Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabharatha Marmam! Part - 1
Mahabharatha Marmam! Part - 1
Mahabharatha Marmam! Part - 1
Ebook128 pages45 minutes

Mahabharatha Marmam! Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம். இதில் இல்லாதது வேறெதிலும் இல்லை. ஏராளமான அறிவியல் கலைகளையும், நுட்பமான சாஸ்திரங்களையும் கொண்டுள்ள இது போன்ற இன்னொரு நூல் இதுவரை எழவில்லை. மஹாபாரதத்தில் உள்ள ஸ்லோகங்களின் விவரம், அது இயற்றப்பட்ட காலம், புதிர் ஸ்லோகங்கள் ஆகியவை பற்றிய விவரங்களை இந்த நூலில் காணலாம். பிரபஞ்ச நாயகனான கண்ணன் புரிந்த லீலைகளை சுவை பட இந்த நூல் விவரிக்கிறது.

மஹாபாரதத்தில் உள்ள முடிச்சுகளும் மர்மங்களும் ஏராளம். அவற்றில் சுவாரசியமான சிலவற்றை இந்த நூல் சுட்டிக் காட்டி விளக்கமும் தருகிறது.

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580151008943
Mahabharatha Marmam! Part - 1

Read more from S. Nagarajan

Related to Mahabharatha Marmam! Part - 1

Related ebooks

Reviews for Mahabharatha Marmam! Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabharatha Marmam! Part - 1 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மஹாபாரத மர்மம்! பாகம் – 1

    Mahabharatha Marmam! Part – 1

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1.ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்

    2. மஹாபாரதம் எத்தனை வருடங்களில் இயற்றப்பட்டது? மஹாபாரதம் படிப்பதால் என்ன பயன்?

    3. மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!

    4. பலராமனும் கிருஷ்ணனும் கற்ற கலைகளும், கற்ற நாட்களும்!

    5. ஒரே ஒரு ஸ்லோகத்தில் மஹாபாரதம்!

    6. சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுன பயணம்!

    7.துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம் : காந்தாரி!

    8.ஸவ்யஸாசியே எழுந்திரு!

    9.கிருஷ்ணரின் வருகையும் மறைவும்!

    10. பிரபஞ்ச நாயகன் போரின் நாயகனாகிப் புரிந்த லீலைகள்!

    11.பாண்டவர் வெல்லத் தடைகள் ஆயிரம்! தர்மம்

    12. அஸ்வத்தாமனை துரியோதனன் நம்பாமலிருக்க மாயக் கண்ணன் செய்த ஜாலம்!

    13. பதினெட்டாம் நாள் போர்: சல்ய பர்வம் தரும் துர்நிமித்தங்கள்!

    14. மஹா வீரனான கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன?

    15. பாஞ்சாலி சொன்ன தாம்பத்ய ரகசியம்!

    16. கிருஷ்ண சபதம்!

    17. சூதாட்டப் போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே கிருஷ்ணா! - உதங்கரின் கேள்வி!

    18. மஹாபாரதம் தெரிவிக்கும் அஸ்திரங்களின் மர்மம்!

    19. விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்?

    20. மஹாபாரத ரகசியம் - கடவுளின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?

    21. தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்!

    என்னுரை

    உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம்.

    இதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

    இதைப் படிக்க ஒரு ஆயுள் போதாது.

    இதில் இல்லாதது வேறெங்கும் இல்லை.

    இதற்கான விளக்கங்கள், இதைப் பற்றிய நூல்கள், கட்டுரைகள் லக்ஷக்கணக்கில் இந்த நூல் தோன்றிய நாள் முதல் எழுந்துள்ளன.

    விநாயகரே இதன் பொருளை சற்று சிந்தித்துச் சிந்தித்து தான் புரிந்து கொண்டார் என்று அறிகிறோம்.

    அப்படியானால் சாமான்ய மனிதனின் நிலை என்ன என்பதை உணரலாம்.

    வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகள், கர்ம பலன் விளக்கம் இதில் உள்ளன.

    அது மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணர் தனது திருவுள்ளத்தினால் அருளிய பகவத் கீதையும் இதில் தான் அமைந்துள்ளது.

    இன்னும் ஏராளமான பகுதிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

    விஷ்ணு சஹஸ்ர நாமம், யக்ஷ ப்ரஸ்னம், விதுர நீதி, சத ருத்ரீயம் போன்ற பல அபூர்வமான பகுதிகள் இதில் உள்ளன.

    புராண விளக்கங்களை இதில் காணலாம். ரிஷிகளின் சரித்திரங்களும் இதில் உண்டு.

    அஸ்திரங்களைப் பற்றிய விவரணம் இதில் உண்டு.

    தர்ம, அர்த்த, காம, மோக்ஷ சம்பந்தமான எந்தக் கேள்விக்கும் இதில் பதில் உண்டு.

    ஆன்மீக பூமியான பாரத தேசம் பற்றிய பிரமிக்க வைக்கும் செய்திகள் இதில் உண்டு.

    ஆங்காங்கே உள்ள சம்வாதங்கள் என்னும் அர்த்தமுள்ள உரையாடல்கள் மனித குலத்திற்கு என்றும் துணை நிற்கும் வழிகாட்டும் நெறிகளைத் தருபவை.

    இதற்கு பாஷ்யம் எழுதிய ஆசாரியர்கள், மேதைகள் பலர் உண்டு.

    இதை ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்த அறிஞர்கள் உண்டு.

    சுமார் 8000 கூட ஸ்லோகங்கள் என்னும் புதிர் ஸ்லோகங்களுக்கு விரிவான விளக்கம் இன்றும் கூடக் காணப்படவில்லை.

    முதல் ஸ்லோகத்திலிருந்து கடைசி ஸ்லோகம் வரை ஒன்றுக்கொன்று முரண்படாது ஏராளமான அறிவியல் கலைகளையும், நுட்பமான சாஸ்திரங்களையும் கொண்டுள்ள இது போன்ற இன்னொரு நூல் இதுவரை எழவில்லை.

    இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி இதைப் படிக்க ஆரம்பித்தோமானால் ஆனந்தம் தரும் இன்னொரு நூல் இருக்காது.

    அவ்வப்பொழுது ஞான ஆலயம், www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் ப்ளாக் வழியே மஹாபாரத மர்மங்களை விளக்கிக் கொஞ்சம் எழுதி வந்திருக்கிறேன்.

    இந்தக் கட்டுரைகளையும் கீதை காட்டும் பாதை பற்றிய எனது கட்டுரைகளையும் ஒவ்வொரு பாகமாக வெளியிட எண்ணம் கொண்டு இந்த முதல் பாகத்தை முதலில் வெளியிடுகிறேன்.

    இதை அழகுற நூலாக வெளியிட முன் வந்த முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

    நன்றி.

    சான்பிரான்ஸிஸ்கோ

    27-7-2022

    ச.நாகராஜன்

    1.ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்

    வாழ்நாள் முழுவதும் படிக்க வேண்டிய இதிஹாஸங்கள் ராமாயணமும், மஹாபாரதமும்.

    இதில் மஹாபாரதம் உலகின் மிகப் பெரும் நூல் என்ற பெருமையைப் பெறுகிறது. இதில் இல்லாத விஷயங்களே இல்லை என்பது இதன் சிறப்புகளில் ஒன்று.

    நூலின் பிரம்மாண்டத்தை எப்படி அறிவது?

    கீழே உள்ள பட்டியலைப் பார்த்து அறியலாம்.

    தமிழில் மிகவும் அரும்பாடு பட்டு மஹாபாரதத்தைப் பதிப்பித்தவர் ம.வீ. இராமானுஜாசாரியர். இவரது பதிப்பு மொத்தம் சுமார் 8895 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. 2314 அத்தியாயங்கள் இதில் உள்ளன.

    K.M. கங்குலி அவர்களால் 1896ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட மஹாபாரதத்திலோ 2113 அத்தியாயங்கள் உள்ளன.

    ஹிந்தியில் மஹாபாரதம் பற்றி எழுதியுள்ள அறிஞர் வாசுதேவ குப்தா தனது மஹாபாரத் தர்ஷன் (2011 வெளியீடு, புனீத் ப்ரகாஷன், ஜய்பூர்) என்ற நூலில் 1923 அத்தியாயங்களில் உள்ள 96244 ஸ்லோக பட்டியலைத் தருகிறார்.

    நூலின் பிரம்மாண்டம் இப்போது புரியும்.

    மூன்று பட்டியல்களையும் கீழே காணலாம். இன்னும் சில பட்டியல்களும் கூட இருக்கக் கூடும்.

    தமிழ் மஹாபாரதம் – ம.வீ. இராமானுஜாசாரியர் பதிப்பு

    ஆங்கிலத்தில் உள்ள மஹாபாரதம் – கே.எம். கங்குலி பதிப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1