Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Multifaceted Bhakthi
Multifaceted Bhakthi
Multifaceted Bhakthi
Ebook120 pages44 minutes

Multifaceted Bhakthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பக்தியின் பன்முகம் எனும் இந்நூல் பக்தி பற்றிப் பேசுகின்ற வித்தியாசமான நூல். பக்தி எவ்வாறு தமிழ் அடையாளத்தைத் தக்க வைக்க உதவியது, அது எப்படி சாதிகளற்ற ஓர் தமிழகத்தை உருவாக்க முயன்றது என்று ஆராய்கிறது. மொழி வளர்ச்சியில் பக்தியின் பங்கு என்ன? மொழி ஒரு ஊடகம் எனும் நிலை தாண்டி, மொழியே இறைவனாக நிற்கும் நிலைக்கு பக்தி அதை எப்படி எடுத்துச் செல்கிறது என விளக்குகிறது இந்த நூல். பக்தி என்பது அறிவின் வெளிப்பாடு, அது மூட நம்பிக்கை அல்ல எனப் புரிய வைக்கிறது இந்த நூல். தமிழின் ஆகப்பெரிய இலக்கியமாக பக்தி இலக்கியம் இருக்கும் போது அதை முறையாக அறிந்து போற்ற இந்த நூல் உதவும். ஒரு வித்தியாசமான வாசிப்பிற்குத் தயாராகுங்கள்.

Bakthi is devotion and practised by millions in India. But hardly people know what Bakthi is, where was it developed and how was it applied for social reforms, linguistic development, and literary freedom. A Tamil tradition was created where God listened to Bakthi Tamil literature at Sri Rangam temple for an entire year and follow Tamil afterwards, in temple processions and daily puja, out of love and appreciation of that ancient language. This was the biggest literary award ever given to Tamil literature in history. This book is full of such interesting anecdotes and surprising insights on Bakthi. This book in Tamil will certainly entertain the reader and make him realize the power Bakthi.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580155208531
Multifaceted Bhakthi

Read more from Na. Kannan

Related to Multifaceted Bhakthi

Related ebooks

Reviews for Multifaceted Bhakthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Multifaceted Bhakthi - Na. Kannan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பக்தியின் பன்முகம்

    Multifaceted Bhakthi

    Author:

    நா கண்ணன்

    Na. Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/na-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வாழ்த்துச் செய்தி

    பேராசிரியர்.முனைவர்.நா.கண்ணன் ஒரு சுற்றுச் சூழலியல் விஞ்ஞானியாகத் தனது ஆய்வுத் துறையில் பிரகாசிப்பது போலவே தமிழ் இலக்கிய உலகிலும், அதிலும் குறிப்பாக அயலகத்தமிழர்கள் என்ற ரீதியில் விரிந்து பரந்த பார்வையைக் கொண்ட இலக்கியத்தைப் படைப்பதில் வெற்றி கண்ட ஒரு இலக்கியவாதியாகப் பிரகாசிக்கின்றார். இவரது பக்தி இலக்கியத்தின் பன்முகத்தன்மை நூல், தமிழ் பக்தி உலகிற்கு, அதிலும் குறிப்பாக வைணவப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்போருக்கு அக்காரஅடிசிலாக வந்திருக்கின்றது.

    நா.கண்ணனுக்கும் எனக்கும் உள்ள அறிமுகமும் நட்பும் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலானது. அவரை நான் அறிந்து கொண்ட நாள் முதல் தன்னை அவர் ஒரு முழுமையான வைணவராகவே அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படுபவர் என்று அறிந்திருக்கின்றேன். வேடத்திற்காக வைணவத்தைப் பற்றி பேசுவோர் இருக்கின்ற சூழலில், ஆழ்வார் பாசுரங்களை ஓதி அப்பாசுரங்களில் திளைத்து, அதன் பக்தியில் தனனை ஈடுபடுத்தி பக்தி செய்து மகிழ்ந்து வாழ்பவராகத்தான் நான் நண்பர் நா.கண்ணன் அவர்களைக் காண்கின்றேன். அவரது ஒவ்வொரு கலந்துரையாடல்களிலும் இராமானுஜரின் கருத்துக்களும், ஆண்டாளின் காதலும், ஆழ்வார்களின் பக்தியும் கலந்திருக்கும். தான் காணும் அனைத்திலும் நா.கண்ணன் வைணவத்தின் மைய நாதமாகிய கண்ணனையே கண்டு களித்து மகிழ்ந்து வாழும் ஒரு இனிய அற்புதப் பிறவி என்று தயங்காமல் சொல்வேன்.

    இந்த நூல் ஒரு வைணவரின் சமூக, அறிவியம் பார்வையை முன் வைக்கின்றது. இக்கால இளையோருக்கு இவ்வகை சிந்தனைகள் காலத்தின் அவசியம். இந்த நூல் பலரையும் சென்றடைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

    முனைவர் க.சுபாஷிணி

    தலைவர்,

    தமிழ் மரபு அறக்கட்டளை,

    ஜெர்மனி

    13.1.2018

    முன்னுரை

    வைணவம் மிகத் தொன்மையானது. கடலோடிகளான தமிழர்களின் காக்கும் தெய்வமாக அறிமுகமாகிறான் திருமால். தமிழ்ப் பண்பாடு நீர்ப்பண்பாடு. ஆரியப்பண்பாடு அக்னிப் பண்பாடு. திருமால் நீர்த்தெய்வம். காக்கும் கடவுள். கடலோடிகளின் வாழ்வு முல்லைத்திணையோடு ஊடாடும் வாழ்வு. கப்பல்கள் செய்ய பெரும் மரங்கள் வேண்டும். அம்மரங்கள் முல்லையில் திணைக்குரியவை. எனவே திருமால் கண்ணனாக, மாயோனாக தொல்காப்பியரால் அறிமுகப்படுத்தப் படுகிறார். மாயோன் மேயக் காடுறை உலகம் கண்ணனை முன் வைத்துப் பேசுவது திருமாலியத்தின் தொன்மைக்குச் சான்று. சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் எனும் முறைமை சார்ந்தது. தொல்காப்பியர் காலத்தில் கடலோடிகளின் தெய்வம், முல்லைத் தெய்வமாக மருவிவிடுகிறது. தமிழர்கள் ஆபத்து மிகுந்த கடல்சார் வாழ்விலிருந்து ஆடு மேய்த்து வாழும் வாழ்விற்கு மாறிய கதை கண்ணன் கதை. வேத முறைப்படி இந்திரனுக்குப் படையல் செய்த முறை கண்ணன் காலத்தில் மாறுகிறது. கண்ணனே பரம்பொருளாக எல்லாவற்றையும் ஏற்கிறான். முல்லையிலிருந்து, காடுகள் திருத்தி கழனியாகும் போது திருமாலியம் இயைந்து மாறுகிறது. மருதத்திணையின் அடிப்படை விவசாயம். விவசாயத்திற்கு முதன்மை ஏர். ஏர் தூக்கும் உழவனாக கண்ணனின் அண்ணன் பலராமன் உருவகப் படுத்தப்படுகிறான். தென்னகத்தில் மட்டுமே பரந்து கிடக்கும் பனை திருமாலியத்தின் குறியீடாகிறது. கண்ணன் - பலராமன் கோயிலின் கொடி பனைக்கொடி.

    இத்தகைய சமூக, சமய உளவியலை மட்டுமல்ல, உயிர்களின் தோற்ற கூர்தலியலும் திருமாலியத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. கடலில் தோன்றிய உயிர்களின் குறியீடு மச்சாவதாரம். கடலிலும், நிலத்திலும் வாழ்வின் குறியீடு கூர்மாவதாரம். நிலத்தில் பாதுகாப்பாக வாழ, நிலத்தடி உயிர் வராகவதாரம். நிலவியல் வாழ்வு நிலை பெற்ற பின் அதன் வெற்றியைச் சுட்டும் குறியீடு நரசிம்மவதாரம், மிருகங்களிலிருந்து கூர்தலடையும் குள்ள மனிதனின் குறியீடு வாமன அவதாரம், பூரண மனித வளர்ச்சியின் குறியீடு இராமன், மனித பரிமாணத்தின் உச்சமான தெய்வம், கிருஷ்ணாவதாரம். ஆக, உயிரியல், சமூகவியல் வளர்ச்சியை சமயக் குறியீடுகளாகக் கொண்டு தமிழர்களால் பின்பற்றப்படும் சமயம் திருமாலியம்.

    இத்தகைய பழம் குறியீட்டு முறைமை கொண்ட சமயம், தமிழனின் அகவாழ்வை முழுமையாய் உள்வாங்கி பக்தி இயக்கமாக மாறுகிறது. அகவாழ்வின் அத்துணை கூறுகளையும் ஆழ்வார்களின் பாடல்களில் காணலாம். இன்றுவரை முல்லைத்திணைப் பண்புகளை தக்க வைத்து இயங்கும் சமயமாக வைணவம் திகழ்கிறது. சங்கம் பேசும் முக்கோர் பகவர் என்பவரே பின்னால் ஆச்சார்யர்களாக அறியப்படுத்தப்படுகின்றனர். முக்கோல் சுட்டும் தத்துவமே, தத்வத்திரயமாக வளர்க்கப்படுகிறது. வேதம் ஓதுதல், ஓத்துவித்தல், தமிழ் கூறும் அறங்களைக் காத்தல் என்பவை அந்தணர்க்குரியவையாக இருப்பதால் சங்கதத்தை தக்க வைத்துக் கொண்டு தமிழியல் சமயக் கொள்கைகளைக் கொண்ட மதமாக வைணவம் திகழ்கிறது. கால மாற்றத்தில் சங்கதம் கோயில் மொழியாக சைவத்தில் முன் வைக்கப்படும் போது எதிர்குரலாக நாதமுனிகள் தமிழைக் கோயில்மொழியாக பிரகடனப்படுத்தி, ஆழ்வார்களின் பனுவல்களை முன்வைக்கிறார். இப்புரட்சி பிராமணர்களின் மனமாற்றத்தை வேண்டுகிறது. ஆழ்வார்கள் பேசும் தமிழின் உயர்வு, சாதியற்ற சமய நோக்கு, இறைவன் எளியவன், மக்களின் குலக்கொழுந்து எனும் கருத்துகோள்களை தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு இராமானுச முனி இயங்குகிறார். அவருக்குப் பின் பிராமணீயம் இரண்டாக உடைபடுகிறது. தமிழை முன்வைத்து சாதிபாரா வைணவ பிராமணர்கள் என்றும் சங்கதம் முதன்மை எனும் வைதீக பிராமணர்கள் என்றும் இரு கூறுகளாகப் பிரிகிறது. வைதீக பிராமணர்கள் வேதத்தைக் கருப்பொருளாகக் கொண்ட வாழ்வை முன்நிறுத்தும் போது, தமிழ் வைணவர்கள் ஆழ்வார்களின் பனுவல்களைத் தமிழ் வேதம் என்றனர். வேதம் செய்தவரை ரிஷி என்பது போல் ஆழ்வார்களை இவர்கள் ரிஷி என்கின்றனர். வேத சூக்தங்களுக்கு இணையாக தமிழ்ப் பனுவல்கள் இணை காட்டப்படுகின்றன. வேதம் நான்கையும் நம்மாழ்வாரின் ஸ்ரீசூக்திகள் கொண்டு தமிழ் வேதத்தில் நிறுவுகின்றனர்.

    வள்ளுவர் காலத்திலும், அதற்கு முன்னும், பின்னும் திருமாலை முழுமுதற் கடவுளாக் கொண்டு வாழ்த்தும் முறை இருந்து வந்துள்ளது. இதனால்தான் சங்கப் புலவரான பரணர், வள்ளுவனை வாழ்த்தும் போது தேவரில் திருமால் எனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண்பா என்கிறார்.

    திருமாலியம், மாயோன்வழிபாடு, வைணவம் இவையெல்லாம் தமிழ்ச் சமய வளர்ச்சியின் கூறுகள். இவையெல்லாம் இந்நூலில் விரிவாக பேசப்படுகின்றன. பக்தி என்பது தமிழின் அரிய கண்டுபிடிப்பு. அதுவே தமிழ் எல்லை தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது.

    Enjoying the preview?
    Page 1 of 1