Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Nilam Tharanikku Thilagam
Tamil Nilam Tharanikku Thilagam
Tamil Nilam Tharanikku Thilagam
Ebook171 pages39 minutes

Tamil Nilam Tharanikku Thilagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதைகள் என்பது வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்பார்கள். எழுத்தாளன் தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களை, நிகழ்ச்சிகளை, அனுபவங்களை, கற்பனைகளை கதைகள் மூலம் படம்பிடித்து காட்டுவதுண்டு. அந்த வகையில் உறவுகள் உதிர்வதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு பல மனிதர்களின் உறவுகளை அடையாளப்படுத்தும் சிறுகதைத் தொகுப்பாக அமைந்திருக்கிறது. ஒரு சிறுகதை என்பது பிரச்சனைகளை மட்டுமே கூறிச் செல்வது கிடையாது. அதற்கு படைப்பாளியின் தீர்வும் பதிவாகியிருக்க வேண்டும், இந்த சிறுகதைப் தொகுப்பில் மனித வாழ்வின் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டிருக்கிறது. மனித நேயத்தை மதிக்கத் தவறும் மனிதனின் குணத்தையும் அவன் தீர்வையும் சொல்வதில் தொடங்கி கபட மனிதர்களின் சூழ்ச்சிகளும், அதற்கான பரிகாரங்களும், காதலும், பிரிவும் அதன் வலிகளும் இணைந்ததே இந்த உறவுகள் உதிர்வதில்லை சிறுகதைத் தொகுப்பு நூல். வாசித்தால் வசமாவீர்கள்.

Languageதமிழ்
Release dateJun 3, 2023
ISBN6580144809722
Tamil Nilam Tharanikku Thilagam

Read more from Dr. V. Kulandaiswamy

Related to Tamil Nilam Tharanikku Thilagam

Related ebooks

Reviews for Tamil Nilam Tharanikku Thilagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Nilam Tharanikku Thilagam - Dr. V. Kulandaiswamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ் நிலம் தரணிக்குத் திலகம்

    Tamil Nilam Tharanikku Thilagam

    Author:

    முனைவர். வே. குழந்தைசாமி

    Dr. V. Kulandaiswamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-v-kulandaiswamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அணிந்துரை

    முன்னுரை

    காப்பு

    தமிழ்த்தாய் வாழ்த்து

    பாகம் – 1

    இயல் – 1

    குமரிக்கண்டம்

    தொல்காப்பியம்

    தொன்மச்சான்றுகள்

    குகைத்தளக் கல்வெட்டுகள்

    இயல் - 2

    சங்ககாலம்

    சங்ககால இறைவழிபாட்டு முறை

    அரசாட்சி

    சங்ககாலச் சமுதாயம்

    இயல் – 3

    திருவள்ளுவர்

    இரட்டைக் காப்பியங்கள் காட்டிய தமிழகம்

    இயல் – 4

    சங்கம் மருவிய காலம்

    பல்லவர் காலம்

    இயல் – 5

    பக்தி இயக்கம்: சைவசமய எழுச்சி

    வைணவத்தின் வளர்ச்சி

    சித்தர் மரபு

    பாகம் - 2

    இயல் – 6

    தமிழ்ப்பேரரசுகள்

    இயல் - 7

    சிதைவுற்ற தமிழகம்

    இயல் – 8

    மெய்ஞானச் சுடர்கள்

    இயல் – 9

    ஆங்கிலேயர் ஆட்சி

    பாகம் – 3

    இயல் – 10

    விடுதலைப் போரில் தமிழகம்

    இயல் – 11

    சுயமரியாதை இயக்கம்

    இயல் - 12

    தனித்தமிழ் இயக்கம்

    இயல் – 13

    தமிழ்நாடு மீளுதயம்

    இயல் – 14

    புதுயுகத் தமிழகம்

    இயல் – 15

    தமிழ்த்தாயின் தவிப்பு

    இயல் - 16

    தமிழரின் வேட்கை

    வாழ்த்துரை

    E:\Priya\Book Generation\tamil nilam tharanikku thilagam\1.jpg

    செ. துரைசாமி,

    தலைவர், புவனேஸ்வர் தமிழ்ச்சங்கம் மற்றும்

    அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை.

    கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

    பெருமையின் பீடுடையது இல். (குறள் – 1021)

    முனைவர் வே. குழந்தைசாமி அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக உயர்கல்வித் தளத்தில் கல்விப்பணி ஆற்றிவருகிறார். இவர் தனது பணிக்காலத்தில் பேராசிரியர், கல்லூரி முதல்வர், பல்கலைக்கழகப் பதிவாளர், கல்லூரித் தாளாளர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் தமிழ்மீது நாட்டம் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றதன் பயனாகத் தமிழ்ப் பற்றால் சில நூல்களை வெளியிட்டுள்ளார். தற்போது கவிதை வடிவில் தமிழ் நிலம் தரணிக்குத் திலகம் என்ற நூலை உருவாக்கியுள்ளார்.

    கல்தோன்றி மண்தோன்றாக் கலத்தே முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் என்னும் கூற்று, எல்லா மொழிகளுக்கும் தமிழே மூத்த மொழி என்பதைப் புலப்படுத்துகிறது. எண்ணற்ற இலக்கிய வளமும் இலக்கணச் செழுமையும் உடையது, தனித்தியங்கும் தன்மை வாய்ந்தது, உயர்தனிச்செம்மொழி என்பனபோன்ற பதினாறு சிறப்புகள் உடையது தமிழ் என்று அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்காணோம் என்று பாரதியாரும், தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாரதிதாசனும் பெருமிதத்துடன் முழங்கினார்கள். ஆனால், தமிழ் தோன்றிய தமிழகத்தில் தாய்மொழியாம் தமிழ் தாழ்வுற்றுக் கிடக்கிறது. வீட்டில், வெளியில், ஆட்சியில், அலுவல் கூடங்களில், பேச்சு வழக்கிலும், எழுத்துவழக்கிலும் பெருமைகுன்றிக் கிடக்கிறது. ஆங்கில மொழியின்மீது மோகம், மிகுதியான ஆங்கிலக்கலப்பு, மாற்று மொழியின் மடியில் மயங்கிக் கிடப்பது, மகிழ்ந்து பெருமிதம் கொள்வது என்பன இன்றைய தமிழர்களின் நிலையாக உள்ளது.

    இந்நிலையில், வேகமாக அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெற்றிருப்பது நமக்கு வேதனை தரும் செய்தியாகும். தமிழ் அறியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் தமிழரின் பண்டைய பெருமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இன்றைய தமிழகத்தில் தமிழ்மொழியானது அனைத்துத் துறைகளிலும் ஒதுக்கப்படும் அவலத்தையும் சிறுமையையும் எடுத்துக் கூறும் விதமாகவும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கிய, சமூக, அரசியல் மாற்றங்களைக் கவிதை வடிவில் உணர்வைக் கலந்து தமிழ்நிலம் தரணிக்குத் திலகம் என்ற தலைப்பில் ஒரு மிகச்சிறந்த படைப்பாக முனைவர் குழந்தைசாமி அவர்கள் உருவாக்கியுள்ளது போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது. தமிழ்ச்சமுதாயத்தின் உள்ளக்குமுறலாகவே இது அமைந்துள்ளது. தமிழ் மொழியானது, கல்விக்கூடங்களில் பயிற்று மொழியாகவும், அரசாங்கத்தின் ஆட்சி மொழியாகவும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகவும், திருக்கோயில்களில் வழிபாட்டு மொழியாகவும், மக்கள் மன்றங்களில், உரையாடலில் பேச்சுமொழியாகவும் தமிழ் பீடுற்றிருக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்ற குழந்தைசாமி அய்யா அவர்களின் எண்ணத்திற்குத் தமிழர்கள் அனைவரும் உணர்வோடு உறுதுணையாய் இருப்போம். நான் தமிழன், என் மொழி தமிழ், என் நாடு தமிழ்நாடு என்ற மூன்று உணர்வுகளை தமிழர் அனைவரும் பெறவேண்டும். மேலும்;

    1. கலப்பில்லாத தமிழைப் பேசுவோம்,

    2. பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களே சூட்டுவோம்,

    3. தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவோம்,

    4. ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகச் சிறப்பாகக் கற்போம்,

    5. திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற வாழ்வியல் நிகழ்வுகளில் தமிழையே பயன்படுத்துவோம்,

    6. ஆலய வழிபாட்டில் தமிழ் மட்டுமே பயன்படுத்தப்பட உறுதிகொள்வோம்.

    தமிழ் வாழும் மொழியாக, வளரும் மொழியாக, காலத்தின் தேவைக்கேற்ப உயரும் மொழியாக அமையவேண்டும். தமிழும் தமிழரும் எத்தகைய நீண்ட, பெருமைக்குரிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்பதை அறிந்துணர்வோம். தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைவோம், ஒன்றுபட்டுத் தமிழ் காப்போம், தமிழ் வளர்ப்போம். மொழி நமது விழி; விழியைக் காப்பதுபோல் மொழியைக் காப்போம். தாயைக் காப்பாற்றுவதும் தாய்மொழியைக் காப்பாற்றுவதும் ஒன்றே.

    முனைவர் குழந்தைசாமி அவர்கள் மேலும் மேலும் தமிழ் உணர்வூட்டும் கவிதைகளைப் படைத்துத் தமிழர்களின் உள்ளத்தில் தமிழ் உணர்வை எழுச்சிபெறச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    செ. துரைசாமி

    புலவர் பொன்முடி சி. சுப்பையன் எம்.ஏ., எம்.எட்.,

    தலைவர், தமிழ்நாடு இலக்கியப்பேரவை,

    கோவை.

    அணிந்துரை

    "முப்பாட்டன் எல்லையிலே, உனக்கு

    முத்துவந்து விற்குதென்று, அந்த

    முத்தை விலைபேசக் கண்ணே, உனக்கு

    முப்பதுபேர் மாமன் மார்"

    என்றைக்கோ கேட்ட இந்தத் தாலாட்டு இன்றைக்கும் மறக்காமல் மனத்தில் இருக்கிறது. பாட்டன்மார், மாமன்மாரின் பழைய பெருமைகளை, பாசம் மிகுந்த வினையாளுமையை, மொழியறியாச் சிறுகுழந்தையின் மனத்தில் பதிவுசெய்கிறாள் அத்தாய்! ஆம்! பழைய வரலாற்றைப் புதிய தலைமுறைக்குக் கொண்டுசெலுத்தும் பணியைச் செய்திருக்கிறாள் அந்த இளந்தமிழச்சி!

    "தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

    சூழ்கலை வாணர்களும் – இவள்

    என்று பிறந்தவள் என்றுணராத

    இயல்பின ளாம்எங்கள் தாய்"

    என்று பாரதியார் பாடுவதும்;

    "அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்

    அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

    தமிழர்கள் கண்டாய், அறிவையும் ஊட்டிச்

    சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு"

    என்று பாரதிதாசன் பாடுவதும் நம் வரலாற்றுப் பெருமையைத்தான்!

    இத்தகு வரலாற்றுப் பெருமிதங்களே எதிர்காலத் தலைமுறைக்கு உந்துசக்தியாகவும், ஊற்றுக்கண்ணாகவும் அமையும்!

    இன்று நாம் காண்பதென்ன? இன்று வாழும் தமிழ்த்தலைமுறை எப்படி இருக்கிறது?

    ஆடம்பரம்,

    Enjoying the preview?
    Page 1 of 1