Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum
Rig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum
Rig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum
Ebook207 pages1 hour

Rig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

‘ரிக் வேதத்தில் தமிழ் சொற்களும், அதிசயச் செய்திகளும்’ என்னும் இந்த நூல் நான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, எனது இரண்டு பிளாக்குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதி தான் இது. நான்கு வேதங்கள் பற்றி இன்னும் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு தொகுதியில் இடம்பெறும். ஆங்கிலத்தில் வேதங்களைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. தமிழ் மொழியில் அத்தகைய நூல்கள் குறைவு. அப்படியே இருந்தாலும் அவை பழங்காலத் தமிழ் நடையிலோ, பிராமணத் தமிழிலோ இருக்கின்றன. தற்காலத் தமிழ் நடை மட்டுமே அறிந்த மக்களுக்கு எனது நூல் படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580153508419
Rig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum

Read more from London Swaminathan

Related to Rig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum

Related ebooks

Related categories

Reviews for Rig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ரிக் வேதத்தில் தமிழ் சொற்களும் அதிசயச் செய்திகளும்

    Rig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    Written work

    1 கண்ணதாசன் பாடல்களில் ரிக்வேத வரிகள்!

    2 கந்த சஷ்டிக் கவசத்தில் ரிக் வேத வரிகள்!!

    3 அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்!

    4 தமிழ் மன்னர்கள் செய்த யாகங்கள்!

    5 சோழ மன்னன் செய்த ராஜசூய யக்ஞம்

    6 தமிழர்கள் ஏன் ரிக் வேத பெயரிடும் முறையைப் பின்பற்றினர்?

    7 விடுமுறையைக் கண்டுபிடித்தது யார்?

    8 ஹோமத் தீயில் அரிசியையும் நெய்யையும் போட்டு வீணடிப்பது நியாயமா?

    9 அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் - பகுதி 1

    10 அஸ்வமேத யாகத்தில் புரியாத புதிர்கள்

    11 வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்!

    12 வேதத்தில் அழகிய காட்டு ராணி கவிதை!

    13 வேதத்தில் சுவையான குதிரைக் கதை!

    14 சோமபான ரஹசியங்கள்

    15 வேதங்களின் காலத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

    16 தமிழ் உணவு பற்றிய ரிக்வேதப் பாடல்

    17 பணம், பணம், பணம் - ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை

    18 ரிக்வேத பூகோளம் - கால்டுவெல்களுக்கும் மாக்ஸ்முல்லர்களுக்கும் செமை அடி!

    19 எலி கடிக்குது நெசவு நூலை! கவலை கடிக்குது என் மனதை! – ரிக்வேதம்

    20 ரிக் வேதத்தில் பருந்து மர்மம்!!

    21 மறைந்து போன வேதங்கள்!

    22 வேத காலத்தில் ஆடல், பாடல், இசைக்கருவிகள்

    23 பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்

    24 ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்?

    25 சூதாட்டத்துக்கு ரிக்வேதமும் தமிழ் வேதமும் எதிர்ப்பு

    26 பயணம் பற்றி வேதத்தில் சுவையான செய்திகள்!

    27 தமிழில் ரிக் வேத கவிதைகள்

    28 ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது? - PART 1

    29 ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது? - PART 2

    30 ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது? - PART 3

    31 காஞ்சி பரமாசார்யார் ஆயுள் கண்டுபிடித்த ‘டெக்னிக்’

    முன்னுரை

    ‘ரிக் வேதத்தில் தமிழ் சொற்களும், அதிசயச் செய்திகளும்’ என்னும் இந்த நூல் நான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, எனது இரண்டு பிளாக்குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

    2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதிதான் இது. நான்கு வேதங்கள் பற்றி இன்னும் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு தொகுதியில் இடம்பெறும். ஆங்கிலத்தில் வேதங்களைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. தமிழ் மொழியில் அத்தகைய நூல்கள் குறைவு. அப்படியே இருந்தாலும் அவை பழங்காலத் தமிழ் நடையிலோ, பிராமணத் தமிழிலோ இருக்கின்றன. தற்காலத் தமிழ் நடை மட்டுமே அறிந்த மக்களுக்கு எனது நூல் படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் கட்டுரைகளாக எழுதியதால் சொன்ன விஷயங்களே மீண்டும் வரக்கூடிய ஒரு குறைபாடு இருக்கும். இதன் மூலம் வேதத்தைப் படிக்கவும், வேதம் படித்தோரை ஆதரிக்கவும் எண்ணம் உண்டாக வேண்டும் என்பதே என் நோக்கம்.

    ஆங்கில நூலாசிரியர்கள் சொன்னதையே மொழி பெயர்க்காமல் ஆங்காங்கே தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒப்புவமைகளும் இருக்கும். பாரதியார் சொன்னது போல ‘வெற்றி எட்டு திக்கும் கொட்டு முரசே - வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ - என்று எல்லோரும் பாடுவோம்.

    இந்திய வேதங்களின் பெருமையை எடுத்துக்காட்ட தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் தேதிகளுடனும், எனது பிளாக்கில் வெளியான எண்களுடனும் தரப்பட்டுள்ளன. படித்துப் பயனுறுமாறும் வேதங்களின் பெருமையை ஏனையோருக்கு எடுத்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

    உங்கள் கருத்துக்களை எழுதுவதற்காக எனது ஈ மெயில் முகவரிகளையும் கொடுத்து இருக்கிறேன். அச்சடித்த புஸ்தகம் வேண்டுமாயின் எழுதவும்.

    அன்புடன்

    ச. சுவாமிநாதன்,

    Contact Details

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    Mobile Number in London

    07951 370 697

    Written work

    Over 6000 articles in English and Tamil and nine Tamil Books

    Ithaziyal (Journalism In Tamil),1980

    Vinavungal Vidai Tharuvom (Bbc Tamil Questions And Answers By Swaminathan), 1991

    Thamiz Ilakkiyathil Athisaya Seythikal (Strange And Wonderful Information In Sangam Tamil Literature), 2009

    Valmiki muthal Valluvar varai (Tirukkural Research Articles), London Swaminathan, Lonon, 2019

    Tolkappiar Muthal Bharati Varai (60 Second Imaginary Interviews with Top Writers, Thinkers, Philosophers and Poets), 2019

    Penkal Vazka (Long Live Women in Tamil)

    Research Articles on Egyptian Civilization in Tamil

    Research Articles on Kamba Ramayana in Tamil

    Interesting Information about Metals an other Elements in Tamil

    1

    கண்ணதாசன் பாடல்களில் ரிக்வேத வரிகள்!

    ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

    அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி!

    தாயினும் சாலப் பரிந்து சகலரை அணைப்பாய் போற்றி!

    தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

    துாயவர் இதயம்போல துலங்கிடும் ஒளியே போற்றி!

    துாரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!

    ஞாயிறு  நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி

    நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!

    கர்ணன் திரைப்படத்தில் T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு இசையுலகச் சக்கரவர்த்திகள் இணைந்து பாடியது. வரிகள்: கண்ணதாசன்

    உலகிலேயே பழமையான சமய நூல் ரிக்வேதம். தற்காலத்தில் இதன் பழைய பகுதிகள் 3700 ஆண்டுகள் பழமையானது என்று எல்லோரும் எழுதத் துவங்கிவிட்டனர். ஆயினும் இந்துக்களின் பஞ்சாங்கக் கணக்குப்படி இது 5250 ஆண்டுகளுக்கு முன்னரே வியாசரால் சரிபார்க்கப்பட்டது என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது’

    ரிக்வேதம் முதலான நான்கு வேதங்களையும் அழகுபடப் பிரித்து தன்னுடைய 4 சீடர்களை அழைத்து பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார் வியாசர். ஆயினும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வானசாஸ்திர அடிப்படையில் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று எழுதியுள்ளனர்.

    இதில் சவிதா, ஆதித்ய என்ற பெயரில் சூரியனைப் போற்றும் மந்திரங்களும், முழுப்பாடல்களும் உள்ளன. ரிக்வேதம் முழுதும் 100, 1000 என்ற எண்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வேறு எந்த பழைய நூல்களிலும் இப்படி 10, 100, 1000, லட்சம், கோடி என்ற தசாம்ச (DECIMAL SYSTEM) முறையைக் காணமுடியாது. நாம் சாதாரணமாக விஷ்ணு ஸஹஸ்ர நாம துதியிலும் கூட விஷ்ணுவை சஹஸ்ரகோடி யுகதாரிணே என்று அழைக்கிறோம். ஆயிரம் கோடியுகங்களை நாம் எண் வடிவில் எழுதிக் காட்டக்கூட முடியாது.

    ஆக ஆயிரம் என்பது ரிக் வேதத்தில் குறைந்தது இரண்டு பாடல்களிலாவது சூரியனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ‘ஆயிரம் கொம்புகள் உடைய காளை கடலில் இருந்து எழுவதாக’ ரிஷிகள் பாடுகின்றனர். இதற்கு பாஷ்யம்/ உரை எழுதிய சாயனர் ஆயிரம் கிரணங்களுடைய சூரியன் கடலில் அல்லது நீர்நிலையில் இருந்து எழுவதாக எழுதியுள்ளார். ஆக கண்ணதாசன் முதல் வரியே ரிக்வேத வரி.

    இன்னொரு ஒப்புமை தாய் என்ற சொல்லில் உள்ளது. சூரியன் ஆணா, பெண்ணா? உலகிலேயே சூரியனை ஆணாகவும் பெண்ணாகவும் காண்பது இந்தியாவில் மட்டுமே. காயத்ரீ என்ற தேவதை வேத மாதா என்று புகழப்படுவாள். அவரை பிராமணர்கள் தினமும் மூன்று முறை சூரியனை நோக்கி தண்ணீரை தானமாகக் கொடுத்துவிட்டு வழிபடுவர். ஒரு காலத்தில் நாலாவது வருணத்தவரைத் தவிர மற்ற எல்லோரும் காயத்ரியை வழிபட்டனர். ஆக வேத மாதாவை கண்ணதாசன் பாடல் (கர்ணன் திரைப்படம்) தாய் என்று சூரியனைக் குறிப்பிடுவதில் தெளிவாகிறது.

    உலகிலேயே இந்துக்கள் மட்டுமே சூரியனை இப்படி ஸ்வித்ரு தேவனாகவும் காயத்ரீ மாதாவாகவும் வருணிக்கின்றனர். இதுதவிர சூரியனின் புதல்வியை சூர்யா (தமிழில் ஜம்புநாதன் சூரியை என்று மொழிபெயர்ப்பார்) என்றும் சூரியனுக்கு முன்னர் தோன்றும் விடியற்பொழுதை உஷா (உஷை என்பது தமிழ் வடிவம்) என்றும் வருணிப்பர். அதாவது அனைத்தும் பெண்கள்.

    ***

    பாரதியும் கூட காயத்ரீ மந்திரத்தை

    ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன்

    எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர்நல்ல

    மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே…

    என்று அழகாகத் தமிழ் சொற்களில் வடித்துள்ளார்.

    சூரியன் உதித்தவுடன் உயிர்கள் எல்லாம் புத்துணர்வு பெற்று உற்சாகத்துடன் புறப்படும் காட்சியையும் வேத விற்பன்னர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

    இதோ சில மந்திர வரிகள்; இவற்றைக் கண்ணதாசனின் ஆயிரம் கரங்கள் நீட்டி என்று துவங்கும் திரைப்படப் பாடலுடன் ஒப்பிட்டு மகிழுங்கள்.

    ரிக் வேதம் 7-55

    நாங்கள் ஆயிரம் கொம்புகளோடு சமுத்திரத்திலிருந்து எழும் காளை மாட்டைக் கொண்டு மனிதர்களை உறங்க வைக்கிறோம் (சூரியன் மறையும் பொழுது)

    5-1-8

    அக்கினியைத் துதிக்கையில் சூரியனை 1000 கொம்புகள் உடையவன் என்று வருணிக்கிறார்கள். (அது சூரியன் பற்றியது என்று உரைகாரர்கள் குறிப்பிடுவர்.)

    5-44-2

    ஒளி வீசும் நீ, மானிடர்கள் நலனுக்காக மேகங்களை எல்லாத்

    Enjoying the preview?
    Page 1 of 1