Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ki. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli
Ki. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli
Ki. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli
Ebook323 pages1 hour

Ki. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தான் வாழும் காலத்தில் ஒரு இயக்கமாக வாழ்ந்த எழுத்தாளர்கள் வெகு சிலரே. அத்தகைய ஒரு பேரியக்கமே கி.ரா. நவீன தமிழுக்கு கி.ராவின் தமிழ் ஒரு புதிய பங்களிப்பினை வழங்கியது. தமிழ்க் கதை மொழியின் எல்லைகளை உடைத்துக்கொண்டு 'நாட்டு' மனிதர்களின் வாழ்வும் மனமும் பேச்சும் புது வெள்ளமென கி.ரா மூலம் தமிழ் கதைப் பரப்பினுள் பாய்ந்தது.

கி.ராவிற்கு 85 வயது நிறையும் இந்த வேளையில் அவரது வாழ்வையும் படைப்பையும் முன் வைத்து படைப்பாளிகளும் சிந்தனையாளர்களும் எழுதிய தொகை நூல் இது. தமிழுக்கு தனி முகம் தந்த மாபெரும் கலைஞனுக்கு இதயங்களின் ஆழங்களிலிருந்து எழுகிறது இத் தொகுப்பு.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580142906764
Ki. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli

Read more from K.S. Radhakrishnan

Related to Ki. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli

Related ebooks

Reviews for Ki. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ki. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli - K.S. Radhakrishnan

    https://www.pustaka.co.in

    கி.ரா.85 – காலத்தை வென்ற கதை சொல்லி

    Ki. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    தொகுப்புரை

    வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    கரிசல் இலக்கியத்தில் பிதாமகன் திரு. கி. ராஜநாராயணன் அவர்களுக்கு இன்று 85-வது வயது. ‘கி.ரா’வின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தமையைப் பெரும் பேறு என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வைகோ அவர்கள் ‘கிரா 85யை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்’ என 84ஆம் பிறந்த நாள் அன்று ஒரு வருடத்துக்கு முன்பு தெரிவித்துவிட்டார்.

    ஆரம்பத்தில் எல்லோரையும் போல கி.ரா-வின் எழுத்துகள் தான் என்னை ஈர்த்தது. நான், கி.ராவை நோக்கிப் பயணமானேன். அவரின் அருகில் சென்று அவருடன் பழக ஆரம்பித்ததும், அவரின் எழுத்தைவிட அவரின் ஆளுமை என்னை மேலும் கவர்ந்தது.

    கள்ளங்கபடமற்ற முகபாவம் வெள்ளாந்தியான சிரிப்பு, எதைப் பற்றியும் ஒரு ரசிப்போடும் ஈடுபாட்டோடும் பேசும் பேச்சு. அவரின் அணுகுமுறை, அம்மா (திருமதி. கி.ரா. அவர்களின்) உபசரிப்பு என்று பல அம்சங்கள் மேலும் அவருடன் என்னை நெருக்கமாக உறவு வைத்துக்கொள்ளத் தூண்டின. பின்பு தந்தை-மகன் உறவுப் பாசம் ஏற்பட்டது.

    ‘கி.ரா’ இடைசெவலில் வாழ்ந்தபோதும் அற்புதமான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தார். ‘கி.ரா’வின் பன்முக ஆற்றல்கள் எனக்குப் பல புலப்பட்டன.

    ஒரு சிறு குன்றைத் ‘தூரத்தில் இருந்து பார்த்தால், மண்ணும் மலையும், மரம் செடி கொடிகளும் சேர்ந்த ஒரு குன்றாகத் தெரியும். அதே குன்றை நாம் அருகில் சென்று தரிசித்தால், அதில் பல மூலிகைச் செடிகளும் அபூர்வமான சில தாவர வகைகளும் பூக்களும் மரங்களும் இருப்பது தெரியும்.

    அது போலத் தான் கி.ராவை நெருங்கி நட்புறவுடன் பழகப் பழகத்தான் அவரைப் பற்றிய நுட்பமான சில ஆளுமைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. முத்தமிழில் ஆர்வம் கொண்டார். ரகசிமணி டி.கே.சியின் பாதையில் வந்தார்.

    ஆரம்பத்தில் கி.ரா ஒரு சிறுகதை ஆசிரியராகத்தான் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகிறார். அவர் தன் கதைகளைச் சொல்ல எடுத்துக் கொண்ட கதைக்களமும் கருப்பொருளும் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துக் காணப்பட்டன.

    கரிசல் காட்டில் பிறந்து வளர்ந்த என்னை கி.ராவின் எழுத்துகள் அழகு குலையாமல், ‘அச்சாக’ என் கண் முன் கொண்டு வந்து வைத்தது. தனித்தன்மையான கி.ராவின் சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தன.

    சிறுகதையாளராக இருந்த கி.ரா அவர்களின் ‘கோபல்ல கிராமம்’ என்ற நாவல் வெளி வந்ததும், கி.ராவின் ரசிகர்களும் வாசகர்களும் அந்நாவலைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாட ஆரம்பித்தார்கள். கி.ராவை ஒரு நாவலாசிரியர் என்று தமிழ் இலக்கிய உலகம் போற்றியது.

    ‘கி.ரா’வின் எழுத்துகள் இனியும் கிடைக்குமா? என்று என்னைப் போன்றவர்களின் மனம் ஏங்க ஆரம்பித்த போது கரிசல் காட்டு கடிதாசிகள் என்ற தொடர் ஆனந்த விகடனில் பிரசுரமாக ஆரம்பித்தது.

    கதையும் கட்டுரையும் கலந்த, கற்பனையும் வாழ்வியலும் கலந்த ரஸவாதமான அரிய படைப்பாக. ‘கரிசல் காட்டுக் கடிதாசிகள்’ திகழ்ந்தன. எதார்த்தப் படைப்பு என்ற வகையில் அத்தொடர் தமிழ் இலக்கியவாதிகளால் மிகவும் ஆராதிக்கப்பட்டது.

    இந்தத் தருணத்தில் காலம் கி.ராவை எழுதுங்கள், எழுதுங்கள் என்று விரட்டியது. ஏற்கனவே ‘கி.ரா’ அவர்கள் நண்பர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் எழுதிய சில கடிதங்களைச் சில சிற்றிதழ்கள் பிரசுரித்தன. அக்கடிதங்களும் இலக்கியப் பிரதிகளாகத் திகழ்வதைக் கண்டு, தமிழ் வாசகர்கள் ‘கி.ரா’வின் கடிதங்களையும் கொண்டா கொண்டா (கொண்டுவா...) என்று கேட்டார்கள். எனவே கவிஞர் மீராவின் அகரம் பதிப்பகம் சிவகங்கை கி.ராவின் கடிதங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டது. கடித இலக்கிய உலகில் ஓர் இலக்கியப் புதையல் என்று அந்நூலையும் தமிழ் வாசகர்கள் வரவேற்றார்கள். நேருவின் கடிதம், அண்ணாவின் கடிதம், ரசிகமணி டி.கே.சியின் கடிதம் போன்றவற்றில் இருந்து கி.ராவின் கடிதங்கள் தனித் தன்மையுடன் திகழ்ந்தன. அக்கடிதங்களில் உள்ள கேலியும் கிண்டலும் கலந்த மொழி நடை, வாசகர்களை அசத்தியது.

    கி.ராவின் சாதனைகளில் ஒரு மைல்க்கல்லாகத் திகழ்வது அவர் தொகுத்தளித்த ‘வட்டார வழக்குச்’ சொல்லகராதி என்ற நூலாகும். வெறுமனே ‘ஒரு வார்த்தைக்குப் பல வார்த்தைகளால் பொருள் சொல்லல்’ என்ற முறையில் இருந்து வேறுபட்டு அந்நூலில் வட்டார வழக்கு சார்ந்த சொற்களுக்குத் தன் பாணியில் விஸ்தாரமாக, வாழ்வியல் கூறுகளை விவரித்துப் பொருள் கூறியுள்ளார்கள். இம்முறை அகராதிக் கலையியலிலே ஒரு புதுமையைப் புகுத்தியது. அத்தோடு அந்த அகராதியும் ஓர் இலக்கியப் பிரதியாகவும் பண்பாட்டுப் புதையலாகவும் திகழ்கிறது.

    கி.ராவின் கட்டுரைகள், நம்மை வேறோர் உலகத்திற்கு இட்டுச் செல்கின்றன. ‘மாந்தருள் ஒரு அன்னப்பறவை’ என்ற நூல் முழுமையாக ரசிகமணி டி.கே.சி அவர்களைப் பற்றி பேசுகிறது. ‘ரசிகமணியின் ரசனைக் கோட்பாட்டில் கி.ரா. அதிக நாட்டம் கொண்டவர்’ என்பது உலகறிந்த உண்மை. ‘கி.ரா’ இன்றளவும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தன் பேட்டிகளிலும் நேர்ப் பேச்சிலும் எழுத்திலும் ரசிகமணியைப் பற்றி குறிப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

    ‘மக்கள் தமிழ் வாழ்க’ என்ற ‘கி.ரா’ கட்டுரைகள் மொழியியல் சார்ந்த ஆய்வறிஞர்களையே வாய்பிளக்க வைத்தது. அக்கட்டுரைகள் வட்டார வழக்கு மொழி சார்ந்த மொழியியல் ஆய்வாகத் திகழ்வதால், கி.ராவை அக்கட்டுரைகள் ஓர் ஆய்வாளராக நமக்கு இனம் காட்டுகிறது.

    கி.ராவின் இசையுலகு சார்ந்த அனுபவங்கள் அவரின் சில கட்டுரைகளில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, விளாத்திகுளம் சுவாமிளைப் பற்றிய கட்டுரைகளும், ராஜரத்தினம் பிள்ளையைப் பற்றிய கட்டுரைகளும், காருக்குறிச்சியாரைப் பற்றிய கட்டுரையும், இசை ஞானி இளையராஜாவைப் பற்றிய கட்டுரையும் ‘கி.ராவின் இசை ஞானத்திற்குச் சான்று சேர்க்கின்றன. கி.ரா’ ஓர் இசைப் பிரியரும்கூட என்பது அவருடன் நெருங்கிப் பழகும் என்னைப் போன்ற வெகு சிலரே அறிவர்.

    இடைசெவலில் சம்சாரியாக வாழ்ந்த ‘கி.ரா’ விவசாயிகள் நடத்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டார்கள்.

    விவசாயிகளின் போர் குரலாக அவரது ‘கரண்ட்’ என்ற சிறுகதை என்றென்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும். பொதுவுடமை கட்சியில் பணியாற்றி, அக்கால் காவல் துறையினர் இவர் மீது சதி வழக்கும் போட்டு, கோவில்பட்டி சிறையில் வைத்தார்கள். விவசாயிகள் போராட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க ‘கி.ரா.’ முற்போக்கு இயக்கங்களுடன் ஈடுபாடு கொண்டு அதன் தீவிர நடவடிக்கைகள் பலவற்றிலும் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்ததும் உண்டு. ‘கி.ரா’வின் அந்தத் தலைமறைவு வாழ்க்கையனுபவம் நமக்கு ‘ஜடாயு என்ற சிறுகதையைத் தந்தது. ‘கி.ரா’ விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்கள். அந்தச் சிறை அனுபவங்கள் ‘கி.ரா.’வின் பக்கங்கள் என்ற நூலில் கட்டுரைகளாக வெளி வந்துள்ளன.’

    குழந்தை இலக்கியத்திற்கு ‘கி.ரா’ பெரும் கொடையாக ‘பிஞ்சுகள்’ என்ற சிறுவர் நாவலைத் தமிழ் இலக்கிய உலகுக்குத் தந்துள்ளார்கள் அந்நாவல் கையெழுத்துப் பிரதியாக இருக்கும் போதே தங்கப்பதக்கம் பரிசு பெற்றது. பார்த்திபன், தங்கர்பச்சான் போன்ற திரையுலகப் பிரபலங்களால் அந்நாவல் இன்றும் சிலாகிக்கப்படுகிறது.

    ராஜநாராயணனை நாம் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்த்துப் பழகிவிட்டோம். கயத்தாறு சந்தன ஆசாரியுடன் சேர்ந்து மாடுகள் இழுக்கும் பாரவண்டியை இலகுவாக மாற்றி அமைப்ப தற்கும் யோசனை தந்த சமூக விஞ்ஞானி ‘கி.ரா’ என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

    நாட்டுப்புறக் கதைகள் சேகரம், பதிவு என்ற அரும்பெரும் பணியில் ‘கி.ரா’ தமிழ் இலக்கியவாதிகள் யாரும் செய்யாத மாபெரும் சாதனை படைத்துள்ளார். சுமார் 1500 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ என்ற நூல், கி.ரா-வின் 85வது பிறந்தநாளில் வெளிவருகிறது. அந்நூலின் தலைமைத் தொகுப் பாசிரியராக ‘கி.ரா’ திகழ்கின்றார். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பெரும் பணியைக் கி.ரா தனி மனிதராக நின்று சாதித்தி ருக்கிறார். இப்பணிக்காகவே கி.ராவை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

    அத்தோடு அமரர் வீர. வேலுச்சாமி, கழனியூரன், பாரததேவி போன்றவர்களைத் தூண்டி உற்சாகப்படுத்தி அவர்களையும் பல நாட்டுப் புறக்கதைகளைச் சேகரிக்க வைத்து, அவற்றை நூல்களாக வெளிக் கொணரவும் கி.ரா. முயன்று உழைத்துள்ளார். நாட்டுப்புற வியலுக்குக் கி.ரா. செய்துள்ள பணி மகத்தானதாகும்.

    கி.ராவின் கேள்வி-பதில்கள் என்ற நூலும் கி.ராவின் பேட்டிகளும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. அவையும் இலக்கியப் பிரதி களாகவே ஜொலிக்கின்றன. கி.ராவின் அணிந்துரைகளும் முன்னுரை களும் தொகுக்கப்பட்டுத் தனி நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள ஒவ்வோர் அணிந்துரையும், முன்னுரையும் தனித்த கட்டுரை களாகத் திகழ்கின்றன.

    கி.ராவின் கதை சொல்லி என்ற இதழைத் தற்போது எனது பொறுப்பில் வெளிக் கொணர்வதை எண்ணி மகிழ்கிறேன். கி.ரா தொட்டுத் தொடங்கிய எல்லாப் பணிகளும் தொடர வேண்டும் என்பதில் பொதிகை-பொருநை-கரிசல் - கட்டளை முனைப்புடன் செயல்படும்.

    கரிசல்கட்டளை, ஒன்றை கி.ரா நிறுவி, தமிழகத்தில் வெளிவரும் சிறந்த சிற்றிதழ் ஒன்றிற்கு ஒவ்வோர் ஆண்டும் விருதும் பரிசும் தன் பிறந்த நாளில் வழங்கிக் கௌரவிக்கிறார். ‘கி.ரா’வின் இந்தப் பணியையும் தமிழ் இலக்கிய உலகம் பாராட்டுகிறது.

    நாடகவியலுக்கும் கி.ரா. தன் பங்களிப்பைச் செய்துள்ளார். அகில இந்திய வானொலி நிலையத்திற்கான ‘கி.ரா.’ எழுதிய நாடகம் நூலாக வெளிவந்துள்ளது.

    தமிழக அளவில் தமிழ்நாடு அரசு பரிசு, லில்லி தேவசிகாமணி பரிசு, இலக்கியச் சிந்தனை பரிசு போன்ற பரிசுகளைப் பெற்றுள்ள கி.ரா. இந்திய அளவில் சாகித்ய அகாதமி பரிசும் பெற்றுள்ளார். கி.ராவின் சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றுள்ளன. ‘பிஞ்சுகள்’ என்ற குழந்தைகளுக்கான நாவல் உட்பட பல படைப்புகளை விரைவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவற்றை நூல்களாக வெளியிட பொதிகை-பொருநை-கரிசல் அமைப்பு அனைத்து முயற்சிகளையும் செய்யும்.

    கி.ரா. என்ற கதை சொல்லியுடன் உக்கார்ந்து பேசி மகிழ்வதே ஒரு சிறந்த அனுபவமாகும். ‘பேசும் கலை’ வளர்க்கும் கி.ரா அவர்களின் பேச்சுகளில் சில புதுவை பில்க் என்ற மொழியியல் துறை சார்ந்த பேராசிரியர் பிலேந்திரன் அவர்களால் ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அவற்றைப் பெற்று ‘கி.ரா’வின் ‘பேசும் கலை’ என்ற தலைப்பில் குறுந்தகடுகளாக (சி.டிகளாக) வெளியிடும் யோசனையும் பொதிகை-பொருநை-கரிசல் அமைப்பிற்கு உள்ளது. ‘கி.ரா’ தொடர்ந்து புதுவை வானொலி நிலையத்தில் சொன்ன நாட்டுப்புறக் கதைகளின் ஒலிப்பதிவு அவ்வானொலி நிலையத்தில் உள்ளது. அதையும் பெற்று குறுந்தகடுகளாக வெளியிட முயல்வோம். கி.ரா. மக்கள் தொலைக்காட்சிக்காகச் சொன்ன நாட்டுப்புறக் கதைகளின் ஒலி- ஒளி பதிவுகளையும் பெற்று அவற்றையும் குறுந்தகடுகளாக வெளிக்கொணரும் எண்ணமும் எங்களுக்கு உள்ளது. இம் முயற்சிகளுக்குத் தமிழ் உலகம் எங்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டும்.

    கி.ரா.வுடன் பேசிக்கொண்டே இருந்தால் போதும் அதன் மூலம் நாம் பல அரிய வாழ்வியல் செய்திகளைப் பெறலாம். எப்படி உண்பது, எப்படி உறங்குவது, எப்படிக் குளிப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, வீடு கட்டுவது என்று ‘கி.ரா.’ நேர்ப் பேச்சில் சொல்லும் ‘வாழும் கலை’ பயிற்சிகள் பற்றிய சேதிகள் கி.ரா.வுடன் மிக நெருக்கமாகப் பழகியவர்களுக்குத்தான் தெரியும். அவற்றையும் கி.ரா.வுடன் நெருங்கிப் பழகும் நண்பர்களிடம் உறவாடி அல்லது பேட்டி கண்டு பதிவு செய்யும் திட்டமும் எம்மிடம் உள்ளது.

    கி.ரா.வை ஒரு மானிடவியல் அறிஞர் என்றும், இனக்குழு சார்ந்த ஆய்வாளர் என்றும் ஆய்வுலகம் போற்றுகிறது.

    ‘தாப்பு’ என்று ஒரு சொல் கரிசல் வட்டார வழக்கு மொழியில் உள்ளது. ‘தாப்பு’ என்பது வெகுதூரம் பயணித்த பறவைகள் தங்கி ஓய்வெடுத்து மீண்டும் பறந்து செல்லும் பயணத்தில் இடைப் பட்ட ஓய்விடத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

    கி.ரா. ‘தாப்பு’ என்ற ஓர் அமைப்பைப் புதுவையில் ஏற்படுத்தி சிறிது காலம் நடத்தி வந்தார். அவ்வமைப்பில், இலக்கியவாதிகள் பலரும் கலந்து கொண்டு, பல சேதிகளைப் பேசி மகிழ்ந்தார்கள்.

    புதுவையில் பாரதி பாடிய குயில் தோப்பை மீட்டெக்கும் பணியிலும் கி.ரா. ஈடுபட்டார்கள்.

    இளவேனில் அவர்கள் எடுத்த கி.ராவின் புகைப்படங்களையும், பதிப்பகங்களும் பத்திரிகைகளும் விரும்பி வெளியிட்டன. மேலும் அவர் எடுத்துள்ள குறும்படமும் வெளி வந்துள்ளது. இக்குறும்படமும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தைக் கவரும்.

    கி.ரா. அவர்களையும், கி.ராவின் எழுத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு இதுவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கி.ராவின் 85-வது பிறந்த நாள் விழாவை ஒட்டி சகோதரி சாந்தி அவர்கள் எழுதிய ‘அம்மா’ (திருமதி. கி.ரா) அவர்களைப் பற்றிய நூலும் வெளிவருவதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    அதிகம் படிக்காத கி.ராவை வருகை தரு இயக்குனராக நாட்டார் கதைத் தொகுப்புத்திட்டத்தில் நியமித்த புதுவைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் வேங்கடசுப்பிரமணியன் அவர்களின் தீர்க்க தரிசனமான துணிச்சலை இந்தத் தருணத்தில் நாங்கள் நினைவு கூர்ந்து போற்றுகிறோம்.

    1950லிருந்து கிராவின் பேனாவிற்கு ஓய்வு இல்லை. ‘கோபல்ல கிராமம்’ இன்றுள்ள நிலையை எழுத பலசமயம் நான் கிராவிடம் கேட்டும், அதற்கு அவரிடம் பதில் இல்லை. ஆனால் அவர் இன்றைய நிலைமையை எழுதினால் பலருக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறியுள்ளார் என அறிந்தேன்.

    வி.ச. காண்டேகர், தகழி சிவசங்கரன் பிள்ளை போன்று ‘கிராமியம்’ என்ற கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து உருவாக்கிய படைப்புகள் கிராவிற்கு கீர்த்தியை தந்தன.

    படிக்க பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல், மழைக்கு பள்ளிக்கு ஒதுங்கிய கிராவின் நூல்கள் பல்கலைக்கழகப் பாடங்களாக அமைந்துள்ளன. பாலபாடம் என்ற சொல்லை அறியாத அவர், பல்கலைக்கழக பேராசிரியர். இவருக்கு எந்த பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் தந்து பெருமை கொள்ளப் போகிறதோ? ‘ஞானபீடம்’ இவருக்கு அளித்து இந்தியா எப்போது சிறப்பிக்கப் போகிறதோ என்பது தான் நமது வினா, கோரிக்கை.

    கி.ராவின் 85-வது பிறந்த நாளை ஒட்டி வெளிவரும். இந்த நூல் ஓர் ஆய்வுக் கோவையாகவும் அனுபவத் தொகுப்பாகவும் திகழ்கிறது. இந்நூலை மிகச்சிறப்பாகக் கலை அழகுடன் வெளிக்கொணர உதவிய உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளர் நண்பர், கவிஞர். மனுஷ்ய புத்திரனுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

    இந்நூலுக்கான கட்டுரைகளை மனமுவந்து உரிய காலத்தில் எழுதிக் கொடுத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுக்கும், திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திரு. ஜி.கே. ராஜ்குமார், இந்த நூலை நல்லவிதமாக நிறைவு செய்ய உதவிய கோவில்பட்டி இலட்சுமி மில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை திருமதி சி. ஆதிலெட்சுமி அவர்களுக்கும் மற்றும் நூலை வடிவமைப்பு செய்த இமேஜ் & இம்ப்ரெஷன் நிறுவனத்திற்கும் நன்றி.

    ‘கி.ரா.’ அவர்கள் நூறு வயது வரை நோய், நொடி இன்றி வாழ்வாங்கு வாழ்ந்து அவர் பெற்றுள்ள அனுபவ ஞானத்தையும் அறிவுச் சுரங்கத்தையும் படைப்புச் செல்வத்தையும் எங்களுக்கு வாரி வழங்கி, கி.ராவின் நூற்றாண்டு விழாவையும் அவரின் முன்னிலையிலேயே நாங்கள் கொண்டாடிட காலம் கை கொடுக்க வேண்டும், இயற்கை இடம் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    பொருளடக்கம்

    ‘வாழ்வு இயலின் பேழை’ ‘நூற்றாண்டு விழாக் காண்க!’வைகோ

    தனிப் பாதை சமைத்த மனிதநேயக் கலைஞன் தி.க.சி.

    கி.ரா.85 திரைப்படக் கலைஞர் சிவகுமார்

    ராஜநாராயணனுக்கு 85 வயது அசோகமித்திரன்

    இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் மாலன்

    கி. ரா. எனும் கதை சொல்லி வாஸந்தி

    எங்கள் நைனா எஸ்.ஏ. பெருமாள்

    கி. ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி ஜெயமோகன்

    மாமா ஒரு ஆலவிருட்சம் தோப்பில் முஹம்மது மீரான்

    கரிசல் இலக்கிய கர்த்தா மு.கு. ஜகந்நாத ராஜா

    கி.ரா - ஒவ்வொருவரின் பொறாமை கவிஞர் கலாப்ரியா

    இமயப்பள்ளம் மேலாண்மை. பொன்னுசாமி

    இடைச் செவலிலிருந்து லாகப்பேட்டை வரை கழனியூரன்

    கரிசலில் விரிசல் ஆர்.எஸ். ஜேக்கப்

    கி.ரா-வின் ஆளுமை முனைவர். தே. லூர்து

    ஒருகதை சொல்லி கதைஞானியான கதை காவ்யா சண்முகசுந்தரம்

    கி. ரா. என் இலக்கியத் தந்தை குறிஞ்சிவேலன்

    கதை சொல்லிகளின் தேசப்படத்தில் கி.ரா. இந்திரன்

    கி.ரா. என்கிற ஆச்சி ஏக்நாத்

    கடிதங்களில் கி.ரா. தீப. நடராஜன்

    அவரல்லவோ புகைப்படக்காரர்! மரபின்மைந்தன் முத்தையா

    கரிசல் சுரங்கம் கி.ரா. இளசை அருணா

    ‘அப்பாவோடு நான்’ பாரததேவி

    வேட்பச் சொலலும் செலச் சொலலும் இரா. தீத்தாரப்பன்

    மந்திரச்சொல் நய்னா... மாரீஸ்

    அம்மா தந்த கருப்பட்டிக் காப்பியும் காராசேவும் இடைசெவல் நயினாவும் உதயசங்கர்

    பெரியண்ணா தீப. குற்றாலலிங்கம்

    கி.ரா. தாத்தா - ஓர் திறந்த வாசல் நெய்வேலி எஸ்.பி. சாந்தி

    அன்பின் மணம் உமா புஷ்பராஜ்

    ஆன வயதிற்கு அளவில்லை எனினும் ஆர்.பி. ராஜநாயகம்

    அம்மையே அப்பா ஒப்பிலாமணியே இரா. சத்தியமூர்த்தி

    பிஞ்சுகளும் பிஞ்சில் பழுத்தவர்களும் பழநியப்பா சுப்பிரமணியன்

    எனக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்.எஸ்.ஆர். லிங்கம்

    அன்பின் உருவம் ப. ராஜாராம்

    கி.ராவின் வாழ்வியல் ஆய்வு! கோதையூர் மணியன்

    ‘வாழ்வு இயலின் பேழை’ ‘நூற்றாண்டு விழாக் காண்க!’

    வைகோ

    பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க

    நெற்றி வியர்வையின் நிகர இலாபமாக, பரிசு அளிக்கப்பட்ட வண்டலின் வரலாற்றுச் செதுக்கலான கரிசல் மண்ணில்,

    Enjoying the preview?
    Page 1 of 1