Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum!
Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum!
Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum!
Ebook111 pages39 minutes

Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரத தேசத்தின் அடிப்படை ஆதாரம் வேதங்கள். குமரி முனை முதல் இமயம் வரை பரவி இருந்த, பரவி இருக்கும் நாகரிகம் வேதத்தின் அடிப்படையிலானது. பாரதம் ஒன்றே என்பதை நிரூபிக்கும் முக்கிய ஆதாரங்களுள் இது முக்கியமானது. வேதம் ஓதும் அந்தணர்களும் வேதமும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம். வேதம் ஓதுதல் சங்க காலத்திலிருந்தே நடை பெற்று வந்த ஒன்று. தமிழ்ச் சமுதாயத்தில் அந்தணர் மிகவும் மதிக்கப்பட்டவர்கள்.

இதை திருக்குறள், திருமுருகாற்றுப்படை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி, குறுந்தொகை, கலித்தொகை உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களில் காணலாம். இந்த நூல்களிலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டி சங்க இலக்கியத்தில் அந்தணரும் வேதமும் போற்றப்பட்டதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580151008658
Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum!

Read more from S. Nagarajan

Related to Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum!

Related ebooks

Reviews for Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சங்க இலக்கியத்தில் அந்தணரும் வேதமும்!

    Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. திருக்குறளில் அந்தணரும் வேதமும்!

    2. திருமுருகாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்!

    3. நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் !

    4. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! - 1

    5. புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! - 2

    6. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! - 3

    7. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! - 4

    8. புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! - 5

    9. பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையில் அந்தணரும் வேதமும்!

    10. பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும்!

    11. குறுந்தொகை, கலித்தொகையில் அந்தணரும் வேதமும்!

    12. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும்!

    13. அகநானூறு கூறும் பார்ப்பானின் கதை!

    14. பார்ப்பானுக்கு அழகு எது? அகநானூறு தரும் பதில்!

    15.பரிபாடலில் அந்தணரும் வேதமும் - 1

    16. பரிபாடலில் அந்தணரும் வேதமும் - 2

    17. பரிபாடலில் அந்தணரும் வேதமும் - 3

    18.பரிபாடலில் அந்தணரும் வேதமும் - 4

    19. பரிபாடலில் அந்தணரும் வேதமும் - 5

    20. பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் !

    21. பாரதத்தின் பழம்பெரும் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்!

    என்னுரை

    தமிழை வளர்ப்போர் என்று தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக் கொண்டு தன் வயிற்றையும் குடும்பத்தையும் வளர்ப்போர், அத்தோடு நில்லாமல் பல தவறான கருத்துக்களைத் தமிழ் சமுதாயத்தில் விதைத்து பிளவையும் வெறுப்பையும் தூண்டி விடுவதைக் கண்டு திடுக்கிடுகின்றோம்.

    இதற்கென பல புத்தகங்களை சங்க இலக்கிய ஆய்வுரைகள் என்ற பெயரில் வெளியிட்டு அதில் தமது கருத்துக்களைப் புகுத்தி அதை அனைத்து நூலகங்களிலும் இடம் பெறச் செய்கின்றனர்.

    இந்தக் கருத்துக்கள் பல்வேறு விதமாக இளம் சிறார்கள் மத்தியிலும் விதைக்கப்படுகின்றன.

    பார்ப்பனர்கள் வந்தேறிகள் என்றும் வேதம் கவைக்குதவாத ஒன்று என்றும் இவர்களது ஆய்வு முடிவுகள் அவ்வப்பொழுது தெரிவித்துக் கொண்டே இருக்கும்.

    சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இவர்களது பொய்க் கூற்றுகள் வெளிச்சத்திற்கு வந்து விடும்.

    பல ஆண்டுகளாக சங்க இலக்கியம் அந்தணரையும் வேதத்தையும் தரும் பல செய்திகளைத் தொகுத்துத் தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

    ஒரு அன்பர் தனது விமரிசனத்தால் இந்தக் கருத்தை வலுப்படுத்தித் தூண்டி விட்டார்.

    தொடர் உருவானது.

    ‘மெக்காலே மாடல்’ என்று சொல்லப்படும் ‘இந்தியாவை பிளவு படுத்தும் சதியைப்’ பற்றி இப்போது அனைவரும் அறிவர்.

    மாக்ஸ்முல்லர் விதைத்த பிரிவினை வாதக் கொள்கை பற்றியும் இப்போது அனைவரும் அறிவர்.

    மாக்ஸ்ம்ல்லர் மர்மம் என்ற எனது ஆய்வு நூலில் பல உண்மைகள் ஆதாரத்துடன் தரப்பட்டுள்ளன.

    ஆரிய- திராவிட வாதம் என்பது அடிப்படையற்றது.

    இதைப் பற்றி நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளில் தெளிவாகக் கூறுகிறார்.

    அவரது கட்டுரைகளில் சில பகுதிகளைக் கீழே காணலாம் :

    தமிழ் இலக்கியம் கண்ட நாள் முதல் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் மறக்க முடியாது. இந்தப் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்றும் வடக்கேயிருந்து வந்து புகுந்து கொண்டவர்கள் என்றும் வெறும் வம்பு பேசுகின்றோம்.

    சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு உற்ற தோழியாக இருந்த தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணும் அவளுடைய கணவன் சாத்தனும் வடக்கேயிருந்து வந்த ஆரியர்களா? உக்ரபாண்டியன் ஆட்சியில் கடைச் சங்கத்தில் பல பார்ப்பனப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஆரியர்களா? எங்கிருந்தோ பாண்டிய நாட்டுக்கு வந்து பண்டிதர்களாகி சங்கப் புலவர்கள் ஆகிவிட்டவர்களா?

    இப்படி ஏராளமான வாதங்களை முன் வைத்து ஆரிய திராவிட வாதத்தைப் பொடி பொடி ஆக்குகிறார் நாமக்கல் கவிஞர்.

    அடுத்து 2009ஆம் ஆண்டு ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் ஆய்வாளர்களும் இந்திய இயல் பற்றிய ஆய்வாளர்களும் மேற்கொண்ட ஆய்வுகளும் ஆரிய - திராவிட வாதம் அடிப்படையற்றது என்பதை அறிவியல் அடிப்படையில் கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.

    ஐந்து லட்சம் மரபு சார் அணுக்களை 25 குழுக்களிலிருந்து 132 தனி நபர்களிடம் ஆராய்ந்து அவர்கள் தம் முடிவை வெளியிட்டுள்ளனர்.

    அவர்களது ஆய்வு பற்றிய செய்தியை 25-9-2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா விரிவாக வெளியிட்டுள்ளது.

    (The study was conducted by CCMB in collaboration with Harvard Medical School, Harvard School of Public Health and the Broad Institute of Harvard and MIT).

    ஆக ஆரியர், திராவிடர், பிராமணர், பிராமணர் அல்லாதார் போன்ற கருத்துக்கள் பிரிவினையை உண்டு பண்ணி தமிழ்ச் சமுதாயத்தை அழிக்க நினைப்ப்வரின் சதியே என்பது நிரூபணமாகிறது.

    அந்தணர்களும் வேதமும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம்.

    அந்தணர் மிகவும் மதிக்கப்பட்டோர்; வேதம் ஓதுதல் சங்க காலத்திலிருந்தே நடை பெற்று வந்த ஒன்று.

    பாரதம் ஒன்றே என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இவை.

    சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.

    இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சங்க இலக்கியங்களில் அந்தணர் போற்றப்படுவதையும் வேதம் மிகவும் மதிக்கப்படுவதையும் ஆதாரங்களுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1