Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idukki
Idukki
Idukki
Ebook221 pages1 hour

Idukki

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வழித்துணைத் தோழமை

சிறுகதை என்பது மொழியின் ஓவியம். புறக்காட்சிகளை மட்டுமல்ல. அகமன உணர்ச்சிகளையும் இணைத்து, குழைத்து வரைகிற ஓவியம். கவிதை எழுதித் தேறியவர்கள் சிறுகதை எழுதினால், நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

கவிப்பித்தனும் கவிதை எழுதித் தேறிய பிறகு சிறுகதைக்குள் மகா வலிமையோடு பிரவேசித்திருக்கிறார். மிகப் பெரிய வெற்றியாளராக கொடி பறக்க விடுகிறார். இவருடைய சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையானதாக இருக்கிறது. எந்த ஒரு சிறுகதையும் வெறும் சிறுகதையாக இல்லை. ஏதோ ஓர் உலகத்தை திறந்து காட்டி விடுகிறது.

கவிப்பித்தனின் 'இடுக்கி’ என்ற இந்தத் தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள் என்னைப் பிரமிக்க வைக்கின்றன.

அழகு மொழியில் எழுதாமல், பழகு மொழியில் எழுதுகிற இந்தப் பாங்கே மிகச்சிறப்பு. வலிமைமிகு எளிய மொழியில் எழுதுகிறார். வாசிக்கத் துவங்குகிறவரின் விரல் பற்றி, புன்னகையோடு தோளில் கைபோட்டு... அழைத்துச் சென்று புது உலகத்துக்குள் விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். கவிப்பித்தனின் கதை உலகம் வாசகரின் புது உலகமாக இடம் மாறி விடச் செய்வதில்தான், பழகு மொழியின் அழகியல் வெற்றிகரமாக செயல்பட்டிருக்கிறது. ‘தேய்மானம்' என்ற முதல் சிறுகதை தனித்துவப் புதுமையோடு தம்மை திறக்கிறது.

ஒரு கவிஞரின் பார்வையில் தெறித்த ஒரு விஷயம் நினைவுகளாக நீண்டு… பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து விட்டு... மனப்பிறழ்வு நிலைக்காளாகி (வேலையின்மையால்) வாழ்வைத் தொலைத்த பிறிதொரு கவிஞரின் கனத்த சோகத்தைச் சொல்லுகிறது.

நெஞ்சுள்ள எவனும் நெக்குருகிப்போகிற மிகப் பெரிய வலியைத் தருகிறது. 'வாய்க்கரிசி'. அறுவடையந்திரம் கிராமத்தின் வாழ்வைப் பிடுங்கிக் கொண்டதை... வாய்க்கு ருசியான உணவைப் பிடுங்கிக் கொண்டதை.... மட்டுமா சொல்கிறது? வாசிக்கிறபோதே மனம் நடுங்கிப் போய்விட்டேன் ‘அய்யோ. அய்யோ’ என்று மனசு கிடந்து தவிக்கத் துவங்கி விட்டது. வாசித்து முடிக்கிறபோது. கிழிந்துபோன இதயத்தின் குருதி வழிகிறது.

‘சாமிப்பன்னி' வித்தியாசமான பண்பாட்டுச் சிறுகதை. கிராமத்து வியர்வை மக்களின் குல தெய்வ வழிபாட்டுப் பண்பாட்டை விவரிக்கிறது. ஒரு வட்டாரத்து மக்களின் வலிகளையும் மகிழ்ச்சியையும், கொண்டாட்ட குதூகலத்தையும், நம்பிக்கைகளையும் சொல்லிச் செல்கிறது. உழைப்பாளி மக்களின் வழிபாட்டுப் பண்பாடு என்கிற பேருலகை திறந்து காட்டுகிற சிறுகதை. சாமிப்பன்றியை வளர்க்கிற குப்பனின் மன உலக ஈரத்தைச் சொல்வது, தனிச்சுகம். 'மறுபாதி' ஒரு தனித்துவம். நகரத்தின் கண்களோடு கிராமத்தை உணர்த்துகிற பாணி. விவசாய உழைப்பில் ஈடுபடுகிற சிறிய விவசாயிகளுக்கிடையே நிலவுகிற சமூக உறவுகளையும், உழைப்புக்களையும் உறவுகளையும்... சித்தரிக்கிறபோதே... ஆண்-பெண் வித்தியாசம் கிராமத்தில் நிலவுகிறது என்கிற ஓருலகத்தை திறந்து காட்டுகிறது.

தொகுப்பின் தலைப்புக் கதையான 'இடுக்கி’ காளை மாடு காயடிக்கப்படுகிற சம்பவத்தை காட்சிப்படுத்துகிறது. அந்த சம்பவத்தை சுற்றி நிகழும் பல்வேறு மனித உலகம். பேரனின் மனக்கசிவுகள் எனும் ஒரு கோணம். ‘என்ன இது. என்ன இது' என்று புதிர்த் தன்மையோடு புலம்புகிற பேத்தியின் மன உலகம். கன்றுகளைப் பிடித்து, வளர்த்து, ஆளாக்கி, வேலைக்கு வசக்கி விற்றுப் பணம் பார்ப்தை தொழிலாகக் கொண்டவரின் வாழ்வுலகம். இரு மனைவிகள். உள்ளூரில் ஒரு கள்ளத்தொடர்பு, ஊர் ஊருக்கு வைப்பாட்டிகள். கட்டுப்பாடற்ற காமத்திணவோடு திரிகிற அவர்தான். காளையின் காமத்தை இடுக்கியால் கத்தரிக்கிறார். 'இதேபோல... நாளை குழந்தைகளுக்கும் காயடிக்கப்படுமோ?' என்ற வரியில் எதிர்காலம் குறித்த ஒரு விதமான அச்ச உலகம் ஓர் அதிர்வுடன் நமக்குள் விரிகிறது.

பெரும்பான்மையான சிறுகதைகள், கிராம வாழ்வியல் பண்பாட்டிலேயே வேரடித்திருக்கின்றன. கிராமத்து வாழ்வியலில் நிகழ்கிற வழிபாடுகள், உழைப்பு நடவடிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், மனித உறவுகளின் பன்முகத்தன்மைகள் சகலமும் இவரது கதைகளின் வழியாக நமக்குள் திறந்து கொள்கின்றன.

எனக்கு இவரது கதைகள் யாவும் பிடித்திருக்கின்றன. பிரமிப்பு ஏற்படுத்துகின்றன.

இதழ்களில் பிரசுரமாகாத கதைகள் என்று எண்ணுகிறேன். அதனாலேயே அதன் சுதந்திரத் தன்மையையும் சுயேச்சைத் தன்மையையும் உணர முடிகிறது. நீங்களும் படியுங்கள். உங்களுக்கும் எனது அனுபவமே நிகழும். கவிஞர் கதாசிரியராகிறபோது வெல்வார் என்கிற எனது மதிப்பீடு மீண்டும் ஒருமுறை இவர் மூலம் நிரூபணம் பெறுகிறது.

இட்டுக்கட்டுகிற செயற்கைத் தன்மையும். பொய்யான புனைவு முயற்சிகளும் துளிகூட இல்லை. யதார்த்தவாதச் சிறுகதை எழுத்தாளர்கள் படை நன்று பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நான் ஒருவன். எனது வழித்துணைத் தோழமையாக கவிப்பித்தனும் உடன் வருகிறார்.

என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127804437
Idukki

Read more from Kavipithan

Related to Idukki

Related ebooks

Reviews for Idukki

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idukki - Kavipithan

    http://www.pustaka.co.in

    இடுக்கி

    Idukki

    Author:

    கவிப்பித்தன்

    Kavipithan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kavipithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வழித்துணைத் தோழமை

    மண்ணின் இராகங்கள்

    தேய்மானம்

    வாய்க்கரிசி

    சாமிப்பன்னி

    மறுபாதி

    பழஞ்சோறும் தம்புள்ஸ் ராசேந்திரனும்

    (A+B)2 = ரேவதி

    இடுக்கி

    தேவதைப் பிசாசு

    குருத்துக்கள்

    இரத்தக்காட்டேறிகள்

    சந்தேக சுந்தரம்

    சில களைகளும் ஒரு பயிரெடுப்பும்

    நாகூர் கடா

    பிணங்கொத்திகள்

    வழித்துணைத் தோழமை

    மேலாண்மை பொன்னுச்சாமி

    சிறுகதை என்பது மொழியின் ஓவியம். புறக்காட்சிகளை மட்டுமல்ல. அகமன உணர்ச்சிகளையும் இணைத்து, குழைத்து வரைகிற ஓவியம்.

    கவிதை எழுதித் தேறியவர்கள் சிறுகதை எழுதினால், நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். கவிஞர் கந்தர்வன் கதை எழுதியபோது, கதையின் மொழியே மிக நுட்பமான தொனியில் இருந்தது. கல்யாண்ஜி என்ற கவிஞர் வண்ணதாசனாக சிறுகதையில் வென்று நிற்கிறார்.

    கவிப்பித்தனும் கவிதை எழுதித் தேறிய பிறகு சிறுகதைக்குள் மகா வலிமையோடு பிரவேசித்திருக்கிறார். மிகப் பெரிய வெற்றியாளராக கொடி பறக்க விடுகிறார்.

    இவருடைய சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையானதாக இருக்கிறது. எந்த ஒரு சிறுகதையும் வெறும் சிறுகதையாக இல்லை. ஏதோ ஓர் உலகத்தை திறந்து காட்டி விடுகிறது.

    கவிப்பித்தனின் 'இடுக்கி’ என்ற இந்தத் தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள் என்னைப் பிரமிக்க வைக்கின்றன.

    அழகு மொழியில் எழுதாமல், பழகு மொழியில் எழுதுகிற இந்தப் பாங்கே மிகச்சிறப்பு. வலிமைமிகு எளிய மொழியில் எழுதுகிறார். வாசிக்கத் துவங்குகிறவரின் விரல் பற்றி, புன்னகையோடு தோளில் கைபோட்டு... அழைத்துச் சென்று புது உலகத்துக்குள் விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்.

    கவிப்பித்தனின் கதை உலகம் வாசகரின் புது உலகமாக இடம் மாறி விடச் செய்வதில்தான், பழகு மொழியின் அழகியல் வெற்றிகரமாக செயல்பட்டிருக்கிறது.

    ‘தேய்மானம்' என்ற முதல் சிறுகதை தனித்துவப் புதுமையோடு தம்மை திறக்கிறது.

    ஒரு கவிஞரின் பார்வையில் தெறித்த ஒரு விஷயம் நினைவுகளாக நீண்டு… பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து விட்டு... மனப்பிறழ்வு நிலைக்காளாகி (வேலையின்மையால்) வாழ்வைத் தொலைத்த பிறிதொரு கவிஞரின் கனத்த சோகத்தைச் சொல்லுகிறது.

    நெஞ்சுள்ள எவனும் நெக்குருகிப்போகிற மிகப் பெரிய வலியைத் தருகிறது. 'வாய்க்கரிசி'.

    அறுவடையந்திரம் கிராமத்தின் வாழ்வைப் பிடுங்கிக் கொண்டதை... வாய்க்கு ருசியான உணவைப் பிடுங்கிக் கொண்டதை.... மட்டுமா சொல்கிறது?

    ரமேசு என்கிற அந்தச் சிறுவனின் உயிரையும் அல்லவா பிடுங்கிக் கொள்கிறது.

    வாசிக்கிறபோதே மனம் நடுங்கிப் போய்விட்டேன் ‘அய்யோ. அய்யோ’ என்று மனசு கிடந்து தவிக்கத் துவங்கி விட்டது. வாசித்து முடிக்கிறபோது. கிழிந்துபோன இதயத்தின் குருதி வழிகிறது.

    ‘சாமிப்பன்னி' வித்தியாசமான பண்பாட்டுச் சிறுகதை. கிராமத்து வியர்வை மக்களின் குல தெய்வ வழிபாட்டுப் பண்பாட்டை விவரிக்கிறது. ஒரு வட்டாரத்து மக்களின் வலிகளையும் மகிழ்ச்சியையும், கொண்டாட்ட குதூகலத்தையும், நம்பிக்கைகளையும் சொல்லிச் செல்கிறது. உழைப்பாளி மக்களின் வழிபாட்டுப் பண்பாடு என்கிற பேருலகை திறந்து காட்டுகிற சிறுகதை.

    சாமிப்பன்றியை வளர்க்கிற குப்பனின் மன உலக ஈரத்தைச் சொல்வது, தனிச்சுகம்.

    'மறுபாதி' ஒரு தனித்துவம். நகரத்தின் கண்களோடு கிராமத்தை உணர்த்துகிற பாணி. விவசாய உழைப்பில் ஈடுபடுகிற சிறிய விவசாயிகளுக்கிடையே நிலவுகிற சமூக உறவுகளையும், உழைப்புக்களையும் உறவுகளையும்... சித்தரிக்கிறபோதே... ஆண்-பெண் வித்தியாசம் கிராமத்தில் நிலவுகிறது என்கிற ஓருலகத்தை திறந்து காட்டுகிறது.

    தொகுப்பின் தலைப்புக் கதையான 'இடுக்கி’ காளை மாடு காயடிக்கப்படுகிற சம்பவத்தை காட்சிப்படுத்துகிறது. அந்த சம்பவத்தை சுற்றி நிகழும் பல்வேறு மனித உலகம்.

    பேரனின் மனக்கசிவுகள் எனும் ஒரு கோணம். ‘என்ன இது. என்ன இது' என்று புதிர்த் தன்மையோடு புலம்புகிற பேத்தியின் மன உலகம்.

    கன்றுகளைப் பிடித்து, வளர்த்து, ஆளாக்கி, வேலைக்கு வசக்கி விற்றுப் பணம் பார்ப்தை தொழிலாகக் கொண்டவரின் வாழ்வுலகம். இரு மனைவிகள். உள்ளூரில் ஒரு கள்ளத்தொடர்பு, ஊர் ஊருக்கு வைப்பாட்டிகள். கட்டுப்பாடற்ற காமத்திணவோடு திரிகிற அவர்தான். காளையின் காமத்தை இடுக்கியால் கத்தரிக்கிறார்.

    'இதேபோல... நாளை குழந்தைகளுக்கும் காயடிக்கப்படுமோ?' என்ற வரியில் எதிர்காலம் குறித்த ஒரு விதமான அச்ச உலகம் ஓர் அதிர்வுடன் நமக்குள் விரிகிறது.

    கிராமத்து மண்ணின் பண்பாட்டு வாழ்க்கையும், வியர்வை மனிதர்களின் சமூக உறவும் அவர்கள் மொழியிலேயே நுட்பமான உணர்வுகளோடும், அடர்த்தியான சமூகப் பார்வையோடும் சொல்ல முடிகிறது கவிப்பித்தனுக்கு. அதே நேரத்தில் நகரத்து வாழ்வின் மன உலகத்தையும் அதற்குரிய நுட்ப நளினத்துடன் சொல்ல முடிகிறது.

    அறிந்த - உணர்ந்த - வாழ்வுலகத்தையும் கருத்துலகத்தையும் மட்டும் உண்மையுடன் பகிர்கிற நேர்மை, இவரிடம் இருக்கிறது. எளிய மொழியின் சத்தியம் இருக்கிறது. வாழ்வை முன்னோக்கிப் பார்க்கிற முற்போக்கான சமுதாய நோக்கு இருக்கிறது. 'ரத்தக்காட்டேறிகள்’ போன்ற தொழிலாளர் உலகம் பற்றியும் எழுதுகிற அனுபவத் தேர்ச்சியும் இவரிடம் இருக்கிறது.

    பெரும்பான்மையான சிறுகதைகள், கிராம வாழ்வியல் பண்பாட்டிலேயே வேரடித்திருக்கின்றன. கிராமத்து வாழ்வியலில் நிகழ்கிற வழிபாடுகள், உழைப்பு நடவடிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், மனித உறவுகளின் பன்முகத்தன்மைகள் சகலமும் இவரது கதைகளின் வழியாக நமக்குள் திறந்து கொள்கின்றன.

    எனக்கு இவரது கதைகள் யாவும் பிடித்திருக்கின்றன. பிரமிப்பு ஏற்படுத்துகின்றன.

    'கூரியரில் அனுப்பிய கதைகள் வந்து விட்டனவா' என்று இவர் தொலைபேசியில் என்னிடம் கேட்கிறபோது, 'இவரது கதைகளின் தரம் இப்படித்தான் இருக்கும்' என்றொரு யூக மதிப்பீடு இருந்தது.

    கையில் வந்து சேர்ந்த கதைகள் எனக்குள் இறங்கிற்று. ஏர்க்கலப்பையின் கொழுவாக என்னைக் கீறிப் பிளந்து கொண்டு நகர்ந்தது.

    பழைய யூகமதிப்பீடு தகர்ந்து நொறுங்கிய இடத்தில் பிரமிப்பு, ஆச்சரியம் என்கிற புதிய மாளிகை உதயமாகியிருந்தது.

    இதழ்களில் பிரசுரமாகாத கதைகள் என்று எண்ணுகிறேன். அதனாலேயே அதன் சுதந்திரத் தன்மையையும் சுயேச்சைத் தன்மையையும் உணர முடிகிறது.

    நீங்களும் படியுங்கள். உங்களுக்கும் எனது அனுபவமே நிகழும். கவிஞர் கதாசிரியராகிறபோது வெல்வார் என்கிற எனது மதிப்பீடு மீண்டும் ஒருமுறை இவர் மூலம் நிரூபணம் பெறுகிறது.

    தமிழ்த்தாய் இவரை உச்சி முகர்ந்து, முத்தமிட்டு ஆசீர்வதித்து அரவணைத்துக் கொள்வாள்.

    தனக்கு அனுபவமான நிகழ்வுலகங்களை மட்டுமே நம்முடன் பகிர்ந்து கொள்ள முனைகிற இவரது நேர்மை என்னைக் கவர்கிறது.

    இட்டுக்கட்டுகிற செயற்கைத் தன்மையும். பொய்யான புனைவு முயற்சிகளும் துளிகூட இல்லை.

    மண்ணில் விழாத மழைத்துளிபோல சுத்தமாக இருக்கிற இதன் வீர்யமும், ஆற்றலும் மிகப்பெரிது.

    யதார்த்தவாதச் சிறுகதை எழுத்தாளர்கள் படை நன்று பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நான் ஒருவன். எனது வழித்துணைத் தோழமையாக கவிப்பித்தனும் உடன் வருகிறார்.

    தமிழ்த் தாயோடு சேர்ந்து நீங்களும் அவரை வாழ்த்துங்கள்.

    நன்றி!

    என்றும் உங்கள்

    மேலாண்மை பொன்னுச்சாமி

    *****

    மண்ணின் இராகங்கள்

    முகில்

    கவிஞராகவும், வீதி நாடகக் கலைஞராகவும், பத்திரிக்கையாளராகவும் அறியப்பட்ட கவிப்பித்தன், இத்தொகுப்பின் வழி ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். எழுதுகிறவர்களில் பெரும்பாலோர் கவிதையில் தொடங்கி ஒரு கட்டத்துக்குப் பிறகு வேறு வடிவத்தில் தடம் பதிக்கிறார்கள். இவரும் அப்படித்தான். மாணவப் பருவத்திலிருந்து நகரத்தோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள இவர் நகரமயமாகாமலும் நுகர்வியத்தில் கரையாமலும் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. படிப்பும் சான்றிதழ்களும் நிறைய கைவசமிருந்தும் மாதச் சம்பளக்காரனாக மாறிவிடாமல், தான் பிறந்த மண்ணோடு உள்ள உறவை தக்க வைத்துக் கொண்டே ஒரு நேர்மையான பத்திரிக்கையாளனாக வாழ்வது ஒரு பெரிய சவால்தான்.

    விவசாயத்தை நம்பி மோசம் போனதால், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து பனிரெண்டாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை, அண்மையில் மகசேசே விருது பெற்ற பத்திரிக்கையாளர் சாய்நாத் பதிவு செய்துள்ளார். கவிப்பித்தனோ கிராமப்புற மக்களின் வாழ்க்கையை கதையாக்கியுள்ளதன் மூலம் மண்ணின் இராகங்களை இசைத்துள்ளார்.

    'பிணங்கொத்திகள்' கதை சராசரி மக்களுடைய அன்றாட வாழ்வின் அவலங்களைப் பேசுவதோடு, பாதிக்கப்பட்டவர்களின் மடியிலேயே கை வைக்கும் காவலர்களின் பணிக் கலாச்சாரத்தின் மீது வலுவான கேள்விகளை எழுப்புகிறது. கவிப்பித்தனின் காட்சிப்படுத்தும் திறனுக்கு இக்கதையை உதாரணமாகக் கூறலாம். 'சாமிப்பன்னி', 'நாகூர் கடா' போன்ற கதைகளின் மூலம் தமிழ்க் கலாச்சார வாழ்வின் சில நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்களின் மீது கேள்விகளை எழுப்புகிறார். பன்னெடுங்காலமாக கட்டியமைக்கப்பட்டு வந்த பெரும்பகுதி மக்களுடைய வாழ்வாதாரங்கள் நவீனமயத்தால் சிதறுண்டு போகும் சோகம்தான் 'வாய்க்கரிசி' கதை. 'மறுபாதி' கதை பெண்களுக்கு இச்சமூகம் தந்திருக்கிற இடத்தைப் பற்றியது. வீட்டின் சமையலறையில் முடக்கப்பட்ட பெண்களை ஊருக்குள் இருக்கும் சேரிக்காரர்கள் மாதிரி என்று அடையாளப்படுத்துவது தந்தை பெரியாரை நினைவூட்டுகிறது. 'தேய்மானம்' கதையின் ஒரு இடத்தில், 'எதுவுமே இருந்து இல்லாமல் போகிறபோதுதானே அதன் இழப்பு உரைக்கிறது' என்கிறார். இந்தச் சொற்றொடர், இருப்பதை ஏற்றுக் கொள்கிற, இருந்ததை இழக்க மறுக்கிற சராசரி மனிதர்களின் மன அமைப்பைக் குறித்து வாசகனை நிறைய யோசிக்க வைக்கும்.

    'நினைவுகளின் ஜால அடுக்குகளிலிருந்து துளித்துளியாய் கசியும் ரத்தத் தெளிப்புகளின் வீச்சத்தின் உச்சியைத் தொட்டு முகர்ந்தால் தெரியும் என் தாத்தாவின் வசீகர வியர்வை நாற்றம்' போன்ற வார்த்தை ஜாலங்களுக்குள் இவர் எழுத்து சிக்கிக் கொள்ளவில்லை. தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையை ஜோடனையற்று எழுதுவதால் சராசரி மக்கள் மொழியின் இயல்பு நடை இவருக்கு வாய்த்திருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வார்ப்பாக இவர் திகழ்வதும் இதற்கொரு முக்கிய காரணம்.

    மிகுந்த அன்புடன்

    முகில்

    *****

    நன்றி

    - கவிஞர் முகில் - மேலாண்மை பொன்னுச்சாமி - கமலாலயன் - அழகிய பெரியவன் - கம்பீரன் - ச.சுகிர்தராணி - முல்லைவாசன் - வைகறைச்செல்வன் - சிலுப்பன் - கு.செந்தமிழ்ச்செல்வன் - நா.ஜெகசிற்பியன் - பதிப்பாளர் பா.உதயகண்ணன் - சென்னை ஆப்செட் ஈ.சுதீஷ்குமார்.

    - மு.ஜெய்குமார் - பாகவெளி கோ.ஆண்டி - ஆ.ருத்ரமூர்த்தி - திலகதாசன் - விகர்ணன் - அமுதவாசன் - மு. அமுதா - ஏ.ஆர்.லட்சமணன் - கி.சுதாகர் - எம்.ஏ.பால்ராஜ் - தையலர் கோடியூர் காண்டீபன் - பாகவெளி பி.வி.மூர்த்தி - சி.நேரு - வழக்குரைஞர் சி.டி.ஜீவகசாமி - பொன்னை மா.குமார் - எஸ்.என்.பாளையம் ஜி.சேகர் - கோ.பழனி.

    - என் துணைவி தே.மஞ்சுளா - என் பெற்றோர் மு.கண்ணன், சக்கரவேணி அம்மாள் - உடன்பிறப்புகள் - உறவினர்கள் - நண்பர்கள்.

    - சில கதைகளை வெளியிட்ட இதயம் பேசுகிறது - தமிழ் அரசி - மக்கள் புது முரசு.

    *****

    தேய்மானம்

    இப்போது அந்த அறிவிப்புப் பலகையை நிரந்தரமாய்க் காணவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பேருந்தில் சன்னலோர இருக்கையிலமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டு, அந்தப் பாலத்தைக் கடக்கிறபோது, எதுவோ ஒன்று குறைவது போல் பட்டது. யோசித்தபோது சட்டென்று உரைத்தது, 'அடடே அந்தப் பலகையைக் காணலயே'.

    அப்போதைக்கு அதைப் பெரிதாய் நினைக்கவில்லை. பலகை பழையதாகியிருக்கலாம், மாற்றி வைப்பார்கள் என நினைத்துக் கொண்டேன். ஆனால் நேற்று இந்த இராணிப்பேட்டை கிளை அலுவலகத்துக்கு மாற்றலாகி வந்து பணியில் சேர்ந்துவிட்டு, மாலை வீடு திரும்புகையில் மீண்டும் கவனித்தேன். பலகையைக் காணவில்லை.

    அது என்ன பலகை 'அத்தனை முக்கியமானது' என நீங்கள் நினைக்கலாம். விசயமிருக்கிறது. மிகவும் வேடிக்கையான அல்லது வேதனையான பலகை அது.

    'இங்கே கவிதை பாடல் எழுதித் தரப்படும்' என்கிற அறிவிப்பு இருந்த பலகை அது. உங்களுக்கே படிக்கிறபோது ஒரு மாதிரியாக இருக்கிறதல்லவா? எனக்கும் அப்படித்தானிருந்தது முதலில்.

    ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால், நான் விடுதியில் தங்கி, செய்யாறு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. முதலாம் ஆண்டு படிக்கிறபோது, என்னோடு அறையில் தங்கிப் படித்த பக்கத்தூருக்காரன் தியாகுதான் அதைக் காட்டினான்.

    அங்கப்பார்றா... எவனோ போர்டு வெச்சிருக்கான். குரலில் கிண்டல் வழிந்தது. அவனுக்கு எல்லாமே கிண்டல்தான். அப்போதுதான் பார்த்தேன் அதை.

    இராணிப்பேட்டையைத் தாண்டி, நவல்பூருக்கும் காரை கூட்டு ரோட்டுக்குமிடையிலுள்ள ரயில் பாலத்தை ஒட்டியிருக்கிற ஒரு குடிசையின் முதுகில் இருந்தது அந்தப் பலகை.

    அநேகமாய் காலி எண்ணை டின்னை உடைத்து சாயம் பூசி எழுதியிருக்கலாம். கோணல் மாணலான எழுத்து. நிச்சயமாய் ஓவியரால் எழுதப்பட்டிருக்காது. சம்மந்தப்பட்ட நபரோ அல்லது அவருக்குத் தெரிந்தவரோ பிரஷ் பிடித்தாலே நடுங்குகிற கைகளால் எழுதியிருக்க வேண்டும். அதை ஒரு கட்டையில் அடித்து கூரையின் முதுகில் சொருகியிருந்தார்கள்.

    நண்பனின் சிரிப்பு என்னை உசுப்பிவிட்டது. நானும் கவிதை என்று

    Enjoying the preview?
    Page 1 of 1