Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhagavath Ramanujar Aruli Seitha Gathyathrayam Moolamum Vilakkangalum
Bhagavath Ramanujar Aruli Seitha Gathyathrayam Moolamum Vilakkangalum
Bhagavath Ramanujar Aruli Seitha Gathyathrayam Moolamum Vilakkangalum
Ebook194 pages1 hour

Bhagavath Ramanujar Aruli Seitha Gathyathrayam Moolamum Vilakkangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரணாகதி நெறியைத் தமது இன்தமிழின் இசையால் பாடிய நம்மாழ்வாரையும், பெருமாளிடமே வழிப்பறி செய்து, சரணாகதி மந்திரோபதேசம் பெற்று, பெருமாளையே ஆசார்யனாகக் கொண்ட சீடனான மங்கைமன்னன் நெறியையும், சரணாகதி காவ்யமான இராமாயணத்தையும் ரகுவம்சத்தாரால் பூசிக்கப்பட்டு இப்பூவுலகில் சரணாகதி தெய்வமாக நின்று அருள் புரியும் அரவணைத் துயிலும் அரங்கனைப் பாடிய குலசேகரரையும் போற்றிப் பாடியுள்ள இராமானுசர், நம்மாழ்வாரையும், திருமங்கையாழ்வாரையும் தமது ஆசார்யர்களாக வரித்துக் கொண்டார். சரணாகதி ரஹஸ்யத்தை விஷ்ணு புராணம், இராமாயணம், பாரதம், பகவத்கீதை, திவ்ய பிரபந்தம் இவற்றின் மூலமாக இராமானுசர் எடுத்துரைத்துள்ளார்.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580176510777
Bhagavath Ramanujar Aruli Seitha Gathyathrayam Moolamum Vilakkangalum

Related to Bhagavath Ramanujar Aruli Seitha Gathyathrayam Moolamum Vilakkangalum

Related ebooks

Reviews for Bhagavath Ramanujar Aruli Seitha Gathyathrayam Moolamum Vilakkangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhagavath Ramanujar Aruli Seitha Gathyathrayam Moolamum Vilakkangalum - Madapoosi Rangachari

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பகவத் இராமானுஜர் அருளிச் செய்த கத்யத்ரயம் மூலமும் விளக்கங்களும்

    Bhagavath Ramanujar Aruli Seitha Gathyathrayam Moolamum Vilakkangalum

    Author:

    மாடபூசி அரங்காச்சாரி

    Madapoosi Rangachari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/madapoosi-rangachari

    பொருளடக்கம்

    அணிந்துரை...1

    அணிந்துரை...2

    முகவுரை

    க3த்3யத்ரயம் – பொருள் விளக்கம்

    சரணாகதி கத்யம் - உரைநடை

    ஸ்ரீரங்க கத்யம் - உரைநடை

    ஸ்ரீ வைகுண்ட கத்யம் – உரைநடை

    சரணாகதி கத்யம் - சம்ஸ்க்ருதத்தில்

    ஸ்ரீரங்க கத்யம் - மூலம் சம்ஸ்க்ருதத்தில்

    ஸ்ரீ வைகுண்ட கத்யம் - சம்ஸ்க்ருதத்தில்

    ஸ்ரீ சரணாகதி கத்யம் - மூலம் தமிழில்

    ஸ்ரீரங்க கத்யம் - மூலம் தமிழில்

    ஸ்ரீ வைகுண்ட கத்யம் - மூலம் தமிழில்

    மூலமும் விளக்கங்களும்

    தொகுத்தளித்தவர்: மாடபூசி அரங்காச்சாரி,

    பெங்களூர்

    குறிப்பு – பாராயணத்துக்கு உதவியாக (கோஷ்டி பாராயணம்), சேவிக்க, மூன்று கத்யங்களும் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் இறுதியில் தரப்பட்டுள்ளது.

    அணிந்துரை...1

    ஶ்ரீமதே ராமானுஜாய நம:

    ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:

    ப்ரணாமம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்ணாது மாமகம்|

    ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ச்ருதிம்|

    ஸ்ரீ யதிராஜஸப்ததி – 10

    எவருடைய ஸ்ரீஸூக்தி எம்பெருமானைத் தன் வசமாக்கிக் கொண்ட உபநிஷத்தை அழகுபடுத்துகின்றதோ அந்த இராமாஜச முனிவர் என்னுடையதான நமஸ்காரத்தை ஏற்றுக் கொண்டருளவேண்டும் என்கிறார் ஸ்வாமி தேசிகன். ஸ்ரீராமானுஜர், பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் பங்குனி உத்திர சேர்த்தியில் ஸமர்ப்பித்த சரணாகதி ஸ்ரீஸூக்தி கத்யத்ரயம் என்பது.

    வைணவர்கள் அனைவரும் எம்பெருமானாரின் கத்யத்ரத்தை அர்த்தத்துடன் நன்கு அறிந்து அநுசந்திக்க வேண்டியது அவசியம். வைணவர்கள், சுருக்கமாக பொருளுடன் கற்று அநுசந்தானம் செய்து பலன் அடையும் வண்ணம் ஸ்ரீமான் மாடபூசி ரங்காசாரி ஸ்வாமி இதனை வெளியிடுகிறார். இந்த புத்தகத்தை மூலம் (ஸமஸ்கிரதம் மற்றும் தமிழ் மொழியில்), சுருக்கமாக முன்னுரை, விளக்கவுரை என அமைத்திருக்கிறார். சூர்ணிகையின் தமிழ் விளக்கம் சுருக்கமாக எளிதில் புரிந்துக் கொள்ளும்படி இருப்பது மட்டுமின்றி, ஸ்வாமியின் தமிழ் உரைநடை கத்யம் ஸேவிப்பது போல அருமையாக அமைந்திருக்கிறது.

    ஶ்ரீமான் ரங்காசாரி ஸ்வாமி, ரிசர்வ் வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னை பல்கலைகழகத்தில் வைணவம், சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் திவ்யபிரபந்தம் முதுகலை பயின்றவர். ஶ்ரீ...உ...வே மல்லியம் எம்பார் ரங்காசாரி ஸ்வாமி, சென்னை, திருவல்லிக்கேணியில் ப்ரபலமான அத்யாபகர் மற்றும் ஆச்சார்யராகத் திகழும் ஸ்வாமியின் திருவடி சம்பந்தம் பெற்றவர். முதுகலை பயிலும் போது Dr. ஶ்ரீ...உ...வே வேங்டகிருஷ்ணன், ஸ்வாமி ஸ்ரீ...உ.வே அரங்கராஜன் ஸ்வாமி மற்றும் பல மஹான்களிடம் பகவத்விஷயத்தை கற்றவர். ஸ்ரீரங்க வாஸத்தில் கபிஸ்தலம் ஸ்ரீ உ வே ஸ்ரீனிவாசசார் ஸ்வாமியிடம் திவ்யபிரபந்தம், ஸ்தோத்ர பாடங்களை பயின்றவர். பெங்களூரில் அனந்தாழ்வான் வம்சத்தில் தோன்றிய ஸ்ரீ உ. வே. கோபால ஐய்யங்கார் ஸ்வாமியிடம் ஸம்பிரதாய விஷயங்கள் மற்றும் அருளிச்செயல் வ்யாக்யானங்களை கற்றவர்... ஸ்வாமியின் அருளிச்செயல் கோஷ்டியில் பங்கேற்று பல திருக்கோயில்களில் திவ்யப்ரபந்த கைங்கர்யம் செய்து வருகிறார்... திருப்பாச்சனூர் ஹநூமந்தபுரி ஷேத்திரம் திருக்கோயில் ப்ரதான அத்யாபகர்.

    ஸ்வாமி, மேலும் பல க்ரந்தங்களுக்கு இதைப் போன்று விளக்க உரை அருளிச் செய்து வைணவ சமுதாயத்திற்கு உதவ திருப்பாச்சனூர் ஹநூமந்தபுரி திருவடி, ஶ்ரீ கோதண்டராமன், ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருவடி தாமரைகளில் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

    தாஸன்

    ஈயுண்ணி தேவநாதன்

    தர்மகர்தா

    ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி நித்ய ஆராதனை டிரஸ்ட்

    திருப்பாச்சனூர்

    சார்வரி பங்குனி ரோகிணி (20 மார்ச்சு 2021)

    அணிந்துரை...2

    ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

    தஸ்மை ராமாநுஜார்யாய நம: பரமயோகிநே என்னும் ப்ரஸித்தமான வசனத்துக்கேற்ப, யதிராஜர் என்று போற்றப் படுபவராய் யோகியர் தலைவரும் ஸர்வோத்தாரக ஆசார்யருமான ஸ்ரீராமாநுஜரை அடிபணிந்து வணங்குகிறோம் என்று இவ்வாக்கியம் தெரிவிக்கின்றது.

    "ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு:

    ஸ ஏவ ஸர்வலோகாநா முத்தர்த்தா நாத்ரஸம்ஸய:"

    (உலகங்களனைத்தையும் ஸம்ஸாரத்தினின்றும் கரையேற்றி உய்யச் செய்பவர் ஜகதாசார்யரான யதிராஜர் - எம்பெருமானார் ஒருவரே; இது ஸத்யம் ஸத்யம் ஸத்யமே. இதில் எள்ளளவும் கலக்கம் வேண்டாம்) என்று பெரியோர்கள் சபதமிட்டுள்ளனர்.

    மாறன் அடிபணிந்துய்ந்தவன்" என்றும் ப்ரேமாவிலாஸய பராங்குஸ பாதபக்தம் என்றும் இராமாநுச நூற்றந்தாதியும் யதிராஜ விம்ஸதியும் இராமானுசரின் புகழ் வைபவங்களை உரைக்கும் க்ரந்தங்களாக நம் முன்னோர்களால் அருளிச் செய்யப்பட்டுள்ளன. இவ்வண்ணம் இராமாநுசரின் வைபவங்களை உரைக்கும் வண்ணம் பலபல க்ரந்தங்கள் நம் முன்னோர்களால் அருளப் பட்டுள்ளன.

    எம்பெருமானார் தமிழில் கிரந்தங்கள் எதுவும் அருளிச் செய்யவில்லை எனினும், திருவாய்மொழிக்கு வியாக்யானத்தைத் தாம் அருளிவிட்டால், தனக்குப் பிற்பட்டவர்கள் அதனை வளர்க்க இயலாது என்று தாம் அதைச் செய்யாமல், தன்னுடைய அபிமான புத்ரரான திருக்குருகைப் பிள்ளான் என்பவரைப் போரக் கடாக்ஷித்து, அவர் மூலம் ஆறாயிரப்படி என்னும் உரைநூல் தோன்றும்படி செய்தருளினார். அதன்பின், திருவாய்மொழிக்கு நான்கு உரைநூல்கள் நம் பூருவர்களால் அருளப்பட்டன என்றால் அதுவும் நம் இராமாநுசரின் இன்னருளே.

    சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவன் என்று வடமொழி, தென்மொழி (தமிழ்மொழி) என்று இரண்டிலும் மிக்க பாண்டித்யம் மிக்கவராய்த் திகழ்ந்தவர் இராமானுசர். ஆழ்வார்கள் அருளிச்செயல்கள் பலவற்றுக்குப் ப்ரஸித்தி பெற்ற நிர்வாகங்கள் அருளியுள்ளது மட்டுமன்றி, பெருமாள் திருமொழி, பெரிய திருமொழி என்று சில ப்ரபந்தங்களுக்குத் தனியன்களும் அருளிச்செய்து இவ்வருளிச்செயல்களின் பெருமையையும், அவற்றை அருளிச்செய்த குலசேகராழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோரது பெருமையையும் உரைத்தவர் இராமாநுசர்.

    மேலும், தன் வைபவமாக அமுதனார் அருளிச்செய்தஇராமாநுச நூற்றந்தாதியிலும் பாசுரங்கள் ஆழ்வார்களின் பெருமையைப் பேசும் வண்ணமே இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டு அவ்வண்ணமே இராமாநுச நூற்றந்தாதி அமையும்படிச் செய்தவர் இராமானுசர். ஆசார்யாபிமானமே உத்தாரகம் என்ற மதுரகவி ஆழ்வார் நிலையை எய்தி, அமுதனார் அருளிச்செய்த இராமானுச நூற்றந்தாதியும் ஆழ்வார்கள் ஸ்ரீஸுக்திகளுக்கு இணையான அந்தஸ்தைப் பெறும்படி ஒருநாள் புறப்பாட்டில் நம்பெருமாள் அதனைத் திருச்செவி சார்த்தி அருளினார் என்றால் இராமானுசரின் புகழ் எப்படிப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

    அகிலமே போற்றும் புகழையுடைய இராமாநுசர் வடமொழியில் வேதார்த்த ஸங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம், நித்ய க்ரந்தம் என்று ஒன்பது க்ரந்தங்கள் அருளியுள்ளது விலக்ஷணம். ப்ரம்ம சூத்திரத்திற்கு உரை (பாஷ்யம்) அருளவேண்டும் என்று ஸ்வாமி ஆளவந்தார் கொண்ட விருப்பத்தைச் செவ்வனே நிறைவேற்றியவர் இராமாநுசர். அவ்வண்ணம் ஏற்பட்ட உரைதான் இராமாநுசர் அருளிய ஒன்பது க்ரந்தங்களில் ஒன்றான ஸ்ரீபாஷ்யம் ஆகும்.

    பெரியபிராட்டியாரை முன்னிட்டுக்கொண்டு எம்பெருமானிடத்தில் சரண் பற்றிய ஆழ்வார்களை அடியொற்றி, பங்குனி உத்திர நன்னாளில் தானும் அவ்வண்ணமே பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக்கொண்டு பெரியபெருமாளைச் சரண் பற்றினார் இராமானுசர். அப்படி அவர் சரண் பற்றியது தனக்கொரு நன்மை தேடவா என்றால் இல்லை; ஸம்ஸாரிகளான நாம் அனைவரும் உய்யவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு திவ்யதம்பதிகளைச் சரணமாகப் பற்றி நமக்காகப் பிரார்த்தித்த எம்பெருமானாரைக் கடாக்ஷித்து, அவரைக் கொண்டு நாம் உய்வதற்குண்டான பேற்றை அருளினார்கள் அவர்கள். அவ்வண்ணம் பிரார்த்திக்கும் வண்ணம் இராமாநுசர் அருளியவைகள்தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் ஆகியவை ஆகும். இவற்றுக்கு நம் ஸம்ப்ரதாயத்தில் பல உரைநூல்கள் தோன்றியுள்ளன எனினும், ஆழ்வார் ஆசார்யர்கள் அருளிய ஸ்ரீஸுக்திகளைக் கற்றும், கற்பித்தும், வளர்த்தும் வருவதே நம் பொழுதுபோக்காக அமையவேண்டும் என்பது இராமாநுசரின் முக்கிய விருப்பமாகும்.

    அவ்வகையில், இம்மூன்று கத்யங்களுக்கு நம் ஸம்ப்ரதாயத்தில் மிக்க ஊற்றமும் பக்தியும் உடைய மாடபூசி ஸ்ரீ உ.வே.ரங்காச்சாரி ஸ்வாமி எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயலை மாமுனிகள் இட்ட கட்டளைப்படிமுறைதப்பாமல் அருளியுள்ளார். இவற்றின் அர்த்தங்கள் எளிய தமிழில் அமைந்துள்ளது இதனைக் கற்பவர்கள் எல்லோரும் இதனை அர்தானுசந்தானம் பண்ணவேண்டும் என்ற உயர்நோக்கோடு செயல்புரிந்துள்ளார் ஸ்ரீ உ.வே.ரங்காச்சாரி ஸ்வாமி. நம் ஆழ்வார் ஆசார்யர்கள் அருளிய ஸ்ரீஸுக்திகளை அர்த்தத்துடன் கற்பதுதாம் நாம் கொள்ளவேண்டிய முதல் கோட்பாடு என்பது இராமானுசரின் விருப்பமாகும். கட்டளையும்கூட. அவ்வண்ணமே இம்மூன்று க்ரந்தங்களுக்கு உரைநூலை அருளியுள்ள மாடபூசி ஸ்ரீ உ.வே.ரங்காச்சாரி ஸ்வாமியின் தன்னலமற்ற இக்கைங்கர்யத்தை திவ்யதம்பதிகள் உகந்தருளுவர் என்பது திண்ணம். ஸ்வாமியினுடைய இவ்வரும்பெரும் தொண்டுக்கு தலையல்லால் கைமாறிலோம் என்று சொல்வதே பொருத்தமாகும்.

    இப்படிப்பட்ட கைங்கர்யங்கள் ஸ்வாமியின் மூலம் ஆழ்வார் ஆசார்யர்கள் அருளாலும் திவ்யதம்பதிகளின் இன்னருளாலும்வர்த்ததாம் அபிவர்த்ததாம் என்றபடிக்கு மேன்மேலும் வளர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு, ஸ்வாமிக்கு ஸம்ப்ரதாய முகமாக அடியேனது ப்ரணாமங்களையும், க்ருதஞதைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாசன்

    ப.வேங்கடகிருஷ்ணன்

    திருவல்லிக்கேணி

    முகவுரை

    அடியேன் செய்யும் விண்ணப்பம்

    ஸ்ரீமதே இராமானுஜாய நம:

    அனைத்து வைணவ அடியார்களுக்கும் அடியேன் இராமானுஜ தாஸன், மாடபூசி அரங்காச்சாரியின் தெண்டன் சமர்ப்பித்த விண்ணப்பம்.

    பல வைணவ அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்வாமி ஆளவந்தார் அருளிச்செய்த சது: ஸ்லோகி என்னும் ஸ்தோத்ர க்ரந்தத்தின் அர்த்த விசேஷங்களைச் சென்ற ஆண்டு தமிழில் புத்தகமாக வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து அன்பர்கள் அடியேனை ஊக்குவித்து இதுபோல் மேன்மேலும் சில ஸ்தோத்ர க்ரந்தங்களின் அர்த்தங்களையும் எளிய தமிழில்

    Enjoying the preview?
    Page 1 of 1