Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil - English Bilingual Hindu 'Quiz'
Tamil - English Bilingual Hindu 'Quiz'
Tamil - English Bilingual Hindu 'Quiz'
Ebook175 pages1 hour

Tamil - English Bilingual Hindu 'Quiz'

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலும், ஆங்கிலத்திலும் ஐம்பதுக்கும் மேலான கேள்வி-பதில் அல்லது வினா-விடை (Quiz) பகுதிகளை என் ‘பிளாக்’குகளில் வெளியிட்டு வந்தேன். அவைகளில் படம் (Picture Quiz) பற்றிய பகுதிகளை நீக்கி விட்டு தமிழ், ஆங்கில கேள்விகளையும் பதில்களையும் இங்கே தொகுத்து அளித்துள்ளேன். இவை பள்ளி, கல்லூரி க்விஸ் (Quiz) போட்டிகளுக்கும் வீடுகளில், விடுமுறை நாட்களில் மாணவர்கள், பெற்றோர்கள் விளையாடுவதற்கும் பயன்படும்.

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580153509787
Tamil - English Bilingual Hindu 'Quiz'

Read more from London Swaminathan

Related to Tamil - English Bilingual Hindu 'Quiz'

Related ebooks

Related categories

Reviews for Tamil - English Bilingual Hindu 'Quiz'

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil - English Bilingual Hindu 'Quiz' - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ் - ஆங்கில மொழிகளில் ஹிந்து 'க்விஸ்'

    Tamil - English Bilingual Hindu 'Quiz'

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

    2. ராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி - பதில் (QUIZ)

    3. ரிஷிகள் ‘க்விஸ்’, கேள்வி-பதில்

    4. முருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’

    5. தமிழில் ஸ்தோத்திர க்விஸ்

    6. புண்ணிய தீர்த்தங்கள் கேள்வி பதில் (‘க்விஸ்’)

    7. காடுகள் பற்றி இந்துமதம் – கேள்வி & பதில்

    8. உண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ் - கேள்வி பதில்

    9. உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா?

    10. தெய்வத் தமிழ் QUIZ/கேள்வி - பதில்

    11. நீங்கள் தமிழ்ப் புலியா? தமிழ்க் கிளியா? தமிழ் எலியா?

    12. பாரதியார் QUIZ ‘க்விஸ்’ - கேள்வி பதில்

    13. நீங்கள் நாலும் தெரிந்தவரா?

    14. தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz

    15. நட்சத்திர கேள்வி-பதில்

    16. Hindu Tamil Quiz - 1

    17. Hindu Tamil Quiz - 2

    18. Hindu Tamil Quiz - 3

    19. Hindu Tamil Quiz - 4

    20. தமிழ் தெரியுமா? Tamil Quiz - 1

    21. தமிழ் தெரியுமா? Tamil Quiz - 2

    22. Tamil Quiz - 3 தமிழ் தெரியுமா?

    23. ஈற்றடி இங்கே! முதலடி எங்கே? சொல்லுடா, தமிழா!

    24. சைவம் வினா-விடை (க்விஸ்)

    25. உங்களுக்கு 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 தெரியுமா?

    26. மலர் – பூ – க்விஸ் (கேள்வி - பதில்)

    27. இந்திரனைத் தெரியுமா உங்களுக்கு?

    28. சிலப்பதிகாரம் க்விஸ் QUIZ – வினா விடை

    29. மூலிகைக் கேள்வி பதில்

    30. குபேரன் கேள்வி-பதில் - QUIZ

    31. ராகங்களின் பெயர்கள்???

    32. குழப்பம், ஒரே குழப்பம் - பாடல் குழப்பம்

    33. என் கேள்விக்கு என்ன பதில்? சொல், சொல், மனமே!

    34. சிவ பக்த ‘க்விஸ்’ QUIZ (கேள்வி-பதில்)

    Hindu Quiz in English

    1. Quiz on Holy Rivers and Seas

    2. Hindu Flower Quiz

    3. Quiz on Hindu Hymns

    4. Are you familiar with Number 4?

    5. RAMAYANA & MAHABHARATA QUIZ - SEERS, SAINTS AND RISHIS

    6. QUIZ ON HINDU SEERS - RISHIS!

    7. HINDU QUIZ - 1

    8. Hindu Quiz - 2

    9. Hindu Quiz - 3

    10. Hindu Quiz - 4

    11. Hindu Quiz on Holy Forests

    12. STAR QUIZ

    13. QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART - 1!

    14. QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART - 2!

    15. PART 3 OF 100 GREAT INDIAN WOMEN QUIZ

    16. Part 4 of 100 Great Indian Women Quiz

    17. Part 5 OF 100 GREAT INDIAN WOMEN QUIZ

    முன்னுரை

    கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலும், ஆங்கிலத்திலும் ஐம்பதுக்கும் மேலான கேள்வி-பதில் அல்லது வினா-விடை (QUIZ - க்விஸ்) பகுதிகளை என் ‘பிளாக்’குகளில் வெளியிட்டு வந்தேன். அவைகளில் படம் (Picture Quiz) பற்றிய பகுதிகளை நீக்கிவிட்டு தமிழ், ஆங்கில கேள்விகளையும் பதில்களையும் இங்கே தொகுத்து அளித்துள்ளேன். இவை பள்ளி, கல்லூரி க்விஸ் (Quiz) போட்டிகளுக்கும் வீடுகளில், விடுமுறை நாட்களில் மாணவர்கள், பெற்றோர்கள் விளையாடுவதற்கும் பயன்படும்.

    ஆங்கில வினா-விடை நூல்களை எடுத்தால் பெரும்பாலும் இந்தியர்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களே அவற்றில் இருக்கும். உலகப் புகழ்பெற்ற திருவள்ளுவர் அல்லது காளிதாஸ் பற்றி அவர்களுக்கு அறவே தெரியாது. அவர்களை கிணற்றுத் தவளைகள் என்று அழைக்கலாம். இந்தக் குறைகளை நீக்க, இந்து சமய, மற்றும் தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து ஆயிரம் கேள்விகளுக்கு மேல் இந்நூலில் கொடுத்திருக்கிறேன். இவைகள் மாணவ, மாணவியருக்கு நமது இலக்கியங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்முதலில் எனது பிளாக்குகளில் இவை வெளியான தேதிகளும், வரிசை எண்களும் இருக்கும். அனைவரும் படித்துப் பயன்படுத்தி இன்பம் அடைக.

    நானே பள்ளி, கல்லூரி நாட்களில் நடந்த பொது அறிவு Quiz க்விஸ் போட்டிகளில் வெற்றிபெற்று பரிசு வாங்கியதாலும், லண்டனில் இது போல க்விஸ் போட்டிகளை பொது நிகழ்ச்சிகளில் நடத்தி மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாலும் இதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்வேன்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    ஏப்ரல் 2023

    1. பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

    உங்களுக்குப் பிள்ளையாரின் பரிபூரண அருள் கிடைக்குமா என்பதற்கு இதோ ஒரு சோதனை. ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண்கள். இருபது கேள்விகளுக்கும் பதில் தெரிந்தால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அருள் உண்டு. குறைந்த மதிப்பெண்கள் கிடைத்தால் அஞ்ச வேண்டியதில்லை. மேலும் பல துதிகளை ஆழமாகப் படியுங்கள். அருள் சுரக்கும்.

    1. பால், தேன், பருப்பு, பாகு ஆகிய நாலையும் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கணபதியை வேண்டியவர் யார்?

    2. சீதக் களபச் செந்தாமரைப்பூம் என்று துவங்கும் பிள்ளையார் பாடலுக்கு என்ன பெயர்?

    3. முன்னவனே யானை முகத்தவனே, முக்தி நலம் சொன்னவனே - என்று விநாயகரைத் தொழுதவர் யார்?

    4. பிள்ளையாருக்கு ஒற்றைக் கொம்பு (தந்தம்) ஒடிந்திருப்பது ஏன்?

    5. கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல்பொறி - என்று துவங்கி கரிமுகனைத் துதித்தவர் யார்?

    6. பொல்லாப் பிள்ளையாருடன் தொடர்புடைய சைவ அடியார் யார்?

    7. வாதாபி கணபதிம் பஜே என்ற கிருதியை இயற்றியவர் யார்?

    8. எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி என்று உரிமையோடு பாடியவர் யார்?

    9. முதாகராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்... என்ற சம்ஸ்கிருத ஸ்தோத்திரத்தின் பெயர் என்ன?

    10. கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவீம் கவீனாம்... என்று கணபதியைப் போற்றும் துதி எதில் இருக்கிறது?

    11. வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை என்று பாரதி மொழிபெயர்த்த மந்திரம் எது?

    12. விநாயகரின் 16 முக்கியப் பெயர்களென்ன?

    13. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருக்கு முன் அவ்வையார் கைலாசம் சென்றது எப்படி?

    14. மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக கோவில்கள் மிகவும் பிரபலமானவை. அவை யாவை?

    15. வாதாபி கணபதியை தமிழகத்துக்கு கொண்டுவந்த சைவப் பெரியார் யார்?

    16. திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்... என்ற பிள்ளையார் துதியுடன் துவங்கும் நூல் எது?

    17. பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு... என்று பாடியவர் யார்?

    18. தெற்கில் பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கில் அவருக்கு இரண்டு மனைவியர் உண்டு. அவர்கள் பெயர்கள் என்ன?

    19. பிள்ளையாருக்கு பிடித்த பூ எது? தின்பண்டம் எது?

    20. நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றும் சித்தர் யார்?

    ***

    Answers (விடைகள்):

    1. அவ்வையார் 2. விநாயகர் அகவல் 3. அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 4. வியாசர் சொன்ன மகாபாரதத்தை எழுத ஒரு கொம்பை ஒடித்ததாக ஐதீகம் 5. அருணகிரிநாதர் 6. திருநரையூரில் உள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள்பெற்றவர் நம்பி ஆண்டார் நம்பி 7. முத்து சுவாமி தீட்சிதர் 8. பாரதியார் 9. கணேச பஞ்ச ரத்னம் 10. ரிக் வேதம் 11. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்... என்ற மந்திரம் 12. சுமுகன், ஏகதந்தன், கபிலன், கஜகர்ணன், லம்போதரன், விகடன், விக்னராஜன், விநாயகன், தூமகேது, கணாத்யக்ஷன், பாலச்சந்திரன், கஜானனன், வக்ரதுண்டன், சூர்ப்பகர்ணன், ஏரம்பன், ஸ்கந்தபூர்வஜன் 13. பிள்ளையார் தன் துதிக்கையால் அவ்வையாரை கைலாசத்துக்கு தூக்கிவைத்தார் 14. இவைகள் புனே நகரைச் சுற்றியுள்ளன: மோர்கான் மயூரேஸ்வர் கோவில், சித்தடேக் சித்தி விநாயகர் கோவில், பாலி

    Enjoying the preview?
    Page 1 of 1