Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paravasamottum Kandhapurana Kathaigal
Paravasamottum Kandhapurana Kathaigal
Paravasamottum Kandhapurana Kathaigal
Ebook188 pages1 hour

Paravasamottum Kandhapurana Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கந்தபுராணத்தைப் பயில்வது கடினம் என்று எண்ணுபவர்கள், இந்நூலுள்ள கதைகளைப் படித்தால், கந்தபுராணத்தின் முழுக்கதையையும் உணர்ந்துகொள்ள முடியும். சிறு சிறு தலைப்புகளாக அமைத்து, படிப்போர்க்குச் சலிப்பு ஏற்படாத வண்ணம் நூலை அமைத்ததோடு, ஆங்காங்கே தத்துவக் கருத்துகளை உட்பொதித்து எழுதியுள்ளதை வாருங்கள் வாசித்து அறிந்துகொள்வோம்…!

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580167209964
Paravasamottum Kandhapurana Kathaigal

Read more from Porkizhi Kavingar Azhagu Sakthikumaran

Related to Paravasamottum Kandhapurana Kathaigal

Related ebooks

Reviews for Paravasamottum Kandhapurana Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paravasamottum Kandhapurana Kathaigal - Porkizhi Kavingar Azhagu Sakthikumaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பரவசமூட்டும் கந்தபுராணக் கதைகள்

    (எளிய உரைநடையில்)

    Paravasamottum Kandhapurana Kathaigal

    Author:

    பொற்கிழிக் கவிஞர் அழகு சக்திகுமரன்

    Porkizhi Kavingar Azhagu Sakthikumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/porkizhi-kavingar-azhagu-sakthikumaran

    பொருளடக்கம்

    அருள் வாழ்த்துரை

    வாழ்த்துரை

    திருநாவுக்கரசர் நந்தவனத் திருமடம்

    வாழ்த்துரை!

    அணிந்துரை

    அணிந்துரை

    என்னுரை

    ஓம் ஸ்ரீ சரவண பவாய நம காப்பு

    கந்தபுராணம் கதைச்சுருக்கம்

    1. உற்பத்தி காண்டம்

    2. அசுர காண்டம்

    3. மகேந்திர காண்டம்

    4. யுத்த காண்டம்

    5. தேவகாண்டம்

    6. தட்சகாண்டம்

    பிற்சேர்க்கை

    முருகன் 108 போற்றி

    கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் நூல் பற்றிய செய்திகள்

    கந்தபுராணத்தைப் படிப்போர்க்கு

    அருஞ்சொற்களின் பொருள் விளக்கம்

    ஆதார நூற்பட்டியல்

    தாய்ப்பாலோடு தமிழ்ப்பால் ஊட்டிய அன்னைக்கும், இறையுணர்வை இதயத்தில் விதைத்த எந்தைக்கும் இந்நூல் காணிக்கை.

    அருள் வாழ்த்துரை

    சேயோன் மேய மைவரை உலகமும் என்பது தொல்காப்பியர் பெருவாக்கு. இவ்வாக்கிற்கேற்ப, முருக வழிபாடு என்பது பழங்காலந்தொட்டே இருந்துவருவது. சிறப்புமிக்க இவ்வழிபாட்டின் முதன்மைத் தெய்வமாகத்திகழும் முருகப்பெருமானின் முழு வரலாற்றையும் விவரிக்கும் நூல், கச்சியப்பச் சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் ஆகும். இந்நூல் கூறும் செய்திகளைக் கதை வடிவில் அனைவரிடத்தும் கொண்டு சேர்க்கும் நோக்கில், பரவசமூட்டும் கந்தபுராணக் கதைகள் என்ற இந்நூல் வெளிவர உள்ளது.

    இந்நூலின் ஆசிரியர் கவிஞர் அழகுசக்திகுமரன் (முருகன்) அவர்கள், நமது திருமடத்தோடு தொடர்புடையவர். மாதந்தோறும் நிகழும், சாந்தலிங்கப்பெருமான் மகம் நாள் குருபூசை வழிபாட்டிலும், ஆதின நிகழ்வுகளிலும் தவறாது கலந்துகொள்ளும் அன்பர். திருவருள் கருணையால், இதுவரை நான்கு நூல்களை வெளியிட்டுள்ள இவர்தம் ஐந்தாவது நூலான இந்நூல், பெயருக்கேற்ப பயிலப்பயிலப் பரவசம் ஊட்டக்கூடியதாகவும், எளிமையான நடையிலும் அமைந்துள்ளது பாராட்டுதற்குரியது.

    கந்தபுராணத்தைப் பயில்வது கடினம் என்று எண்ணுபவர்கள், இந்நூலுள்ள கதைகளைப் படித்தால், கந்தபுராணத்தின் முழுக்கதையையும் உணர்ந்துகொள்ள முடியும். சிறு சிறு தலைப்புகளாக அமைத்து, படிப்போர்க்குச் சலிப்பு ஏற்படாத வண்ணம் நூலை அமைத்ததோடு, ஆங்காங்கே தத்துவக் கருத்துகளை உட்பொதித்து எழுதியுள்ள திறம் பாராட்டுதற்குரியது. தொடர்ந்து இது போன்ற நூல்களை எழுதி வெளியிட வேண்டும்.

    அவ்வகையில், கவிஞர் அழகு சக்திகுமரன் அவர்களும், இந்நூல் உருவாக உழைத்த அனைவரும் வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழ, எல்லாம் வல்ல அருள்மிகு அம்பலவாணப்பெருமான் இன்னருளையும், அருள்திரு சாந்தலிங்கப்பெருமான் தண்ணருளையும், கயிலைக்குருமணி தமிழ்நெறிவழிபாட்டுத் தந்தை இருபத்துநான்காம் குருமகாசந்நிதானங்களின் குருவருளையும், நினைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.

    வேண்டுந்தங்களன்பு,

    அன்புள்ள,

    குருபாதம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,

    ஆதீனகர்த்தர்,

    சிரவை ஆதீனம்/கௌமாரமடாலயம்.

    சின்னவேடம்பட்டி.

    வாழ்த்துரை

    தமிழில் உள்ள மூன்று புராணங்கள் சைவத்தின் உயிர்நாடியானவை. அவை சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம், மதுரை ஆலவாய்க் கடவுளின் திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடற் புராணம், மூன்றாவது கச்சியப்பர் யாத்த கந்த புராணம். இவை மூன்றும் சைவத்தின் முப்பெரும் புராணங்கள் ஆகும். மூன்றாவதான கந்தபுராணம் வடமொழியிலிருந்து, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகும்.

    வடமொழியில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இந்த பதினெட்டுப் புராணங்களில் அளவிலும், கதைப்போக்கிலும் சிறந்தது ஸ்கந்தபுராணம் ஆகும். இந்த ஸ்கந்தபுராணத்தை, காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் திருக்கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்த ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார், திருமுருகனுடைய அருள் பெற்றுத் தமிழில் மொழிபெயர்த்தார். இந்த நூல் மிகவும் சிறப்புடையது.

    கச்சியப்ப சிவாச்சாரியார் தினசரி, தான் யாத்தகந்தபுராணச் சுவடியை, எழுத்தாணியுடன் குமரகோட்டத்து முருகன் கருவறையில் இரவில் வைத்துவிடுவாராம். மறுநாள் அதை பார்க்கின்ற பொழுது, அந்த ஏட்டில் சிலதிருத்தங்கள் இருக்குமாம். அந்தத்திருத்தங்களை முருகப்பெருமானே செய்தருளியிருக்கிறார். அதுபோலக் காப்புச் செய்யுளான திகடசக்கரம் என்கிற செய்யுளுக்கு, இலக்கணப் பிழை என்று அரங்கேற்றத்தில் புலவர்கள் சிலர் ஆட்சேபணை கூறியபோது, முருகப்பெருமானே ஒரு புலவர் வடிவில் வந்து, அதற்கான விளக்கம் வீரசோழியம் என்ற இலக்கண நூலில் இருக்கிறது என்று பகர்ந்ததாக வரலாறு கூறும்.

    இவ்வாறாக, கந்தபுராணம் சைவத்தில் மிகவும் சிறப்புடையது. இதை, முருகபக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம். இந்த நூலில் உள்ள செய்திகளை தமிழில் உரைநடையாக இதுவரை பலர் தந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் முதல், புலவர்கள் பலர் கந்தபுராணத்தை உரைநடையாக எழுதி வெளியிட்டுள்ளனர். தற்போது, கவிஞர் அழகுசக்திகுமரன் என்பவர், ‘பரவசமூட்டும் கந்தபுராணக் கதைகள்’ என்கிற தலைப்பில் கந்த புராணத்தினுடைய செய்திகளைச் சுருக்கமாக இந்த நூலில் தெரிவித்துள்ளார். இவருடைய தமிழ் உரைநடை மிகவும் இயல்பான முறையில் அமைந்துள்ளது. ஆங்காங்கே கவிஞர், தாம் ஏற்கனவே இயற்றிய அல்லது தற்போது இயற்றிய பாடல்களை இந்நூலின் இடையிடையே கூறி விளக்கியுள்ளார். அவருடைய பாடல்கள் சுவையாக உள்ளன. இருப்பினும், கந்தபுராணத்தின் மூலநூலில் உள்ள ஒன்றிரண்டு செய்யுள்களையேனும், ஆங்காங்கே ஒவ்வொரு காண்டத்திலும் இணைத்தல் நன்று. அவ்வாறு இணைக்கும் பொழுது, இந்த நூலைப் பயில்வோர், மூலநூலான கச்சியப்பர் அருளிய, கந்தபுராணத்தில் உள்ள செய்யுள்களின் சுவையினை அனுபவிக்கலாம்.

    இதுபோன்று, நம்முடைய புராணங்களில் உள்ள செய்திகள் தக்கவர்களால் உரைநடையாக எழுதி வெளிக்கொணர வேண்டும். இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினருக்கு நம்முடைய சமயத்தைப் பற்றிய செய்திகள் உரைநடையாக, இதுபோன்ற நூல்கள் மூலம் பரவவேண்டும். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள கவிஞர் அழகுசக்திகுமரன் அவர்களுடைய பணிபாராட்டுதற்குரியது.

    இந்த நூலை முருகபக்தர்களும், தமிழன்பர்களும் படித்துப் பயனடைய வேண்டும் என்று தெரிவித்து, நூலாசிரியருக்கு கந்தபிரானுடைய கருணை வெள்ளம் என்றும் கிட்டட்டும் என்று, எமது வழிபடு கடவுளான தண்டபாணிக் கடவுளை நீள நினைந்து வாழ்த்துகின்றோம்.

    (ஒம்/- குமரகுருபரசுவாமிகள்)

    திருச்சிற்றம்பலம்

    திருநாவுக்கரசர் நந்தவனத் திருமடம்

    தவத்திரு. முத்துசிவராமசாமி அடிகள்

    மடாதிபதி,

    தென்சேரிமலை, சூலூர் வட்டம்,

    கோவை மாவட்டம் - 641 559. போன்: 04255266155

    தவத்திரு மாரிமுத்து அடிகள் மலர்த்தாள் வாழ்க!

    ஆடிடும் ஆட்டமெலாம் அடங்கிடும் அவனிதனில்

    ஓடிடும் உயிரெலாம் ஒடுங்கிட அருள்வோனே – நாளும்

    ஆடிடும் மயிலமர்ந்து அகிலத்தே

    Enjoying the preview?
    Page 1 of 1