Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumuraigalil Kalaigal, Samudhayam, Koyilgal
Thirumuraigalil Kalaigal, Samudhayam, Koyilgal
Thirumuraigalil Kalaigal, Samudhayam, Koyilgal
Ebook386 pages2 hours

Thirumuraigalil Kalaigal, Samudhayam, Koyilgal

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

சைவத்தைப் போற்றுகின்ற பனுவல்களாகப் பன்னிரு திருமுறைகள் விளங்குகின்றன. திருமுறைகளை நாளும் ஓதினால் உய்நிலை அடையலாம் என்பது நமது ஆன்றோர்வாக்கு. "திருமுறைகள் நமது வாழ்வின் நெறிமுறைகள்" எனத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறிப்பிடுவார். அத்தகைய அருளற்றலைப் பெற்ற பனுவல்களான திருமுறைகளில் உள்ள அரியக் கருத்துக்களை, புதுமையான பார்வையில் ஒருங்கே திரட்டி, சைவத்திருமுறைகளில் கலைகள், சமுதாயம், கோயில்கள் எனும் பொருள்களில் தலைசிறந்த அறிஞர்களிடத்து கட்டுரைகளைப் பெற்று இந்நூலினை வெளிக் கொணர்ந்துள்ளோம்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119402282
Thirumuraigalil Kalaigal, Samudhayam, Koyilgal

Read more from Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

Related to Thirumuraigalil Kalaigal, Samudhayam, Koyilgal

Related ebooks

Reviews for Thirumuraigalil Kalaigal, Samudhayam, Koyilgal

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumuraigalil Kalaigal, Samudhayam, Koyilgal - Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

    http://www.pustaka.co.in

    திருமுறைகளில்

    கலைகள், சமுதாயம், கோயில்கள்

    Thirumuraigalil

    Kalaigal, Samudhayam, Koyilgal

    Author:

    தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்

    Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-parthasarathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    திருமுறைகளில்

    கலைகள், சமுதாயம், கோயில்கள்

    திலகவதியார் திருவருள் ஆதீனம்

    தவத்திருதயானந்த சந்திரசேகர சுவாமிகள்

    ***

    பொருளடக்கம்

    ஆசியுரை

    அணிந்துரை

    வாழ்த்துரை

    1. திருஞானசம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

    2. அப்பர் பெருமான் திருமுறைகளில் சமுதாயம்

    3. சுந்தரர் காட்டும் சமுதாயம்

    4. திருவாசகம் காட்டும் சமுதாயம்

    5. ஒன்பதாம் திருமுறை காட்டும் சிந்தனைகள்

    6. திருமந்திரம் காட்டும் சமுதாயம்

    7. பத்தாம் திருமுறையில் மருத்துவம்

    8. பதினோராம் திருமுறைகளில் சமுதாயம்

    9. பெரியபுராணம் காட்டும் சமுதாயம்

    10. திருமுறைகளில்-இறைவன்-இறைவி திருப்பெயர்கள்

    11. திருமுறைகளில் வழிபாட்டு முறைகள் – சரியை, கிரியை

    12. திருமுறைகளில் வழிபாடுமுறைகள்- யோகம், ஞானம்

    13. திருமுறைகளில் பண்ணிசை

    14. திருமுறைகளில் திருக்கோயில்-கலைகள்

    15. திருமுறைகளில் நாட்டியம்

    16. திருமுறைகளில் சேர வளநாட்டுக் கோவில்கள்

    17. திருமுறைகளில் பாண்டியநாட்டுக்கோவில்கள்

    18. திருமுறைகளில் தொண்டை மண்டலக் கோயில்கள்

    ஆசியுரை

    சாந்தலிங்கர்தாண்மலர் வாழ்க

    திருவளரும் புதுக்கோட்டைத் திலகவதியார்பீடம் தோற்றம் செய்த பெருமைமிகு திருப்பணிகள் அப்பர் அரங்கம் முதலாய சேவையாலே ஒருமைமிகு தயானந்த சந்திரசேகரர் தம்உழைப்பால் ஓங்கி திருமுறைகள் ஆய்வுசுவையின் நூலாக்கும் சீர்மை வாழி

    செந்தமிழின் திறமுணர்ந்து திருமுறைஆதிய நூல்கள்தேர்ந்து நல்லோர் சிந்தனையில் அருளியல் சமயம் சமுதாயம் சிறப்புந்தன்னை வந்தனை வழிபாடுகளுடனே வாழ்வியலில் மக்கள் ஆய்ந்து புந்தியில் நிலைக்க நூலாகத் தருகின்றார் பொலிவாய் வாழி

    வேண்டுந் தங்களன்பு,

    அன்புள்ள,

    (சாந்தலிங்க இராமசாமி அடிகளாரி

    நா. மகாலிங்கம், பி.எஸ்.சி.எம்.ஐ.இ

    தலைவர்,

    சக்தி நிறுவனங்கள்

    74, மவுண்ட் ரோடு,

    கிண்டி, சென்னை-600 032

    (அ) 22350814 (வீ) 24996898

    ஃபாக்ஸ்: 42254575

    ***

    அணிந்துரை

    சைவ சமய மறுமலர்ச்சி திருஞானசம்பந்தர், அப்பரடிகள் இருவரையும் அடுத்துத் தோன்றிய சுந்தரமூர்த்தி காலத்தில் தோன்றியது.

    எல்லாச் சமயங்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு தானே எல்லாமாய் வியாபித்து நிற்பது சைவ சமயத்தின் தனியில்பு.

    யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் தாமேயாகி

    மாதொரு பாகனார்தாம் வருவார்

    என்றும்

    விரிவிலா அறிவினார்கள வேறொரு சமயம் செய்து

    எரிவினால் செய்தாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்

    என்றும் பேசும் விரிந்த கொள்ளை உடையது சைவம் என்றாலும், அந்தச் சமயம், சமணம், பெளத்தம் இரண்டு சமயங்களையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. சமண பவுத்தங்கள் இந்திய நாட்டுச் சமயங்களே. கடவுள் உண்மை பற்றிய ஒரு கருத்தில் சமண பவுத்தங்கள் வேறுபட்டிருந்தன. பவுத்தம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிக் கவலை கொள்ளவே இல்லை. சமணம் ஸ்யாத்வாதம் என்ற ஒன்றைச் சொல்லியது. உலக காரணத்துக்கு ஒரு கர்த்தா வேண்டியதே இல்லை என்ற ஒரு பழைய கருத்துக்குப் புது வடிவம் கொடுத்தது. பூர்வ மீமாம்சை என்ற வேதகாலக் கொள்கை இது போன்றதுதான். இந்த இரண்டு சமயங்கள் பரவியதன் காரணமாக நாத்திக வதம் தமிழகத்தில் தலையெடுத்தது.

    மாணிக்கவாசக சுவாமிகள்,

    ஆத்தமானார் அயலவர் கூடி

    நாத்திகம் பேசிநாத் தழும் பேறினர்

    என்று இதைப் பதிவு செய்கிறார்.

    தமிழர்கள் கடவுள் உண்மையை நம்பியவர்கள். உலகை ஆக்கிக் காத்து அழிப்பவன் பேராற்றல் உடையவன் கடவுள். அவன் இந்த மூன்று செயலையும் உயிர்கள் மீது வைத்த கருணையால் செய்கிறான் என்றும் அவனுக்கு அதனால் ஏதும் பயனில்லை என்றும் சொன்னார்கள். படைப்பு என்பதே உயிர்களைக் கட்டுப்படுத்துவதான் என்றும் அக்கட்டிலிருந்து உயிர்களை விடுவிப்பதுதான் அவனுடைய நோக்கம் என்றும் எல்லா வகையினாலும் அவனுடைய செயல் அருளே என்றும் தமிழர்கள் நம்பினார்கள்.

    சமண பவுத்தர்களைத் திருத்துவதுதான் சமய ஆசிரியர்களின் நோக்கம். சமயக் கருத்துக்களைதான் சாடினார்களேயல்லாமல் தனிப்பட்ட மனிதர்களையோ, குருமார்களையோ சாடுவது அவர்கள் கருத்து அல்ல என்று நன்றாகவே தெரிகிறது. மற்றபடி அவர்கள் எதிர்த்துப் பிராசரம் செய்த சமயங்களின் அடிப்படைக் கொள்கைகள் ஆகிய அருளறம் அவர்களுக்கு உடன்பாடுதான் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் அவர்களுடைய தத்துவங்கள் மிகமிகத் தொடக்கநிலை அறங்கள்தான் என்பதை சைவ சமய ஆசிரியர்கள் சொன்னார்கள்.

    ஆரம்பர்தம் உரை என்று அத்தத்துவங்களைக் குறிப்பிட்டார்கள்.

    புத்த சமண தத்துவங்கள் மிக ஆரம்ப நிலையிருந்தன. அவர்கள் பெண் பிறப்பை உயர்வாகக் கருதாதது, தமிழகத்தின் உயிராகிய உழவுக்கு மதிப்பளிக்காதது, வணிகத்தை எல்லாத் தொழிலையும்விட மேலானதாகக் கருதியது, துறவறத்தைவிட மேலான இடம் கொடுத்தது. இவைகள் சமண பவுத்தங்களன் தமிழகப் பண்பாட்டு விரோத போக்காகும்.

    இந்தச் சமயங்கள் இரண்டிலும் புத்த சமயத்தை வென்று தமிழகத்தை தன் வசப்படுத்தி வைத்திருந்தது சமண சமயம் என்பது. திருநாவுக்கரசர் வரலாற்றாலும் இது விளங்கும்

    தமிழகக் கலைகள் நலிந்து போயின. இசையும், நாடகமும் காமத்தை விளைப்பவை என்று பிராச்சாரம் வேறு. இவைகள் மோட்ச உலகத்துக்கு வழிகாட்டமாட்டா என்று துறவிகள் சொன்னார்கள்.

    தமிழுக்கும், சமஸ்கிருதத்துக்கும் ஆபத்து விளைந்தது. பிராகிருத பாலி மொழிகளுக்கு மட்டும் ஆதரவு கிடைத்தது. இவர்கள் காலத்தில் ஒரு சிறந்த காவியம் கூட எழவில்லை.

    ஆக மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக வந்த அருளார்கள்தாம் நாயன்மார்கள் ஆழ்வார்கள் ஆவார்.

    இவர்கள் அகிம்சை வழிப் பேராட்டம் மூலமே சமணத்தை எதிர்த்தார்கள். திருஞான சம்பந்தர் காலத்தில் கூட வாதப் போராட்டம்தான் நடந்தது. அனல் வாதம் புனல் வாதமாக நடந்ததே அல்லாமல் கழுவேறிய நிகழ்ச்சி தவறாகக் காப்பியத்துள் புகுந்த ஒன்று. எங்கேயோ மைசூர்ப் பக்கத்தில் நடந்த ஒற்றைத் தனிக்கொலை சம்பந்தப் பெருமான் பேரில் ஏற்றிச் சொல்லப்பட்டுவிட்டது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் ரதும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    சாதுரியமாக, மன்னர்கள் கருத்தை மட்டும் மாற்றி அதனால் தங்கள் நோக்கத்தில் வெற்றிக் கொண்ட நாயன்மார்கள் மக்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் கவனமாயிருந்தார்கள்.

    திருமுறைகள் என்பது அருளாளர்களுடைய வாக்குகளின் தொகுப்பு அவைகள் இசைப் பாடல்களாகவே அமைந்தன. முறை என்றால் வேதம். மார்ச் லூகாஸ் முதலியோர் எழுதிய அவர்களுடைய குருநாதர் வரலாறும் மற்ற இறை தூதர்கள் சொன்ன உபதேசங்களுமே விவிலிய மறையானதுபோல இவர்கள் வாக்குகளின் தொகுப்பு மறை என்று சொல்லப்பட்டன.

    மக்கள் என்று சிலர் இல்லாது போனால் தெயவம் என்ற ஒன்று ஏது? தேவை ஏது? ஆகமே மக்களை மையமாகக் கொண்டது சைவம். மக்களே உங்களுக்கு நல்வாழ்வு வேண்டுமானால் திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடுங்கள் என்று கூறுகிறது சைவ சமயம்.

    ஏனெனில் திருக்கோயில்கள் மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக திகழ்ந்தது. அக்காலத்தில் கல்விகலைகள் வளர்க்கும் மையம். அரசாட்சி (இக்காலயிலிருந்து மக்களின் அன்றாடத் தேவை வரை கருத்தில் வைத்துத் திருக்கோயிலின் அமைப்புமுறை மக்கள் வாழ்க்கையில் பங்கு வகித்தது.

    ஆகையால் திருக்கோயில் இல்லாத ஊர் திரு இல் ஊர் என்றார் அப்பர். செல்வம், அழகு, புகழ் இல்லாத ஊர் என்று பொருள்.

    திலகவதியார் திருவருள் ஆதீனம் வெளியிட்டுள்ள இந்நூலில் அறிஞர்கள் கலைகள், சமுதாயத்தைத் திருமுறைகளை ஒட்டி ஆராய்ந்திருப்பது மிகப் பொருத்தமாக அமைந்த அமைப்பு.

    திலகவதியார் திருவருள் ஆதீனம் அவ்வப்போது அறிஞர்களைக் கூட ஆய்வரங்கங்கள் நடத்துகிறது. கருத்துரைகள் சிந்தாமல் சிதறிக் காற்றில் பறக்காமல் நூல்களைப் பதிவுசெய்து வருகிறது.

    ஆதீனத்தை உருவாக்கிய ஸ்ரீ சாயிமாதா சிவ பிருந்தா தேவியவர்கள் தொண்டுக்கே தம்மை ஆட்படுத்திக் கொண்ட உத்தமத்துறவி. அவர்கள் வாரிசாக தயானந்த சந்திர சேகர சுவாமிகள் குருமுதல்வர் துவங்கிய பணிகளைத் தொடர்ந்து பன்மடங்காகப் பெருக்கி அற்புதத் தொண்டுகள் செய்து வருகிறார்கள்.

    இந்த நூல் அவர்களுடைய பணியில் மலர்ந்த மலர். இது தமிழகமெங்கும் நறுமணம் பரப்பி சைவம் தழையப் பெரும் பங்காற்றும் என்பது எனது நம்பிக்கை.

    வாழ்க திலகவதியார் திருவருள் ஆதீனம்.

    ஓங்குக அதன் உயர்பணி.

    நா. மகாலிங்கம்

    ***

    Dr. Justice A.R. Lakshmanan

    Former Judge, Supreme Court of India, Former Chairman, Law Commission of India

    வாழ்த்துரை

    கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சைவ சமத்திற்கு எதிராக முளைத்த சமணத்தைக் கிள்ளியெறிந்த பணியில் முக்கியப் பங்காற்றியவர் இரு பெண்மணிகளவர். தெற்கே பாண்டியநாட்டின் அரசி மங்கையர்க்கரசியார். அமைச்சர் குலச்சிறையார் உதவியுடன் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்துவந்து, சமணம் சார்ந்திருந்த பாண்டிய மன்னனைச் சைவத்திற்கு மீட்டளித்தார். வடக்கே பல்லவ மன்னவன் ஆட்சியில் மேலோங்கியிருந்த சமணத்தை எதிர்த்து, நாமார்க்கும் குடி அல்லோம் என்று கொடியுயர்த்தி வென்ற திருநாவுக்கரசரை உருவாக்கிய பெருமை தமக்கையார் திலகவதியார்க்கே உரியது.

    அவருடைய திருப்பெயரில் அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி அவர்கள் அமைத்த ஆதீனம், பெண் பெயரில் விளங்கும் ஒரே சைவ ஆதீனம் என்ற சிறப்புக்கு உரியதாகும். இந்துமதத்தின் பெருமையை மேனாடுகளுக்குச் சென்று பரப்பிய சுவாமிகள் விவேகானந்தர் போல, கடந்த நூற்றாண்டில், சைவத்தின் பெருமையை வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வெளிப்படுத்தி சிறப்புப் பெற்றவர் அன்னையார்.

    அவர் உருவாக்கிய திலகவதியார் திருவருள் ஆதீனத்தைச் சீரும் சிறப்புமாக செயற்பாடுகளோடு நடத்தி வருகின்ற தவத்திருதயானந்த சந்திரசேகர சுவாமிகள், நம் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.

    சைவத் திருமுறை மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல், திருமுறைப் பாடல்களை இளைய தலைமுறையினரிடையே பரப்புதல், சைவ சமய வாழ்க்கையின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துதல், சமய அறிஞர்களைப் பாராட்டிக் கெளரவித்தல், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் முதுமொழிக்கேற்ப, உலகோரை உண்பிக்கும் உழவர் பெருமக்களை அழைத்து மேடையேற்றிச் சிறப்பித்தல் முதலான சமய, சமுதாய, இலக்கியப் பணிகளைத் திலகவதியார் திருவருள் ஆதீனம் தொடர்ந்து செய்து வருவதை நான் அறிவேன். அதற்கான பொருளாதரத் தேவைக்காக, அப்பர் கும் அரங்கம் என்ற கட்டடம் எழுப்ப அமைந்துள்ள குழுவுக்கு என்னைக் கெளரவத் துணைத்தலைவ ராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

    அப்பர் அரங்கக் கட்டுமானத் திருப்பணி நிறைவேறும் வரை காத்திருக்க மனம் ஒப்பாமல், ஆர்வத்தோடு இந்த ஆண்டிலேயே சைவத் திருமுறை மாநாட்டை நடத்த நினைத்து, சான்றோர்களையும், வள்ளல் பெருமக்களையும் கொண்ட திருமுறை மாநாட்டுக்குழு ஒன்றை அமைத்து, அவர்கள்தம் ஒத்துழைப்போடு, இரண்டு நாட்கள் அதைச் சிறப்புற நடத்தி நிறைவு செய்த ஆதீனக்கர்த்தரைப் பாராட்டிப் போற்றுகிறேன்.

    சமயச் சான்றோர்கள் தமிழ் அறிஞர்களும் பங்கேற்ற அந்த மாநாட்டில் இடம் பெற்ற உரைகளோடு, மற்ற அறிஞர்களிடத்தும் ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று ஆவணப்படுத்தித் தொகுத்து, நூலாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்க சமயப் பணியாகும். பன்னிரண்டு திருமுறைகளிலும் காணப் பெறும் மக்கள் சமுதாயப் பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் காணப் பெறும் சமய ஈடுபாடுகளையும், அக்காலத்தில் சிறந்தோங்கியிருந்த சிற்பம், இசை, நாட்டியம், மருத்துவம் முதலான கலைகளைப் பற்றியும், பாடல் பெற்ற தலங்களாக விளங்கும் கோயில்களைப் பற்றியும், திருமுறைகளின் அருளியற் கோட்பாடுகள் பற்றியும், தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர் பெருமக்கள் வழங்கியுள்ள ஆய்வுக் கட்டுரைகளை இந்நூலிற் கண்டு பெரு மகிழ்வு அடைகிறேன்.

    இக்கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் தனித்தன்மையுடன் அறிஞர்களின் ஆய்வுத் திறன், சமயநல்லறிவு, பக்தி உணர்வு, மொழியார்வம் முதலியன விளங்கக் காணலாம். இந்தக் கட்டுரைகளைப் படித்துச் சைவ அன்பர்களும், தமிழப் பற்றாளர்களும் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

    மக்களுக்குப் பயனுள்ள அரங்கமாகத் திகழும் இத்திருமுறை மாநாடு, அடுத்த

    ஆண்டு அப்பர் அரங்க த்தில் நிகழ்வுறும் என்ற நம்பிக்கையுடன் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகளின் திருத்தொண்டினை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    ***

    பதிப்பாசிரியரின் நன்றியுரை

    அன்னைத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ் மண்ணில் பிறந்ததை எண்ணி பூரிப்படைவதுடன் இப்பிறவியில் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறோம். தமிழ்மொழியின் இனிமையினை, என்றும் இளமையான மொழியாற்றலைச் சங்கக்கால இலக்கியங்கள் முதலானவை நமக்குப் பறைசாற்றுகின்றன. அவ்வகையில் பக்தி இலக்கியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. சைவத்தைப் போற்றுகின்ற பனுவல்களாகப் பன்னிரு திருமுறைகள் விளங்குகின்றன. திருமுறைகளை நாளும் ஓதினால் உய்நிலை அடையலாம் என்பது நமது ஆன்றோர்வாக்கு. திருமுறைகள் நமது வாழ்வின் நெறிமுறைகள் எனத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறிப்பிடுவார். அத்தகைய அருளற்றலைப் பெற்ற பனுவல்களான திருமுறைகளில் உள்ள அரியக் கருத்துக்களை, புதுமையான பார்வையில் ஒருங்கே திரட்டி, சைவத்திருமுறைகளில் கலைகள், சமுதாயம், கோயில்கள் எனும் பொருள்களில் தலைசிறந்த அறிஞர்களிடத்து கட்டுரைகளைப் பெற்று இந்நூலினை வெளிக் கொணர்ந்துள்ளோம்.

    இந்நூலிற்கு ஆசியுரை வழங்கியருளிய பேரூர் குருமகா சந்நிதானில் ஐந்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களுக்கும், நாம் வெளியிடுகின்ற அனைத்து நூல்களுக்கு சிறப்பான அணிந்துரை வழங்கி வரும் பெருந்தொழிலதிபர், சக்திதொழில் குழுமத்தின் தலைவர் அருட்செல்வர் பெருந்தகை டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களுக்கும், நம் அறப்பணிகளை அன்பு பாராட்டி வருகின்ற உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும், இந்திய சட்ட ஆணையத்தின் மேனாள் தலைவருமான நீதியரசர் டாக்டர். அரு. லெட்சுமணன் அவர்களுக்கும் நமது உளம் கனிந்த நன்றியினை ஒருங்கே உரித்தாக்கி மகிழ்கிறோம். உடனுக்குடன் பிழைத்திருத்தம் செய்துவதவிய நமது அன்பிற்குரிய பண்பாளர் முனைவுச் அய்க்கண் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி பாராட்டுகிறோம்.

    நமது திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் சார்பில் திருமுறை மாநாட்டுக்குழுவினை தக்கவர்களைக் கொண்டு உருவாக்கிவுள்ளோம். டாக்டர்.எஸ். இராமதாஸ் அவர்களைத் தலைவைராகவும், செந்தூரன் கல்விக்குழுமத்தின் தலைவர் இராம.வயிரஜன் அவர்களைச் செயலாளராகவும், கொண்ட மாநாட்டுக் குழுவில் பல்துறை சார்ந்த பேருமக்கள் அணி செய்கின்றனர். இதன் நோக்கம் ஆண்டு தோறும் தீருமுறை மாநாட்டினைக் கூட்டிச் சைவத்தமிழின் சிறப்பை, அருளாளர்களின் ஆற்றலை மக்களிடையே பரப்புவதாகும். அவ்வகையில் இவ்வாண்டு, முதன் முறையாக கூட்டப்பட்டுள்ள இம்மாநாட்டில் வெளியிடப்படும் முதல் நூலாக இந்நூல் அமைகிறது.

    மாவட்ட வர்த்தகக்கழக தலைவரும், பேக்கரி மகராஜ் உரிமையாளருமான ‘அறமனச்செம்மல்’ சீனு. சின்னப்பா அவர்கள் இத்திருநூல் வெளிவர உதவி புரிந்துள்ளமைக்கு நன்றி பாராட்டி மகிழ்கிறோம்.

    இந்நூலில் உள்ள கட்டுரைகளை எளிய நடையில் வழங்கியுள்ள அறிஞர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுகளை நன்றியோடு தெரிவித்து மகிழ்கிறோம். மாநாடு சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு நல்கிய திருமுறை மாநாட்டுக் குழுவினர் அனைவருக்கும் நமது நன்றி கலந்த பாராட்டுகள். இத்திருநூலினை அழகுற அச்சடித்த தந்த சிவகாசி சூர்யா அச்சகத்தாருக்கும் நன்றி உரித்தாகுக.

    தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்

    பதிப்பாசிரியர்

    இந்நூல் வெளிவர உதவிய மாவட்ட வர்த்தகக் கழகத் தலைவர் அறமனச்செம்மன் சீனு. சின்னப்பா அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். தயானந்த சந்திரசேகர சுவாமிகள்

    ***

    1. திருஞானசம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

    முனைவர் மு.பழனியப்பன், சிவகங்கை

    அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை காழியர்கோன் தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகி விடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக அமைந்து குருவாக அமைந்து சமுதாயத்தைக் கடைத்தேற்றும் நாயகராக ஞானசம்பந்தப் பெருமான் விளங்குகின்றார்.

    திருநல்லூர்ப் பெருமணத்தில் தன் மணம் காண வந்த அத்தனை பேருக்கும் சிவகதி அளித்த பெருமைக்கு உரியவர் ஞானசம்பந்தப் பெருமான்.

    "நந்திநாமம் நமசிவாயவெனும்

    சந்தையாற்றமிழ் ஞானசம்பந்தன்சொல்

    சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லாரெல்லாம்

    பந்தபாசம் அறுக்க வல்லார்களே"

    (திருநல்லூர்ப் பெருமணம். பாடல்.12)

    என்ற அவரின் நல்லூர்ப் பெருமண நிறைவுப்பாடல் - அனைத்து உயிர்களையும் பந்த பாசம் அறுத்து ஞானநிலைக்குக் கொண்டு சென்றதை அறிவிக்கின்றது. இந்நிலையே ஞானகுருவின் உன்னதப் பணியாகும்.

    அனைத்து உயிர்களும் கடைத்தேறும் இனிய வழியை இப்பதிகத்தின் முதல்பாடல் பெற்றுள்ளது.

    "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

    ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது

    வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

    நாதன் நாமம் நமச்சிவாயவே"

    (திருநல்லூர்ப் பெருமணம். பாடல்.1)

    காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கி நமசிவாய மந்திரத்தை உச்சிரிப்பவர்கள் பந்த பாசம் கடப்பார்கள். ஞான ஒளி பெறுவார்கள் என்ற தொடக்கத்தை உடைய இப்பாடல் காலம் காலமாகச் சமுதாயம் கடைத்தேறுவதற்கான வழியை எடுத்துரைப்பதாக உள்ளது.

    ஞானசம்பந்தரின் இறைப்பாடல்கள் கோயில் தோறும் சென்று பாடப்பெற்றன. அவை ஓரிடத்தில் நின்று இருந்து பாடப்பெற்றன அல்ல. கோயில்கள் பலவற்றிற்குச் சென்று இறைவனை இறையனுபவத்தால் அனுபவித்துப் பாடப்பெற்றவை. இதன் காரணமாக அவை தனிமனித அனுபவமாக அமையாமல் சமுதாய அறங்களைப் போற்றுவதாகவும், சமுதாயத்திற்கு நல்லன செய்வனவாகவும் பாடப்பெற்றுள்ளன.

    இவர் பாடிய முதல் பாடலே தந்தை, தாய் தவிர்ந்து மூன்றாமவரான இறைவனை முன்னிறுத்திப் பாடிய பாடல் ஆகும். இந்த இறையனுபவத்தை அனைத்து உயிர்களும் பெற வேண்டும் என்பதற்காக நாளும் பாடிப் பரவித் தொழுது இறைவனைப் போற்றினார் ஞானசம்பந்தர்.

    உயர் சமுதாய நோக்கு

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

    எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலைக்

    கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

    பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே"

    (திருக்கழுமலம், பாடல்.1)

    என்ற இந்தப் பாடல் சம்பந்தரின் சமுதாய நோக்கினை உணர்த்தும் தலையாய பாடலாகும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது என்பது சமுதாயம் சார்ந்த வாழ்க்கை முறையாகும், அவ்வாழ்க்கை முறைக்கு கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தும் வாழ்வு சிறப்பானது. இறைவனும் இறைவியுடன் கலந்தே வீற்றிருக்கிறான் என்று சமுதாய நிலையை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

    ஞானசம்பந்தரும் அடியார் திருக்கூட்டமும்

    ஞானசம்பந்தர் தனியாக எக்கோயில்களுக்கும் சென்றது இல்லை, அவர் வருகிறார் என்றால் அவருடன் அடியார் திருக்கூட்டமும் வரும். வருகின்ற ஊரெல்லாம் மலர்மாலைகள் புனைந்தேத்தி வரவேற்பு கூறுவர். இவ்வகையில் சைவ சமயத்தை சமுதாய இயக்கமாக ஆக்கியவர் ஞானசம்பந்தர்.

    அவருடன் உடனுறைந்த அடியார்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர், குலச்சிறையார், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், நின்ற சீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார், முருகநாயனார், திருநாவுக்கரசர் போன்ற பலர் ஆவர். இவர்களுடன் பலரும் இணைந்து ஞானசம்பந்தக் குழந்தையுடன் சமுதாயப் பணிகளையும் சமயப் பணிகளையும் ஆற்றினர்.

    அடியார்திருக்கூட்டத்தை நாளும் கோளும் தம் இயக்கம் காரணமாக இடையூறு செய்தாலும் அவற்றைப் போக்க வேண்டும் என்று பாடியவர்

    திருஞானசம்பந்தர், இக்காலம்வரை இப்பதிகமே அடியார் துயர் களைந்துவரும் பதிகமாகும்.

    வேயுறுதோளி பங்கன் விடமுண்ட கண்டன்

    மிகநல்ல வீணை தடவி

    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்

    உளமே புகுந்த அதனால்

    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

    சனி பாம்பிரண்டும் உடனே

    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

    அடியார் அவர்க்கு மிகவே

    (திருமறைக்காடு. பாடல். 1)

    என்று அடியார்களை இறைவன் பெயரால் காக்கும் முறைமை பக்திச் சமுதாயத்தை ஞானசம்பந்ததர் வளர்த்த முறையாகும்.

    அடியார்கள் வருந்தும்போது அவ்வருத்தம் போக்கவும் ஞானசம்பந்தர் முயன்றுள்ளார். கொடிமாடச் செங்குன்றுார் (திருச்சேங்கோடு) என்ற ஊருக்குப் பனிக்காலத்தில் வந்து பனிக்காலத்தில் குளிர் சுரம் வருவது இயல்பு. இக்குளிர் சுரம் வராமல் காக்க இறைகருணையை வேண்டிப் பாடல் இயற்றுகிறார் ஞானசம்பந்தர். அடியார்களைக் குளிர் சுரத்தில் இருந்து காப்பாற்றிய முயற்சி இதுவாகும்.

    அவ்வினைக்கு இவ்வினையாம்

    என்று சொல்லும் அஃதறிவீர்

    உய்வினை நாடாது இருப்பதும்

    உந்தமக்கு ஊனமன்றே

    கைவினை செய்து எம்பிரான் கழல்

    போற்றது நாம் அடியோம்

    செய்வினை வந்து எமைத் தீண்டப்

    பெறா திரு நீலகண்டம்

    (திருக்கொடிமாடச் செங்குன்றுார். பாடல்.1)

    இப்பாடலில் செய்வினை வந்து எமை தீண்டப்பெறாமல் இருக்க திருநீலகண்டப்பெருமானை அழைத்துக் காப்பு செய்து கொள்ளுகின்றார் சம்பந்தப்பெருமான். எமை என்ற குறிப்பு சமுதாயம் சார்ந்த குறிப்பு ஆகும். என்னை எனக் குறிக்காமல் எமை என்று தன்மைப் பன்மைநிலையில் தன்னையும் அடியார்களையும் உளப்படுத்தி இப்பதிகம் பாடப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

    பஞ்சம் வந்துற்றபோதும் சம்பந்தப்பெருமான் அடியார் திருக்கூட்டத்திற்கு அமுதளித்துப் பாதுகாத்துள்ளார். திருவீழிமிழலையில் அடியார்களோடு சம்பந்தப்பெருமான் சென்றபோது அங்கு பஞ்சம் வந்தது. அந்தப் பஞ்சத்தைப் போக்குவதற்காக பீடத்தின் மீது இறைவன் ஒரு பொற்காசினை ஒவ்வொரு நாளும் அளித்து அதன் வழி பொருள் பெற்று அடியார் பசி போக்க வழி செய்தான்.

    சம்பந்தருக்கு இறைவனுக்கு அளிக்கப்பெற்ற காசு வட்டம் கொடுத்து அக்காலத்தில் சிறிது நேரம் கழித்தே மதிப்பு பெறுவதை

    Enjoying the preview?
    Page 1 of 1