Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theeyorai Azhikka Kalki Varugiraar!
Theeyorai Azhikka Kalki Varugiraar!
Theeyorai Azhikka Kalki Varugiraar!
Ebook161 pages59 minutes

Theeyorai Azhikka Kalki Varugiraar!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்கி அவதாரம் குறித்தும் கலியுகத்தின் முடிவு குறித்தும் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கிறது. அவ்வப்போது வரும் உலக அழிவு சாத்தியக்கூறுகள் பற்றிய செய்திகளும் இதில் மக்களின் கவனத்தைத் திருப்புகிறது. கலியுக முடிவு சர்ச்சைக்குரிய தலைப்பாகும். பல ஆசிரியர்கள் ஏற்கனவே இது பற்றி எதிரும் புதிருமாக கருத்துக்களை வெளியிட்டனர். வராஹமிஹிரர், கல்ஹணர் போன்றோர் 600 ஆண்டுகள் குறைத்துக் காட்டுகின்றனர். இன்னும் ஒரு சுவாமிஜியோ கலியுகம் முடிந்து அடுத்த யுகம் நடக்கிறது என்கிறார். இருப்பினும் பஞ்சாங்கம் முதலிய நூல்களில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கலியுகம் துவங்கியதாவே காட்டியுள்ளனர். இது பற்றிய சுவையான கட்டுரைகளோடு லேஸர் வாளுடன் கல்கி அவதாரம் எப்போது வரப்போகிறது என்ற விஷயமும், அவர் இலங்கையில் அவதாரம் செய்யப்போகிறார் என்ற விஷயமும் ஆராயப்படுகிறது.

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580153509071
Theeyorai Azhikka Kalki Varugiraar!

Read more from London Swaminathan

Related to Theeyorai Azhikka Kalki Varugiraar!

Related ebooks

Related categories

Reviews for Theeyorai Azhikka Kalki Varugiraar!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theeyorai Azhikka Kalki Varugiraar! - London Swaminathan

    http://www.pustaka.co.in

    தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

    Theeyorai Azhikka Kalki Varugiraar!

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது?

    2. உலக அழிவு பற்றி மகாபாரதம்

    3. டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியுமா?

    4. கலியுக முடிவு பற்றி லிங்க புராணம்

    5. கலியுக அறிகுறி- குருமார்கள் குலிங்க பக்ஷி போலத்திரிவர்!! 8 வயதில் குழந்தை பெறுவர்!

    6. இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 1

    7. இலங்கையில் கல்கி அவதாரம்: கல்கி புராணம் கூறும் அதிசய விஷயம்- Part 2

    8. கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது

    9. கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!!

    10. கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா?

    11. உலகம் அழியுமா? புதிய புஸ்தகம், புதிய செய்தி!

    12. கிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயது! மநு

    13. சிவ பெருமானை சனி பிடித்த கதை : இராமன் பற்றிய தமிழ் பழமொழிகள்

    14. நளதமயந்தி கதையில் விஞ்ஞான விஷயங்கள்-1

    15. நளதமயந்தி கதையில் விஞ்ஞான விஷயங்கள்-2

    16. எதிர்காலத்தை அறிய உதவும் அற்புத மூலிகை

    17. ஐந்து குதிரை நடை: துரக வல்கன-- சஞ்சல – குண்டல…

    18. தமிழில் எண் ஐந்து; இலக்கியத்தில் எண் ஐந்து

    19. உலகம் போற்றும் எண் 5-ன் சிறப்புகள்!

    20. சுவையான ரிஷி பஞ்சமி கதைகள்; பஞ்சமிப் பண்டிகைகள்

    21. ஆறு வகை எள் ஏகாதஸி

    22. மனதைத் தைக்கும் ஏழு முட்கள்; பர்த்ருஹரி வருத்தம்

    23.இசையில் எண் 8; யோகத்தில் எண் 8

    24. நவரசத்தில் ஒரு ரசம் குறைந்தது ஏன்?

    25. ஒன்பதாம் எண்ணின் அதிசய சக்தி

    26. இலக்கிய தசாங்கமும் பூஜை தசாங்கமும்

    27. ஐந்து கவிஞர்கள் பாடிய பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்க!

    (28).32 அறங்கள், 16 பேறுகள், 8 மங்களச் சின்னங்கள்

    முன்னுரை

    கல்கி அவதாரம் குறித்தும் கலியுகத்தின் முடிவு குறித்தும் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கிறது. அவ்வப்போது வரும் உலக அழிவு சாத்தியக்கூறுகள் பற்றிய செய்திகளும் இதில் மக்களின் கவனத்தைத் திருப்புகிறது. கலியுக முடிவு சர்ச்சைக்குரிய தலைப்பாகும் .பல ஆசிரியர்கள் ஏற்கனவே இது பற்றி எதிரும் புதிருமாக கருத்துக்களை வெளியிட்டனர் . வராஹமிஹிரர், கல்ஹணர் போன்றோர் 600 ஆண்டுகள் குறைத்துக் காட்டுகின்றனர். இன்னும் ஒரு சுவாமிஜியோ கலியுகம் முடிந்து அடுத்த யுகம் நடக்கிறது என்கிறார்.இருப்பினும் பஞ்சாங்கம் முதலிய நூல்களில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கலியுகம் துவங்கியதாவே காட்டியுள்ளனர். இது பற்றிய சுவையான கட்டுரைகளோடு லேஸர் வாளுடன் கல்கி அவதாரம் எப்போது வரப்போகிறது என்ற விஷயமும், அவர் இலங்கையில் அவதாரம் செய்யப்போகிறார் என்ற விஷயமும் ஆராயப்படுகிறது .

    இந்த நூலில் இன்னும் ஒரு விஷயமும் அடங்கி இருக்கிறது. அதாவது 5 முதல் 10 வரையான எண்களின் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றைத் தனியாக வெளியிடும் அளவுக்கு அது பெரிதாக இல்லை.ஆகையால் இதில் பல எண்கள் (Numbers) கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. எண்களைப் பொறுத்தவரை பஞ்சமி என்றால் வசந்த பஞ்சமி கருட பஞ்சமி, நாக பஞ்சமி என்று பல பஞ்சமிகள் வருகின்றன. இவ்வாறு வரும் விஷயங்களின் பட்டியல் 5, 7, 9, 10, 16, 32 எண்களுக்கு இதில் பல விஷயங்கள் கொடுக்கப் பட்டுள்ளன.. படித்து மகிழுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

    இந்தக் கட்டுரைகள் கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக என்னுடைய பிளாக்குகளில் முன்னரே வெளியிடப்பட்டவைதான். ஆகையினால் அவை வெளியிடப்பட்ட தேதிகளும், கட்டுரைகளின் வரிசை எண்களும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர் 2022

    1. மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது?

    Research Article No.1736; Date:- 21 March, 2015

    விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் எந்த தேதியில் (திதியில்) நிகழும் என்று நம் முன்னோர்கள் அழகாக எழுதி வைத்துள்ளார்கள். அதைப் படிக்கையில் அடுத்த அவதாரம், அதாவது மிலேச்சர்களை ஒடுக்கும் கல்கி அவதாரம் எப்போது நிகழும் என்று தெரிகிறது.

    1. சைத்ரே மாசி சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் திதௌ விபு:

    உதபூம் மத்ஸ்ய ரூபேண ரக்ஷார்தம் அவனேர்ஹரி:

    பொருள்:–சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் (அமாவாசைக்குப் பின் 13-ஆவது நாள்), ஹரியானவர் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவத்தில் பிறந்தார்.

    2. ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம் பகவான் அஜ:

    மந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ

    பொருள்:– ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் (பௌர்ணமிக்குப் பின்னர் 12-ஆவது நாள்) பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.

    3. சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம் ஜக்ஞே நாராயண ஸ்வயம்

    புவம் வராஹரூபேண ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத்

    பொருள்:– சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் (ஐந்தாவது நாள்) பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றினார்.

    4. வைசாக சுக்லபக்ஷே து சதுர்தஸ்யாம் இனே அஸ்தகே

    உத்பபூவ அசுரத்வேசீ ந்ருசிம்ஹோ பக்தவத்சல:

    பொருள்:– வைகாசி மாத சுக்ல பட்சத்தில் சதுர்தசியன்று (14-ஆவது நாள்), சூர்ய அஸ்தமன காலத்தில் அசுரர்களின் எதிரியான பக்தர்களின் அன்புக்குப் பாத்திரனான நரசிம்மர் தோன்றினார்.

    5.மாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:

    அதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா

    பொருள்:– புரட்டாசி மாதத்தில் சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபர் இருவரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.

    6. மார்கசீர்ஷே த்வீதிய்யாயாம் க்ருஷ்ணபக்ஷே து பார்கவ:

    துஷ்ட க்ஷத்ரிய வித்வேசீ ராமோ அபூத் தாபசாக்ரணீ:

    பொருள்:– மார்கழி மாத கிருஷ்ண பட்ச த்விதியை (இரண்டாம் நாள்) திதியில் துஷ்டர்களான க்ஷத்ரியர்களின் விரோதியான தபஸ்விகளில் முன்னோடியான பார்கவ ராமர் (பரசுராமர்) தோன்றினார்.

    7. சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:

    தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:

    பொருள்:– சித்திரை மாதத்தில் சுக்கிலபட்சத்தில் நவமி திதியில் மத்தியான நேரத்தில், ரகு குலத்தில் ராவணனை வதை செய்ய

    சாக்ஷாத் விஷ்ணுவானவர் ராமராக தோன்றினார்.

    8. வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:

    சம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:

    பொருள்:– வைகாசி மாத சுக்கில பட்ச திருதியை திதியில், கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன், சம்கர்ஷணன் (பலராமன்) தோன்றினார். ஹலாயுத= கலப்பை ஏந்தியவன்

    9. மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே

    ப்ரஜாபத்யக்ஷர் சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்

    பொருள்:– ஆவணி மாத அஷ்டமி (எட்டாம் நாள்) திதியில் இரவில் தேவகியிடத்தில் கிருஷ்ணர் அவதரித்தார்.

    10. மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:

    ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி

    பொருள்:– கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச (இரண்டாம்) த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.

    மிலேச்சர்கள் யார்?

    ரிக் வேதம் (5-29-10), சதபத பிராமணம் ஆகியன கொச்சை மொழி, மிலேச்ச பாஷை பற்றிச் சொன்னதை, சிந்துவெளியில் இருந்த திராவிடர்களைப் பற்றி சொன்னது என்று சில "அறிஞர்கள்’ அழகான கதை எட்டுக் கட்டினர். உண்மையில் வேற்று மொழி பேசும் எல்லோரையும் மற்றவர்கள் ‘’வன்சொல்’’ என்று கேலி செய்வது வழக்கம்.

    தமிழர்களை தெலுங்கர்கள் அரவா (சத்தம்) என்று கேலி செய்வர். எபிரேய பைபிளில் அராபியர்களை ‘அரவா’ என்று அழைத்தனர். பார்லிமெண்ட் உறுப்பினர் சேட் கோவிந்த தாஸ், தமிழ் மொழியைக் கிண்டல் செய்யும் போது, ‘’ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குங்கள்—அதுதான் தமிழ் மொழி’’ — என்று கிண்டல் செய்தார். கிரேக்கர்கள், மற்ற எல்லோரையும் காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றழைத்தனர். முஸ்லீம்கள் மற்ற எல்லோரையும் ‘’காபிர்கள்’’

    Enjoying the preview?
    Page 1 of 1