Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sarithira Nayakan Irandaam Serfoji
Sarithira Nayakan Irandaam Serfoji
Sarithira Nayakan Irandaam Serfoji
Ebook131 pages37 minutes

Sarithira Nayakan Irandaam Serfoji

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்திய மண்ணில் பிறந்து, தஞ்சை மண்ணில் ஆட்சி புரிந்து மக்களின் மனங்களை வென்றவர்! எல்லா செயல்களிலும் தன் பெயரை நிலைநாட்டி ஆளுமைத் தன்மையுடன் விளங்கியவர்! தமிழுக்குத் தொண்டாற்றியவர்!

அவர்தாம் தஞ்சைக்குப் புகழாரம் சூட்டிய மாமன்னர் “இரண்டாம் சரபோஜி” ஆவார். அம் மன்னருடைய வாழ்க்கை வரலாறு தான் “சரித்திர நாயகன் இரண்டாம் சரபோஜி”என்னும் வரலாற்று நூலாகும்.

உலகப் புகழ்ப் பெற்றுள்ள, சரசுவதி மகால் நூலகம், மராட்டிய அரண்மனை, மனோரா கோட்டை, சார்ஜா மாடி, கோவில்கள், முதலியவற்றைத் தோற்றுவித்தவர்! இத்தகைய பெருமை வாய்ந்த மாமன்னரின் சிறப்புகளை திருமதி. இரா.இந்திராபாய் அவர்கள் தக்க வரலாற்று ஆதாரங்களுடன் சுவைபட எடுத்தியம்பியுள்ளார்.

அருமையான சரித்திர நூல் - குறிப்பாக இளைய தலைமுறையினருக்குப் பயன்படும் நூல். எழுத்துலகிற்குப் பெருமை சேர்க்கும் இனிய நூல் என்றால் மிகையாகாது!

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580153408192
Sarithira Nayakan Irandaam Serfoji

Related to Sarithira Nayakan Irandaam Serfoji

Related ebooks

Related categories

Reviews for Sarithira Nayakan Irandaam Serfoji

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sarithira Nayakan Irandaam Serfoji - R. Indra Bai

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சரித்திர நாயகன் இரண்டாம் சரபோஜி

    Sarithira Nayakan Irandaam Serfoji

    Author:

    முனைவர். இரா. இந்திராபாய்

    R. Indra Bai

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-indra-bai

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    முன்னுரை

    1. மராத்தி மொழி

    2. தரணி போற்றும் தஞ்சாவூர்

    3. தஞ்சையில் மராட்டிய அரசு

    4. சரபோஜி மன்னரின் முன்னோர்கள்

    5. சுவீகார விழா

    6. சரபோஜியின் இளமைப்பருவம்

    7. தஞ்சை மாமன்னர் சரபோஜி

    8. கவின்மிகு கட்டடக்கலை

    9. சரஸ்வதி மகால் நூலகம்

    10. கப்பலோட்டிய மராட்டிய மன்னர்

    11. சமுதாய நலத்தொண்டுகள்

    12. சரபோஜியின் சிறப்பியல்புகள்

    13. மராட்டியர்களின் ‘லாவணி’ நாட்டுப்புறச் சந்தப்பாடல்

    14. தஞ்சை மராட்டிய மன்னர்களும் தமிழ் இலக்கியங்களும்

    15. சரபோஜி மன்னரின் இறுதி நாட்கள்:

    16. சரபோஜி மன்னரின் அழியாச் சின்னங்கள்

    வாழ்த்துரை

    எழுத்துலகிற்குப் பெருமை சேர்க்கும் இனிய நூல்!

    ஒரு பண்பட்ட சமூகத்தின் ஒளி முகமாகத் திகழ்வதே அதன் கடந்தகால வரலாறுதான். அதன் சரியான வரலாறென்னும் அடித்தளத்தில் காலூன்றிப் பயணம் தொடர்கின்ற ஓர் சமூகம்தான் வெற்றிச் சமூகமாகத் தலை நிமிர்த்தித் தோளுயர்த்தி நிற்க முடியும்.

    கிரேக்க, ரோமானிய, எகிப்திய நாகரிகங்கள் இன்றும் பேசப்படுகின்றன, போற்றப்படுகின்றன, புகழப்படுகின்றன; இன்றும் பாதுகாத்து அவற்றின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் வணங்கப்படுகின்றன.

    எதனால், எதற்காக?

    பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மண்ணகத்தில் உயிரினங்களாகத் தோன்றி இன்று உயர்ந்த மனித இனமாக, பேரண்டத்தின் அனைத்து ரகசியங்களையும் அணுவணுவாகக் கண்டாய்ந்து, உணர்ந்து உயர்ந்த இனமாக நிற்பதற்கு அந்த இனத்தின் கடந்தகால வரலாறுகளே முழுமுதற் காரணங்களாகும்!

    அதே நோக்கில் இந்தியாவும் குறிப்பாகத் தமிழகமும் எத்தகைய தன்னிகரற்ற வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டுள்ளன என்பது நாம் அறிந்தது, நாடறிந்தது, நானிலம் அறிந்தது!

    தென்னகமே குறிப்பாக தமிழகம் சேர, சோழ, பாண்டியர், பல்லவர், சாளுக்கியர், ராயர்கள், நாயக்கர்கள், மராத்தியர், நவாபின் பரம்பரையினர் என்ற பல்வேறு ஆட்சியாளர் அதிகாரங்களுக்குட்பட்டு சீரும் சிறப்பும் பெற்றது சீரழிந்து சிதைந்தது போன்ற வரலாறுகள் நல்ல படிப்பினைகளான படிக்கற்களன்றோ.

    அத்தகைய வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் நம் நெஞ்சம் கவர் நிறை மனிதர்களாக, வரலாற்று வரிகளாக நின்றொளிரும் காட்சி அரிய காட்சியாகத் திகழ்கின்றதன்றோ!

    மனிதர்களில், மனித சமூகத்தின் பெருமைக்குப் பெருமை சேர்த்த அறிவார்ந்த மனிதர்கள், ஆற்றல் வாய்ந்த மனிதர்கள், நல்ல நெறி சார்ந்த மனிதர்கள், நிறைவாழ்வு மனிதர்கள் என்ற கணக்கில் வாழ்ந்த மாமனிதர்களை இந்த மண்திணி ஞாலம் ஒரு போதும் மறந்ததில்லை, மறைத்ததில்லை.

    தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் மனிதர்களைப் போற்றி, வாழ்த்தி வணங்கவும் எந்த நாட்டு மக்களும் தவறியதில்லை. அப்படித் தவறுவோர் சார்ந்த சமூகம், நாடு என்றும் தலை நிமிர்ந்ததாக வரலாறும் வளர்ந்ததில்லை.

    அதனால்தான் அவ்வைப் பெருமாட்டியும்,

    "நாடா கொன்றோ காடா கொன்றோ;

    அவலா கொன்றோ மிசையா கொன்றோ;

    எவ்வழி நல்லவர் ஆடவர்,

    அவ்வழி நல்லை வாழிய நிலனே!"

    என்று அன்றே தெளிவு வழி காட்டினார். இந்தக் கோட்பாடுகளின் வழி தமிழ்ச் சமூகத்திற்கு குறிப்பாக தஞ்சைத் தரணிக்குத் தன்னிகரற்ற பெருமை சேர்த்தவர் மன்னர் இரண்டாம் சரபோஜி என்பது அறிவுலகம் அறிந்த உண்மை. அவரின் அரிய வரலாற்றை மிகச் சிறப்பாக, சரியாக, தெளிவாக, சுவையாக பயனுடையதாகப் படைத்தளித்துள்ளார் முனைவர் இந்திராபாய் போன்ஸ்லே அவர்கள்.

    இவர் தமிழ் நிலத்தின் சிறந்த சிந்தனை வளமிக்க கல்வியாளர், புலமையாளர், தந்தை வழியில் தமிழ்ப்புலமை நெறியில் வளர்ந்த தமிழ்ப் புலவர். செழுமையான சிந்தனை வளமிக்க, கவிதை, கதை, கட்டுரை போன்ற துறை சார்ந்த படைப்பாளர். சிறந்த பேச்சாளர்; நல்லாசிரியர்களுக்குரிய எல்லாத் தகுதியும் பெற்றவர். இத்தகு தகுதிகளின் வடிவமான இப்பெருமாட்டியின் சரித்திர நாயகன் இரண்டாம் சரபோஜி மன்னர் என்னும் இந்நூல் அனைவரும் படித்து இன்புறும் நூலாக மட்டுமல்லாது வருங்கால இளைய தலைமுறைக்குப் பயன்படும் சரியான நூலாகவும் திகழ்கிறது.

    மேலும் ஆசிரியர் சரியானவராக இருந்தால் (ஸ்வாட்ஸ் பாதிரியார்) மாணவன் எத்தகைய தகுதியானவனாக எழுந்து நின்று வரலாறு படைப்பான், வரலாற்றில் ஒளிமுகங்காட்டுவான் என்பதற்குச் சரியான சான்றாக இந்நூல் திகழ்கிறது!

    ஆன்மீகக் கோயில் கட்டி தஞ்சைக்கு ராஜராஜ சோழன் பெருமை சேர்த்தான் என்றால் சரஸ்வதிமகால் போன்ற அறிவாலயங்களை எழுப்பி தஞ்சை மண்ணுக்கு மட்டுமல்ல, தமிழ் மண்ணுக்கே சரபோஜி மாமன்னர் பெருமை சேர்த்தார் என்ற இந்த வரலாற்றுப் பதிவு நூல், மத நல்லிணக்கத்தைத் தெளிவுபடுத்தும் நன்னூலாகவும் விளங்குகின்றது.

    ஆம் எங்கிருந்தோ வந்த மேலை நாட்டு ஸ்வாட்ஸ் பாதிரியார் தன்னிடம் நம்பிக்கையோடு ஒப்படைக்கப்பட்ட இரண்டாம் சரபோஜியைக் கண்ணில் வைத்துக் காத்துத் தாயாய், தந்தையாய், ஆசானாய் அறிவார்ந்த உலகை தன் போதிப்பின் மூலம் காட்டி வளர்த்த பாங்குகள் கவிஞர் இந்திராபாய் அவர்களால் சரியான சத்தான வரிகளில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

    அதனால்தான் வரலாற்றுப் பெருமைமிக்க சரபோஜி மன்னர் பன்மொழி ஆய்ந்த அறிஞராக, கலை இலக்கிய உணர்ச்சி தோய்ந்த மனிதநேயப் பண்பினராக வளர்ந்து, வாழ்ந்து நமக்கும் சரியான வழிகாட்டிச் சென்றுள்ளார், மறைந்தும் மறையாமல் இன்றும் நம் மனத்துள் மணக்கும் சரித்திர

    Enjoying the preview?
    Page 1 of 1