Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamilaga Melavai
Tamilaga Melavai
Tamilaga Melavai
Ebook121 pages47 minutes

Tamilaga Melavai

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மேலவை உருவான வரலாறு, தமிழகத்தில் மேலவை தோன்றிய காலம், அம்மேலவையை அணிசெய்த பெருமக்கள், அது கலைக்கப்பட்ட நிகழ்ச்சி, அதனை மீண்டும் உருவாக்கிட கழக அரசு ஏற்கனவே மேற்கொண்ட - மேற்கொண்டுள்ள முயற்சிகள், அவற்றையொட்டி நான் ஆற்றிய சில உரைகள் போன்ற பலவும் இந்நூலில் உள்ளது. வளரும் தலைமுறைகள் மேலவை குறித்து அறிய இந்நூல் பெரிதும் உதவியாகயுள்ளது.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580142906758
Tamilaga Melavai

Read more from K.S. Radhakrishnan

Related to Tamilaga Melavai

Related ebooks

Reviews for Tamilaga Melavai

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamilaga Melavai - K.S. Radhakrishnan

    https://www.pustaka.co.in

    தமிழக மேலவை

    Tamilaga Melavai

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K. S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில்பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார்.

    மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு - தேசியமயமாக்கல், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்காகப் பல்வேறு பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் போன்றவற்றில் தொடுத்துள்ளார். Amenesty international இயக்கத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு அரசியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். தொழிலாளர் அமைச்சகத்தின் குழந்தை தொழிலாளர் ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவர். திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக மத்திய அரசால் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சித் துறைமுகக் கழகத்தின் நடுவராகப் பணியாற்றினார். ஐ.நா. மன்றத்தில் நியூயார்க்கில் கிடைத்த பெரிய பொறுப்பை உதறி அரசியல் பணியில் ஈடுபட்டள்ளார். இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார். 'உரிமைக்குக் குரல் கொடுப்போம்', 'மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்'. 'நிமிர வைக்கும் நெல்லை', 'சேதுக்கால்வாய் ஒரு பார்வை', 'கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி', 'தமிழ்நாடு 50', `123 இந்தியாவே ஓடாதே நில்', 'கச்சத்தீவு', 'தி.மு.க. - சமூக நீதி' 'DMK - Social Justice', 'கலைஞரும் முல்லைப் பெரியாறும்' போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். கி.ரா.வின் 'கதை சொல்லி' யின் இணையாசிரியர், 'பொதிகை பொருநை - கரிசல் கட்டளை' அமைப்பின் நிறுவனர்.

    அணிந்துரை

    திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் மேலவை மீண்டும் உருவாக்கப்பட வேண்டுமென மூன்றாம் முறையாகத் தீர்மானம் நிறைவேற்றியனுப்பி, மத்திய அரசின் ஒப்புதலை விரைந்து எதிர் நோக்கியுள்ள நிலையில், வழக்கறிஞர் தம்பி திரு.கே.எஸ். இராதா கிருஷ்ணன் எழுதியுள்ள ‘தமிழக மேலவை' நூல் வெளிவருவது கண்டு மகிழ்கிறேன்.

    இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மேலவை உருவான வரலாறு, தமிழகத்தில் மேலவை தோன்றிய காலம், அம்மேலவையை அணிசெய்த பெருமக்கள், அது கலைக்கப்பட்ட நிகழ்ச்சி, அதனை மீண்டும் உருவாக்கிட கழக அரசு ஏற்கனவே மேற்கொண்ட - மேற்கொண்டுள்ள முயற்சிகள், அவற்றையொட்டி நான் ஆற்றிய சில உரைகள் போன்ற பலவற்றையும் இந்நூலில் தந்துள்ள தம்பி திரு.இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு என் பாராட்டுகள். வளரும் தலைமுறைகள் மேலவை குறித்து அறிய இந்நூல் பெரிதும் பயன்படுவதாகுக.

    தமிழக மேலவை

    தமிழகத்தில் சட்ட மேலவை அமையும் என்ற தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவிப்பு முக்கிய நிகழ்வாகி விட்டது. முதல்வர் கலைஞர் அவர்கள் மேலவையில் இருக்கிறார் என்பதற்காகவும், தான் விரும்பியபடி நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மேலவைக்கு வரமுடியவில்லையே என்ற காரணத்திற்காகவும் எம்.ஜி.ஆர். மேலவையை ஒழித்தார் என்று அவர்மீது விமர்சனங்கள் இன்று வரை உண்டு. அதுமட்டுமல்லாமல், 1986 காலகட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. பெரும்பான்மை பெற்றிருந்தது. அதன்மூலம் தி.மு.க.வின் பலம் மேலவையில் கூடிவிடும் என்ற எண்ணமும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. 23.04.1984 அன்று முதல்வர் கலைஞர் மேலவையில் பதவி ஏற்றார். அப்போது அவர் பேசுகின்றபோது, தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜனின் சிலை கோவிலுக்கு வெளியில்தான் உள்ளது. எனவே, நான் எங்கிருக்கிறேன் என்பது முக்கியமல்ல. எங்கே இருந்தாலும் உரிமைக் குரலை எழுப்புவேன் என்று பேசினார். மேலவையில் எம்.ஜி.ஆர். அரசைக் கண்டித்து விமர்சனங்கள் எழுந்ததால் மேலவையை முடக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். விரும்பினார். பல எதிர்ப்புகள், கண்டனங்கள் அப்போது இதுகுறித்து எழுந்தபோதும், அதையெல்லாம் காதில் வாங்காமல் அவசரகதியில் மேலவையை அ.தி.மு.க. அரசு முடக்கியது.

    அ.தி.மு.க. அமைச்சரவையின் பரிந்துரைப்படி, 21.4.1986ல் ஆளுநரால் வழக்கறிஞர் என்.சி. இராகவாச்சாரி, ஜி. சுவாமிநாதன், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் மேலவை உறுப்பினர் ஆனார்கள். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் வெண்ணிற ஆடை நிர்மலா கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்த இயலாத திவாலாகிவிட்ட நிலையில் இருந்தார். மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி இத்தகைய ஒருவர் மேலவை உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட சிக்கலால் மறுநாளே வெண்ணிற ஆடை நிர்மலா தனது பதவியை விட்டு விலகினார். இதனால் மேலவை மீது தனிப்பட்ட வகையில் எம்.ஜி.ஆருக்கு வெறுப்பு ஏற்பட்டது.

    மேலவைக் கலைப்பு தீர்மானத்தைக் கைவிடக் கோரி, அன்று மேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் கலைஞர் உரையாற்றியபோது, மேலவையின் மாண்புகளும், மரபுகளும் காப்பாற்றப்பட வேண்டும். அண்ணா, இராஜாஜி போன்றவர்கள் இங்கு பங்காற்றியுள்ளனர். நான் இங்கு எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதன் காரணமாகத்தான் இந்த அவையைக் கலைக்கப் போகின்றீர்கள் என்றால், நான் உறுப்பினர் பதவியை விட்டே விலகி விடுகிறேன் என்று கூறினார்.

    மேலவைத் தலைவர் ம.பொ.சி. தனது உரையில், நம்முடைய பெரியவர்களுடைய ஆன்மாக்கள் இந்த அவையிலே இருக்கின்றது. அவர்கள் படைத்துவிட்டுப் போன மரபுகளுக்கு இந்த அவைதான் அடையாளச் சின்னம். இந்த அவையைக் கலைப்பது பற்றிய பிரச்சினையில் எனது கருத்தை நான் கூறத் தவறியிருந்தால் அது எனது மனசாட்சிக்கு நான் செய்த துரோகமாகிவிடும். எனவே, இந்த அவையைக் கலைக்காதீர்கள் என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். மேலவைக் கலைப்பிற்கு ஆதரவாக 136 பேரும், 29 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

    சட்டக் கல்லூரியில் 1970களில் நான் படிக்கும்பொழுது அரசியல் பணியின் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் விடுதி, சட்டப் பேரவை வளாகம் என்று சுற்றிக் கொண்டு இருப்பது வாடிக்கை. சட்டப்பேரவை அருகே உள்ள சட்ட மேலவையில் சி.பி. சிற்றரசு, ம.பொ.சி. போன்றோர் தலைவர்களாக இருந்து நடத்தியது இன்றும் கண்களில் உள்ளது. அந்த மேலவையில் உறுப்பினர்களாக இருந்த வழக்கறிஞர்கள் தர்மராஜ் சந்தோஷம், வசந்தபாய் மற்றும் சுந்தரேச தேவர், கோவை ஜி.ஆர். தாமோதரன், ஏ.ஆர். தாமோதரன்,

    Enjoying the preview?
    Page 1 of 1