே விழுங்கும் கிராமத்துச் சிறுவனைப்போல, இவளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்தப் பைத்தியத்தின் கண்கள் விரிகிறது.

    கொஞ்ச நாட்களாகவே தூங்கி எழுந்தால், அவளது கண்களில்தான் விழிக்க வேண்டியுள்ளது. மச மச இருட்டில், கொட்டாவி விட்டபடி சாணம் தெளிக்கும் இவளை ஒவ்வொரு நாளும் எதிரில் நின்று விழுங்கிவிடுவதைப்போலவே பார்க்கிறாள். மாலையில் வாசல் பெருக்கும்போதும் எதிரில் நிற்கிறாள்.

    அழுக்கு சிட்டம் கட்டிக்கொண்டு ஆலமரத்தில் தொங்கும் மெல்லிய விழுதுகளைப்போல தலையில் தொங்கும் நான்கைந்து சடை முடிகளும், கருணைக்கிழங்கைப்போல உருண்டு திரண்ட கைகளும், அலங்கோலமாய் ரவிக்கைக்குமேல் சுற்றிய சேலையுமாய் வீட்டுக்கு எதிரில் நிற்கிற அவளைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் கோபம் குப்பென்று பற்றிக் கொள்கிறது சங்கீதாவுக்கு.

    ஆயிரமாயிரம் கனவுகளோடு சுகுமாரனை கைப்பிடித்து, நகரத்தில் இருந்து இந்தக் கிராமத்துக்கு வாழ வந்த அவளுக்கு கிராமத்து வாழ்க்கையைப் பழக முதல் தடுமாற்றமாகத்தான் இருந்தது.

    பட்டிக்காட்டுக்காடி போற... போ போ... இனிமே கோவணாண்டிகளும், பொகலக் கட்ட பொம்பளிங்களும்தான் உனுக்கு பிரண்டுங்க என்று கிண்டலடித்தனர் தோழிகள்.

    நேர் வகிடும், சிரிக்கும் உதடுகளும், மனசின் வேர்வரை ஊடுறுவும் பார்வையுமாய் பெண் பார்க்க வந்த சுகுமாரனை பார்த்ததுமே பிடித்துவிட்டது சங்கீதாவுக்கு. அவனது அரசு வேலை இவளது அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது.

    சதா இரைச்சலும், வாகன நெரிசலும், மூச்சை திணற வைக்கும் புகையுமாய் இருந்த நகரத்தின் பரபரப்புக்குத் தொடர்பே இல்லாமல், சுற்றிச் சுற்றி எங்கு பார்த்தாலும் மரங்களும், செடிகளும், கொடிகளுமாய் இருந்தது இந்த ஊர்.

    வெள்ளை வெள்ளையாய் நூறு நூறு லோலாக்குகளை காதில் மாட்டித் தொங்கவிட்டுக்கொண்ட சந்தோசத்தில் காற்றோடு நடனமாடும் எள்ளுச் செடிகளும், ஆயிரமாயிரம் சிவப்புப் பச்சை நிறக்குடைகளை மாட்டி வைத்ததைப் போன்று சரம் சரமாய் தொங்கும் மிளகாய்ப் பழங்களும், காய்களும், நட்சத்திர மூக்குத்திப் போன்ற வெண்ணிற மிளகாய்ப் பூக்களும், இலை அதிகமா, காய் அதிகமா எனக் கணக்கிட முடியாதபடி அடர் பச்சை பெட்ரூம் விளக்குளைப் போல குலைகுலையாய்க் காய்த்துத் தொங்கும் எட்டிக்காய்களும்... பார்க்கப் பார்க்க ஆசை தீரவில்லை சங்கீதாவுக்கு.

    மின்சாரக் கம்பிகளில் ராணுவ அணிவகுப்பைப்போல ஒரே சீராக அமர்ந்து கதை பேசும் கருங்குருவிகளும், தத்தித்தத்தி நடக்கும் மைனாக்களும், பார்க்கப்பார்க்க அலுக்காத மரகதப் பச்சைக்கிளிகளும், தீபாவளி ராக்கெட்டுகளைப் போன்று வால் நீண்ட வால்குருவிகளும், நகரத்தில் காகங்களை மட்டுமே பார்த்துச் சலித்த சங்கீதாவுக்குப் பேரதிசயங்களாய்த் தெரிந்தன.

    இந்த அதிசயங்களில் திளைத்த சங்கீதாவுக்கு முதன் முதலாக அந்த விடியற்காலையில் இந்தப் பைத்தியத்தை வீட்டு வாசலில் பார்த்தபோது பாவமாகத்தான் இருந்தது. இதைப்போல பல ஆண், பெண் மனநோயாளிகளையும், பிச்சைக்காரர்களையும் நகரத்தின் தெருக்களில் இவள் நிறையவே பார்த்திருக்கிறாள்.

    ஆனால் சங்கீதாவை மட்டுமே இமை கொட்டாமல் பார்த்த இந்தப் பைத்தியத்தின் பார்வை இவளுக்குள் லேசான சந்தேகத்தை வரவழைத்தது. அதிகாலையில் வாசல் பெருக்கும்போது வந்தவள் வீட்டுக்கு எதிரிலேயே ஆணி அடித்து வைத்ததைப்போல ஒன்பது மணிவரை நின்றுகொண்டிருந்தது இவளிடம் ஒருவித அச்சத்தை விதைக்கத் தொடங்கியது.

    சுகுமாரனை அழைத்து வந்து அவளைக் காண்பித்தாள்.

    முனியம்மாவா... அது நம்ம பக்கத்து ஊருதான். சும்மா இப்டி எங்கனா வந்திருக்கும் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு பள்ளிக்குக் கிளம்பி விட்டான். அப்போதுதான் வயலில் இருந்து வீட்டுக்கு வந்தாள் மாமியார் சரோஜா.

    இன்னாடி முனிம்மா... தீர்ப்பாட்டா இங்க வந்து நின்னுகினு கீற... பில்லு கில்லு அறுக்கற வேலயில்லியா? என்று கேட்டாள்.

    ஒரு மர்மமான இளிப்பை மட்டுமே அவளுக்குப் பதிலாக்கியவள், அதற்குப்பிறகுதான் மனசேயில்லாமல் போவதுபோல அங்கிருந்து கிளம்பினாள்.

    மறுநாள் அதிகாலையில் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த சங்கீதா அதே கோலத்தில் அதே இடத்தில் மீண்டும் அந்த முனியம்மாவைப் பார்த்ததும் வந்த வேகத்திலேயே உள்ளே ஓடிப்போய் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

    நேரங்காலம் தெரியாமல் அவளின் கையைப் பிடித்து இழுத்த சுகுமாரன் அவளை தன் மார்பின்மீது சாய்த்து இறுக்கிக் கொண்டான்.

    இன்னா சங்கி... இன்னா கோழிக்குஞ்சி மாதிரி ஒடம்பு இப்டி வெடவெடன்னு நடுங்குது என்றான் கிரக்கத்தோடு.

    ஒன்னும் இல்ல... லேசா குளுர்து என்றாள்.

    குளுர்தா... இன்னும் நல்லா ஒட்டிக்க... நான் உன்ன ஒரே நிமிஷத்துல சூடேத்திட்றேங் என்று அவளை இன்னும் இழுத்து தனக்குள் புதைத்துக் கொண்டான்.

    வேறு நேரமாக இருந்தால் சினுங்கலுடன் அவனை உதறிவிட்டு, எழுந்து ஓடியிருப்பாள். ஆனால் அப்போது தாயின் இறக்கைகளுக்குள் பதுங்கும் கோழிக்குஞ்சைப்போல அவனுக்குள் பதுங்கினாள்.

    மாமியார் வாசல் தெளிக்கும் சத்தம் கேட்டதும் பதறி எழுந்து வெளியே ஓடினாள்.

    மீண்டும் அதே இடத்தில் நின்றிருந்த முனியம்மாவைப் பார்த்ததும் சட்டென்று நின்றாள்.

    இன்னாடி... முனிம்மா... இவ்ளோ காத்தால... இந்தக் குளுர்ல இங்க நின்னுகினு கீற...? என்றாள் மாமியார் சரோஜா.

    பொண்ண பாத்துட்டுப் போலாம்னு வந்தங் என்று சிரித்தாள்.

    பொண்ணா... எந்தப் பொண்ணு? என்றாள் சரோஜா புரியாமல்.

    எம் பொண்ணதான் என்றாள்.

    இன்னாடி சொல்ற... உம்பொண்ணா? என்று நெற்றியைச் சுருக்கினாள்.

    ம்கூம்... தெரியாதமாதிரி கேளு... உங்கூட்டுக்கு கல்யாணம் பண்ணிகினு வந்துகீதே... அதோ பின்னால நிக்கிது பாரு... அது எம் பொண்ணாமே என்றாள் முனியம்மாள்.

    காலையிலேயே சிரிப்பு வெடித்துக்கொண்டு கிளம்பியது சரோஜாவுக்கு. தண்ணீர் குண்டானை கீழே வைத்துவிட்டு குலுங்கிக்குலுங்கிச் சிரித்தாள்.

    இன்னாடி... கூத்து இது... இது உம் பொண்ணுனு யாரு சொன்னது? என்றாள் சிரிப்பு மாறாமல்.

    எங்கூர்ல எல்லோருந்தாஞ் சொல்றாங்க... பொறந்ததுமே வித்துட்டாங்களே... எம் பொண்ணு கொயந்திய... அதுதாங் இதுன்னு சொன்னாங்க... பாரு எவ்ளோ செவப்பா பாப்பாத்தி மாதிரி கீது... இது எம் பொண்ணுதான? என்று சங்கீதாவை கடித்து விழுங்கி விடுவதைப் போலப் பார்த்தாள்.

    அடடா... அதாங் நேத்துலருந்து இங்கியே சுத்திகினு கீறியா...?செரியாத்தாங் சொல்கிக்கீறாங்க... நல்லாப்பார்த்துட்டுப் போ உம் பொண்ண என்று குறும்பாகச் சிரித்தாள் சரோஜா.

    இந்த உரையாடலைக் கேட்டு மிரண்டுபோய் மலங்க மலங்க விழித்தாள் சங்கீதா வெளியே எழுந்து வந்து நடந்ததைக் கேட்ட சுகுமாரனுக்குள் எக்காளமிட்டுக்கொண்டு வெடித்தது சிரிப்பு.

    ஆமாமா... இது உனுக்குப் பொறந்த பொண்ணுதாங்... நல்லாப்பாரு... உன்ன மாதிரியே கண்ணு, மூக்கு, கை வெரலு கூட உன்னுது மாதிரியே கீது பாரு என்று சொல்லிவிட்டு சங்கீதாவைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான்.

    தலை கால் புரியாத குழப்பத்தில் துடித்தாள் சங்கீதா. மாமியாரும், கணவனும் சிரிக்கிற சிரிப்புகள் அவளுக்குள் கோபத்தைக் கிளறின. மீண்டும் வீட்டுக்குள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

    இர்ந்து நல்லாப் பார்த்துட்டுப்போ முனிம்மா... உம் பொண்ணுக்கு சீர் எதுவும் எட்த்துகினு வர்ரீயா? என்ற மாமரியாரின் கிண்டலான வார்த்தைகள் சங்கீதாவுக்குள் முளைத்த கோபச்செடிக்கு நீர் ஊற்றியது.

    'அதுதாங் பைத்தியமா இருக்கும்னு நெனச்சா... இதுங்க ரெண்டும் அதவிட பெரிய பைத்தியங்களாட்டம் இளிக்குதுங்களே' என்று நினைத்துக் கொண்டவளுக்கு நெஞ்சு படபடத்தது.

    எந்த வேலையிலும் மனசு ஒட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் அன்று முழுவதும்.

    அதற்கு மறுநாள் காலையிலும் முனியம்மாவின் முகத்தில்தான் விழித்தாள். விழுங்கி விடுவதைப் போன்ற அதே பார்வை. தண்ணீர் பக்கெட்டை சடாரென கீழே வைத்துவிட்டு உள்ளே ஓடிப்போய் கட்டிலில் உட்கார்ந்தவளை, வழக்கம்போல இழுத்தான் சுகுமாரன். அவன் கைகளை வேகமாகத் தள்ளினாள்.

    இன்னா சங்கி... இன்னா காலையிலியே டென்சனா கீற...? என்று கொஞ்சலாக அவளை மீண்டும் இழுத்தான்.

    ம்... அந்தப் பைத்தியம் காலயிலியே வந்து நின்னுகினு இருக்கு என்றாள்.

    யாரு... உன்னப் பெத்த அம்மாவா? என்று கண்ணடித்தான்.

    கோபமாக அவனைத் தள்ளிவிட்டு எழுந்து வெளியே வந்தாள். இவள் வைத்துவிட்டு வந்த தண்ணீரில் சாணம் கரைத்து வாசல் தெளித்த சரோஜா, இன்னாடி முனிம்மா... இன்னிக்கினா உம்பொண்ணுக்கு எதுனா சீர் வாங்கிகினு வந்தியா? என்று கேட்டாள் சிரித்துக்கொண்டே.

    இப்ப எங்க வாங்கியார்து...? வெள்ளிமல தேரு திருநாவுலதான் வளிலு, பொட்டு, கண்ணு மையி எல்லாம் வாங்கியார்ணும், எங்கண்ணன துட்டு கேட்டங்... அப்போ குடுக்குறேன்னு சொல் கீது என்றாள் நிஜமான அக்கறையோடு.

    சங்கீதாவுக்கு அங்கே நடப்பது எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அன்று இரவு சங்கீதாவை தன் மீது கிடத்திக்கொண்டு அவளது பஞ்சு போன்ற வெளிர் முதுகை வருடியபடி ஒரு கதையைப் போல சுகுமாரன் சொல்லத் தொடங்கினான்.

    முனியம்மா பக்கத்தில் உள்ள மோட்டூரில்தான் பிறந்தாள். பிறந்ததில் இருந்தே புத்தி வளராததால் பள்ளிக்கூடம் பக்கம் அனுப்பாமல் எருமை மாடுகளோடு அனுப்பி விட்டார் அவள் அப்பா குள்ளப்ப ரெட்டியார். ஏரிக்கரை, வயல் வரப்புகள், காட்டுக்கொள்ளாபுரியம்மன் கோயில் மைதானம் என்று எருமை மாடுகளுடனே வளர்ந்தாள். புத்திதான் வளரவில்லையே தவிர, வயசுக்கேற்ற உடம்பு மதமதன்னு வளர்ந்தபோது ஊர் வேட்டிகளின் கண்களில் காமம் துளிர்க்கத் தொடங்கியது.

    அவள் கூடப்பிறந்த மூன்று அண்ணன்களில் இரண்டு பேர் அவளை எருமை மேய்க்கவும், புல் அறுக்கவும், சாணி வாரவும் சதா நேரமும் விரட்டிக் கொண்டே இருக்க, இளைய அண்ணன் சபாரத்தினம் மட்டும்தான் அவளுக்கு ராத்திரியில் சாப்பிட களி போட்டு வைப்பது, மாடு மேய்க்கிற இடத்துக்கு கூழ் கொண்டுபோய் கொடுப்பது என்று பாசத்தைக் காட்டினான்.

    ஊரின் இளசுகளும், சில பெரிசுகளும் முனியம்மாவை நோட்டம் விடுவதாக ஊரில் பேசிக் கொண்டபோது, அவளுக்குத் திருமணம் செய்து

    Enjoying the preview?
    Page 1 of 1