Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam!
Arputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam!
Arputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam!
Ebook103 pages36 minutes

Arputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகின் அறிவுச் செல்வத்தில் பாரதத்தின் பங்கு பிரம்மாண்டமானது. சுமார் 12 கோடி கைப்பிரதிகள் நமது நாட்டில் கோவில்களிலும் தனிப்பட்ட நபர்களிடமும், ஏராளமான அரசர்களின் அரண்மனைகளிலும், நூலகங்களிலும் இருப்பதாக அறிஞர்களால் கணிக்கப்படுகிறது.

மாயச்சதுரம் அமைக்கும் முறை, அல்ஜீப்ரா கணித முறை, வேத கணிதம் ஆகியவற்றை சில ஸ்லோகங்கள் மூலம் அறிந்து வியக்கிறோம். ஒரு சில ஸ்லோகங்களே உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை என்றால் சம்ஸ்கிருத இலக்கியம் என்னும் மாபெரும் கடல் எப்படி இருக்கும்? அந்தக் கடலில் சில துளிகளைக் காண்பிக்கிறது இந்த நூல்! இதனால் உத்வேகம் பெறலாம். முடிந்தது அனைத்தையும் கற்கலாம்; புதியன கண்டுபிடிக்கலாம்.

இந்த நூல் அறிமுகப்படுத்தும் சில நூல்கள் : கிருஷ்ணகர்ணாமிருதம, நள சம்பு, நீதி த்விசஷ்டிகா, வியாஸ சுபாஷித சங்க்ரஹா, சரஸ்வதி கண்டாபரணம், கிராதார்ஜுனீயம், ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ, நாரத பக்தி சூத்ரம், நீதி சதகம், பண்டிதராஜ ஜகந்நாதரின் ரஸ கங்கா!, மயூர கவியின் சூர்ய சதகம், பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’!, ப்ருஹத் கதா, ப்ருஹத் கதா மஞ்சரி, கதா சரித் சாகரம், போஜ ராஜனின் சிருங்கார ப்ரகாசம், சாணக்ய நீதி!, வேத கணிதம், சம்ஸ்கிருதத்தில் அல்ஜீப்ரா நூல் - கிருஷ்ண தைவக்ஞரின் பீஜ பல்லவா! மற்றும் தந்த்ர சாஸ்திரங்கள் உள்ளிட்ட நூல்களாகும். படிக்கவும் பரிசளிக்கவும் உகந்த நூல் இது!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580151010994
Arputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam!

Read more from S. Nagarajan

Related to Arputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam!

Related ebooks

Reviews for Arputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அற்புதமான சில சம்ஸ்கிருத நூல்களின் அறிமுகம்!

    Arputhamana Sila Samaskrutha Noolgalin Arimugam!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. கிருஷ்ணகர்ணாமிருதம்

    2. நள சம்பு

    3. நீதி த்விசஷ்டிகா

    4. வியாஸ சுபாஷித சங்க்ரஹா

    5. சரஸ்வதி கண்டாபரணம்

    6. கிராதார்ஜுனீயம்

    7. ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ

    8. நாரத பக்தி சூத்ரம்

    9. நீதி சதகம்

    10. பண்டிதராஜ ஜகந்நாதரின் ரஸ கங்கா!

    11. மயூர கவியின் சூர்ய சதகம்! - 1

    12. மயூர கவியின் சூர்ய சதகம்! - 2

    13. மயூர கவியின் சூர்ய சதகம்! - 3

    14. பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’!

    15. கதைகளின் தாயகம் பாரதம்! ப்ருஹத் கதா, ப்ருஹத் கதா மஞ்சரி, கதா சரித் சாகரம் - 1

    16. கதைகளின் தாயகம் பாரதம்! ப்ருஹத் கதா, ப்ருஹத் கதா மஞ்சரி, கதா சரித் சாகரம் - 2

    17. கதா சரித் சாகரத்தின் அமிர்த மொழிகள், அறிவுரைகள்!

    18. இந்த நூல் எது?

    19. சாணக்ய நீதி!

    20. வேத கணிதம் - ஒரு பார்வை!

    21. சம்ஸ்கிருதத்தில் அல்ஜீப்ரா நூல் - கிருஷ்ண தைவக்ஞரின் பீஜ பல்லவா!

    22. தந்த்ர சாஸ்திரங்கள்

    23. இந்தியாவின் 12 கோடி கைப்பிரதிகள்!

    முன்னுரை

    உலகின் அறிவுச் செல்வத்தில் பாரதத்தின் பங்கு பிரம்மாண்டமானது.

    சுமார் 12 கோடி கைப்பிரதிகள் நமது நாட்டில் கோவில்களிலும் தனிப்பட்ட நபர்களிடமும், ஏராளமான அரசர்களின் அரண்மனைகளிலும், நூலகங்களிலும் இருப்பதாக அறிஞர்களால் கணிக்கப்படுகிறது.

    ஒரே ஒரு பாடலின் மூலம் மாயச்சதுரம் அமைக்கும் முறை சொல்லப்படுவதைக் கண்டு வியக்கிறோம்.

    இன்னொரு ஸ்லோகத்தின் மூலமாக சூரிய ஒளியின் வேகம் பற்றி அறிகிறோம். இன்னும் ஒரு ஸ்லோகம் அல்ஜீப்ரா கணித முறையை விளக்குகிறது. சில சூத்திரங்கள் மூலம் வேத கணிதத்தைக் கண்டு வியக்கிறோம்.

    மேலை நாட்டு விஞ்ஞானிகள் நமது நூல்களைப் படித்து உத்வேகம் பெற்று பல நவீனக் கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர்; இந்த நூல்களால் உத்வேகம் பெற்றதை அவர்கள் உலகிற்கு அறிவித்துமுள்ளனர்.

    இவற்றில் சுமார் 70 லட்சம் நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

    அனைத்தும் புத்தக உருவில் வெளிவந்தால் உலகின் அறிவுச் செல்வம் கணிக்க முடியா உயரத்திற்குப் போகும்.

    ஆக இவற்றில் சம்ஸ்கிருத நூல்களின் பங்கு மிகப் பெரியதாக அமைகிறது.

    மாபெரும் கடலின் ஓரத்தில் நின்று சில துளிகளைக் காண்பிக்கிறது இந்த நூல்.

    சம்ஸ்கிருத இலக்கியத்தில் ஒரு சில துளிகளே இப்படி என்றால் ஆர்ப்பரிக்கும் அலை கடல் எப்படி இருக்கும்.

    நேயர்களின் கற்பனைக்கே இதை விட்டு விடுகிறோம்.

    வேதங்கள், ஜோதிடம், கணிதம், இலக்கியம், விஞ்ஞானம், 64 கலைகள், யுத்த சாஸ்திரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள நமது நூல்கள் பற்றி அவ்வப்பொழுது எழுதி வந்துள்ளேன்.

    அவற்றில் சில அபூர்வமான சம்ஸ்கிருத நூல்களின் அறிமுகத்தை இந்த நூலில் காணலாம்.

    இதனால் உத்வேகம் பெறலாம். முடிந்தது அனைத்தையும் கற்கலாம்; புதியன கண்டுபிடிக்கலாம்.

    இதில் உள்ள கட்டுரைகளை லண்டனிலிருந்து வெளியாகும் www.tamilandvedas.com தளத்தில் வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    கட்டுரைகளைப் படித்துப் பாராட்டி வந்த அனைவருக்கும் எனது நன்றி!

    நூற்றுக்கும் மேற்பட்ட எனது நூல்களை தரத்துடன் அழகுற டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் வெளியிட்டுள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA இந்த நூலையும் வெளியிடுகிறது. இதன் உரிமையாளர் டாக்டர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாருங்கள் நூலுக்குள் செல்வோம்.

    நன்றி.

    ச. நாகராஜன்

    பங்களூரு

    27-3-2024

    1. கிருஷ்ணகர்ணாமிருதம்

    சம்ஸ்கிருத இலக்கியக் கடல் அகண்டது. ஆழமானது, நீந்திக் கரையேற முடியாதது.

    பல லட்சம் நூல்கள் உள்ள பிரம்மாண்டம் அது.

    ஆகவே தான் ஒரு ஆயுள் காலம் போதாது - அதை ஒரு பார்வை பார்க்க!

    என்றாலும் கூட அமிர்தக் கடலில் எந்தத் துளியைப் பருகினால் என்ன? அமிர்தம் அமிர்தம் தான்.

    சில துளிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இங்கு பார்ப்போம்.

    இது நூலை முழுமையாகப் படிக்க ஆவலைத் தூண்டும்.

    அதனால் ஏற்படும் பயன்களையும் பெறலாம்.

    இங்கு அறிமுகப்படுத்தப்படும் எந்த நூல்களும் எந்த ஒரு குறிப்பிட்ட அளவீட்டின்படியோ அல்லது மதிப்பீட்டின்படியோ தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    இவை நம் கைக்குக் கிடைத்த துளிகள், அவ்வளவு தான்!

    கிருஷ்ணகர்ணாமிருதம்

    லீலா சுகர் இயற்றிய நூல் இது. இவருக்கு வில்வமங்கள ஸ்வாமிகள் என்ற ஒரு பெயரும் உண்டு.

    இவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என்று சரித்திரம் கூறுகிறது.

    இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகள் ஆஸ்வாஸம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

    முதல் ஆஸ்வாஸத்தில் 110 ஸ்லோகங்களும், இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் மூன்றாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் உள்ளன. மொத்தத்தில் 328 ஸ்லோகங்களும் கர்ணாம்ருதம் என்ற சொல்லுக்கு ஏற்ப செவிக்கு அமுதமாக அமைந்துள்ளன. இது மதுர காவியம் என்று கூறப்படுகிறது.

    பகவான் கிருஷ்ணரின் பால லீலைகளைச் சுவைபடக் கூறும் நூல் இது. சுகப்

    Enjoying the preview?
    Page 1 of 1