Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deivam Nindru Kollum
Deivam Nindru Kollum
Deivam Nindru Kollum
Ebook145 pages47 minutes

Deivam Nindru Kollum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'பொய்+பொய் = மகிழ்ச்சி' இச்சிறுகதையில் சங்க இலக்கியத்தில் இடம் பெறும் காதல் கணவனைப் போல், மணிகண்டன் தன் மனைவி உஷாவிற்கு விட்டுக்கொடுத்துத் தன்னுடைய பசியைப் பொறுத்துக்கொண்டு, சாப்பிட்டதாகக் கூறி, அவளுக்கு உணவளிக்கும் அன்பினையும், 'தெய்வம் நின்று கொல்லும்' இச்சிறுகதையில், ஆசிரியர்களின் நலனுக்காக, முதல்வர் பெருமாள் ஏற்படுத்திக் கொடுத்த திட்டத்தை, தீனதயாளன் நடைமுறைப்படுத்தியது எப்படி? அவற்றால் அவனுக்கு கிடைத்தது என்ன? என்பதையும் இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் காண வாசிப்போம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580167209966
Deivam Nindru Kollum

Read more from Porkizhi Kavingar Azhagu Sakthikumaran

Related to Deivam Nindru Kollum

Related ebooks

Reviews for Deivam Nindru Kollum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deivam Nindru Kollum - Porkizhi Kavingar Azhagu Sakthikumaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தெய்வம் நின்று கொல்லும்

    (சிறுகதைகள்)

    Deivam Nindru Kollum

    (Sirukathaigal)

    Author:

    பொற்கிழிக் கவிஞர் அழகு சக்திகுமரன்

    Porkizhi Kavingar Azhagu Sakthikumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/porkizhi-kavingar-azhagu-sakthikumaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    1. பொய் + பொய் = மகிழ்ச்சி

    2. தெய்வம் நின்று கொல்லும்

    3. பயணம் தந்த பரிசு

    4. தோழா! தோழா!

    5. நவகோள்கள்

    6. நன்றிக்கடன்

    7. காதல் தேசம்

    8. தாய் வீடு

    9. குல தெய்வம்

    10. விருது

    11. புத்தகப்பிரியர்

    12. அத்தை மகள்

    13. முத்தம்

    14. பிச்சை புகினும் கற்கை நன்றே!

    15. ஆறாத காயம்

    16. இரண்டு வில்லிகள்

    17. காலம் கலிகாலம்

    18. இது என்ன நியாயம்?

    19. மனிதம்

    20. சிட்டுக்குருவி

    சமர்ப்பணம்

    தாய்ப்பாலோடு தமிழ்ப்பால் ஊட்டிய அன்னைக்கும், இறையுணர்வை இதயத்தில் விதைத்த எந்தைக்கும் இந்நூல் காணிக்கை.

    11

    முன்னுரை

    11

    விமலா ரமணி

    விமலா ரமணி நாவலாசிரியை எழுத்து என்பது ஒரு அக்கினி. இதயத்தின் எழுச்சிகளை வெளிக்கொணரும் ஒரு பிராசஸ். இது கதைவடிவிலோ, கவிதைவடிவிலோ, கட்டுரைவடிவிலோ இருக்கலாம். கதைக்கு கருத்து, கவிதைக்கு இலக்கியநயம், கட்டுரைக்கு மேற்கோள் இப்படித்தான் இதன் வடிவம் வேறுபடும். எல்லாம் கற்பனை தான் என்றாலும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகிறது ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி ஆன்மா இருக்கிறது. பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத்கீதையில் கர்மன்யேவா நா அதிகாரஸ்தே மாபலேஷூகதான என்கிற ஒற்றை வரியில் தான் அதன் ஆன்மா இருக்கிறது. (பிரதி பலன்களை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவன் தான் கர்ம யோகி).

    பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் கதாசிரியனுக்கு கதை கிடைக்கும். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும்கூட இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம். மண் ஆசையால் விளைந்தது மகாபாரதம். பெண்ணாசையால் வந்தது இராமாயணம். நட்புக்குக் கர்ணனும், நயவஞ்சகத்திற்கு சகுனியும் பாடமானார்கள். இதன் அடிப்படையிலேயே பிறப்பதுதான் படைப்புகள். ஒரு வில்லில் இருந்து புறப்படும் அம்பு நேரே தன் இலக்கை நோக்கிப் பாய்வதுபோல சிறுகதைகள் இருக்க வேண்டும் என்று சிறுகதைக்கு இலக்கணம் வகுத்த ஓ ஹென்றி" சொல்கிறார். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு, என்ற மூன்றிலும் சுவாரசியம் இருத்தல் அவசியம். காக்கையிடம் ஒற்றுமையும், குயிலிடம் இனிமையையும், கிளியிடம் கொஞ்சும் மழலையும், மயிலிடம் தோகை அழகையும் காண்கிறான் கவிஞன். தோகையைக் கனக்கிறுதே என்று மயில் வேதனைப்படுவதில்லை. அது தான் அதற்கு அழகு.

    ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கின்றது. கதாசிரியரின் சிறப்பு அவர் கற்பனை. கவிதை உள்ளம். காக்கை குருவியைக்கூட எங்கள் ஜாதி என்று சொன்னவன் பாரதி. தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா என்று நந்தலாலாவை தீக்குள்ளே கண்டவன் பாரதி. உலகம் முழுவதையும் பராசக்தியின் அம்சமாகப் பார்த்தவன். கத்தும் குயிலோசைகூட அவன் கற்பனையில் சிறப்பாக இடம் பெறுகிறது.

    எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்றார் திரு அப்துல் கலாம். அந்த ஆசை நல்ல எண்ண அடிப்படையில் நன்மை விளைவிப்பதாக இருக்க வேண்டும். இருபாலரும் ஆசைப்பட்டதால் தான் குழந்தை பிறக்கிறது. வாழ்க்கையில் எத்தனை இடர் வரினும் யாரும் மரணிக்க ஆசைப்படுவதில்லை. வாழத்தான் ஆசைப்படுகிறார்கள். ஆசையிலும் தேர்ந்தெடுக்கும் விதி இருக்கிறது. ஒரு வீட்டிலே தீப்பிடித்தால் தண்ணீரைத்தான் தேட வேண்டுமே ஒழிய, வீட்டிலிருந்து ஓடும் எலிகளைத் துரத்திக்கொண்டு ஓடக்கூடாது. இது தான் ப்ரபரன்ஸ். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் சிறுகதை இலக்கணமும்கூட. ஒரு டாக்டர் மகன் டாக்டராகலாம். வக்கீலின் மகன் வக்கீல் ஆகலாம். ஆனால் ஒரு எழுத்தாளனின் மகன் எழுத்தாளன் ஆகலாம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. காரணம்? இது உணர்வு சம்பந்தப்பட்டது காக்கைக் கூட்டிலே வாழும் குயிலுக்கு யார் சங்கீதம் கற்றுத் தந்தார்கள்?. இது பிறப்பிலேயே வருவது. எழுத்தாளனும் இப்படித்தான்.

    இனி கதைப்பூங்கா தெய்வம் நின்று கொல்லும். இந்தக் கதை பூங்காவின் இருபது கதைகளையும் படித்த பிறகு எனக்குத் தோன்றியது இதுதான். கதாசிரியர் அழகு சக்திகுமரன் ஒரு அறிவாளி.அறிவுச்சுரங்கம். தமிழறிஞர். உலகின் பல பாகங்களில் சுற்றி வந்தவர். உறவுகளை மதிக்கத் தெரிந்த உள்ளம் உள்ளவர். பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் மற்றும் ஒரு பாரதி. திருக்குறளைக் கதைகள் ஆக்கித்தரும் வல்லமை படைத்தவர்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    பொய் + பொய் = மகிழ்ச்சி என்கிற கணக்கு காதல் கதையில் ஒரு கணவனின் அன்பு தெரிகிறது.சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி வரும். குளத்தில் தேங்கி இருக்கும் கொஞ்சம் தண்ணீரை தான் முழுவதும் குடித்துவிட்டால் தன் இணைக்கு தண்ணீர் இருக்காது என்று பயந்த ஆண்மான் குடிப்பது போல பாவனை செய்கிறதாம். அதேபோல பெண்மானும் நடிக்கிறதாம். ஆக இங்கு இருப்பது, இந்த இரண்டு மான்களின் அன்பு உள்ளத்தின் ஊற்றுகள். இதுபோல இந்தக்கதையிலும் ஒரு காட்சி வருகிறது. கணவன் மனைவிக்கு விட்டுக்கொடுத்துத் தன் பசியையைப் பொறுத்து, தான் சாப்பிட்டுவிட்டதாகக்கூறி அவளுக்கு உணவளிக்கிறார்.

    நல்ல காரியத்திற்காக ஆரம்பிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி திசை மாறிப் போகிற ஒரு கதை. தெய்வம் நின்று கொல்லும். என்ற கதையிலே நமக்குக் காணக் கிடைக்கிறது. இவர் ரசித்த பாடல்கள்,ரசித்த ஊர்கள் எல்லாமே கதைகளில் இடம் பெறுகின்றன. பாஸ்போர்ட் விசா இல்லாமல் இவர் நம்மையெல்லாம் அமெரிக்கா, லண்டன் சிங்கப்பூர் என்று அழைத்துச் செல்கிறார். இது நமக்கு ஒரு வரப்பிரச்சாதம்.அரிய வாய்ப்பு.திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள் ஒரு டூயட் காட்சியில் இரண்டு வரிகள் ஊட்டியில்,அடுத்த சில வரிகள் காஷ்மீரில் பிறகு ஆல்ப்ஸ் மலை என்று படம் முழுவதும் விதம் விதமான காட்சிகள். அதே போல வித விதமான இடங்களை நமக்குக் காண்பிக்கிறார் கதாசிரியர்... சினிமாப் படம் போல.

    பேச்சுவாக்கில் திருமணம் நிச்சயமாவதும், தன்னுடைய தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் ஒரு பெண் தவிப்பதும், பெண்ணடிமைத் தனத்தின் ஒரு பிரதி பிம்பமாக நமக்குத் தெரிகிறது. முதல் கதையில் யதார்த்தம். இரண்டாவதில் சோகம்... முதலாளியுடன் கூட்டுச்சேரும் ஒரு தொழிலாளி மகாபாரதச் சகுனியை நமக்கு நினைவூட்டுகிறார். சுயநலம் தலைதூக்கும் பொழுது, பொது நலம் விடைபெறுகிறது. "அரசியல்

    Enjoying the preview?
    Page 1 of 1