Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manase Manase Kuzhappam Enna?
Manase Manase Kuzhappam Enna?
Manase Manase Kuzhappam Enna?
Ebook122 pages42 minutes

Manase Manase Kuzhappam Enna?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனசே மனசே குழப்பமென்ன என்ற இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் தேவி வார இதழில் தொடராக வெளி வந்தவை. பிரபல மன நல மருத்துவர்களான ஜே வி தேவர், சுரேஷ்குமார், மாத்ருபூதம், சாந்தி கருணாகரன், ஆர் கே ருத்ரன், சாரதா மேனன், வி தயாளன் கூறிய சம்பவங்களின் அடிப்படையில் உருவானவை இந்த உளவியல் சிறுகதைகள், தேவி வார இதழுக்காக மருத்துவர்களைப் பேட்டி கண்டு சம்பவக் குறிப்புகளைக் கொண்டு வந்தவர்கள் இதழாளர்கள் எஸ் விஜயன், ஜெயசூரியன். மன நல விழிப்பை ஏற்படுத்துவதோடு கூடுதலாக அவை சுவைபட சிறுகதைகளாக அமைய வேண்டும் என்ற ஆவலினால் தேவியின் ஆசிரியர் அமரர் பா ராமச்சந்திர ஆதித்தனும் உதவி ஆசிரியர் கே ஜேம்ஸும் அந்தப் பொறுப்பை எஸ் குமாரிடம் ஒப்படைக்க இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது
Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131005033
Manase Manase Kuzhappam Enna?

Read more from S. Kumar

Related authors

Related to Manase Manase Kuzhappam Enna?

Related ebooks

Reviews for Manase Manase Kuzhappam Enna?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manase Manase Kuzhappam Enna? - S. Kumar

    http://www.pustaka.co.in

    மனசே மனசே குழப்பம் என்ன?

    Manase Manase Kuzhappam Enna?

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மறுக்கப்படுகிற நியாயங்கள்

    2. கொல்லாதே யாரும் பார்த்தால்

    3. தொடத்தொட வளரும்

    4. கரையும் நிழல்கள்

    5. அங்கே என்ன?

    6. இன்று புதிதாய் பிறந்தோம்....

    7. தேகம் எங்கும் சந்தேகம்

    8. நாளை முதல் குடிக்க மாட்டேன்

    9. எழுதிச் செல்லும் விதியின் கைகள்

    10. மன நெருப்பு

    11. பனஞ்சாலை பாண்டி

    12. விழுதைத் தின்னும் வேர்கள்

    13. சிதைக்குப் போகிற சீதைகள்

    14. கொலையும் செய்வாள் பத்தினி!

    1. மறுக்கப்படுகிற நியாயங்கள்

    மனிதர்கள் பலவிதம், அவர்களின் மனப்போக்கு வெவ்வேறு விதம்; சமூக நியாயங்கள், தர்மங்கள் ஒருவிதம்; சட்டங்களும், சாட்சியங்களும் வழங்குகின்ற நீதி வேறு விதம்.

    இப்படி மாறுபட்ட வஞ்சக உலகுடன் இசைவுடன் வாழத் தெரியாமல் முரண்பட்டு நிற்கிற பரிதாப மனிதர்களின் கதைகள் மிகவும் வித்தியாசமானவை.

    புகழ்பெற்ற மனோ தத்துவ நிபுணர்கள் சிலரை சந்தித்து கேட்ட கதைகளை மிகச்சிறந்த எழுத்தாளர் எஸ்.குமார் சிறுகதையாக தொகுத்து வழங்குகிறார்.

    போலீஸ் என்று சிவப்பு எழுத்துக்களில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த வேன் சாலையிலிருந்து திரும்பி மருத்துவமனைக்குள் பிரவேசித்தது நின்றது.

    கெட்டவுன் என்றபடி எஸ்.ஐ. வெளியே குதித்தார். அவரைத் தொடர்ந்து நிதானமாக கீழே இறங்கிய கைதி மருத்துவமனையின் பெயர்ப் பலகையைப் பார்த்தார்.

    ஆங்கில எழுத்துக்கள் அதனை மனநோய் மருத்துவமனை என்றன.

    இன்ஸ்பெக்டர்! உங்களுக்கென்ன பைத்தியமா? என்னை எதுக்காக இங்கே கூட்டி வந்தீங்க?

    உனக்குத்தான்யா பைத்தியம். அது தெளியத்தான் இங்கே இழுத்து வந்திருக்கோம்.

    ‘நோ, யூ ஆர் எ லையர்.’

    உலகத்தில் எந்த பைத்தியக்காரன், தான் பைத்தியம் தான்னு ஒத்துக்கிட்டிருக்கான்? நட!

    எஸ்.ஐ. முன்னால் நடந்தார். கான்ஸ்டபிள்கள் கைதியை உந்தித் தள்ளியபடி பின் தொடர்ந்தார்கள்.

    நீளமான வராந்தாவில் நடந்து, வலப்புறம் திரும்பி டாக்டரின் அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்ச் ஒன்றில் எஸ்.ஐ. உட்கார்ந்தார். கைதி அமர்த்தப்பட்டார்.

    ஒற்றை கான்ஸ்டபிள் அவர் பக்கத்தில் தன்னை இறுத்திக் கொள்ள மற்றவர் சற்று விலகிச் சென்று புகைபிடிக்கத் துவங்கினார்.

    கைதி நொந்த மனதுடன் உடம்பை தளர்த்திச் சாய்த்துக் கொண்டு சூழலைப் பார்வையிட்டார்.

    சிரித்தபடி

    அழுதபடி

    சிரிப்பு பாதி

    அழுகை பாதியாய்

    விழித்துக் கொண்டு

    விழிக்க மறந்து

    நொடிக்கு நூறு பாவங்களுடன்....

    பாவங்களே இல்லாமல் என்று திரும்பிய திசை எல்லாம் முகங்கள் கிளைந்தன. முகங்களிலெல்லாம் அவற்றின் கலைந்த மனசுகள் ஒட்டப்பட்டிருந்தன.

    சிலரைப் பார்த்தபோது வெகு இயல்பாயும் தெரிந்தார்கள். வேறு சிலரைப் பார்த்தபோது நோயாளி யார், துணைக்கு வந்தவர் யாரென்று குழம்பிப் போக நேர்ந்தது.

    இவைகளுடன் இவர்களுடன் நானும் தங்கி சிகிச்சை பெற வேண்டுமா?

    ஒன்றிரண்டு நாட்களில் உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிடும்.

    மிகவும் கலங்கிப் போனார்.

    யூனிபார்மைப் போலவே போலீஸ்காரர்களும் மிகவும் விரைப்பானவர்கள், கடினமானவர்கள்.

    அவர்கள் தங்களின் அதிகார விரைப்பால் உடல் பலத்தால் எத்தனையோ குற்றவாளிகளை உருவாக்கியிருப்பார்கள்.

    பைத்தியங்களையுமா? சில நிஜங்கள் கற்பனையை விட கொடுமையானவை. நம்பமுடியாதவை.

    எஸ்.ஐ. எழுந்தார்.

    கைதி எழுப்பப்பட்டார்.

    டாக்டரின் அறைக்குள் நுழைந்தார்கள்.

    குட்மார்னிங் டாக்டர்.

    குட்மார்னிங்...

    பேஷண்ட்டைக் கூட்டிட்டு வந்திருக்கீங்களா?

    எஸ் டாக்டர். இந்தப் பைத்தியக்காரன்...

    நோ... நோயாளியை இப்படியெல்லாம் அறிமுகப்படுத்தக் கூடாது. சுருக்கமா கண்ணியமா அவரைப் பத்தி சொல்லுங்க. போதும்.

    சாரி சார். இவர் லாட்ஜில் தன்னுடைய பக்கத்து ரூம்காரர்களை அடிச்சதுக்காக கைது செய்யப்பட்டார். விசாரணை பண்ணிக்கிட்டிருந்த போது எங்க எஸ்.பி.யையும் அடிச்சிட்டார். இவர் ஒரு மன நோயாளின்னு சர்டிஃபிகேட் தேவை.

    ஐ ஸீ. நீங்க வெளியே இருங்க. நான் பேஷண்டைச் சோதிக்கணும்.

    ஓ.கே. சார்.

    விலகினார்.

    உங்க பேர் என்ன?

    போதன்

    புதுமையான பெயரா இருக்கே!

    நான் மலையாளி. அதனால என்னோட பெயர் உங்களுக்கு புதுமையா தெரியுது.

    ஓஹோ, உங்க உடம்புக்கென்ன?

    ஒண்ணுமில்லே. அடுத்தவரின் மன உணர்வைப் புரிஞ்சிக்காம கேலி பேசற ஒரு கூட்டத்தோட எனக்கு சின்ன தகராறு. போலீஸ் அதைப் பெரிசு பண்ணி என் வாழ்க்கையை பாழாக்கறாங்க.

    அவரது தெளிவான நடத்தையும் பேச்சும் டாக்டரை மேலும் கேள்விகள் கேட்கத் தூண்டின.

    ஓகே மிஸ்டர்...

    போதன்

    யெஸ், மிஸ்டர் போதன், எஸ்.பி.யை நீங்க எதுக்காக அடிச்சீங்க?

    அவர் என்னை அடிச்சார். அதிகாரத் திமிர். என்ன செய்ய முடியும் என்ற ஆணவம். நான் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அடிக்க முடியும்னு நிரூபிச்சேன்.

    நீங்க எங்க வேலை செய்யறீங்க?

    வியட்நாம்ல ஐ.எஃப்.எஸ்.ல வேலை செஞ்சிகிட்டிருந்தேன். சொந்த மண்ணில் செட்டில் ஆகிறதுக்காக ராஜினாமா பண்ணிட்டு வந்தா, இங்கே என்னைப் பைத்தியக்காரனாக்கிற முயற்சி நடக்குது.

    அரச போக வைபோகங்களின் நிலையாமையை வலியுறுத்தி ஆண்டவனே அங்கே ஆண்டியாகி நின்றிருந்தான்.

    முருகா, பழனியாண்டி கண்களை மூடி, கைகளை உயரே தூக்கி வணங்கினார், போதன்.

    கண்கள் கசிந்து மல்கின.

    பிரகாரம் சுற்றினார்.

    வெளியே வந்தார்.

    கைகளை உயரே தூக்கி வணங்கிவிட்டு நடந்தார்.

    ஊருக்கு போகும் வழியில் தமிழ் நாட்டு திருத்தலங்களைப் பார்த்துப் போகலாமென்று வந்ததில் பழனியும் பழனியாண்டியும் மனதை மிகவும் ஆக்கிரமித்துக் கொண்டதால் மாதக் கணக்கில் அங்கேயே தங்கிவிட்டார்.

    ஆரம்பத்தில் ஐ.எஃப்.எஸ். பழக்கவழக்கத்தின்படி கோட்டும் சூட்டுமாய் இருந்தவர், பிறகு வேட்டிக்கு மாறினார்.

    நாட்களின் நகர்வில் வேட்டியும் சட்டையும், துண்டும் காவியாக மாறின. விரதமும் இருக்கத் துவங்கினார்.

    லாட்ஜுக்கு வந்தார்.

    நுழைந்தார்.

    படியேறி

    Enjoying the preview?
    Page 1 of 1