Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatchikku Appal
Kaatchikku Appal
Kaatchikku Appal
Ebook181 pages56 minutes

Kaatchikku Appal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தாளர் அகிலா ஜ்வாலா அவர்களின் இரண்டாவது புத்தகம். "பெயர் தெரியா பூவின் வாசம் " கவிதைத் தொகுப்புக்கு அடுத்து வெளிவரும் கட்டுரைத் தொகுப்பு இந்நூல்.

மனிதர்களின் புற மற்றும் அக உணர்வுகளை கண்களால் அறிவது மட்டுமின்றி காட்சிக்கு அப்பாலும் அறிய முற்படும் இந்நூல், வாழ்வியல் சார்ந்த எழுத்தாளரின் பார்வைகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பு, இந்நூல் அமுதசுரபி ஆசிரியர் திரு, திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580171111038
Kaatchikku Appal

Related to Kaatchikku Appal

Related ebooks

Reviews for Kaatchikku Appal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatchikku Appal - Akila Jwala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காட்சிக்கு அப்பால்

    Kaatchikku Appal

    Author:

    அகிலா ஜ்வாலா

    Akila Jwala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/akila-jwala

    பொருளடக்கம்

    என்னுரை

    1. வாழ்வின் ருசி

    2. இரசனை

    3. அம்மா அப்பா - ஒரு டைரிக்குறிப்பு

    4 இழப்பின் கணங்கள்

    5. கடவுளும் மதங்களும்

    6. வார்த்தைகளும் மெளனமும்

    7. நட்பெனப்படுவது யாதெனில்

    8. சுயநலத்திலும் உண்டு பொதுநலம்

    9. கருத்து சுதந்திரம்

    10. தற்கொலை செய்யும் கொலைகள்

    11. மகாத்மா

    12. சகிப்புத்தன்மை எனும் கசப்பு மாத்திரை

    13. ஊழல் மிருகம்

    14. கல்வி

    15. நடுநிலை நாளேடுகளும் ஊடக தர்மமும்

    16. எண்ணங்களின் மாயாஜாலம்

    17. அவங்க அப்படித்தான்

    18. நாடக மேடை

    19. புரட்டிப்போட்டப் புத்தகங்கள்

    20. குறள் எனும் வேதம்

    21. சாமான்யர்கள்

    22. நிம்மதி

    23. தீரா மர்மங்கள்

    24. வேற்று கிரகவாசிகள்

    25. வழிகாட்டிகள்

    26. அறிவியல் உண்மைகள்

    தமிழ் தந்த தந்தைக்கும்,

    உயிர் தந்த அன்னைக்கும்,

    எல்லாமுமான என்னவருக்கும், அன்பு கதிரவனுக்கும்

    என்னுரை

    இது என்னுடைய இரண்டாவது புத்தகம். என் முதல் நூல் பெயர் தெரியா பூவின் வாசம் என்ற கவிதைத் தொகுப்பு. மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் அவர்களால் இப்பெயர் சூட்டப்பட்டு அணிந்துரையும் பெற்ற அந்நூல் மணிமேகலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, சிறந்த நூலுக்கான அமெரிக்க மெரிலாண்ட் தமிழ் பல்கலைக்கழக விருதையும் பெற்றது.

    நான் பெரிதாக நினைக்கும் இன்னொரு பாராட்டு எழுத்தாளர்/ திரைக்கதை வசனகர்த்தா எனும் பல்திறன் கொண்ட பட்டுக்கோட்டை பிரபாகர் ராணி வார இதழில் கேள்வி பதில் பகுதியில் சமீபத்தில் இரசித்த கவிதை எது? எனும் கேள்விக்கு என் கவிதை ஓன்றைக் குறிப்பிட்டிருந்தது.

    என் முதல் நூலுக்கு கிடைத்த அனைத்து உளமார்ந்த பாராட்டுக்களுக்கும், மதிப்பீடுகளும் என் இரண்டாம் நூலுக்கான உத்வேகத்திற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தாலும் அதுமட்டுமே காரணமன்று.

    என் எண்ணங்களை சொல்ல, அலை அலையாய் எழும் ஆயிரம் நினைவுகளை பகிர அதே சமயம் சமூகத்தின் மீதான கோபத்தை, நேசத்தை, அக்கறையை பதிவு செய்ய எழுத்தைத் தவிர சிறந்த களம் வேறில்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.

    பற்று கொள்ளாமல், சார்பற்று, வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது பதிவு செய்வது அத்தனை எளிதான ஒன்றல்ல. எனக்கு பிடித்த தலைவர்கள், எனக்கு பிடித்தமானவர்கள் என எந்த வண்ணங்களும் இந்த கட்டுரைகளின் வெளிப்படாமல் பார்த்துக்கொண்ட சவாலில் முழுமையாகவே வெற்றி பெற்றிருக்கிறேன்.

    இக்கட்டுரைத் தொகுப்பு என் அகத்தை முழுமையாக வெளிப்படுத்தி உள்ளது.அதே நேரத்தில் புற விஷயங்கள் சார்ந்து சொன்னவை எதுவும் முழமையான என் கருத்துக்களைச் சார்ந்தவை அல்ல. அவை அனைத்தும் உண்மைத்தகவல்கள் பத்திரிக்கைச் செய்திகளை திரட்டி அதன் அடிப்படையில் என் கருத்துப்பதிவினையும் முன் வைத்திருக்கிறேன்.

    மனிதர்களை எல்லைகள் தாண்டி நேசிக்கிறேன், என் முதல் கவிதைத் தொகுப்பினைப் படித்த அனைவருக்கும் புரியும், இக்கட்டுரை சக மனிதர்களின் மன ரீதியான அழுத்தங்களை, அவர்களின் சார்புகளை என்னைப்போலவே சுய பரிசோதனை செய்து கொள்ள கொடுக்கப்பட்ட ஒரு தொகுப்பே

    கண்களால் காணமுடியாத ஆயிரம் விஷயங்கள் உண்டு இந்த பிரபஞ்சத்தில். அதில் மனம் சார்ந்தவையும், வரலாறு சார்ந்தவையும், அறிவியல் சார்ந்தவையும் விடை காண இயலா புதிர்களும் உண்டு, கண்ட தே காட்சி அல்ல …காட்சிக்கு அப்பால் விரிந்திருக்கும் அத்தனை பிரபஞ்ச இரகசியங்களின் ஓரு துளி

    அகம்

    புறம்

    என இரு வெளிகளிலும் ஒரு துளி சேர்த்து காட்சிக்கு அப்பால் எனும் நூலாய் வடித்திருக்கிறேன். இந்நூல் அச்சில் ஏற்றும் பொறுப்பினை ஏற்று பிழையின்றி எழுத்துக்கள் வெளிவர உறுதுணையாய் இருந்த சகோதரர் பாவலர் திரு பாரதி சுகுமாரன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    படித்து உங்களின் மேலான கருத்துக்களை சொல்லுங்கள். வாழ்க்கை எனும் ஒரு அழகிய, அரிய சந்தர்ப்பத்தை இனிதாக்குவோம்

    அன்புடன்

    அகிலா ஜ்வாலா

    1. வாழ்வின் ருசி

    இயல்கவிதை!

    மோனக் கடலின் முழு அமைதி

    மேல் வானம் கவிந்த கலவியில் பீறிட்ட

    முதல் வீறலினின்று சொரிந்து

    கொண்டே இருக்கும் கோடான

    கோடி உயிர்ச் சுக்கல்கள் நாம்.- லா.ச.ரா

    வார்த்தையில் நிரப்ப முடியா கடலென வான் விரிந்திருக்க வானாய் விரிந்திருக்கிறது வாழ்க்கை.

    எல்லையற்ற பிரபஞ்சத்தில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கை இது.,

    அனுபவமும் வலிகளும் சொல்லித்தந்த பாடங்களிலும், தந்த விளக்கங்களிலும் நூல் பிடித்து வாழ்ந்து வரும் இருகால் சமூக விலங்குகள் நாம்.

    ஒரு அழகான மேற்கோள் உண்டு

    வாழ்க்கை ஒரு கேள்வித்தாள் ஆனால் அதற்கு நீ பதில் தயார் செய்வதற்குள் அது கேள்வியை மாற்றிவிடும்

    வாழ்க்கை ஒரு அற்புத அனுபவம்.

    ஏழ்மை கூத்தாடும் குடிசைகளும், செல்வத்தில் மிதக்கும் வசதிகளும் இங்கு உண்டு.

    ஏழ்மையாக பிறந்த ஒருவனுக்கு சகல வசதிகளோடு பிறந்த ஒருவனை பார்க்கையில் வாழ்க்கை நேர்மையற்றது எனத்தோன்றுவது இயல்பே.

    மலைகளும் பள்ளத்தாக்குகளும் வானும் மண்ணும் என இயற்கையே மேடு பள்ளங்களால் ஆனது...

    அதோ அந்த பறவை போல வாழவேண்டும். என சிலநேரங்களில் ஏக்கங்கள் தோன்றலாம்.

    குளிர் தாங்க இயலாது கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளுக்கு மட்டும் வலி இல்லையா. புயல் கண்கூசவைக்கும் வெளிச்சம் எனும் வேகத்தடைகள் இல்லையா என்ன?

    மன முதிர்வற்று நாம் செய்யும் செயல்கள் அதன் விளைவுகளால் படும் இன்னல்கள் தாண்டி ஏதோ ஒரு பருவத்தில் ஏதோ ஒரு வலியில் ஏதோ ஒரு துயருக்கு பின் கிடைக்கும் சிறு தெளிவு வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பை கொடுக்குமாயின் வாழ்க்கை வசந்தமே.

    ஒருவரின் வாழ்வில் வானளக்கும் வசதி கொஞ்சும்போது இன்னொருவரின் வாழ்க்கை போர்வையின் கிழிசல் வழியே நட்சத்திரங்களை எண்ணுவதாக அமைகிறது

    இனிமையான கணங்களும் வாய் விட்டு கதறும் கருணையற்ற நொடிகளும் அனைவருக்கும் வாய்க்கிறன.

    ஏழை பணக்காரன் என பேதமற்று அனைவருக்கும் வருகிறது வசந்தமும் மழையும்

    வாழ்க்கை ஒரு எளிய கணக்குதான் அதனை அத்தனை எளிதாய் தெளிந்து போடமுடியாது. எல்லார்க்கும் வராது.ஒரு நாள் சிறு வயதில் மலைப்பாய் தோன்றிய வாய்ப்பாடு பின்பு தண்ணீர்பட்ட பாடாய் வருகிறது.

    ஆனால் வளர்ந்த பின் பெறப்படும் வாழ்க்கைக் கணக்குகளின் விடைகள் வாய்ப்பாடுகளுக்குள் அடங்குவதில்லை.

    பெரும்பாலான மனிதர்கள் அதிகம் புன்னகைப்பது கூட அரிதாகிவிட்டது. கொஞ்சம் புன்னகைத்தால் தேவையற்ற உரிமை எடுத்துக்கொள்வார்களோ என பயப்படுகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் யோசித்து யோசித்து பயந்து மனிதர்கள் இறுக்கமான முகத்துடன் உலவ ஆரம்பித்துவிட்டனர்.

    அவர்கள் முன்னெச்சரிக்கை உணர்வினை மெய்ப்பிக்கும்படியாய் பல நிகழ்வுகளும் நடைபெறுகின்றன என்பதையும் மறுக்க முடியாது,.நட்பை உறவை காரணமாய் வைத்து எம் எல் எம் பேக்கேஜ் பற்றி விவரிக்க ஒரு அழகான ஞாயிறு மாலையை வீணாக்கக்கூடாதே எனும் கவனமும் இருக்கும் பலருக்கு.

    எல்லா விஷயங்களையும் நம் எதிர்பார்ப்பின் வாசலின் வழியே பார்ப்பதால்தான் பிறவாசல்களும் சன்னல்களும் கண்களுக்கு தெரிவதில்லை.

    பிரச்சனைகளுக்கு ஆயிரம் தீர்வுகள் இருந்தாலும் திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளின் விளைவாய் எஞ்சும் ஏமாற்றங்கள் வாய்ப்பின் பல கதவுகளை அடைத்து விட்டு மனிதனை அவனுடைய பலவீனமான எதிர்பார்ப்புகளோடு மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது

    போராட்டங்கள், சண்டைகள், பெரு முயற்சிக்குப்பின் கிடைக்கும் வெற்றிகள், தோல்விகள்... அந்த கணத்தின் பின் அடைந்தது என்ன இழந்தது என்ன எனும் கணக்குகள் எல்லையற்ற சலிப்பையும் குற்ற உணர்வுகளையும் விதைத்து செல்கின்றன.

    பிரச்சனை என எண்ணும் ஒன்றும்

    ஏன் அதன் தீர்வும் கூட நம்மிடம்தான் இருக்கிறது

    என அன்றே கணியன் பூங்குன்றனார் எளிதாய்

    ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’

    என புரிய வைக்கவில்லையா என்ன?

    ஒரு அழகான தத்துவம். தத்துவம் என சொல்லப்பட்ட வரிகள் கவிதையாய் கல்வெட்டாய் மனதில்

    இது வாழ்க்கை இதில் எல்லாம் இருக்கும் நல்லதும் கெட்டதும் இனிப்பும் கசப்பும் மரணமும் ஜனனமும் அன்பும் அவமானமும் சிரிப்பும் கண்ணீரும்

    இளம் வயது மரணங்களும், யாரும் வேண்டாத வாழ்க்கையும் கூட இங்கு சகஜம்...

    ஒரு முறை அம்மாவைக்கேட்டேன் வாழறது கொஞ்ச நாள் அதில் ஏன் இந்த பிரச்சனைகள், சின்ன சின்ன சண்டைகள் கோபம் அழுகை எல்லாம் என்று அம்மா வானின் நட்சத்திரங்களை நிமிர்ந்து பார்த்தவாறு என்னை கேட்டாள் "சாப்பிடறது கொஞ்சம்தானே அதற்கு ஏன் இரசம்

    Enjoying the preview?
    Page 1 of 1