Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adithala Malargal Ayiram
Adithala Malargal Ayiram
Adithala Malargal Ayiram
Ebook383 pages1 hour

Adithala Malargal Ayiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளநகர் முடும்பை சௌந்திர ராஜ அய்யங்காருக்கும் - பையூர் கௌசல்யா அம்மையாருகும் 22 செப்டம்பர் 1952- ஆம் ஆண்டு தடப்பத்திரி என்னும் ஊரில் அனந்தபூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்தில் மகனாகப் பிறந்தவர் இ.எஸ்.ஸ்ரீநிவாசவரதன். இவரது புனைப்பெயர் இளநகர் காஞ்சிநாதன் என்பதாகும்.1969-இல் இருந்து கவிதை, கட்டுரை, அந்தாதி, ஆலயக் கட்டுரைகள், தொகுப்பு நூல்கள் இவற்றை “இளநகர் காஞ்சிநாதன்” என்ற பெயரில் எழுதி வருகிறார்.

ஸம்ஸ்கிருத்தில் இருக்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்து, இராக மாலிகா வடிவில் இசையமைக்க ஏதுவாக, 174 பாடல்கள் எழுதிய பெருமை இவரைச் சேரும். சுமார் 18 புத்தகங்கள் அச்சாகி வெளி வந்துவிட்டன.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580130105085
Adithala Malargal Ayiram

Read more from Elanagar Kanchinathan

Related to Adithala Malargal Ayiram

Related ebooks

Reviews for Adithala Malargal Ayiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adithala Malargal Ayiram - Elanagar Kanchinathan

    http://www.pustaka.co.in

    அடித்தல மலர்கள் ஆயிரம்

    Adithala Malargal Ayiram

    Author:

    இளநகர் காஞ்சிநாதன்

    Elanagar Kanchinathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/elanagar-kanchinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பாகம் 1 (ப்ரஸ்தாவ பத்ததி) - பாயிரம்

    பாகம் 2 (ஸமாக்யா பத்ததி)-திருநாமப் பத்ததி

    பாகம் 3 (ப்ரபாவ பத்ததி) - பெருமைப் பத்ததி

    பாகம் 4 (ஸமர்ப்பண பத்ததி) - பணயப் பத்ததி

    பாகம் 5 (ப்ரதிப்ரஸ்தாந பத்ததி)-பதிற்பயணப் பத்ததி

    பாகம் 6 (அதிகாரபரிக்ரஹ பத்ததி) - உரிமைக் கோட் பத்ததி

    பாகம் 7 (அபிஷேக பத்ததி)-முடிசூட்டுப் படலம்

    பாகம் 8 (நிர்யாதநா பத்ததி)-மீட்சிப் பத்ததி

    பாகம் 9 (வைதாளிக பத்ததி)- வந்திவைதாளிக பத்ததி

    பாகம் 10 (ஸ்ருங்கார பத்ததி)-சிங்கார பத்ததி

    பாகம் 11 (ஸஞ்சார பத்ததி)

    பாகம் 12 (புஷ்ப பத்ததி)-மலர்ப் பத்ததி

    பாகம் 13 (பராக பத்ததி)-திருவடித்தூள் படலம்

    பாகம் 14 (நாத பத்ததி)

    பாகம் 15 (ரத்நஸாமந்ய பத்ததி)-மணிப்பொது பத்ததி

    பாகம் 16 (பஹீரத்ந பத்ததி)-பன்மணிப் பத்ததி

    பாகம் 17 (பத்மராக பத்ததி)-செம்மணிப் பத்ததி

    பாகம் 18 (முக்தா பத்ததி)-முத்துப் பத்ததி

    பாகம் 19 (மரகத பத்ததி) - மரகத பத்ததி

    பாகம் 20 (இந்த்ரநீல பத்ததி)-நீலமணி பத்ததி

    பாகம் 21 (பிம்பப்ரதிபிம்ப பத்ததி)-பிம்ப பிரதிபிம்ப பத்ததி

    பாகம் 22 (காஞ்சந பத்ததி)-பொற் பத்ததி

    பாகம் 23 (ஸேஷபத்ததி)-சேட பத்ததி

    பாகம் 24 (த்வந்த்வ பத்ததி)-இரட்டைப் பத்ததி

    பாகம் 25 (ஸந்நிவேஸ பத்ததி)-அமைப்புப் பத்ததி

    பாகம் 26 (யந்த்ரிகா பத்ததி) - குமிழ்-குடை பத்ததி

    பாகம் 27 (ரேகா பத்ததி)-வரிப் பத்ததி

    பாகம் 28 (ஸுபாஷித பத்ததி)-நன்மொழிப் பத்ததி

    பாகம் 29 (ப்ரகீர்ண பத்ததி)-கலம்பக பத்ததி

    பாகம் 30 (சித்ர பத்ததி)-சித்திரப் பத்ததி

    பாகம் 31 (நிர்வேத பத்ததி)-உருக்கப் பத்ததி

    பாகம் 32 (பல பத்ததி)-பேற்றுப் பத்ததி

    அடித்தல மலர்கள் ஆயிரம்

    ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம்

    அந்தாதி வடிவில் - வரதநம்பி இளநகர் காஞ்சிநாதன்

    ஸ்ரீ வரதராஜப் பெருமாள்

    ஸ்ரீ பெருந்தேவி தாயார்

    *****

    தூப்புல் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன்

    அருளிய

    ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம்

    தமிழில்

    அந்தாதி வடிவில்

    படைப்பாசிரியர்

    'வரதநம்பி' இளநகர் காஞ்சிநாதன்

    *****

    ஸ்ரீமதே ரங்கராமாநுஜ மஹாதேஸிகாய நம:

    SRI RANGAM

    SRIMAD ANDAVAN ASHRAMAM

    வேதாந்த லக்ஷ்மண முநீந்த்ர க்ருபாத்த போதம்

    தத்பாத யுக்ம ஸரஸீருஹ ப்ருங்கராஜம்

    த்ரையந்த யுக்ம க்ருதபூரி பரிஸ்ரமம் தம்

    ஸ்ரீரங்க லக்ஷ்மண முநிம் ஸரணம் ப்ரபத்யே

    ஸ்ரீமுகம்

    அந்தாதி யாம் நிலையார் பாதுகத்தின் சீர்மையைச்

    சிந்தாம லந்தாதி யால்சமைத்து - நிந்தையில்

    சந்தையாய்ச் சீரார் நிலையுயர் பாக்களால்

    சந்தமுற யாத்தளித்தான் நம்பி.

    இளநகர் காஞ்சி நாதனாம் வரத நம்பி இயற்றிய

    'அடித்தல் மலர்கள் ஆயிரம்' என்ற காவியம் சிறப்புற

    அந்தாதியால் அமைந்துள்ளது.

    அவருக்குப் பல வளங்கள் உளவாக வேண்டி

    நாராயண ஸ்ம்ருதி செய்கின்றேன்.

    இவண்

    ஸ்ரீரங்க ராமாநுஜயதி:

    ஸ்ரீரங்க ராமாநுஜ மஹாதேஸிகன்

    (வர்த்தமான ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன்)

    வைகாசி - திருவாதிரை

    *****

    ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

    ஸ்ரீமத் பரமஹம்ஸ அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி

    தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர்: ஸ்ரீ எம்பார் ஜீயர் மடம்

    தேதி:03.09.2012

    மங்களாசாஸனம்

    ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிராதாயத்தில் பிரஸ்தானத்ரயங்கள் மூன்று. சாஸ்திரம், அருளிச்செயல் மற்றும் ரகசியங்கள் என மூவகை உண்டு.

    லௌகிகத்திலும் ஒருவரிடம் சென்று கார்யம் கொள்ளுகைக்கு அவரது பெருமைகளை புகழ்ந்து கூறி அவரது கைகளைப் பற்றிக் கொண்டுதான் வந்த கார்யத்தை விண்ணப்பிக்கலாம்.

    மற்றொரு வகையில், தன்னுடைய எள்கு (எளிய) நிலையையும், வேறு கதியின்றி உம்மையே நாடிவந்துள்ளேன் என்று திருவடிகளில் வீழ்ந்து பிரார்த்திகிறதும் உண்டு. இதில் முதல் சொன்னது பக்தி.

    இறுதியில் சொன்னது பிரபத்தி அல்லது சரணாகதி. பகவானிடம் இவ்விரு முறைகளிலும் அனுகுவது கண்கூடு.

    'செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதித் தெளியாதமறை நிலங்கள் தெளிகின்றோமே.' என்று ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச்செயல் ஏற்றம் குறித்து ஸ்வாமி தேசிகனின் பாதுகாஸஹஸ்ரத்தின் ஆழ்பொருள் உணர்ந்து, தமிழில் நூல் செய்து அன்பர் வரதநம்பி இளநகர் காஞ்சிநாதன் அடித்தல மலர்கள் ஆயிரம் (ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம்) அடியார்களுக்கு செய்யுள் வடிவில் வடித்து அளித்துள்ளார்.

    ஆச்சாரியனை அடியொற்றி ஆற்றியுள்ள இப்பணி போற்றதக்கது. நித்திய ஸ்ரீ: நித்தியமங்களம்.

    - அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி

    ஸ்ரீபெரும்புதூர்-602 105.

    *****

    ஸ்ரீ

    திருமால் கவிச்செல்வர், ஸ்ரீவைணவ கைங்கர்ய ஸ்ரீமான்,

    S. ரகுவீரபட்டாச்சாரியர்

    வாழ்த்துக் கவிதை

    அவரவர் தமதம தறிவறி வகைவகை

    அருமறை நெறியதை தமிழமுதாக்கினர்.

    துயரறு சுடரடித்தலமதின் பெருமையை

    தூப்புல் குலமணி காவியமாக்கினார்.

    1

    இறையடி மலர்களை தழுவிடும் அடியிணை

    இணையிலையெனப் புகழ்ந்தேத்திடும் கவிமலர்

    திருவரங்கதனிலே சிலமணிப் பொழுதிலே

    உருவெடுத்தது எனில் ஓர்த்தனிச் சிறப்பதே.

    2

    ஆயிரத்தெட்டெனும் அற்புத மணிகள்

    அமைந்தது பாதுகைக்கே அணி மணியாய்

    ஆயிரம் வாய்மொழி அமைந்துது போலே

    பாயிரம் இதுவும் பாதுகை தமக்கே.

    3

    சொற்சுவைப் பொருட்சுவை தம்மையும் விஞ்சும்

    அற்புத யருட்சுவை ஆழ்பவர் அறிவர்

    இச்சுவை யுணர்ந்தவர் இறையும் விரும்பார்

    எச்சுவையதையும் எவ்வுலகிலுமே.

    4

    இளநகர் காஞ்சி நாதன் கவிஞன்

    வளமுடன் தமிழில் கவிதைகள் செய்தான்

    நலம்தரு நாதனின் பாதுகையாயிரம்

    நிலமிதில் அவருக்கு நீள்புகழ் அருளும்.

    5

    இளநகர் சௌந்திரராஜன் கௌசல்யா

    இக்கவி மலரதின் இனிய பெற்றோரே

    கவிமலர் மணமதால் தலைமுறை மணக்கும்

    புவியதில் புகழே பெருகும் வளரும்.

    6

    திருவடி த்தலத்தின் ஆயிரம் மலர்கள்

    திருவேங்கடேசன் அருளிய மலர்கள்

    இளநகர் காஞ்சி நாதனும் செய்தான்

    இனிய தமிழில் புனிதமாம் மலர்கள்.

    7

    தோன்றிற் புகழொடு தோன்றுக என்றான்

    தொல்புகழ் வள்ளுவன் தொல்மறை யதனில்

    ஊன்றிய எண்ணம், ஊக்கம் கொண்டே

    தோன்றிய நூலிது தொல் புகழ் காக்கும்.

    8

    வாழிய வரதநம்பியின் படைப்பு!

    வாழிய பரதனின்பாதுகம் புகழே!

    வாழிய தமிழே வாழ்க நற்றமிழர்!

    வாழிய வைணவம்! வாழிய வையம்.

    9

    S. ரகுவீரபட்டாச்சாரியர்

    *****

    அடித்தல மலர்கள் ஆயிரம்

    ஆயிரத்தின் சீர்பரவும் புகழாரம்

    மதுரைப் பேராசிரியர் முனைவர் இரா. அரங்கராஜன் M.A. Ph.D

    வாழ்த்துரை

    ஆயிரமாகப் பெருக்கெடுத்து வற்றாது வளம் கொழித்துவரும் கங்கையிற் புனிதமான காவிரியின்றி புனிதமாய பாதுகை ஆயிரமும் உங்களைத் தழுவுதற்கு நூலாரமாக கோக்கப்பட்டுப் படைக்கப்பட்டிருக்கிறது.

    ஸ்வாமி தேசிகன் சொல்லமுதப் பெருக்கு சொற்களியே தோய்ந்த அரவணை அரங்கனின் திருவடிகளைத் தழுவிய பாதுகைகள்! பாதுகைகள் வாயிலாகத் திருவரங்கனின் மேன்மை எளிமைப் பண்புகள்! - இவ்வாறு நூறு சிறப்பு, நுதலியோர் சிறப்பு, நுவல்பொருட் சிறப்பு என்று வைல க்ஷணயத்ரயங்களின் கூட்டரவே பாதுகாஸஹஸ்ரம்.

    ஓராயிரம் சுலோகங்களையும் ஓரிரவில் முற்பாதையில் வடித்த பெரும் திறளை எவ்வாறு வர்ணிப்பது?

    நம்மாழ்வாரோ தேசிகனாரின் நெஞ்சிடம் கொண்டு வெளிப்படுத்தினாரோ! திருவாய்மொழி துயரமும் தீர்த்தங்கலாயிரம். அவற்றை வடமொழி வாணர்க்கு உணர்த்தவே தேசிகன் அவதரித்தார்.

    பாதுகமே நம்மாழ்வார்! திருவரங்கற்கு ஏய்ந்தின்ய பாதுகமாம் செல்வச்சடகோபர் என்று மணவாள மாமுனிகள் புகழ்ந்து பாடினார்.

    திருவாய்மொழி போன்று ஆயிரமாகவும் அந்தாதித்தொடையிலும் இம்மொழி ஆக்கம் அமைந்துள்ளது. திருவரங்கம் கோயில் கொண்ட திவ்ய தம்பதிகளின் திருவருளின் விளைவாகும்!

    பிரஸ்தாவபத்ததி முதல் சித்ர பத்ததி வரை அத்தனை பாசுங்ரங்களும் நம்மை பாதுகைகளின் கீழ் சிரம் பணியச் செய்துவிடுக்கின்றன.

    வதரநம்பி இளநகர் காஞ்சிநாதன் தமிழிலக்கியக் களஞ்சியத்தில் ஒரு பெரிய சேமிப்பைச் சேர்த்துள்ளார்.

    தமிழுக்கு அலங்காரமாய்த் தந்தருளிய விதம் இவ்வுயரிய நூல்.

    இரா. அரங்கராஜன்

    26.08.2012

    *****

    அணிந்துரை

    தாமல். ராமகிருஷ்ணன்

    தீராத வினைகளைத் தீர்க்கும் திருவரங்கநாதனின் திருவடித் தாமரைகளை அலங்கரிக்கும் பாதுகையின் மகிமை உயர்ந்தது. அந்த பாதுகைகளின் மேன்மைகளை கவிதார்க்கிக ஸிம்ஹம் ஸ்வாமி தேசிகன் ஒரே இரவில் பாதுகாஸஹஸ்ரமாக நமக்கு அளித்தார். ஓர் இரவில் ஒரு மரக்கட்டையில் ஆயிரம் துளைகள் இட்டவர் என்பது இந்த ஸஹஸ்ரத்தின் பெருமை.

    திருவரங்கனின் அருளுக்குப் பாத்திரமான இளநகர் காஞ்சிநாதன் மிகவும் அழகான தமிழில் கடினமான பாதுகாஸஹஸ்ரத்தை வடமொழியில் இருந்து மொழி பெயர்த்துள்ளார். இது ஒரு அமானுஷ்யமான செயல் என்றே கூற வேண்டும். ஸ்வாமி தேசிகனுக்கு எவ்வாறு நம்பெருமாள் பரிபூர்ணமாக கடாக்ஷித்து பாதுகாஸஹஸ்ரம் ஏற்பட்டதோ, அதுபோல இளநகர் காஞ்சிநாதன் திருவரங்கன் அனுக்ரஹத்தை பரிபூரணமாக அடைந்தது தான் இந்த அடித்தல மலர்கள் ஆயிரம்.

    ஆயிரம் சுலோகங்களைத் தமிழில் மொழி பெயர்த்து மேலும் அவற்றை அந்தாதியாக அளித்தது மிகவும் பாராட்டத்தக்கது. இச்செயல் அவ்வளவு சுலபமாக யாரும் முயற்சி செய்யக்கூட தயங்கும் செயலாகும். ஆனால் நம் நூலாசிரியர் மிகவும் குறுகிய காலத்தில் (3.10.2008-ல் தொடங்கி 2.11.2008-ல் முடிக்கப்பட்டது) ஒரு மாதத்தில் இவற்றை மொழி பெயர்த்து அந்தாதி பாசுரமாக அளித்திருப்பது அரங்கனே அவருள்ளத்தில் வசிப்பது உண்மையாகிறது.

    கவிதைக்கு இலக்கணமும் காட்சிப் பொருளும் தந்த திருக்கச்சியின் புவிக்குள் பெருந்தேவித்தாயாரும் வாழ்த்திட வரும் வார்த்தை வரதநம்பி

    இளநகர் காஞ்சிநாதன் தமக்கு

    விடியலில் சொல்ல சொல்லி விளைந்த

    களஞ்சியமே இவ்வாயிரத் தெட்டும்

    முறைப்படி ஓதுவார்க்கு பரமபதம் சாத்தியமே

    என நூலாசிரியர் பெருமாள் கோயிலையும், பெருமாளையும் இணைத்து பெருந்தேவி நாயிகா ஸமேத தேவாதி ராஜனிடத்தில் தமக்குள்ள பக்தியை வெளிப்படுத்தி பூர்த்தி செய்துள்ளார். காப்புச் செய்யுள் ஆரம்பித்த போதும், தேவாதி ராஜனே தேப்பெருமாளே, என அத்திகிரி அருளாளன் பெருமான் அருளால் அரங்கனின் அருள்பெற வேண்டுவது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    ஸ்வாமி தேசிகன் அளித்த அனைத்து பத்ததி ஸ்லோகங்களின் மையக் கருத்தை விடாமல் தமிழில் அளித்துள்ள இந்நூல் நமக்கு ஒரு அரிய பொக்கிஷம்.

    ஸ்வாமி தேசிகனே விக்ஞாபிக்கும் போது, பாதுகையின் பெருமையை ஒருவர் சொல்வதற்கோ எழுதுவதற்கோ பல புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமானதல்ல என்கிறார்.

    ஏழு கடல் நீரை மையாக வைத்து ஆகாயம் முழுவதையும் காகிதமாக வைத்துக்கொண்டு, ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனே வந்து சொன்னால் தான் ஓரளவு பாதுகையின் மகிமையை எழுத முடியும் என்கிறார். ஆனால் ஒரே மாதத்தில் அடித்தல மலர்கள் ஆயிரத்தையும் அரிய தமிழில் அந்தாதியாக அமைத்திருக்கும் இளநகர் காஞ்சிநாதனை நாம் வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

    அவருக்கு ஒத்துழைப்பு நல்கிய ஸ்ரீ காஞ்சிநாதனின் மனைவி திருமதி.வனஜா அவருடைய மகன்கள் சி.சுதர்ஸன், சி.ஷ்யாம் ஆகியோரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

    பாதுகா தேவியின் திருவருளால் இளநகர் காஞ்சிநாதன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு வாழ்ந்து இதுபோல பல நூல்களை அளித்து எங்கும் திருவருள் பெற்று இன்புற வேண்டுகிறேன்.

    பக்தியுடன்

    தாமல்.ராமகிருஷ்ணன்

    *****

    கலைமாமணி. நாகை முகுந்தன்

    அன்புடைச் சகோதரர் இளநகர் காஞ்சிநாதன் ஸ்வாமி தேசிகனுடைய பாதுகாஸஹஸ்ரம் நூலைத் தழுவிய அடித்தல மலர்கள் ஆயிரம் அந்தாதி படைப்பைக் கண்டேன். மகிழ்வு கொண்டேன்.

    நாம் ஆதி, அந்தம் என்கிற வலையிலே சிக்கி, பிறந்து, இறைவனை மறந்து பிறகு திரும்ப பிறந்து, பிறந்து உழல்கிறோம்.

    மறுபிறவி இல்லாத தன்மையை அடைய வேண்டும் எனில், பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டும் எனில் இறைவன் அடியைப் பற்ற வேண்டும். ஆதி, அந்தம் என்கிற வலையில் சிக்காத பரம்பொருள், பெருமாள். அவரது திருவடிப் பெருமையை அந்தம் ஆதி என்கிற அந்தாதி கலையிலே சிக்கவைத்து அற்புதமாகக் கொடுத்துள்ளார் இளநகர் காஞ்சிநாதன்.

    பாதுகாஸஹஸ்ரத்தை உபன்யாசம் செய்வதைப் போல, அடித்தல மலர்கள் ஆயிரம் அந்தாதியையும் உபன்யாசம் செய்ய, எங்களைப் போன்ற உபன்யாசகர்களுக்கு இது ஒரு அற்புதப் பொக்கிஷம்.

    ஆச்சார்ய கடாக்ஷமும், கருணையும் இருந்தால் அன்றி இவ்வரிய நூலை படைப்பது இயலாத காரியம்.

    புல, புராண இதிகாசசெய்திகளை இந்நூலில் தந்துள்ளார். கண்ணனும், அருச்சுனனும் பாசுபதம் பெறுவதற்காக, மகாபாரதத்தில் கைலாயம் செல்லும் சமயம், அர்ச்சுனன் கண்ணன் மேல் அணிவித்த மலர் அனைத்தும் காய்கனல் வண்ணன் சிவபெருமான் மேல் கண்டான் என்கிற செய்தியை

    "அர்ச்சுனன் பூசை உயர பரமசிவன்

    திருமுடியின் அருகினிலே"

    என்கிற வார்த்தைகளில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

    பாதுகை என்பது நமது ஸம்ப்ரதாயத்தில் பிராட்டியின் அம்சம், எனவே பாதுகாதேவி என்றே புகழப்படுகிறது.

    ஸ்ரீ ராமபிரான், பிராட்டியும் இருந்த சமயம், பரதன் பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்து, பாதுகையை ஆட்சி செய்ய வைத்தான்.

    நீ ராமனாகிய பெருமாளும், பிராட்டியும் இல்லாத தேசம் வளமை குறைந்து, வறுமையில் உழலக் கூடாது. வளப்பத்தோடும், செழிப்போடும் தேசத்தை பாதுகாதேவி வைத்திருப்பாள்.

    ஆதனை ஸ்ரீ ராமபிரானிடம் ஒப்படைத்தல் நன்று என, பரதன் பாதுகையை முடிசூட்டி ஆட்சி செய்ய வைத்தான். அயோத்தியை வளநகராக வைத்திருந்த பாதுகாதேவிக்கு இளநகர் காஞ்சிநாதன், வாடுகின்ற பூமாலையை அணிவிக்காமல், வாடாத பாமாலையை அணிவித்துள்ளார்.

    அவருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும், இந்நூலைப் படிப்போருக்கும் பாதுகாதேவியின் இன்னருள் கிடைத்து பல்லாண்டு வாழ்ந்திடப் பிரார்த்திக்கிறேன்.

    நன்றி!

    அன்புடன்

    நாகை முகுந்தன்

    *****

    சிறப்புரை

    'வரதநம்பி' இளநகர் காஞ்சிசநாதன் மூலமாக அருளாளன் என்னும் பேரருளாளன் அளித்த நூல் அடித்தல மலர்கள் ஆயிரம் (பாதக்குரடுகளின் மகிமை ஆயிரம்) பதகமல சதகம் என்று ஸ்வாமி தேசிகனை வாராச் சண்டைக்கு அழைத்த பண்டிதர் வித்யாரண்யரை தாழ்த்தி, நம் தேசிகனை உயர்த்த எண்ணம் கொண்ட நம் ஞானப்பிரானான லக்ஷ்மி ஹயக்ரீவரின் அருளால் ஒரு முகூர்த்த காலத்தில் எழுதப்பட்ட 'பாதுகாஸஹஸ்ரம்' என்னும் வடமொழி (ஸ்ம்ஸ்கிருத) நூலின் தமிழ் 'பா' ஆக்கமாகக் கொள்ளலாம். இதனை ஒரு மாத காலத்தில் இவர் முடித்திருப்பது மிகவும் அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

    ஸ்வாமி தேசிகனின் நூலானது வடமொழி (ஸ்ம்ஸ்கிருத) தெரிந்தவர்க்கே மிகவும்

    Enjoying the preview?
    Page 1 of 1