Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Melum Arubathu Thalaippugalil 600 Kelvi-Pathigal!!
Melum Arubathu Thalaippugalil 600 Kelvi-Pathigal!!
Melum Arubathu Thalaippugalil 600 Kelvi-Pathigal!!
Ebook330 pages1 hour

Melum Arubathu Thalaippugalil 600 Kelvi-Pathigal!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில் 600 கேள்வி-பதில்கள் என்ற தலைப்பில் 600 கேள்விகளும் அதற்கான பதில்களும் முதல் பகுதியாக வெளியானது. அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் 60 தலைப்புகளில் பத்து, பத்து கேள்விகள் வீதம் சுமார் 600 கேள்வி- பதில்கள் உருவாயின. ‘சுமார்’ என்று சொன்னதற்கு காரணம் என்னவென்றால் சில தலைப்புகளை பத்து கேள்விக்குள் அடக்க முடியவில்லை. ஆகையால் ‘போனஸ்’ கேள்விகளையும் சேர்த்தேன். மேலும் சில தலைப்புகளை 3, 4 பகுதிகளாக வெளியிட்டபோது பத்துக்குப் பதிலாக 40 கேள்விகள் கூட ஒரே தலைப்பில் வந்துவிட்டன.

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580153510931
Melum Arubathu Thalaippugalil 600 Kelvi-Pathigal!!

Read more from London Swaminathan

Related to Melum Arubathu Thalaippugalil 600 Kelvi-Pathigal!!

Related ebooks

Related categories

Reviews for Melum Arubathu Thalaippugalil 600 Kelvi-Pathigal!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Melum Arubathu Thalaippugalil 600 Kelvi-Pathigal!! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி-பதில்கள்!!

    Melum Arubathu Thalaippugalil 600 Kelvi-Pathigal!!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    PART ONE TAMIL QUIZ

    1.QUIZ தேன் பத்து QUIZ

    2.QUIZ மாதப் பத்து QUIZ

    3. QUIZ கன்பூசியஸ் பத்து QUIZ

    4. QUIZ தமிழ் இலக்கண பத்து QUIZ

    5. QUIZ செய்நன்றி பத்து QUIZ

    6. QUIZ வில்லி பாரதம் பத்து QUIZ

    7. QUIZ சங்கீத முத்திரை பத்து QUIZ

    8. QUIZ பகவத்கீதை பத்து QUIZ

    9. QUIZ ராமேஸ்வரம் பத்து QUIZ

    10. QUIZ சங்கீதத்தில் ஊர்கள் பத்து QUIZ

    11. QUIZ ரிஷிகேஷ் பத்து QUIZ

    12. QUIZ திரு ஓணம் பத்து QUIZ

    13.Quiz பாரதி பத்து Quiz

    14. Quiz பெயர் மாறிய நாடுகள் பத்து quiz

    15. Quiz நட்சத்திரப் பத்து Quiz

    16. QUIZ வெந்நீர் ஊற்றுகள் பத்து QUIZ

    17. QUIZ பிரம்மா பத்து QUIZ

    18. QUIZ நவராத்திரி பத்து QUIZ

    19. QUIZ சரஸ்வதி பத்து QUIZ

    20. QUIZ தீபாவளி பத்து QUIZ

    21. QUIZ அதிசய முதலைப் பத்து QUIZ

    22. QUIZ எவரெஸ்ட் பத்து QUIZ

    23. QUIZ இமயமலை பத்து QUIZ

    24.QUIZ கார்த்திகை பத்து QUIZ

    25.QUIZ விந்திய மலை பத்து QUIZ

    26. QUIZ காஷ்மீர் பத்து QUIZ

    27. QUIZ புத்தர் பத்து QUIZ

    28. QUIZ மஹாவீரர் பத்து QUIZ

    29. QUIZ குரு நானக் பத்து QUIZ (Post No.12,845)

    30. QUIZ விநாயகர் பத்து QUIZ

    Part 2 Tamil Quiz

    31. QUIZ யானைப் பத்து QUIZ

    32. QUIZ முருகன், கந்தன் QUIZ

    33. QUIZ அயோத்தி ராமர் கோவில் பத்து QUIZ

    34. QUIZ சிவலிங்கம் பத்து QUIZ

    35. QUIZ மதுரா பத்து QUIZ

    36. QUIZ வாரணாசி / காசி பத்து காசி QUIZ

    37. QUIZ ஹரித்வார் பத்து QUIZ

    38. QUIZ உஜ்ஜைனி பத்து QUIZ

    39. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1

    40. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 2

    41. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 3

    42. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 4

    43. QUIZ புரி பத்து QUIZ

    44. QUIZ துவாரகா பத்து QUIZ

    45. QUIZ யமுனோத்ரி, கங்கோத்ரி பத்து

    46. QUIZ பத்ரிநாத் பத்து QUIZ

    47. QUIZ வைஷ்ணவ தேவி கோவில் பத்து QUIZ

    48. QUIZ பஞ்சப் பிரயாகை பத்து QUIZ

    49. QUIZ பஞ்ச கேதார் பத்து QUIZ

    50. QUIZ காமாக்யா கோவில் பத்து QUIZ

    51. QUIZ சிம்லா பத்து QUIZ

    52. QUIZ ஜெய்ப்பூர் பத்து QUIZ

    53 QUIZ மயில் பத்து QUIZ

    54. QUIZ குயில் பத்து QUIZ

    55. QUIZ கிளி பத்து QUIZ

    56. QUIZ அன்னம் பத்து QUIZ

    57. QUIZ கருடன் பத்து QUIZ

    58.Quiz ஆந்தை பத்து Quiz

    59.QUIZ பல்லி பத்து QUIZ

    60. QUIZ நாமக்கல் பத்து QUIZ

    முன்னுரை

    தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில் 600 கேள்வி--பதில்கள் என்ற தலைப்பில் 600 கேள்விகளும் அதற்கான பதில்களும் முதல் பகுதியாக வெளியானது. அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் 60 தலைப்புகளில் பத்து, பத்து கேள்விகள் வீதம் சுமார் 600 கேள்வி- பதில்கள் உருவாயின. ‘சுமார்’ என்று சொன்னதற்கு காரணம் என்னவென்றால் சில தலைப்புகளை பத்து கேள்விக்குள் அடக்க முடியவில்லை. ஆகையால் ‘போனஸ்’ கேள்விகளையும் சேர்த்தேன். மேலும் சில தலைப்புகளை 3, 4 பகுதிகளாக வெளியிட்டபோது பத்துக்குப் பதிலாக 40 கேள்விகள் கூட ஒரே தலைப்பில் வந்துவிட்டன.

    இந்த நூல் பள்ளி, கல்லூரி மாணவர்களின் QUIZ -க்விஸ் போட்டிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். சில கேள்விகளுக்கு ஒரு வரி பதில் இல்லாமல் பத்தி,பத்தியாக மேல் விவரமும் இருக்கிறது. ஒரு எடுத்துக் காட்டு மட்டும் தருகிறேன். சந்தனத்தை முழங்கைகளால் அரைத்த நாயனார் யார்? என்றால் ஒரே வரியில் மூர்த்தி நாயனார் என்று சொல்லிவிடலாம். அடுத்த கேள்வியாக அவர் ஏன் அப்படிச் செய்தார்? என்று கேட்கும்போது மூர்த்தி நாயனாரின் கதை முழுவதையும் சுருக்கமாகச் சொல்லவேண்டி நேர்ந்தது. ஆகவே இதை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எவரும் படித்து அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியும்.

    இரண்டாவது பகுதி என்பதால், மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி--பதில்கள்! என்று நூலுக்குப் பெயர் சூட்டியுள்ளேன். பொருளடக்கத்தைப் பார்த்தாலே நூலின் வீச்சு எத்தகையது என்பது விளங்கி விடும். காடு, மலை பறவை, விலங்கு, சாமி, பூதம், அரக்கர், தேவர், தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியம் என்று பல தலைப்புகளை அலசும் கேள்விகள் உள்ளன.

    ஒரு பென்சிலை வைத்துக்கொண்டு எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில்களைச் சொல்லமுடிந்தது என்று ‘மார்க்’ போட்டுக்கொண்டால் உங்கள் அறிவை நீங்களே சோதித்த பலனும் கிட்டும். படியுங்கள் ; பலனடையுங்கள்!

    இளைஞர்களுக்கு இதுபோன்ற நூல்களை அறிமுகப்படுத்தி நம்முடைய கலாசாரத்தையும் சமயத்தையும் இலக்கியத்தையும் வளருங்கள்!

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    ஏப்ரல் 2024

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    PART ONE TAMIL QUIZ

    1.QUIZ தேன் பத்து QUIZ

    Post No. 12,385

    Date uploaded in London – – 7 August, 2023

    QUIZ SERIES No.61

    1.தேன் என்ற சொல்லுக்கு நிகரான மூன்று தமிழ் சொற்களை சொல்ல முடியுமா?

    ***

    2.தேன்களில் பல வகை உண்டு ; குறைந்தது மூன்று தமிழ் சொற்களை சொல்ல முடியுமா? பூக்கள், பழங்கள் பெயரைச் சொல்லாதீர்கள்.

    ***

    3.தேனுடன் தொடர்புடைய, எல்லோருக்கும் தெரிந்த ஒரு பறவை எது?

    ***

    4.உலகிலேயே பழைய தேன் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது?

    ***

    5.காடுகளில் மக்களும் வேடர்களும் என்ன சாப்பிட்டனர்? காடுகளில் முனிவர்கள் எல்லோரையும் உபசரிக்க என்ன கொடுத்தனர்?

    ***

    6.பழைய நூலான சரக சம்ஹிதை சம்ஸ்க்ருத மொழியில் தேன் பற்றி என்ன சொல்கிறது?

    ***

    7.சர்க்கரைக்கும் தேனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

    ***

    8.தேனீக்கள் பூக்களிலிருந்து தேனைச் சேகரிப்பதை எல்லோரும் அறிவோம்; வேறு எந்தப் பிராணி அல்லது பூச்சியாவது தேன் உற்பத்தி செய்கிறதா?

    ***

    9.தேன் ஏன் கெடுவது இல்லை?

    ***

    10.தேன் எப்படி உற்பத்தியாகிறது?.

    ***

    விடைகள்

    1.கள், பிரசம், நறவு, (மது)

    ***

    2.மலைத் தேன், கொம்புத் தேன், பொந்துத் தேன், புற்றுத் தேன், மனைத் தேன்

    ***

    3.தேன் சிட்டு

    ***

    4.எகிப்திய பிரமிடுகளில் பழைய தேன் கண்டுபிடிக்கப்பட்டது

    ***

    5.மக்களும் வேடர்களும் சாப்பிட்ட உணவு :தேனும் தினைமாவும் ; முனிவர்கள் எல்லோரையும் உபசரிக்க மது பர்க்கம் கொடுத்தனர் -- இதில் தேனுடன் தயிர், நெய் அல்லது பால் கலந்து கொடுப்பது பெரிய உபசாரம் என்று இதிஹாச புராணங்கள் கூறுகின்றன.

    ***

    6.சரகர் எடுத்திய நூலில் மக்ஷிக, பிரமர செளத்ர பைத்தக என்ற நான்கு வகித்த தேன் களைக் குறிப்பிட்டு (Makshika, Bhramara, Kshaudra and Paittaka) செந்நிற தேனீக்கள் கொண்டுவரும் தேன்தான் மிகச் சிறந்தது என்கிறார். அது நல்லெண்ணெயின் நிறத்தில் இருக்கும் என்றும் சொல்கிறார்.

    ***

    7.சர்க்கரை அல்லது சீனியில் உள்ள இனிப்பு சுக்ரோஸ்; ஆனால் தேனிலுள்ள இனிப்பு குளூக்கோஸ், ப்ரக்டொஸ்.

    தேனிலுள்ள சத்துக்கள்

    பிரக்டோஸ்:fRUCTOSE 38.2%

    குளுக்கோஸ்:Glucose 31.3%

    மால்டோஸ்: Maltose 7.1%

    சுக்ரோஸ்Sucrose 1.3%

    நீர்: Water 17.2%

    சர்க்கரை: Sugar 1.5%

    சாம்பல்: Ah 0.2%

    மற்றவை : Other ingredients 3.2%

    ***

    8.ஆம்; குளவி வகைகளில் சில தேனை சேகரிக்கின்றன. அவை தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் காணப்படுகின்றன Some wasp species, such as Brachygastra lecheguana and Brachygastra mellifica, found in South and Central America, are known to feed on nectar and produce honey.

    ***

    9.அதில் எந்த கிருமிகள் அல்லது பாக்டீரியாக்கள் வளரமுடியாது ; அதனால் கெடுவது இல்லை ;தேன் கெடாமல் இருப்பதற்குக் தேநீக்கள் அதை செய்யும் முறையும் ஒரு காரணம்.

    ***

    10.தேனீக்களில், பூக்களுக்குச் சென்று தேனை சேகரித்துக் கொண்டுவரும் ஒரு பிரிவு (Forager Bees) உண்டு. அவை.அதை தொழிலாளர் பிரிவு தேநீக்களிடம் (Worker Bees) அளிக்கும்.

    தொழிலாளர் பிரிவு தேனீக்கள் அதை குடிக்கும்; கொப்பளிக்கும் ; இவ்வாறு பலமுறை செய்து கொண்டே இருக்கும். இதனால் அந்தத் தேனில் உள்ள நீர்ச் சத்து குறைந்துவிடும். இப்படிச் செய்கையில் அவற்றின் வயிற்றில் உள்ள என்சைம் தேனில் இருக்கும் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை குளுகோனிக் அமிலமாக (Gluconic Acid) மாற்றிவிடும் தே ன் இவ்வாறு அமில ச் சத்துடன் ஆக்கப்படும்போது ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen Peroxide) என்ற வாயுவும் உற்பத்தியாகும். அதுமட்டுமல்ல. தேன் அடைகளின் அறைகளில் தேனை வைத்து தனது சிறகுகளால் விசிறிக் கொண்டே இருக்கும். இதனால் தண்ணீர் சத்து மேலும் ஆவியாகும்.மொத்தத்தில் அமிலத் தன்மையும் நீரின்மையும் இதைக் கெடாமல் பாது காக்கிறது. ஹைட்ரஜன் பெராக் ஸைட் வாயுவுக்கும் பாக்டிரீயா (Anti bacterial) கிருமிகளைக் கொல்லு ம் சக்தி உண்டு. ஆகையால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன், பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை.

    2.QUIZ மாதப் பத்து QUIZ

    Post No. 12,388

    Date uploaded in London – – 8 August, 2023

    QUIZ SERIES No.62

    QUIZ மாதப் பத்து QUIZ (Post No.12,388)

    1.மாதங்களில் நான் மார்கழி என்று யார் சொன்னார்?எங்கே சொன்னார்?

    ***

    2.ஆடி மாதத்துக்கும் சாகுபடிக்கும் என்ன தொடர்பு?

    ***

    3.ஐப்பசியையும் கார்த்திகையையும் சேர்த்து தமிழர்கள் சொல்லுவது என்ன?

    ***

    4.தமிழ் மாதங்கள் என்று நாம் சொல்லும் மாதங்கள் அனைத்தும் என்ன மொழியில் உள்ளன?

    ***

    5.தமிழர்கள் என்று பெருமை பேசுவோருக்கு 12 மாதங்களும் தெரிவதில்லை என்று ஒரு சர்வே காட்டுகிறது. உங்களுக்கு 12 மாதங்களின் பெயர்களும் தெரியுமா? சொல்லுங்கள்

    ***

    6.ஏதோ ஒரு மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்கள் நம்புகின்றனர். அது என்ன மாதம்? ஏன் அப்படி நம்புகிறார்கள்?

    ***

    7.தமிழர்களும் பெரும்பாலான இந்தியர்களும் சந்திரனும் ஒரு நட்சத்திரமும் கூடி வானத்தில் காட்சி தரும் அடிப்படை யில் பெயர் சூட்டினர் ;ஆனால் மலையாளிகளும் வேறு சிலரும் வேறு ஒரு முறையில் மாதத்துக்குப் பெயர் சூட்டுவர். அது என்ன முறை?

    ***

    8.ஆங்கிலக் காலண்டரில் எந்தக் காலத்தில் (எப்போது) ஒரு தமிழ் மாதம் துவங்கும். ஆங்கில மாதங்களின் மடத்தியில் தமிழ் மாதம் துவங்குவதைக் காணலாம்?

    ***

    9.தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் வெங்கட் ராமா கோவிந்தா என்ற கோஷத்தையும், சாமியே சரணமய்யப்பா என்ற கோஷத்தையும் எப்போது அதிகம் கேட்கலாம்?

    ***

    10.தெலுங்கு, கன்னடம் பேசுவோரும் மாதத்தைத் துவக்கும் நாள் எது? அதிக மாசம் என்றால் என்ன?

    ***

    விடைகள்

    1.பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் விபூதி யோகத்தில் மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னார். பின்னர் சினிமாப் பாடலில் கண்ணதாசன் சொன்னார்

    ***

    2.ஆடிப்பட்டம் தேடி விதை என்பது தமிழ்ப் பழமொழி.

    ***

    3.ஐப்பசி கார்த்திகை அடை மழைக் காலம். அப்போது வடகிழக்குப் பருவமழை வருவதால் இந்தப் பழமொழி.

    ***

    4.சம்ஸ்க்ருத மொழியில் உள்ளதை நாம் தமிழில் மொழிபெயர்க்காமல் அதை தமிழ்ப் படுத்தியுள்ளோம்

    எடுத்துக்காட்டாக ஆஷாட என்பதை ஆடி என்போம்;. ச்ராவண என்பதை ஆவணி என்போம். இது பற்றி காஞ்சி சுவாமிகள் (1894-1994) ஒரு அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

    ***

    5.சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி.

    ***

    6. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பயிர்கள் அறுவைடையாகி வந்திருப்பதால் சோற்றுக்கும், நெல்லை விற்றுக்கிடைக்கும் பணத்துக்கும் பஞ்சமிராது. மேலும் மழை ஓய்ந்து வெய்யிலும் அதிகம் இல்லாத மாதம் ; பாரம்பரியமாக சுப மாதம் என்பதால் எல்லோரும் எதிர்பார்க்கும் கல்யாணங்களும் நடக்கும். இவை முக்கியக் காரணங்கள் உத்தராயண புண்ய காலம் துவங்கி விடும்

    ***

    7சூரியன் எந்த ராசிக்குள் பிரவேசிக்கிறானோ அதை வைத்து மாதத்துக்குப் பெயர் சூட்டுவர்.சித்திரையை மேஷ மாதம் என்பர். இதே போல மீனம் சிம்மம் என்றெல்லாம் மாதங்களை அழைப்பர்.

    ***

    8.இதை நினைவில் வைத்துக்கொள்ளுவது எளிது. பெரும்பாலும் ஜனவரி 14ல் தை மாதமும், ஏப்ரல் 14ல் சித்திரை மாதமும் துவங்குவதைக் காண்கிறோம்

    ***

    9...புரட்டாசி மாதத்தில் நேர்த்திக் கடன் கழிக்க வேண்டிக்கொண்டவர்கள் வீடு வீடாகச் சென்று வெங்கட் ராமா கோவிந்தா கோஷம் எழுப்பி அரிசி அல்லது பணம் வசூலிப்பர். கார்த்திகை மாதம் முதல் நாள், ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டுக்கொண்டு தை மாத மகர ஜோதி வரை, சாமியே சரணம் ஐயப்பா கோஷம் இடுவர்.

    ***

    10.அவர்கள் அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாதம் என்று கருதுவதால் அமாவாசை அன்று புதிய மாதம் துவங்கி விட்டது என்று கணக்கிடுகிறார்கள் இதனால் மாதப்பெயர்களில் கொஞ்சம் குழப்பம் ஏற்படும்.

    இது தவிர அதிக மாசம் என்பதாலும் குழப்பம் வரும்

    அதிக மாசம் என்றால் என்ன?

    இது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும். அதை புருஷோத்தம மாதம் என்று சொல்லி சுப காரியங்களை விலக்குவார்கள் சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடும் போது ஒரு ஆண்டுக்கு 365 நாள் வராது. குறையும்; இப்படித் துண்டு விழும் நாட்களை சேர்த்து 13 ஆவது சந்திர மாதமாக காலண்டரில் சேர்ப்பர். இது அதிக மாச/ மாத எனப்படும்.

    3. QUIZ கன்பூசியஸ் பத்து QUIZ

    Post No. 12,396

    Date– 10 August, 2023

    QUIZ SERIES No.63

    QUIZ கன்பூசியஸ் பத்து QUIZ

    1.கன்பூசியஸ் Confucius/ Kong Fuzi எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எப்போது வாழ்ந்தார்?

    ***

    2.பாரதியார் கன்பூசியஸ் மதம் பற்றி என்ன சொன்னார்?

    ***

    3.கன்பூசியஸ் மதத்தை கோட்பாடுகளைப் பின்பற்றுவோர் எத்தனை பேர்?

    ***

    4.அவர் ஆற்றிய முக்கியப் பணி எந்தத் துறையைச் சேர்ந்தது?

    ***

    5.கன்பூசியஸ் என்று சொல்லுவது சரியா?

    ***

    6.கன்பூசியஸ் ஆறு விஷயங்களை சொன்னார் அவை யாவன?

    ***

    7.அவர் பிறந்த இடம் எது? இறந்த இடம் எது?

    ***

    8.அவர் பிறந்த தேதியை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?

    ***

    9.அவர் புஸ்தகம் எழுதினாரா? அதன் பெயர் என்ன?

    ***

    10.இந்துமத நூல்களை ஒப்பிட்டால் அவர் சொன்னதில் புதுமை, கருத்து வேறுபாடு உண்டா?

    ***

    விடைகள்

    1.சீனாவைச் சேர்ந்தவர். அவருடைய காலம் கிட்டத்தட்ட புத்தர் காலம் கி.மு 551-479 BCE அவர் பெரிய தத்துவ ஞானி

    ***

    2.பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!

    புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,

    சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

    சநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,

    நாமமுயர் சீனத்துத் தாவுமர்க்கம்,

    நல்ல கண் பூசிமதம் முதலாப் பார்மேல்

    யாமறிந்த மதங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1