Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1
Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1
Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1
Ebook110 pages19 minutes

Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஒரு மாணவன் எப்போது "ஏன்? எதற்கு? எப்படி?" என்ற கேள்விகளை கேட்க ஆரம்பிக்கின்றானோ, அப்போது தான் அவன் சிந்திக்க தொடங்குகிறான். அப்படி அவன் சிந்திக்க தொடங்கும் போது, கணித அறிவினை பெருக்கிக்கொள்ள, பயன்படுத்த, அவன் கையில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல் "ஏன்? எதற்கு? எப்படி? இப்படிக்கு கணிதம்" பாகம் 1 என்ற நூலாகும். மேலும் படிக்க, பரிசளிக்க மற்றும் பகிர 100 சதவீதம் பயனுள்ள நூலுமாகும்.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580141410880
Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1

Read more from Dr. R. Prabakaran

Related to Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1

Related ebooks

Reviews for Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    The book contains very useful informations and it is easy to read!!!

    1 person found this helpful

Book preview

Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1 - Dr. R. Prabakaran

C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

https://www.pustaka.co.in

ஏன்? எதற்கு? எப்படி? இப்படிக்கு கணிதம் - பாகம் 1

Yen? Etharku? Eppadi? Ippadikku Kanitham - Part 1

Author:

முனைவர். ரா. பிரபாகரன்

Dr. R. Prabakaran

For more books

https://www.pustaka.co.in/home/author/dr-r-prabakaran

பொருளடக்கம்

முகவுரை

1. மாறிலி சார்பும் மாணவன் பண்பும்

2. ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு தெரிஞ்சுக்கோ!

3. ஓட்டப்பந்தையமும் π மதிப்பும்

4. உலக இயக்கத்தினை காணும் சாவி எந்த எண்கள்?

5. காய்கறிக் குவியலும் நுண்கணிதமும்

6. மூவிலக்க எண்ணை ஆளும் ஈரிலக்க எண்

7. e பிறந்த கதை

8. வட்டியில் வளரும் e

9. அமெரிக்காவை காப்பாற்றிய e

10. மாடுகளும் முக்கோணமும்

11. கணக்குப்படி காப்பி அருத்துவோமா!

12. நேர்கோடும் ஒளவையாரும்

13. கணிதக் கண்ணாடி

14. கணித ஒலிகள்

15. சகலமும் சமவாய்ப்பு மாறி

16. ஏற்றம் தரும் சாய்வு

17. பெருக்குத் தொடரில் ஓடும் பந்துகள்

18. π பிறந்த கதை

முகவுரை

அனைவருக்கும் வணக்கம்

கணக்கீடு என்பது மக்களின் வாழ்கை முறையோடு ஒன்றிய ஒரு அனிச்சை செயல் ஆகும்.இதனை குறியீடுகள் கொண்டு கல்வியாளர்கள் பார்க்கும் போது அது கணிதவியல் என்று ஒரு படப்பிரிவாக மாறுகிறது.

இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்தால் கணிதம் இனிக்கும்.இல்லையேல் கணிதம் கசக்கும்.

இந்த புத்தகமானது நான் தினமலர் பட்டம் நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

கணிதத்தில் மாறி மற்றும் மாறிலி என்று ஒரு கருத்தியல் உண்டு.

அவை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அதன் பங்கு என்ன?

அவைகளை என்னவாறு நாம் உணர்வது என்ற கேள்விகளுக்கு இப்புத்தகம் பதில் கூறும்.

கணிதத்தில் நிறைய சிறப்பான மாறிலிகள் பல உள்ளன.

அதில் e மற்றும் π போன்ற மாறிலிகள் பிரபலமானவை. இவைகளின் வரலாறு என்ன? இவைகளை யார் கண்டறிந்தார்? என்ற கேள்விகளுக்கு இப்புத்தகம் சிறப்பான விளக்கங்களை வழங்குகிறது

அமெரிக்காவினை இந்த மாறிலி எவ்வாறு காப்பாற்றியது மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற தொழிலுக்கும் மாறிலிக்கும் எவ்வகையில் தொடர்பு என்ற செய்தியினை இப்புத்தகம் மிகவும் நேர்த்தியாக துப்பு துலக்குகிறது

தமிழ் மூதாட்டி ஔவையார் தனது கவிதைகளில் நேர்கோட்டின் தன்மைகளை எவ்வாறு விளக்குகிறார் என்பதினை நேர்த்தியாக விளக்குகிறது

நாம் தினமும் குடிக்கும் காபியிலும்,நாம் தினமும் பார்க்கும் கண்ணாடியிலும், நாம் கேட்கும் ஒலிகளின் பின்பும், நாம் செல்லும் வார சந்தையிலும், நாம் விளையாடும் விளையாட்டிலும் மறைந்திருக்கும் கணித தத்துவங்களை இப்புத்தகத்தில் சுவைபட காணலாம்

ஒரு ஓட்டப்பந்தயத்தில் π ன் மதிப்பை எப்படி கண்டறிவது என்று இந்திய கணித மேதைகள் கூறிய தகவல்கள் இப்புத்தகத்திற்கு இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பினை தருகின்றன

பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவன் கையிலும்,கணிதத்தினால் என்ன பயன்? என்று கேட்கும் நபர்களின் கண்ணிலும், அறிவுக்கண்ணை திறக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களின் வீடுகளிலும் தவழவேண்டிய புத்தகம் ஏன்? எதற்கு? எப்படி? இப்படிக்கு கணிதம், (பாகம் 1) என்பதில் எவ்வித ஐயமும் இல்லை

கணிதவாணி. முனைவர்.இரா.பிரபாகரன்

நூலாசிரியர்

1. மாறிலி சார்பும் மாணவன் பண்பும்

காலங்கள் என்பது நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும்.

நிகழ்ந்த நிகழ்வுகளை ஒத்துக்கொள்பவனும்,

நிகழ இருக்கின்ற நிகழ்வுகளை

Enjoying the preview?
Page 1 of 1