Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil, Samskirutha Ilakkiyathil Pengal
Tamil, Samskirutha Ilakkiyathil Pengal
Tamil, Samskirutha Ilakkiyathil Pengal
Ebook180 pages1 hour

Tamil, Samskirutha Ilakkiyathil Pengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்கள் பற்றி நான் எழுதி வெளியிடும் மூன்றாவது நூல் இது. இதற்கு முன்னர் பெண்கள் வாழ்க என்ற தலைப்பிலும் மனைவி ஒரு மருந்து என்ற தலைப்பிலும் இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டேன். இன்னும் சமஸ்கிருதப் பழமொழிகளில் உள்ள விஷயங்கள், ஹமுராபி சட்டத்திலுள்ள விஷயங்கள், கிறிஸ்தவ மதத்தில் பெண்கள் நடத்தப்பட்ட விஷயங்கள் என நிறைய கட்டுரைகள், எனது பிளாக்கில் இருக்கின்றன. அவை பெண்களைக் குறித்த நாலாவது புஸ்தகமாக வெளிவரும். இந்த நூலில் வால்மீகி, கம்பன், வள்ளுவர் கருத்துக்களே பெரும்பாலும் காணப்படும் ஓரிரு விஷயங்கள் மட்டும் திரும்ப வந்திருக்கக்கூடும். 11 ஆண்டுகளில் கட்டுரைகளாக தனித்தனியே எழுதப்பட்டதால் இந்தக் குறைபாடு இருக்கும்.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580153509180
Tamil, Samskirutha Ilakkiyathil Pengal

Read more from London Swaminathan

Related to Tamil, Samskirutha Ilakkiyathil Pengal

Related ebooks

Related categories

Reviews for Tamil, Samskirutha Ilakkiyathil Pengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil, Samskirutha Ilakkiyathil Pengal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில் பெண்கள்

    Tamil, Samskirutha Ilakkiyathil Pengal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

    2. ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்!

    3. வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!

    4. பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம்

    5. அனுமன் பிறப்பிடம் விவாதம்

    6. நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் வால்மீகியும்

    7. வீணைக் கொடியுடைய வேந்தனே!

    8. கம்பனின் அதிசயத் தமிழ் சிலம்பம்!

    9. 300 ராமாயணமா? 3000 ராமாயணமா?

    10. அதிசயத் தமிழ் முனிவர் ‘புலவர் வால்மீகி’

    11. வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் - 1

    12. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 2

    13. ‘இதை உனக்காக நான் செய்யவில்லை’ - வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் - 3

    14. ‘வாழ்நாள் முழுதும் கணவனுக்கு பணிவிடை’- வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -4

    15. பெண் சந்யாசிகள்- வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -5

    16. விலை மாதரும் ஆடல் அழகிகளும் - வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்- 6

    17. அஹல்யா மானபங்கம் - வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -7 (இறுதிப் பகுதி)-

    18. சீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள்!

    19. வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல்

    20. இலங்கைத் தீவு உண்டானது எப்படி? வாயு பகவான் பற்றிய அதிசயச் செய்திகள்

    21. சிந்து சமவெளியில் ராமாயண முத்திரை!!

    22. இலக்கியத்தில் 51 வகை பெண்மணிகள்!

    23. அதிசயப் பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் - 24 நிமிடங்களில்!

    24. கணவனுக்காகப் போராடிய தமயந்தி, சாவித்திரி

    25. வேதத்தில் இரண்டு வகைப் பெண்கள்

    26. பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக!

    27. கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-1

    28. கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-2

    29. இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்! – பகுதி-1

    30. இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்- பகுதி 2

    31. ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்

    32. கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது

    33. யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்!

    34. இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!

    35. தமிழனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது? - 1

    36. தமிழர்களுக்கு முத்தம் இடத் தெரியாது? -2

    முன்னுரை

    பெண்கள் பற்றி நான் எழுதி வெளியிடும் மூன்றாவது நூல் இது. இதற்கு முன்னர் பெண்கள் வாழ்க என்ற தலைப்பிலும் மனைவி ஒரு மருந்து என்ற தலைப்பிலும் இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டேன். இன்னும் சமஸ்கிருதப் பழமொழிகளில் உள்ள விஷயங்கள், ஹமுராபி சட்டத்திலுள்ள விஷயங்கள், கிறிஸ்தவ மதத்தில் பெண்கள் நடத்தப்பட்ட விஷயங்கள் என நிறைய கட்டுரைகள், எனது பிளாக்கில் இருக்கின்றன. அவை பெண்களைக் குறித்த நாலாவது புஸ்தகமாக வெளிவரும். இந்த நூலில் வால்மீகி, கம்பன், வள்ளுவர் கருத்துக்களே பெரும்பாலும் காணப்படும் ஓரிரு விஷயங்கள் மட்டும் திரும்ப வந்திருக்கக்கூடும். 11 ஆண்டுகளில் கட்டுரைகளாக தனித்தனியே எழுதப்பட்டதால் இந்தக் குறைபாடு இருக்கும்.

    இந்தக் கட்டுரைகள் என்னுடைய பிளாக்குகளில் முன்னரே வெளியிடப்பட்டவைதான். ஆகையினால் அவை வெளியிடப்பட்ட தேதிகளும், கட்டுரைகளின் வரிசை எண்களும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    அக்டோபர் 2022

    1. பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

    பங்குனி உத்தரம் ஆன பகற்போது

    அங்க இருக்கினில் ஆயிரநாமச்

    சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்

    மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான்

    –கம்ப ராமாயணம், பால காண்டம், கடிமணப் படலம்

    வசிட்ட முனிவன் பங்குனி மாத உருத்திர நட்சத்திரம் கூடிய அந்த நல்ல நாளில், அங்கங்களோடு கூடிய வேதங்களில் சொல்லப்பட்ட, ஆயிரம் திருநாமங்களை (ஸஹஸ்ரநாமம்) உடைய – சிங்கம் போன்ற ராமனது திருமணச் சடங்கைச் செய்த முறைமைக்கு ஏற்ப, மங்கலமான ஓமாக்கினியை (ஹோம அக்னி) வளர்த்து மண வினையை முடித்தான்.

    வால்மீகி கூறியதையே கம்பரும் கூறி இருக்கிறார் (பால காண்டம், சர்கம் 72)

    பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தது என்பதற்கு தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமும், சங்க இலக்கிய நூல்களும் சான்று தருகின்றன. மனு தர்ம சாத்திரம் சொல்லும் எண் வகைத் திருமணத்தைத் தொல்காப்பியர் சொன்னதை முன்னர் கண்டோம். அவர் தச விதப் (பத்து) பொருத்தங்களையும் கூறுகிறார். இதைவிட முக்கியமானது கல்யாணத்துக்கு உரிய நட்சத்திரங்கள் என்று வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதையும் ஏனைய பல சம்ஸ்கிருத நூல்களும் சொல்லும் ரோகிணி, உத்தர பல்குனி முதலிய நட்சத்திரங்களில் தமிழர்கள் கல்யாணம் செய்ததும் ஒரே பண்பாட்டை உறுதி செய்கின்றன.

    அகநானூறு பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் தெய்வ வழிபாட்டுடன் ரோகிணி நட்சத்திரத்தில் தமிழர்கள் திருமணம் செய்து கொண்டதை முன்னர் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டோம். இதே போல கண்ணகி திருமணமும் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்தது.

    இதே போல பங்குனி உத்தரமும் முக்கிய முகூர்த்த நாளானதால் தமிழ் நாட்டில் எல்லா பெரிய சிவன் கோவில்களிலும் அன்று சிவன் – உமை கல்யாணம் நடத்தப் படுகிறது. முருகன் கோவில்களில் தேவயானை—முருகன் திருமணம் நடத்தப்படுகிறது.. தமிழ்நாட்டில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் சிறப்பு ஆராதனைகளும் நடக்கின்றன. இவை எல்லாம் கி.மு முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற காளிதாசனுக்கும் முந்தைய வழக்கம். காளிதாசன் எழுதிய குமார சம்பவம் (Chapter 7, Sloka 6)

    என்னும் காவியத்திலும் சிவன் – உமை திருமணம் பங்குனி உத்திர நன்னாளில் நடந்ததாக எழுதிவைத்துள்ளான். அதே நாளில்தான் ராமன் – சீதா கல்யணமும் நடந்துள்ளது.

    பங்குனி உத்தரப் பெருவிழாக்கள் ஏழாம் நூற்றாண்டில் வழ்ந்த திருஞான சம்பதருக்கும் முந்தைய வழக்கம் என்பது தேவாரப் பாடலில் இருந்து தெளிவாகிறது:–

    பலவிழாப் பாடல் செய் பங்குனி

    உத்திர நாள் ஒலி விழா – சம்பந்தர் தேவாரம்

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் ஒரு காலத்தில் பங்குனி உத்தரத்தில் நடந்ததாகவும், சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்காகவும், நடைமுறை வசதிகளுக்காவும் திருமலை நாயக்கர் இரண்டு விழாக்களை ஒன்றுபடுத்தி சித்திரைத் திருவிழா ஆக்கியதாகவும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

    ஆக புற நானூறு, அக நானூறு பாடல் ஒவ்வொன்றும் ஆரிய- திராவிட இன வெறிக் கொள்கையை தவிடு பொடியாக்கி வருவதைக் கண்டு வருகிறோம். எட்டு வகைத் திருமணங்கள், பத்துவிதப் பொருத்தங்கள், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், தீ வலம் வருதல், கடவுளை வணங்கி தீர்க்க சுமங்கலிக்களை வைத்து திருமணத்தை நடத்தல் முதலிய எவ்வளவோ விசயங்களில் ஒற்றுமை காண்கிறோம்.

    பங்குனி உத்தரத்தில் காம தஹனம், ஹோலி பண்டிகைகளும் நடைபெறுகின்றன.

    தமிழர்கள் வாழக்கூடிய இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முருகன் கோவில்களில் தேர், காவடி சகிதம் பங்குனி உத்தரம் கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் பௌர்ணமி நாட்களில் நடைபெறும் 1880 ஆம் ஆண்டுக்கு முன் உலகில் மின்சார விளக்குகள் இருந்ததில்லை. ஆகையால் எல்லாப் பௌர்ணமி நாட்களையும் பெரும் கோவில் திருவிழா நாட்களாகக் கொண்டாடினர் இந்துக்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து கட்டுச் சோறுடன் மாட்டு வண்டிகளிலும் நடைப் பயணமாகவும் வருவதற்கு இந்த முழு நிலவு நாட்கள் உதவின. அவைகளிலும் குறிப்பாக மாசி முதல் வைகாசி வரையுள்ள முழுநிலவு நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. காலநிலை ரீதியில் இவை மழை இல்லாமல் மிகவும் அனுசரணையாக இருந்தது இதற்குக் காரணம் ஆகும்.

    2. ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்!

    உலகில் ராமாயணம் போல தொடர்ந்து எழுதப்பட்ட இதிஹாசம் வேறு எதுவும் கிடையாது. சுமார் 3000 ராமாயணங்கள் இருப்பதால் எண்ணிக்கை விஷயத்திலும் இதற்கே முதலிடம்.

    சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக வெளிநாட்டு ஆராய்ச்சியளர் செப்புவர். ஆனால் இதுதான் ஆதி காவியம், சோகத்திலிருந்து பிறந்ததே ஸ்லோகம் என்று இந்துக்கள் பகர்வர். காதல் புரியும் பறவைகளில் ஒன்றை, ஒரு வேடன் அடித்து வீழ்த்த, அதைப் பார்த்த வால்மீகியின் உணர்ச்சி கொந்தளிக்க, அந்த சோகத்தில் உருவானது ஸ்லோகம் (செய்யுள்).

    ராஜதரங்கிணி என்ற வரலாற்று நூலில் கல்ஹணர் என்ற புலவர்

    Enjoying the preview?
    Page 1 of 1