Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Mannargal Seitha Yaga, Yajnangal
Tamil Mannargal Seitha Yaga, Yajnangal
Tamil Mannargal Seitha Yaga, Yajnangal
Ebook210 pages1 hour

Tamil Mannargal Seitha Yaga, Yajnangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யாக யக்ஞங்கள், நால் வேதங்கள், யூப ஸ்தம்பங்கள், முனிவர்கள், தவம் ஆகியன குறித்தும் இந்து மத கடவுளர் குறித்தும் நூற்றுக் கணக்கான குறிப்புகள் சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன. நான் முன்னர் வெளியிட்ட புஸ்தகங்களில் யூப கம்பங்கள்/ஸ்தம்பங்கள், வேத நெறியில் செய்யப்பட தானங்கள் முதலியன பற்றி எழுதியுள்ளேன். ஓரிரு கட்டுரைகள் மட்டும் இந்த நூலில், தலைப்பின் பொருத்தம் காரணமாக மீண்டும் வருகின்றன. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) நிகழ்த்திய சொற்பொழிவுகளில் ஒரு அருமையான கருத்தை வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியத்திலேயே நான்மறை, வேள்வி, அந்தணர், பார்ப்பனர், வேள்விக் கிழத்தி முதலிய தூய தமிழ்ச் சொற்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அக்காலத்திலேயே வேத நெறி ஆழ வேரூன்றியதையும் அது தமிழ் கலாசாரத்தின் ஒரு பகுதி என்பதையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580153509162
Tamil Mannargal Seitha Yaga, Yajnangal

Read more from London Swaminathan

Related to Tamil Mannargal Seitha Yaga, Yajnangal

Related ebooks

Related categories

Reviews for Tamil Mannargal Seitha Yaga, Yajnangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Mannargal Seitha Yaga, Yajnangal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

    Tamil Mannargal Seitha Yaga, Yajnangal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. தமிழ் மன்னர்கள் செய்த யாகங்கள்

    2. கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்

    3. சோழ மன்னன் செய்த ராஜசூய யக்ஞம்

    4. வாஜபேய யக்ஞம் — இந்திய ஒலிம்பிக்ஸ்?

    5. புறநாநூற்றில் முனிவர்கள்

    6. முனிவர்களும் ஆஸ்ரமங்களும்

    7. புறநானூற்றில் பகவத் கீதை- Part 1

    8. புறநானூற்றில் பகவத் கீதை- பகுதி 2

    9. ரிஷிகள் யார்? ரிஷிகள் எத்தனை வகை?

    10. 400 வகை யாகங்கள்: காஞ்சி பரமாசார்யார் உரை

    11. 5 மஹா யக்ஞம், 14 ச்ரௌத யக்ஞம், 7 பாக யக்ஞங்கள்

    12. இந்து சமய சந்யாசிகள் பற்றி ரோமானிய அறிஞர் விமர்சனம்

    13. தமிழர்களின் மணல் ஜோதிடம்; அப்பர் தரும் அதிசயத் தகவல்

    14. சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் - 1

    15. சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் -2

    16. சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்- Part 3

    17. சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் - 4 (Last Part)

    18. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

    19. நீங்களும் கடவுள் ஆகலாம் - வள்ளுவர்

    20. சிரிப்பு, நகைப்பு பற்றி வள்ளுவரும் காளிதாசரும்!

    21. 12 வகை அரசர்கள், 12 வகை தர்ப்பணங்கள்

    22. தென்புலத்தாருக்கு 96 கும்பிடு!

    23. பார்ப்பனிக்கு வடமொழிச் சீட்டு

    24. வேதநாயகம் பிள்ளையின் விநோதக் கடிதம்

    25. உ.வே.சா.வுக்கு புரியாத பாண்டவ பாஷை!

    26. நல்லோர் அவை புக்க நாகமும் சாகா!

    27. இலக்கியத்தில் மங்களம்! சுப மங்களம்!!

    28. கவுண்டின்யன் - நாகராணி சோமா கதை

    29. அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள்

    30. அஸ்வமேத யாகத்தில் புரியாத புதிர்கள்

    31. இந்துக்களின் நரபலி யக்ஞம்! 179 பேர் ‘படுகொலை?’

    32. புருஷ மேத யாகத்தில் 184 மனிதர்களை பலியிட்டார்களா?

    33. தங்கக் கம்பளம், வெள்ளி ரதம்! சுனஸ்சேபன் கதை சொன்னால்!

    34. இஷ்டம், பூர்த்தம் என்றால் என்ன?

    35. எண் 18 மஹிமை

    36. அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்!

    37. அஸ்வமேத யக்ஞமும் அஸ்வப் படுகொலைகளும்

    முன்னுரை

    யாக யக்ஞங்கள், நால் வேதங்கள், யூப ஸ்தம்பங்கள், முனிவர்கள், தவம் ஆகியன குறித்தும் இந்து மத கடவுளர் குறித்தும் நூற்றுக் கணக்கான குறிப்புகள் சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன. நான் முன்னர் வெளியிட்ட புஸ்தகங்களில் யூப கம்பங்கள் / ஸ்தம்பங்கள், வேத நெறியில் செய்யப்பட தானங்கள் முதலியன பற்றி எழுதியுள்ளேன். ஓரிரு கட்டுரைகள் மட்டும் இந்த நூலில், தலைப்பின் பொருத்தம் காரணமாக மீண்டும் வருகின்றன. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) நிகழ்த்திய சொற்பொழிவுகளில் ஒரு அருமையான கருத்தை வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியத்திலேயே நான்மறை, வேள்வி, அந்தணர், பார்ப்பனர், வேள்விக் கிழத்தி முதலிய தூய தமிழ்ச் சொற்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அக்காலத்திலேயே வேத நெறி ஆழ வேரூன்றியதையும் அது தமிழ் கலாசாரத்தின் ஒரு பகுதி என்பதையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

    நான் முன்பு கூறியது போல அந்தணர் பாடல்களையோ அல்லது அந்தணர் பற்றிய குறிப்புகளையோ, அல்லது ஸம்ஸ்க்ருதச் சொற்களையோ யாராவது நீக்க முயன்றால், சங்க இலக்கியம் என்பதே இராது. செல் அரித்த புஸ்தகம் போல ஆகிவிடும். அப்படிச் செய்ய எவரும் துணியார். ஏனெனில் விஷயம் தெரிந்தவர்களுக்கு தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இரு கண்கள் என்பது விளங்கும். இவ்விரு மொழிகளை அறிந்தோரே முழு இந்தியனாக இருக்க முடியும். இந்த நூலில் சங்க கால மன்னர்கள் செய்த யாகங்களுடன் பொதுவான யாக, யக்ஞ விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை, நான் பத்தாண்டுகளுக்கும் மேலாக தனித்தனி கட்டுரைகளாக எழுதியதால் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வரக்கூடும். பொறுத்தருளள்க. முதலில் என் பிளாக்குகளில் வெளியான தொடர் எண்ணும் தேதியும் இருக்கும்.. இந்த புஸ்தகங்களை அச்சு வடிவில் (Printed books) வேண்டும் என்றால் எனக்கோ புஸ்தகா நிறுவனத்துக்கோ எழுதலாம். கட்டுரைகளில் கண்ட விஷயங்கள் குறித்து உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடர்பு முகவரிகள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    அக்டோபர் 2022

    1. தமிழ் மன்னர்கள் செய்த யாகங்கள்

    Date: 23 August 2016; Post No.3085

    பாரதீய கலாசாரம், இமயம் முதல் குமரி வரை ஒன்றுதான் என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியமும், பிற்கால இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பட்டயங்களும் சான்று பகர்கின்றன.

    தமிழ் மன்னர்கள் செய்த யாக யக்ஞங்கள் பற்றி இரண்டு கட்டுரைகளில் சொன்னேன். ஒன்று கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் பற்ற்றியது. மற்றொன்று சோழன் பெருநற்கிள்ளியின் ராஜசூய யக்ஞம் பற்றியது.

    காஞ்சிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், தமிழ்நாடு தொல்பொருட் துறையின் முன்னாள் டைரக்டருமான டாக்டர் இரா. நாகசாமி எழுதிய ஒரு நூலில் தமிழ்நாட்டு வேந்தர்கள் செய்த யாக யக்ஞங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

    எத்தனை மன்னர்கள் யாகம் அல்லது வேள்விகளில் நம்பிக்கை வைத்து, ஆர்வத்தோடு அவைகளைச் செய்தார்கள் என்பதைப் பட்டியலைப் படித்தால் புரியும்.

    நூலின் பெயர்:- யாவரும் கேளிர்

    ஆசிரியர் – இரா.நாகசாமி

    வாசகர் வட்டம், சென்னை-17

    1973

    "அரசர்கள் இருவகை வேள்வி வேட்டனர். அறக்கள வேள்வி என்றும் மறக்கள வேள்வி என்றும் அவை அழைக்கப்பட்டன. போரில் வெற்றி கண்ட காலத்து துணித்த மாற்றானின் தலையை அடுப்பாக அமைத்து, குருதியை உலையகவும், துண்டிக்கப்பட்ட கரத்தை துடுப்பாகவும் கொண்டு போர்க்களத்தில் வேள்வி செய்வது ஒரு மரபு. இதையே மறக்கள வேள்வி என்பர். பாண்டியன் தலையங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் களவேள்வி வேட்டான் என்று மாங்குடிக்கிழார் கூறுவார். இதே நிகழ்ச்சியை மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும் கூறியுள்ளார்.

    தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.

    நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அர்சர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார் (புறம்.29)

    பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் (புறம்.15)

    இதுபோன்று சங்ககாலப் பேரரசர்கள் அனைவரும் வேள்வி வேட்டனர். கரிகால் பெருவலத்தான் பருந்து வடிவில் செய்யப்பட்ட வேள்விக் குண்டத்தில் யூபத்தை நாட்டி வேத வேள்வித் தொழிலாகிய யாகத்தை முடித்தான். அப்போது குற்றமற்ற அவாது குலமகளிர்கள் அவனருகே நின்றனர் (புறம்.224)

    தூவியற் கொள்கை துகளறு மகலிரொடு

    பருதியுருவிற் பல்படைப் புரிசை

    எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

    வேத வேள்வித் தொழில் முடித்த தூஉம் (புறம்.224)

    இவனது குலத்தில் வந்த பெருநற்கிள்ளி, இராஜசூயம் என்னும் அரசர்க்குரிய சிறந்த வேள்வி வேட்டு, இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனப் பெயர் பெற்றான்.

    பல சேர மன்னர்கள் வேள்வி வேட்டனர்

    பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)

    பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74-1-20

    இளஞ்சேரல் இரும்பொறை முறைப்படி சாந்தி வேட்டான். சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களை கேட்டு உரிய முறையில் ராஜசூயம் வேட்டான. அதை ஒட்டி சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்

    பேரிசை வஞ்சிமூதூர்ப்புறத்து தாழ்நீர் வேலி தண் மலர்ப்பூம் பொழில்

    வேள்விக்கான மாளிகை கட்டி நன் பெரு வேள்வி முடித்த பின் — என சிலம்பு (28–196-199) கூறுகிறது.

    அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் சிறப்பெய்தினர் (புறம்.99) வேளிர்கள் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர் என்ற வரலாறு உண்டு. சங்க காலத்தில் அரசர் வேள்வி வேட்டலை மிகச் சிறப்பாகக் கருதினர்.

    சங்க காலத்திற்குப்பின் வந்த பல்லவரும் பாண்டியரும் வேள்வியில் ஈடுபாடு நிறைந்து விளங்கினர். ஒரு பாண்டிய மன்னன் காலையிலும் மாலையிலும் அக்னியில் ஹோமம் செய்தான் என்று தளவாய்புரம் செப்பேடு கூறுகிறது.

    பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்

    தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும், செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.

    மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.

    பல்லவர்கள் முறைப்படி பல வேள்விகளை வேட்டவர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவ ஸ்கந்தவர்மன் என்பான் அக்னிஷ்டோமம், அச்வமேதம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை வேட்டான்.

    குமார விஷ்ணு அச்வமேத யாகம் செய்தான். சோமயாகம்

    செய்யாதவரே பல்லவ குலத்தில் கிடையாது என ஒரு செப்பேடு குறிக்கிறது. அவர்கள் பல வேள்விகளை வேட்டதால் பிரும்மண்யம் நிறைந்தவராய் இருந்தனர். அதனால் பரம பிரும்மண்யர் என்று அழைக்கப்பட்டனர்.

    சோழர்களில் முதல் ராஜாதி ராஜன் அச்வமேத யாகம் செய்தான் என அவன் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலயன் வழிவந்தவர்களில் இராஜாதி ராஜன் ஒருவனே அச்வமேத யாகம் செய்தவன்".

    2. கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்

    சங்கத் தமிழ் நூல்கள் சங்க கால மன்னர்கள் செய்த பல அபூர்வ யாகங்கள் குறித்து பல அதிசயமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஒரு யாகம் முடிந்தவுடன் ஒரு பார்ப்பனரும் அவர் மனைவியும் மாயமாக மறைந்துவிட்டார்கள். இதைப் பாடிய புலவரின் பெயர் பாலைக் கவுதமனார். அவர் வேண்டுகோளின் பேரில் சேர மன்னன் 10 யாகங்களைச் செய்து முடித்தவுடன் இந்த அதிசயம் நடந்தது.(காண்க: செல்வக் கடுங் கோ வாழியாதனைப் பாலைகவுதமனார் பாடிய மூன்றாம் பத்து– பதிற்றுப் பத்து)

    வேளிர் என்னும் குறுநில மன்னர்கள் தாங்கள் யாகத் தீயிலிருந்து உதித்ததாகக் கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர் மனைவியான திரவுபதி இப்படி யாகத்தீயில் உருவானவர். பல ராஜஸ்தானியர்கள், குஜராத்திகள், பஞ்சாபியர் ஆகீயோரும் இப்படிக் கூறுவது வியப்பான ஒற்றுமையாகும். கபிலரும் கூட இதே செய்தியைக் கூறுகிறார் (புறம் 201).

    கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து அதில் யூபம் (கம்பம்) நட்டான் என்று புறநானூற்றுப் புலவர் பாடுகிறார்.

    தூவியற் கொள்கை துகளறு மகளிரொடு

    பருதி உருவிற் பல்படைப் புரிசை

    எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

    வேத வேள்வி தொழில் முடித்த தூஉம்

    புறம் 224 (கருங் குழலாதனார்)

    கரிகாலனின் எல்லா

    Enjoying the preview?
    Page 1 of 1