Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arugey Oru Aabathu
Arugey Oru Aabathu
Arugey Oru Aabathu
Ebook76 pages24 minutes

Arugey Oru Aabathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரதமர் நெல்லையில் ஒரு சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார். அங்கே அவரை கொல்ல ஒரு அமைப்பு முயற்சிக்கிறது. தமிழக காவல்துறையும் என்.எஸ்.ஜியும் செய்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் எப்படி ஊடுருவுகிறார்கள், என்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள், காவல்துறையின் எதிர்வினை என்ன என்பதை சொல்லும் கதை.

Languageதமிழ்
Release dateSep 17, 2022
ISBN6580131008712
Arugey Oru Aabathu

Read more from S. Kumar

Related authors

Related to Arugey Oru Aabathu

Related ebooks

Related categories

Reviews for Arugey Oru Aabathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arugey Oru Aabathu - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அருகே ஓர் ஆபத்து

    Arugey Oru Aabathu

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ஜாஹிர் அப்பாஸுக்கு நினைவு திரும்பியதும் அவனை இன்டராகேட் செய்யும் பணி கர்னல் ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஜெய்சல்மீருக்கு மேற்கே நூற்றுபத்து கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த ஒரு என்கௌண்டரில் ஆறு பாகிஸ்தானிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குண்டுக் காயங்களுடன் தப்பிப் பிழைத்த ஒரே நபர்தான் ஜாஹிர் அப்பாஸ்.

    அப்பாஸ் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையின் சிகிச்சையில் இருந்தான்.

    வெளியே வந்து தன் பைக்கை உதைத்தார் கர்னல் ஜோஷி. அது மிலிடரி ஒழுங்குடன் உடனே சீறியது.

    மருத்துவமனையை அடைந்து பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார். பூட்டிக்கொண்டு உள்ளே நடந்தபோது நிறைய சல்யூட் வாங்கி. கொஞ்சம் திருப்பிச் செலுத்தினார்.

    வார்டுக்குப் போனபோது டாக்டர் அரவிந்த் அவருக்காக காத்திருந்தார். அப்பாஸும் விழித்திருந்தான். வலியால் சப்தமிட்டுக் கொண்டிருந்தான்.

    டாக்டரை நோக்கிக் கையசைத்தவர் நேரே அப்பாசிடம் செல்லாமல் படுக்கையில் இருந்த இரண்டு சிப்பாய்களின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

    பிறகு அப்பாசிடம் வந்தார்.

    பாக்கெட்டிலிருந்து சிறிய டேப்ரிகார்டரை எடுத்து இயக்கினார்.

    அப்பாஸ், எப்படியிருக்கே?

    என் பெயர்...

    உன் ஜாதகம்... கம்ப்யூட்டர் ஜாதகம் எங்களிடம் இருக்கு.

    ...... எனக்கு செடேடிவ் கொடுக்கச் சொல்லுங்க.

    கொடுத்துடுவோம்... வீ வான்ட் யுவர் கோ ஆபரேஷன் அவன் மௌனம் சாதித்தான்.

    நேரத்தை வீணாக்கிறதில உனக்கு எந்தப் பயனும் இல்லை.

    நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லு. வலி தெரியாம ட்ரீட் பண்ணி உன்னை பத்திரமா அனுப்பி வைக்கிறோம்.

    இதுதான் விசாரணைக்கான நேரமா? எனக்கு வலி உயிர் போகிறது. ப்ளீஸ், செடேடிவ் கொடுங்கள்.

    நீயும் உன் சகாக்களும் ஏ.கே 56களைக் கடத்தி வந்திருந்தால் கூட நான் விசாரணையைத் தாமதப்படுத்தலாம். ஆனால் நீங்கள் ஆர் டி எக்ஸ் கொண்டு வந்திருக்கிறீர்கள்...

    …...

    சொல்லு. இதை வச்சி நீங்க என்ன செய்யறதா இருக்கிங்க?

    செத்துப்போன உன் சகாக்களைப் போல நீயும் இப்போது எங்களால கொல்லப்படலாம். அதனால் எங்களுக்கு எந்த நஷ்டமுமில்லை. பாகிஸ்தானும் உன்னை மறந்து விடும் உன் மனைவியும் குழந்தைகளும்...

    ஏற்கனவே உடலால் பலவீனமாயிருந்த அப்பாஸின் மனநிலையும் சற்றே பாதிக்கப்பட்டது.

    அவன் ஒன்றும் தேர்ச்சி பெற்ற உளவாளி அல்ல. ஆசாத் காஷ்மீரிலிருந்து தேர்வு பெற்று, ஐ.எஸ்.ஐயால் பயிற்றுவிக்கப்பட்டவன்.

    எனவே, மீண்டும் மீண்டும் கர்னலின் கேள்விகளால் துளைக்கப்பட்ட போது கலங்கிப்போனான்.

    நான் உங்களை நம்ப முடியாது என்றான்.

    நம்புவது உனக்குப் பாதுகாப்பானது.

    …...

    "நீ சொல்லும் விவரங்கள் உண்மையானவை என்று உறுதிப்பட்டால் உன்னைத்

    Enjoying the preview?
    Page 1 of 1