Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Padaippu Thiranum Yerpu Kotpaadum
Padaippu Thiranum Yerpu Kotpaadum
Padaippu Thiranum Yerpu Kotpaadum
Ebook304 pages1 hour

Padaippu Thiranum Yerpu Kotpaadum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேடல் உத்தியின் துருதுருத்த ஆர்வமுடன் புதுக்கதை, மரபுக்கவிதை, இலக்கிய உரைநடை, ஆன்மீகம், அறிவியல்சார் சுற்றுப்புறவியல், பொதுவுடைமை போன்ற பல பரிமாணக் கட்டுரைகளை அணில் கடித்த பழம் போல் தான் சுவைத்து வாசிப்பாளர்களையும் ருசிக்கக் கொடுக்கும் விதமாகத் தொகுத்தளித்த நூல்தான் இந்த இலக்கியக் கட்டுரைகள்.

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580151307978
Padaippu Thiranum Yerpu Kotpaadum

Read more from Bharathi Chandran

Related to Padaippu Thiranum Yerpu Kotpaadum

Related ebooks

Reviews for Padaippu Thiranum Yerpu Kotpaadum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Padaippu Thiranum Yerpu Kotpaadum - Bharathi Chandran

    https://www.pustaka.co.in

    படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்

    Padaippu Thiranum Yerpu Kotpaadum

    Author:

    பாரதிசந்திரன்

    Bharathi Chandran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bharathi-chandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அகவல் உரை

    தமிழாகரர் தெ. முருகசாமி

    (மேனாள் முதல்வர்,

    இராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி)

    புதுச்சேரி- 9

    தேடல் உத்தியின் துருதுருத்த ஆர்வமுடன் புதுக்கதை, மரபுக்கவிதை, இலக்கிய உரைநடை, ஆன்மீகம், அறிவியல்சார் சுற்றுப் புறவியல், பொதுவுடைமை போன்ற பல பரிமாணக் கட்டுரைகளை அணில் கடித்த பழம் போல் தான் சுவைத்து வாசிப்பாளர்களையும் ருசிக்கக் கொடுக்கும் விதமாகத் தொகுத்தளித்த நூல்தான் இந்த இலக்கியக் கட்டுரைகள்.

    ஆங்காங்கே பூத்த மலர்களில் அமர்ந்து தேனை உறிஞ்சி அதோடு தன்மகரந்த அயல் மகரந்தச் சேர்க்கையாய்ப் பூக்களைக் கர்ப்பமாக்கும் வண்டைப் போல், பாரதிசந்திரப் பேராசிரிய வண்டின் சேதாரம் இல்லாத தமிழ்த்தேன் சேகரத்தேன் கூடுதான் இந்த இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

    நூல் படைப்பாளன் உடல் என்றால், படிப்பாளனும் தொகுப்பாளனும் இரு சிறகானவர்கள்.

    ஈண்டு இந்நூலின் எந்தப் படைப்பையும், படிப்பாளியும் தொகுப்பாளியுமான பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கள் தரவில்லையாயினும் இலக்கியக் கல்வியை இத்தொகுப்பின் மூலம் பரிமாறியதுதான் அவரின் இலக்கியத் தொண்டு எனலாம்.

    எழுத்தறித்தவன் இறைவனாவான் என்பர். ஆம்! இந்நூல் ஆசிரியரின் ஆசிரிய வணக்கமாய் கவிஞர் அபியின் மந்திரக் கவிதைகள் என்ற முதல் கட்டுரை அபி(னி) மயக்காக அமைகிறது.

    கவிதையை ஓர் உளவியல் உளறல் என்பர். இதைத்தான், கதை ஓர் அனுபவத்தூண்டல் என்கிறார் அபி எனப் பேராசிரியர் மின்னல் வெட்டாக விமர்சித்துள்ளார்.

    இலக்கிய வகையைக் கவிதை, நாடகம், நாவல் எனப் பிரித்தாலும் கவிதைக்குள்ள மவுசு மவுசுதான் என்பதை நிறுவக் கவிஞர் அமீர்ஜான் கூறிய பூமலர்ந்தால் தேனீக்களுக்குச் சொல்லிடவா வேண்டும் என்ற ஒருவரியை ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறாக எடுத்துக் கூறுவது ரசிப்பும் ருசிப்புமாக உள்ளது.

    புலம் பெயர்ந்த அயலகத் தமிழை ஆராதிக்கும் விதமாகத் தந்த இணையதள இலக்கியப் படைப்புக் கட்டுரையில் காதல் இன்னதென்று காட்ட முடியாது! என்பதை ஒருபிடி காற்றையும் ஒருகிலோ மின்சாரத்தையும் காட்ட முடியாத உவமையுடன் சுட்டிய பதிவிறக்கம் உச்சமானதாகும்.

    நூல் தந்த பேராசிரியர் மண்வாசனையும் மனிதவாடையும் வீசுமாறு தாம் பிறந்த கண்டனூரைச் சார்ந்த தமிழறிஞர் ரெ. இராமசாமி அவர்கள் பற்றிய கருத்தாடலை அமுதத் தெளிப்பாகத் தித்திக்கச் செய்துள்ளார். வட்டித் தொழிலோடு வண்டமிழ் எழிலையும் வளர்த்த ரெ. இராமசாமி அவர்கள் தமிழார்வலர்க்கான எடுத்துக்காட்டானவர் (Roll Model) என்பது தொகுப்பில் கண்டறிந்த வைரத் துணுக்கான ஒரு கருத்து எனலாம்.

    ஆன்மீகம் தொடர்பான அத்வைதம் பற்றிய கட்டுரையில் இரண்டறக் கலத்தலான அத்துவைத்திற்குக் கூறும் புது விளக்கம் சமயத்தின் சமிக்ஞையாக (சைகையாக) உள்ளதைக் காணமுடிகிறது.

    அனுபவிக்கும் பொருளும் அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாகும் போது சடங்கு முறைகளுக்கு இடம் இல்லாமல் போய் விடுகின்றன. மதப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் சடங்கு முறைகள் இல்லாத நிலை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்தக் கருத்து அத்துவைதம் பற்றியதற்குச் சடங்கு இல்லாத நல்லிணக்கம் என்ற விளக்கம் தந்தது புதுமையாகும்.

    ஆன்மீகத்தின் அடுத்த நகர்வாகக் காட்டப்பட்ட பஞ்சகோசம் காட்டும் தனி மனித ஒழுக்கம் என்ற கட்டுரை தனி மனிதச் சுயக்கட்டுப்பாடான பாதுகாப்பை நெருடும் நெம்புகோல் கட்டுரையாக உள்ளது. கோசம் என்றால் உறைக்கவசம் என்ற கருத்தில் புற உடல்நலம், அக உடல்நலம் பேணும் முறைப்பாடுகளை மிகமிக நளினமாகக் கூறுவது சிறப்பாக உள்ளது.

    அடுத்ததான இசுலாத்தின் வழிபாட்டு முறையில் 11 சொற்கள் கொண்டு உச்சரிக்கும் பாத்திமா மந்திரத்தின் தேவை பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய சடங்கு ஒழுங்கு பற்றியும் விளக்கியது ஒரு பொதுமையாக இருந்தது.

    வான்புகழ் வள்ளுவம் பற்றியதில் தனிமனித ஒழுக்கம் சமூக ஒழுக்கத்திற்கு உயிர் நாடி என்ற மையப்புள்ளியை வரைந்த கோலமாக இருந்தது அந்தக் கட்டுரை அதில் சுட்டிய தனி மனிதன் தன் வேட்கையால் கட்டுப்பாடுகளில் நெகிழ்ந்தால் சமூகம் அழியும் என எழுதிய கருத்து வள்ளுவத்தின் பிரகடனமாக இருந்தது. இதன் தொடர்ச்சியில் கட்டுரையின் இறுதியில் கூறிய தவம் பற்றியதில் உயிர்க்குத் தீங்கு செய்யாமை பற்றியதுதான் என வள்ளுவர் சொன்னதோடு மனிதனை அகவயமாகக் கட்டுப்படுத்துவதும் தவமாகும். (Positive Control) எனக் கூறிய கருத்து சிறப்பானதாகும்.

    மனித வாழ்வில் ஆன்மீகமும் அறிவியலும் இருபக்க நாணயமானாலும் இரண்டின் அடிப்படையும் பயன் முறையான அணுத்திறன் பற்றிய கொள்கையை வெவ்வேறு வகையாக விளக்குவதாக காப்பியங்களில் அறிவியல் கூறுகள் என்ற கட்டுரை விவரிக்கின்றது.

    உலகத்தின் விரிந்து பரந்த இடமெல்லாம் தூய்மையைப் பேணுவதாயின் அதுவே மக்கள் வாழ்விற்கான நல்ல நிலம் என்பதைச் சுற்றுப்புறச்சூழல் பற்றிய கருத்துடன் மலை, நதி, சதுப்புநிலப்பாங்குகள் முறையாக அமைந்தால் வேளாண் உற்பத்தியால் நாடு தன்னிறைவடைவது பற்றி மூன்று கட்டுரைகள் விமர்சித்தன.

    இறுதியான, முன்பு கூறிய அத்வைதக் கொள்கையை நினைவூட்டி மனித உணர்வுதான் உலகை ஆளும் மேலாண்மைத்தனம் என்பதை வற்புறுத்துவதாக உள்ளது. புலன்களின் வழி மனத்தை அலையவிடாமல் உணர்வின் வழிப் புலன்களைப் பழக்கினால் வேறு ஈடற்ற ஒருமையால் உலகம் ஒன்றுபடுவதைச் சமூக மேம்பாட்டில் அத்வைதம் என்ற கட்டுரை, உண்மையின் ரூபியாக (உருவம்) உள்ளது எனலாம்.

    அடுத்த நாதசுவரக் கச்சேரியில் தனித்தல் ஆவர்த்தனமும் தனித்த ராக ஆலாபரணமும் தனி இடம் பெறும், திருவாவடுதுறை இராஜ ரத்தினம் என்றால் தோடி ராகக் சக்கரவர்த்தி எனப்பட்டார்.

    தனித்தல் ஆவர்த்தனம் என்றால் திருவாளப்புத்தூர் கலியமூர்த்தி என்பர். அதுபோல இந்த இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பின் பின் இணைப்பாக உள்ளதுதான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றியதொரு பெரிய கட்டுரையாகும்.

    கட்சி அரசியல் சாராத தனித்தமிழ் அரசியலை வளர்த்த பாவாணர் அடிப்பொடியாக வளர்ந்தவர்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். அரசுத் துறைப் பணியாளராயினும் தனித்தமிழ் முரசு கொட்டிய தமிழ்ப் போராளியாக விளங்கியவர்தான் துரை மாணிக்கம் என்னும் பெருஞ்சித்திரனார் ஆவார்.

    அவரின் பலபரிமாணங்களைச் சிறுசிறு தலைப்புகளாகப் பிரித்தெழுதியுள்ளார் பேராசிரியர் முனைவர் பாரதிசந்திரன். மறைமலையடிகளை முன்மாதிரியாகக் கொண்ட ஏகலையவனாகப் பெருஞ்சித்திரனார் விளங்கினாலும் பாவாணரே தனித்தமிழ் குருவாவார். சங்கப் புலவர்களின் செம்மாப்பு, இதழியல் துறைக் கல்வியில் சிறுவர் இலக்கிய ஊக்குவிப்பு என்ற இரண்டும் பாவலேறுவின் தனித்த அடையாளங்கள் என்பதைக் கட்டுரை பரக்கப் பேசுகிறது. கவிதை நடைக்குப் பாவேந்தர் பாரதிதாசனையே முன் மாதிரியாகக் கொண்டார். எழுச்சிப் பாவலராய்த் தாய்த் தமிழ் நலம் பற்றிய தம் எழுத்தைப் பயன்படுத்தினாரேயன்றி மானுடரைப் புகழ்வதைத் தவிர்த்த உண்மைகளால் பெருஞ்சித்திரனார் இமாலயமாக உயர்ந்துள்ளதைப் பேராசிரியர் பாரதிசந்திரன் பல்வேறு எழுத்துச் சான்றுகளால் நிறுவியுள்ளார்.

    மொழி வளர்ச்சி என்ற அமைப்பில் மொழிக் கலப்பும் வடமொழிக் கருத்துத் தழுவலும் கூடாதென்பதில் மிகமிக எச்சரிக்கையாக இருந்ததைப் பேராசிரியர் சிலாகித்து எழுதியுள்ளார்.

    இந்தி மொழி எதிர்ப்பு ஆரியக்கொள்கை எதிர்ப்புப் பற்றியதை வீறுகொண்டு பாடும்போது,

    "கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை!

    மொழியையும் நாட்டையும் ஆளாமல்

    துஞ்சுவதில்லை!"

    என்ற வரிகள் இராணுவப் படை எழுச்சியான புறப்பாட்டுணர்வைப் புலப்படுத்துகின்றன.

    பெருஞ்சித்திரனாரின் கவிதைகள் மரபுப்பாக்களே ஆயினும் உரைநடைப்பா என்ற ஒன்றைப் புதுக்கினார் எனப் பேராசிரியர் பாவலர் ஏறுவின் கதை அலசலாகத் தகவலைத் தருகிறார்.

    பாவியமாகப் பல பாடல்களைப் பாடியது போலக் குறுங்காவியமாக ஐயை என்றதை எழுதினார். தென்மொழி என்றாலே பெருஞ்சித்திரனார் எனத் தமிழ் கூறு நல் உலகம் நினைக்கத்தக்க வகையில் தனித் தமிழ் இதழியலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதைப் போல வெரும் வேறோர் இதழால் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்பதைக் கட்டுரையில் பல பக்கங்களாகப் பேராசிரியர் விவரித்துள்ளது சிறப்பாக உள்ளதால் அப்பாவலர் மீது கொண்ட பேராசிரியர் பாரதிசந்திரனின் பரிவு விளங்குகிறது.

    நானே எல்லாவற்றையும் எழுதினால் வாசகர்களின் வசவுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இலக்கியக் கட்டுரைகளானாலும் பாவலர் ஏறு பற்றியதானாலும் அச்சுக் கற்கண்டின் மெச்சு புகழ் சுவையுடையதென்பதை நான் சுவைத்தவாறு வாசகர்களையும் சுவைக்க அகவி (கூவி) அழைப்பதாக அமைவதே இந்த அகவல் உரையாம் என்க!

    பிறைக்குள் பௌர்ணமி ஒளிந்து ஒளிர்வது போல வளரும் தலைமுறை எழுத்தில் தன்னை ஊதுபத்தி மணமாக மணக்கச் செய்யும் பேராசிரியர் முனைவர் பாரதிசந்திரன் அவர்களின் முயற்சி பாரட்டுக்குரியது. இந்நூல் தன்மகரந்தச் சேர்க்கையாயினும் அயல் மகரந்தச் சேர்க்கையாய்ப் படைப்பிலக்கியம் படைக்க வாழ்த்துகிறேன்.

    இந்நூலைப் படிக்க வைத்ததன் மூலம் நான் ஒரு வாசிப்பாளன் ஆனதற்குப் பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கட்கு நன்றி!

    புதுச்சேரி- 9

    தமிழாகரர் தெ. முருகசாமி

    நிலவைப் பரிசளிக்கத் தூண்டும் சொற்கள்...

    முனைவர் எ. பாவலன்

    பேராசிரியர், தமிழ்த்துறை,

    வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி,

    ஆவடி

    காலம் காலமாக மொழியையும் இலக்கியத்தையும் ஆராய்ச்சி செய்த நிலம் இது. பைந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைசெய்த இலக்கியக் கர்த்தாக்கள் இந்த வகையில் தங்களின் ஆராய்ச்சியை முன்னெடுத்தனர். பிறந்து சிறந்த மொழிகளில், சிறந்தே பிறந்த மொழி தமிழ் மொழி, அதுமட்டுமல்ல, செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே, கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி, இப்படி எண்ணற்ற பெருமைகள் தமிழுக்கு உண்டு. பாரதி சொல்வதைப் போல, பேசுபவர்களின் பேச்சைக் கேட்டால் மணிக்கணக்காக, நாள் கணக்காக கேட்டுக்கொண்டே இருக்கலாம். இதை வள்ளுவர்கூவிட செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்கின்றார்.

    தமிழ் என்றால் இனிமை என்பது பொருள். பேராசிரியர் முனைவர் பாரதிசந்திரன் அவர்களின் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை நூல் அதற்குச் சான்றாகத் திகழ்கிறது. இந்த நூலில் பல்வேறுபட்ட தளங்களில் எழுதப் பெற்ற ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகளில் பெரும்பாலான நூல்களும், படைப்பாளிகளும் எனக்குப் பரிச்சயமானவை. அந்நூலில் உள்ள சில ஆய்வுக்கட்டுரைகள் நான் பெரிதும் படிக்க விரும்பிய தலைப்புகள். அவற்றையும் எனக்கு ஒரு ரசவாதமாகவும், சக்கையைப் பிழிந்து சாறைப் பருகுவது போலவும், தேன்துளியின் ஒரு சொட்டை உள்நாக்கில் தடவியதைப் போன்றும் உணர்கிறேன்.

    இதுவரையில், பல நூல்களைத் தந்து இருக்கிறார். நல்ல கவிஞர்களைத் தட்டியெழுப்பித் தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார். நேரத்தின் சிக்கனத்தை இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், திறனாய்வு, திரை மொழி இப்படி எல்லாம் அவருக்குக் கைவந்த கலையாக இருக்கிறது.

    எல்லாத்தளங்களிலும் இயங்கி வந்ததின் வெளிப்பாடுதான் படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் என்னும் தலைப்பில் அமைந்த இந்த நூல்.

    முதலில் நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் அபியின் மந்திரக் கவிதைகள்ʼ என்கின்ற தலைப்பில் சுமார் நான்கு பக்கங்களில் அமைந்த கட்டுரையில், அவரின் கதை அழகியலை ஒரு பூவின் ஸ்பரிசம் போன்று விரிந்து சொல்கிறார். அதன் நறுமணம் வாசிப்பவர்களால்தான் உணர முடியும்.

    கதை என்றாலே அழகு. அதிலும் குறிப்பாக இராப் பிச்சைக்காரன் என்கின்ற தலைப்பில் அமைந்த கவிதையை ஒரு திறனாய்வு நோக்குடன் அணுகிப் பார்க்கிறார். இல்லாமையிலிருந்து தோற்றங்களைப் பெற்று உலவ விடுவது கவிதைப் பாதையின் புதிய சுவடுகள் (ப. 4) என்கின்ற இந்த விமர்சனம் கவிதையின் அழகியல் அத்துணை அழகாக நம் கண்முன் விரிந்து நிற்கிறது.

    "வாசற்படியில்

    வாயில் விரலுடன்

    நின்றது குழந்தை

    வீடும் வாய்திறந்து

    குழந்தையை விரலாய்ச்

    சப்பி நின்றது"

    இந்தக் கவிதை ஒன்று போதும். படிப்பவர்களின் அகக் கண்முன் உயர்ந்து நிற்கிறது இந்தக் காட்சி. சில இடங்களில் கவிதையைவிட அதனுடைய விமர்சனத்தால் உயிர் பெறுகிறது.

    "எப்படி மகிழ்ந்து விட முடிகிறது

    மவுனமாகவே அவஸ்தை படும்

    என்னைப் பார்த்து

    மவுனம்

    மவுனமாய் இருக்காது

    எப்பொழுதும்"

    மௌனத்தின் நகர்வுகள் அந்தர நடை என்ற ஒன்று நூல்களில் உள்ள அபியின் கவிதைகள் அபாரமானவையாகும். கவிஞர் அபி பெரும்பாலும் உணர்வின் பிழம்பைக் குழைத்துக் கவிதையாக்கித் தரும் திறன் வாய்ந்தவர்.

    கவிஞர் அமிர்ஜானின் வசப்படாத வார்த்தைகளில் வசப்பட்ட கவிதைகள் பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்வைச் சார்ந்தவை. அவர் எழுதிய மௌனம் பற்றிய கவிதையைப் படித்துவிட்டு யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருப்பதில் பெரும் சுகமும் இருக்கிறது, சுமையும் இருக்கிறது. மௌனத்தின் பக்கங்களை மௌனத்தால் மட்டும்தான் அறிய முடியும் என்பதற்கிணங்க,

    மௌனம், காதல், பாசம், பரிதவிப்பு, ஏமாற்றம் எல்லாமும் அவர் கவிதையில் அத்துணை அழகாக மிக எளிமையாகச் சொற்களைக் கொண்டு படைக்கப்பட்டதைப் புரிந்துகொள்வதற்குத் தனி ஒரு சிந்தனை வேண்டும். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் உணர்வை மிகச் சாதுரியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இந்தக் கவிதையை படித்துவிட்டு அடுத்த அடியை படிக்க முடியாத அளவிற்கு மனம் கனக்கிறது. அந்தக் கவிதையின் சுவையின் நுட்பத்தை அறிந்து நூலாசிரியரும் அந்த ஒரு கவிதையை முழுவதுமாக தம் ஆய்வுக் கட்டுரையில் எழுதிய முறையும் அந்த கவிதைகுண்டான அழகான சொற்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கோர்த்தாக உணரமுடிகிறது. தமிழ்ப் புதுக்கவிதை எல்லா வகையான பரீட்சார்த்த முறையில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்று. சமகாலத்தில் நவீனம், பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம், சர்ரியலிஸம், பெண்ணியம், தலித்தியம், அழகியல்வாதம், மிகை உணர்வுவாதம், மார்க்சியம், மேஜிக்கல்ரியலிஸம் இப்படி எத்தனையோ வகையான புதிய புதிய இலக்கிய வடிவங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் தமிழ் மொழியில் பயன்படுத்தி மொழியும் இலக்கியமும் வெற்றி அடைந்துள்ளன.

    சர்ரியலிசம் பற்றிய தேடலும் புரிதலும் பெரும்பாலும் கவிஞர்களிடம் இன்று காணமுடிகிறது. எம்.ஜி. சுரேஷ், நரேன் என்கிற இந்த வரிசையில் கவிஞர் வீரமணியும் தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டுள்ளார். சர்ரியலிசம் என்பதற்குச் சரியான பொருள் அடிமன வெளிப்பாட்டியம் என்று பொருள்.

    "நான்

    வீடற்றவன் ஜன்னல் வழி

    கண்ணற்றவன் கவிதைகளைத் திருடி

    முகம் மற்றவனிடம் தந்தேன்

    அவன் வாசிக்காமலேயே சிலாகிக்கின்றான்

    பின் பூ விற்ற

    மாலையில்

    காற்றை கட்டி அணிவிக்கின்றான்

    சுமக்க முடியாமல்

    தள்ளாடுகையில்

    கையற்றவன்

    தாங்கிக் கொள்கிறான்...

    உடல் அற்ற ஒருவன்

    திடீரென்று நெஞ்சைப் பிளந்து வார்த்தைகளை

    திணித்து விடுகின்றான்."

    கவிஞர் வீரமணி இந்தக் கவிதையில் மிகச்சிறந்த உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கவிதையைப் பற்றி நூலாசிரியர் தரும் விளக்கம் கவிதை பிறப்பும் மலர்வும் தனக்கானதா? இல்லை பிறருக்கானதா? என்பதைப் போல் பெரிய தத்துவம் இது என்று குறிப்பிடுகிறார்.

    ஐரோப்பிய தேசத்தில் கலை கலைக்காகவா? கலைகள் மக்களுக்காகவா? என்ற வாதம் தொடர்ந்தபோது, கலை எப்போதும் மக்களுக்கானது என்ற வாதம் வெற்றியடைந்தது. இந்தக் கவிதையுடன் சேர்த்து சிந்திக்க வேண்டிய அவசியம், ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வுகளை இன்னும் முன்னெடுக்க வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டிருக்கிறது. நூலாசிரியர் இதன் தேவையை உணர்ந்து இவ்வாய்வு கட்டுரையை படைத்ததாக உணர்கிறேன். மேலும் அடுத்து வரும் தலைமுறைகளுக்கு ஆய்வின் அவசியத்தையும் அதன் போக்கையும் மிக எளிமையாகக் கடத்துவதாகவும்

    Enjoying the preview?
    Page 1 of 1