Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Therke Anbumaha Samuthiram
Therke Anbumaha Samuthiram
Therke Anbumaha Samuthiram
Ebook195 pages1 hour

Therke Anbumaha Samuthiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் எஸ்.குமார்.

31/12/76 தினமணிகதிரில் துவங்கி 245 சிறுகதைகள், 10 குறு நாவல்கள், 37 நாவல்கள் பல்வேறு இதழ்களில் வெளி வந்துள்ளன.பன்னிரண்டு அச்சுப் புத்தகங்கள் அரசு மற்றும் வாடகை நூல் நிலையங்களில் உள்ளன. இப்பொழுது மின் நூல் வாயிலாக உங்களைச் சந்திக்கிறேன்.

இலக்கிய வீதி, இலக்கியச் சிந்தனை, தங்கச்சாவி, ஐந்து நிமிடக் கதைப் போட்டி பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். கல்கி, விகடன், ஜனரஞ்சனி போட்டிகளில் போட்டிக் கதைகள் வெளிவந்துள்ளன.

துவக்க நாட்களில் ஓவியம், கவிதையிலும் நாட்டம் இருந்தது. தீபம், கணையாழி, அன்னம் விடு தூது, அலிபாபா, குங்குமம், அமுதசுரபியில் கவிதைகள் அச்சேறியிருக்கின்றன.

திருக்கோயிலூர் தபோவனம் சத்குரு ஞானானந்த ஸ்வாமிகளைப் பற்றிய ஆவணப் பட உருவாக்கத்தில் நண்பர்களோடு இணைந்துப் பணியாற்றியிருக்கிறேன்.

திறனாய்வுக்காக தேவன் அறக்கட்டளை பரிசு பெற்றிருக்கிறேன். படைப்பாற்றலுக்காக இலக்கியவீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறேன்.

தொடர்ந்து சந்திப்போம்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131005061
Therke Anbumaha Samuthiram

Read more from S. Kumar

Related authors

Related to Therke Anbumaha Samuthiram

Related ebooks

Reviews for Therke Anbumaha Samuthiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Therke Anbumaha Samuthiram - S. Kumar

    http://www.pustaka.co.in

    தெற்கே அன்புமகா சமுத்திரம்

    Therke Anbumaha Samuthiram

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தெற்கே அன்புமகா சமுத்திரம்

    தேவைகள்

    கனவுகள் கலையும்...

    ஆண்மனம்

    ராத்திரிப் பார்வைகள்

    தெற்கே அன்புமகா சமுத்திரம்

    1

    ஜனனியை அம்மா வெறித்துக் கொண்டிருந்தாள்.

    கொதி நீரைக் கொட்டி விட்டாலும் மிச்சமாய் ஆவி அடக்கிற பாத்திரம் மாதிரி. அம்மாவுக்குள் இன்னும் கோபம் இருந்தது. பேசவும் சக்தி இருந்தது.

    இதோ பாருடி, மத்த எல்லாரையும் விட உன்னை ரொம்ப ஆசையா வளர்த்தேன். சின்னக் குழந்தையிலிருந்து உம்மேல தான் நிறைய பாசம் வச்சேன். அதையெல்லாம் தொடச்சி போட்டுட்டு பேசாதே! பெத்த வயிறு பத்தி எரியுது. இந்த உலகத்திலேயே நீ ஒருத்திதான் கல்யாணம் பண்ணிக்காம ஆபிஸுக்கு போயி குடும்பத்தைக் காப்பாத்தற மாதிரியில்லே அலுத்துக்கிறே! நாங்க என்ன உன்னைக் கல்யாணம் பண்ணிக்காதே, எங்களை விட்டுட்டுப் போயிடாதேன்னு சொன்னோமா...? நீயாதான் கல்யாணம் ஒண்ணுதானா வாழ்க்கை? நான் வேற வதவதன்னு பெத்து அவஸ்த படணுமா? இதுகளுக்கெல்லாம் நான் அக்கா மட்டுமில்லே. அம்மாவும் கூடன்னு பொறுப்பைச் சுமந்தே...! இன்னிக்கு ஏதோ எல்லாத்தையும் தன் சொந்தக் கால்ல நிக்க வச்சிருக்கே! இதையெல்லாம் மறந்துட்டு இந்த வயசில இப்படி ஆம்படையானுக்கு அலஞ்சா..."

    அம்மா

    அவள் கோபமறிந்து அம்மா பேச்சை நிறுத்தினாள்.

    வயிற்றில் சுமந்தாள் என்பதாலும், அன்பாய் வளர்த்தாள் என்பதாலும் மட்டுமே தாய் உன்னதமானவளில்லை.

    அம்மா ஒரு புழு.

    PARASITE.

    இவளின் ஜீவ செல்களை உறிஞ்சி ஓடாக்கியவன்.

    புருஷனுக்கு அலைவதாய் யார் வேண்டுமானாலும் குற்றம் சொல்லலாம்.

    எளிது

    வெறும் நாக்கின் காரியம்.

    அம்மா இப்பொழுது சொல்கிறாள்.

    பதினெட்டு வயசில் கல்யாணமாகி, ஐந்து குழந்தைகளைப் பெற்று, முப்பதில் விதவையாகி, ஆறேழு வருஷம் அவதிப்பட்டு, பெற்ற பெண்ணின் தலையில் பாரங்களைப் போட்டுவிட்டு, ஓய்வெடுத்துக் கொண்டவளுக்குப் பேசுவது சுலபமானது.

    புருஷ சுகம் பெரிசில்லை. தியாகம் செய்ய வேண்டும். தியானம் செய்ய வேண்டும். மெழுகுவர்த்தியாய் இருக்க வேண்டும். குடும்ப விளக்கை ஏற்ற வேண்டும் - என்றும்... இன்னமும் சினிமா வசனமாக பேசலாம்.

    ஆனால் இவளுக்கு...

    ஜனனி அறைக்குள் நுழைந்து நாற்காலியில் விழுந்தாள்.

    மேஜை விளக்கின் மெலிதான ஒளியின் அறையின் தோற்றம் மாறுதல் காட்டியது.

    வெளிச்சமும் பார்வையும் வித்தியாசங்கள் காட்டும்.

    வேறு நேரங்களில், வேறு பார்வைகளில் ஒன்றே பிரிதொன்றாய் மற்றொன்றாய் முகம் காட்டும்.

    ட்ராவைத் திறந்தாள்.

    டயரி.

    பழுப்பேறிய டயரி.

    அதன் உள்ளடக்கத்துக்காக இன்னமும் இளமை குன்றாமல் காக்கப்பட்டு வரும் டயரி.

    அடிக்கடி எடுத்துப் பார்த்ததால் பிரித்தவுடன் அந்தப் பக்கம் சுபாவமாய் அவள் கைகளில் சிக்கியது.

    சந்துரு...

    பக்கத்தில் பார்வையைச் செலுத்தினாள்.

    காலம் கலைக்க முயன்றிருந்த நிலை எழுத்துக்களில்...

    சந்துருவின் வரிகள்.

    - தூங்கவும்

    தோள்மீது வளர்க்கவும்

    கூடொன்று அவசியம்.

    ஆனால் -

    சிறகுகள் சிலிர்ப்பது வெட்ட வெளியில் தான்.

    கூட்டுக்கு வெளியேதான், பறவை.

    இது ரொம்ப அப்ஸக்யூர்டா இருக்கு. சந்துரு

    உண்மைதான்!

    இது மத்தவங்களுக்கு புரியுமா?

    ஏன் புரியணும்?

    திகைத்துப் போனாள்.

    புரியலேன்னா, எப்படி? மத்தவங்க இதைப் படிக்க வேண்டாமா?

    வேண்டாம்

    இதை நீ பத்திரிக்கைகளுக்கு அனுப்பப் போறதில்லையா?

    இல்லை

    ஏன் அப்படி?

    இது நமக்காக எழுதினது

    அப்போ இதை நாம மட்டும்தான் படிச்சி, புரிஞ்சி, ரசிக்கணும், இல்லையா?

    ம்

    எனக்கே புரியலை

    மீண்டும் படித்தாள் - புரியலே

    சிரித்தான்.

    விளக்கினான்.

    நிஜம் தான்!

    அம்மாவின் நிழல் அறைக்குள் விழுந்தது.

    அவள் நிமிர்ந்தாள்.

    மனசைக் கட்டுப்படுத்தணும், ஜனனி...

    ...

    அதுதான், காலம்காலமா, இந்த மண்ணில நடக்கற விஷயம். கட்டறுத்துப் பறக்கறதும், கற்பனையில் அலையறதும் நமக்கு... பெண் ஜென்மங்களுக்கு ஆகாதுடி

    அம்மா, வயசான காலத்தில் பேசிப் பேசி ஆவியை வீணாக்காதே! நேரத்தோட போய் தூங்கு

    காலையில் பேசிக்கலாங்கிறீயா?

    இல்லை. இனி எப்பவும் நீ இதைப் பத்தி பேச வேண்டாங்கிறேன்

    ஜனனி... வேண்டாண்டி. உனக்கிந்த விபரீத புத்தி...! நம்ம குடும்பம், தெரு, ஊர் எல்லாமே உன்னைப் பத்தி பெருமையா பேசிட்டிருக்கு. கனகத்தோட பொண்ணு எப்போர்பட்டவன்னு பிரமிச்சிப் போயிருக்கு. அந்தப் பேரையெல்லாம் விட்டுட்டு கேவலமா நடந்துக்காதடி.

    சிரித்தாள்.

    சிரிக்காதே. இப்பவும் உனக்கு முப்பத்து மூணு வயசுதான் ஆகுது. தரகர் கிட்ட சொல்லி...

    தேவையில்லை

    தேவையில்லேன்னா கௌரவமா இருந்துக்கோயேன்

    இப்ப என்ன கௌரவம் கெட்டுப்போச்சீ?

    அம்மா பெரு மூச்செறிந்தாள்.

    தனி ரயிலேறி அவனைப் போய் பார்த்து, அங்கேயே ரெண்டு நாள் இருக்கப் போறேன்னு சொல்றியே!

    ...

    ஜனனி, முடிவை மாத்திக்கோடி

    நீ போய் படுத்து தூங்குமா

    அம்மா கொஞ்சம் தயங்கினாள்.

    பின்பு அறையைக் கடந்தாள்.

    ஜனனி மேஜை விளக்கை அணைத்த பின்பும், உள்ளே தாழ்வாரத்து வெளிச்சம் சௌகர்யப்பட்ட - வாக்கில் கிடந்தது.

    மனசுக்கு தூக்கமில்லை.

    உடல் அசதியையும் மீறி விழித்துக் கிடந்தாள்.

    சந்துரு...

    சந்துரு ஒன்றும் ராஜகுமாரனில்லை.

    சராசரியுமில்லை.

    அபவ் ஆவரேஜ்.

    மென்மையான பழக்கம். மேன்மையான தோற்றம். வித்தியாசமான விவாதங்கள் லேசான நகைக்கவை. கொஞ்சம் கவிதை - இது சந்துரு.

    சந்துருவின் தோற்றத்துக்கும் அறிவுக்கும் திறமைக்கும் அவன் எப்பொழுதோ தாம்பத்ய வலைக்குள் சிக்கியிருக்க வேண்டும்.

    ஆனால் -

    தட்டிப் போயிற்று.

    காற்று ஆவேசமாய் அடித்தது.

    அலைகள் ஆக்ரோஷமாய் அலைந்தன.

    பறக்கும் மயிர்க்கற்றையை விலக்கிப் போட்டுவிட்டு ஜனனி மணலில் உட்கார்ந்தாள்.

    சந்துரு அவள் பக்கத்தில்

    வாழ்க்கையில் உறவுச் சங்கிலிகள் சில பேரை உயரத் தூக்கி விடுது சில பேரைச் பிணிச்சி இழுத்து கீழே தள்ளிடுது

    உண்மைதான்! அதனால்தான் நாம் நாமாகவே ஆக முடியதில்லை.

    நீங்க கேட்டீங்களே, ஏன் சந்துரு நீங்க கல்யாணம் பண்ணிக்கலேன்னு - அதுக்கும் இதுதான் காரணம். கிழக்கத்திய நாகரீகத்தின் ப்ளஸ் பாய்ண்டும் சரி. மைனஸ் பாய்ண்ட்டும் சரி, இந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கைதான்! அவங்கவங்களுக்கு சுய சௌகரியம் வர்ர வரைக்கும் ஒருத்தன் தோள்லிலே உட்கார்ந்திருக்க வேண்டியது. சொந்தக் கால்ல நிக்க ஆரம்பிச்ச உடனே, அஸ்திவாரத்தையே ஆளுக்கு ஆள் நாலு மிதிமிதிச்சுட்டு போயிட வேண்டியது.

    நிறைய பட்டிருக்கீங்க

    உதை தானே!

    அனுபவம்

    எப்படி வேணாம்னாலும் சொல்லலாம்

    சிரித்தாள்.

    அதில் இளமை இருந்தது.

    வாழ்க்கையில் ஒரு சில எல்லைகளைக் கடந்து புதிய பகுதிகளிலே பிரவேசிக்கும் போது தன் பழய சில நமக்கிருந்த சின்சியாரிடியும் முழு உழைப்பும் இப்ப எப்படியெல்லாம் அலட்சியப்படுத்தப் படுகின்றதை புரிஞ்சி வருத்தப்பட வேண்டியிருக்கு.

    நீங்க சொல்றது நிஜம்தான்! ஒழுங்கா படிக்காத, எந்தத் திறமையும் வளர்த்துக்காத என் தங்கட்சி அவளைக் கரையேத்தினா போதுங்கிற நினைப்பில் நான் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சதும்... அவளோடு புருசன் ரொம்ப அரகண்ட்டரிய இருக்காங்கிறதைச் சொல்லி, நான் ஏனோதானோன்னு அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டதா குற்றம் சொல்றா. அம்மாவும் அவளுக்கு பரிஞ்சிக்கிட்டு வரா. தங்கச்சியோட குடும்பச் சண்டையில மாப்பிள்ளையும் அவர் பேரண்ட்ஸும் வேற, உங்க அக்காவுக்கு இன்னும் ஏன் கல்யாணம் ஆகலே, அவளை யாராவது ஏமாத்திட்டாங்களா, இல்லை, அவ யாரையாவது வச்சிகிட்டிருக்காளான்னு கேட்கிறாங்களாம்.

    நம்ம ஜனங்களுக்கெல்லாம் இப்படி ஒரு எண்ணமும் பழக்கமும் வளர்ந்து போச்சு. தானும் தன்னைச் சேர்ந்தவங்களும் பத்தினி மகாதெய்வங்கள், மத்தவங்களெல்லாம்... அடிப்படையில் இவங்க மனசில இருக்கிற பெர்வர்ஷனும் பொறமையும்தான் இப்படி வெளிப்படுதுன்னு நினைக்கிறேன்.

    ஜனனி சர்ச்சை மேலும் தொடர்ந்தால் வக்கிரப்பட்டு விடுமோவென்று பயத்துடன் கடலை வெறித்தாள்

    லாஞ்சுகள் கரைக்கும் மிகவும் அருகே வந்து, கட்டுமரக்காரர்களின் பிழைப்பில் வலையைப் போட்டன.

    இப்பொழுதெல்லாம் எதிலும் சுரண்டல் பிரதானம்.

    கூட்டுக்குடும்ப அமைப்பும் ஒரு வகையில் சுரண்டல் சமூக அமைப்பு தான்! நிஜமான பாசமும் பவித்தரமும் எல்லா மனசுகளிலும் பிரவசிக்காத போது சுரண்டல் தான் சாத்தியப்படும்.

    எப்பவோ ஸ்கூல்ல படிச்ச நாலடியார் பாட்டு, ஒண்ணு... வறுமையை நெருங்கின நண்பனிடம் கூட சொல்லி முறையிட இருக்கிறது சிறப்புன்னு சொல்லியிருக்காங்க இன்ஃபாக்ட், துன்பத்தை யார் கிட்டயாவது சொல்லி அழுதிட்டா மனசு லேசாயிடும். ஆனா அப்படி சொல்றதுக்கு தகுதியான ஆட்கள் கிடைக்கணும். இல்லேன்னா, ஏன் சொன்னோம்னு நினைச்சி நினைச்சி வருத்தப்படற அளவுக்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டுடும். இதையெல்லாம் அனுபவிச்சிதான் சொல்லாம இருக்கிறது சிறப்புன்னு எழுதியிருக்காங்க. ஒரே மாதிரியான சிந்தனையோ, அனுபவச் சுமைகளோ இருக்கிறவங்களால தான் மத்தவங்களை நல்லா புரிஞ்சிக்க முடியும். அவங்களோட ரகசியத்தைக் காப்பாத்தவும் முடியும்.

    அஃப் கோர்ஸ்

    அலைகள் கல் தட்டிச் சென்றன.

    சந்துருவின் நினைவையும் மீறி மனசு சோர்ந்தது.

    தூக்கம் அணைத்தது.

    *****

    2

    மாலை வரை அம்மா பல ரூபங்களில், வார்த்தைகளில், கோணங்களில் விவாதித்தாள்.

    மொத்தத்தில் அம்மாவே ஒரு சுய நல சொரூபமென்ற முடிவில் மனசு நிலைப்பட்டிருந்ததில், அவள் வாதங்களை ஏற்கவோ, புரிந்து கொள்ளவோ முயற்சிக்க முடியாமல் போயிற்று.

    பீரோவின் முழுக்கண்ணாடியின் முன்னால் நின்று, நெற்றிப் பொட்டளவு, கருத்த புள்ளிகளும் இடைவெளியில் வெள்ளையுமாய் இருந்த புடவையைச் சுற்றினாள்.

    பாந்தமாய் இருந்தது.

    முழு வடிவத்தையும் பார்த்து, முன் மயிர்க்கற்றையைச் சரியாய் ஒதுக்கியபோது, பிம்பத்தில் இளமை இருப்பதாய் தோன்றியது. இளமை மனசின் விஷயம் தான்!

    மீண்டும் அம்மா வாசலில் நின்றாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1